புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
2 Posts - 4%
prajai
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
2 Posts - 4%
சிவா
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
1 Post - 2%
viyasan
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
1 Post - 2%
Rutu
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
1 Post - 8%
Rutu
3ஜி-- முழு விவரம்  Poll_c103ஜி-- முழு விவரம்  Poll_m103ஜி-- முழு விவரம்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3ஜி-- முழு விவரம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 02, 2010 4:18 pm

3ஜி முழு விவரம்

பொதுவாக 3ஜி அல்லது 3வது தலைமுறை என்று அறியப்படும் சர்வதேச மொபைல் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால்[1] வரையறுக்கப்பட்ட கைபேசி தொலைதொடர்பு தரமுறைகளாகும். ஜிஎஸ்எம், எட்ஜ், யூஎம்டீஎஸ் மற்றும் சிடிஎம்ஏ2000 ஆகியவையும், அத்துடன் டெக்ட் (DECT) மற்றும் வைமேக்ஸ் ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். இதில் அகல்-பரப்பு கம்பியில்லா குரலொலி தொலைபேசி (wide-area wireless voice telephone), ஒளிப்பட அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தரவு பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது, 3ஜி சேவையானது குரலொலி மற்றும் தரவு சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3ஜி வலையமைப்புகள் உதவுகின்றன.
சர்வதேச தொலைதொடர்பு ஆணையம் (ITU), வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பேண்ட்விட்த்தை அதிகரிக்கவும், பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளுக்கு உதவவும் மொபைல் தொலைபேசி தரமுறைகளின் மூன்றாம் தலைமுறையை - அதாவது, IMT-2000 என்பதை - வரையறுத்திருக்கிறது. உதாரணமாக, ஜிஎஸ்எம் (தற்போது பிரபலமாக இருக்கும் கைபேசி தரமுறை) குரல் சேவையை அளிப்பதுடன், சர்க்யூட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளை நொடிக்கு 14.4 கிலோபிட்கள் என்ற பதிவிறக்க விகிதத்தில் கையாள இந்த நுட்பம் அனுமதிக்கிறது. ஆனால் மொபைல் மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், மிக விரிந்த அகல்கற்றைகளில், சிறப்பார்ந்த அலைவரிசை பயன்பாட்டுடன் 3ஜி நுட்பமானது பேக்கெட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளைக் கையாள்கிறது.[dubious –

வரலாறு

டபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தின் முன்னோட்ட வெளியீடாக 2001ஆம் ஆண்டு மே மாதம், எப்ஓஎம்ஏ (FOMA) என்ற பெயரில் ஜப்பானில் என்டீடீ டொகோமோ நிறுவனம் வர்த்தரீதியான வெளியீட்டிற்கு முந்தைய முன்னோட்டமாக முதல் 3ஜி வலையமைப்பை அறிமுகப்படுத்தியது.[7] மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் முதல் வர்த்தகரீதியான வெளியீடு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி என்டீடீ டொகோமோ நிறுவனத்தாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பநிலையில் அதில் குறைவான வசதிகளே இருந்தன.[8][9] நம்பகத்தன்மையில் இருந்த வெளிப்படையான குறைபாடுகளால், பரந்த விரிவாக்கம் தாமதப்பட்டது.[10] 2002 ஜனவரியில், 1xஈவி-டிஓ தொழில்நுட்பத்தில் தென்கொரியாவில் எஸ்கே டெலிகாம் நிறுவனத்தால் உலகின் இரண்டாவது 3ஜி வலையமைப்பு வர்த்தகரீதியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2002 மே மாதம், தென் கொரியாவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு கேடீஎப் (KTF) நிறுவனத்தால் EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு மூன்றாம் தலைமுறை சேவை வழங்குனர்களின் மத்தியில் ஏற்பட்ட போட்டியை முதன்முதலாக கொரிய மக்கள் தான் பார்த்தார்கள்.
ஐரோப்பாவில் வர்த்தகரீதியான வெளியீட்டிற்கு முந்தைய வெள்ளோட்ட வெளியீடு முதன்முதலில் Manx டெலிகாம் நிறுவனத்தால், ஐல் ஆப் மேனில் (Isle of Man) கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனம் பின்னர் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் முதல் வர்த்தகரீதியான வலையமைப்பு வியாபாரத்திற்காக டிசம்பர் 2001ல் டெலினார் (Telenor) நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. அப்போது வர்த்தகரீதியான கைபேசிகள் எதுவும் இல்லாததால் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களும் இருக்கவில்லை. இவை இரண்டுமே டபிள்யூ-சிடிஎம்யூ தொழில்நுட்பத்தில் அமைந்திருந்தன.
அமெரிக்காவில் முதல் வர்த்தகரீதியான மூன்றாம் தலைமுறை வலையமைப்பு மோனெட் மொபைல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தால், சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த வலையமைப்பை அளித்த நிறுவனம் பின்னர் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டார்கள். ஆகவே அமெரிக்காவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு சேவை வழங்குனராக அக்டோபர் 2003ல் வந்தவர்கள் வெரிஜோன் வயர்லெஸ் நிறுவனம். இதுவும் சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் இருந்தது. இந்த வலையமைப்பு அப்போதிருந்து சிறப்பாக வளர்ந்து வருகிறது.
தெற்கு பிராந்தியத்தில் கொண்டு வரப்பட்ட முதல் வெள்ளோட்ட வலையமைப்பு, தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலைய்டில், m.Net கார்பரேஷன் நிறுவனத்தால் பிப்ரவரி 2002-ல், 2100 மெகா ஹெட்ஜ் அலைவரிசையில் யூஎம்டிஎஸ் தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. இது 2002-ஆம் ஆண்டு நடந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் காட்டப்பட்ட முன்னோட்ட வலையமைப்பாகும். வர்த்தரீதியான முதல் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு, மார்ச் 2003-ல் Three என்ற வர்த்தக பெயரில் ஹட்சஷன் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
சர்வதேச மொபைல் வினியோக அமைப்பின் (GSA) தகவலின்படி, டிசம்பர் 2007-ல், 40 நாடுகளில் 190 மூன்றாம் தலைமுறை வலையமைப்புகளும், 71 நாடுகளில் 154 எச்எஸ்டிபிஏ (HSDPA) வலையமைப்புகளும் இயக்கத்தில் இருந்தன. ஆசியா, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள், மூன்றாம் தலைமுறை செல்பேசி வலையமைப்புகளை இயக்க, டபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பாவில், மக்களுக்கான மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு சேவைகள் மார்ச் 2003-ன் தொடக்கத்தில் Three நிறுவனத்தால் (ஹட்சசன் வாம்போ நிறுவனத்தின் ஒரு பகுதி) இங்கிலாந்திலும், இத்தாலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. 2005-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய தேசிய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும் என்று மூன்றாம் தலைமுறை சேவை வழங்குனர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவுறுத்தியது.
சில நாடுகளில் அலைத்தொகுப்பு (Spectrum) உரிம கட்டணங்கள் மிக அதிகளவில் இருந்ததால், மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு வலையமைப்புகளைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பல நாடுகளில், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அதே ரேடியோ அலைவரிசைகள் மூன்றாம் தலைமுறை வலையமைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக புதிய வலையமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும், புதிய அலைவரிசைகளுக்கு உரிமம் வாங்க வேண்டிய தேவையும் செல்பேசி சேவை வழங்குனர்களுக்கு ஏற்பட்டது. இதில் விதிவிலக்காக இருந்தது அமெரிக்கா மட்டுமே. இங்கு பிற சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அதே அலைவரிசைகளே மூன்றாம் தலைமுறை சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. சில ஐரோப்பிய நாடுகளில் உரிம கட்டணம் மிக அதிகமாக இருந்தது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான உரிமங்கள், முத்திரையிடப்பட்ட ஒப்பந்தபுள்ளி நடவடிக்கைகள், 3ஜி வலையமைப்பின் மீது தொடக்கத்தில் இருந்த சந்தேகங்கள் போன்ற அரசாங்க நடவடிக்கைகள் தடையாக இருந்து வந்தன. புதிய அமைப்புமுறைக்குத் தொழில்நுட்ப சாதனங்களை மாற்றுவதில் இருந்த செலவுகளும் தாமதத்திற்கு மற்றொரு காரணமாக அமைந்தன.
2007-ஆம் ஜூன் வாக்கில், மூன்றாம் தலைமுறை வலையமைப்பில் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்திருந்தார்கள். அப்போது, உலகெங்கிலும் இருந்த 3 பில்லியன் கைபேசி வாடிக்கையாளர்களில் இது வெறும் 6.7% மட்டுமே. முதன்முதலில் மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.[11] ஐரோப்பாவில் முன்னணியில் இருந்த நாடு இத்தாலி. இதன் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களில் மூன்று பகுதியினர் 3ஜி சேவைக்கு மாறியிருந்தார்கள். 20 சதவீத அளவிற்கு மாறிய நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மூன்றாம் தலைமுறைக்கு மாறியதில் முன்னணியில் இருந்த பிற நாடுகளாகும். சிடிஎம்ஏ2000 1x RTT வாடிக்கையாளர்களே 3ஜி வாடிக்கையாளர்களாக இருந்ததால், புள்ளிவிபரங்கள் கணக்கிடுவதில் குழப்பம் இருந்து வந்தது. இந்த வரையறையின்படி பார்த்தால், ஜூன் 2007-ல் 475 மில்லியன் 3ஜி வாடிக்கையாளர்கள் இருந்திருப்பார்கள், உலகளவில் இருந்த மொத்த வாடிக்கையாளர்களில் இது 15.8 சதவீதமாகும்.
இன்றும் கூட, பல வளரும் நாடுகள் 3ஜி உரிமங்களை வழங்கவில்லை. இங்கு வாடிக்கையாளர்கள் மூன்றாம் தலைமுறை சேவைகளுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதில் சீனா அதன் முடிவை பல ஆண்டுகள் தள்ளி போட்டு வந்தது. முக்கியமாக சிறந்த தரமுறைகளை உருவாக்குவதற்கான அவர்களின் அரசாங்கத்தின் தாமதத்தினால் இவ்வாறு ஏற்பட்டு வந்தது.[12] மே 2008ல், தொலைதொடர்பு துறையை மறுசீரமைக்க போவதாகவும், 3ஜி வலையமைப்புகளுக்கு இடமளிக்கப்படும் என்றும், இதன் மூலம் முன்னணி செல்பேசி சேவை வழங்குனரான சீனா மொபைல் அதன் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர் தளத்தைத் தக்க வைத்து கொள்ள முடியும் என்றும் சீனா அறிவித்தது. இதன் மூலம், சீனா யூனிகாம் (China Unicom) நிறுவனமும் அதன் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து கொள்ளும், ஆனால் அதன் சிடிஎம்ஏ2000 தொழில்நுட்பத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை, உலகளவில் முன்னணியில் இருந்த டபிள்யூ-சிடிஎம்ஏ (UMTS) தரமுறைக்கு மாற்றி 3ஜி சேவையை அறிமுகப்படுத்த வேண்டியதிருந்தது. இதனால் சீனா யூனிகாமின் பெரும்பாலான சிடிஎம்ஏ2000 வாடிக்கையாளர்கள், அப்போது சிடிஎம்ஏ 1x EV-DO தரமுறையில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய சீனா டெலிகாம் (China Unicom நிறுவனத்தின் சேவைக்கு மாறினார்கள். மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு தரமுறைகளில் இருந்த மூன்று முக்கிய செல்லுலர் தரமுறைகளும் சீனாவில் வர்த்தகரீதியாக பயன்பாட்டில் இருந்தது. இறுதியாக ஜனவரி 2009-ல், சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மூன்று தரமுறைகளுக்கும் உரிமங்களை வழங்கியது. TD-SCDMA தொழில்நுட்பம் சீன மொபைல் நிறுவனத்திற்கும், WCDMA தொழில்நுட்பம் சீன யூனிகாம் நிறுவனத்திற்கும், CDMA2000 தொழில்நுட்பம் சீன டெலிகாம் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
நவம்பர் 2008-ல், 45, 40, 35 மற்றும் 25 MHz எனும் முக்கிய அலைவரிசைகளுடன் IMT/UMTS தரமுறையில் நான்கு 3ஜி உரிமங்களைத் துருக்கி வழங்கியது. துர்க்செல் நிறுவனம் €358 மில்லியன் கொடுத்து 45 MHz அலைவரிசைகளை வாங்கியது. அதை தொடர்ந்து வோடாபோன் மற்றும் ஏவியா (Avea) நிறுவனங்கள் முறையே 40 மற்றும் 35 MHz அலைவரிசைகளை 20 ஆண்டுகளுக்கு வாங்கின.
மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் முதல் ஆப்ரிக்க பயன்பாடு, நவம்பர் 2004-ல் ஜோகன்ஸ்பர்க் வோடாகாம் வலையமைப்பில் ஒரு 3ஜி வீடியோ அழைப்பாக அறிமுகபடுத்தப்பட்டது. ஆப்ரிக்காவில் முதல் வர்த்தகரீதியான 3ஜி அறிமுகம், டபிள்யூ-சிடிஎம்ஏ தரமுறையில் மொரீசியஸ் எம்டெல் நிறுவனத்தால் செய்யப்பட்டது. 2006 மார்ச் மாத பிற்பகுதியில் வட ஆப்ரிக்க மொராக்கோவில், ஒரு புதிய நிறுவனமான வனா நிறுவனத்தினால் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
Telus நிறுவனம் முதல்முறையாக 3ஜி சேவைகளை கனடாவில் 2005ல் அறிமுகப்படுத்தியது. 2007ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரோஜர்ஸ் விஷன் என்ற வடிவத்தில் கிழக்கு கனடாவில் ரோஜர்ஸ் வயர்லெஸ் நிறுவனம் 3ஜி எச்எஸ்டிபிஏ சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. தற்போது ஃபிடோ சொலூசன்ஸ் மற்றும் ரோஜர்ஸ் வயர்லெஸ் நிறுவனங்கள் புறநகர் மையங்களில் மூன்றாம் தலைமுறை சேவைகளை அளித்து வருகின்றன.
ஒரு முன்னணி தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வரும் டி-மொபைல் நிறுவனம், சமீபத்தில் 120 அமெரிக்க நகரங்களில் தனது சேவையைக் கொண்டு வந்தது. இது 2009-ஆம் ஆண்டில் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு சேவைகளை வழங்கும்.[13]
2008ல், மஹாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தால் மூன்றாம் தலைமுறை செல்பேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா 3ஜி செல்பேசி துறையில் களம் இறங்கியது. எம்டிஎன்எல் நிறுவனம் தான் இந்தியாவில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனமாகும்.



வசதிகள்

டேட்டா விகிதங்கள்
3ஜி சாதனங்கள் அல்லது அச்சேவை அளிப்போர்களிடம் இருந்து பயனர்கள் இந்தளவிலான டேட்டா விகிதத்தை எதிர்பார்க்கலாம் என்ற ஒரு தெளிவான வரையறையை இன்னும் ITU கொண்டு வரவில்லை. இவ்வாறு 3ஜி சேவையைப் பெற்ற பயனர்கள், ஒரு தரமுறையைக் குறிப்பிட்டு, இது குறிப்பிடும் விகிதத்தை இந்த தொழில்நுட்பம் எட்டவில்லை என்று கூறமுடியாது. ஒரு செய்தி விமர்சனம் குறிப்பிடுவதாவது: "IMT-2000 தொழில்நுட்பம் உயர்ந்த டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அளிக்கும்: அதாவது நிற்கும் அல்லது நடக்கும் பயனர்களுக்கு குறைந்தபட்சம் நொடிக்கு 2 மெகாபிட்ஸ் வேகத்திலும், நகரும் வாகனங்களில் நொடிக்கு 348 கிலோபிட்ஸ் வேகத்திலும் கிடைக்கும்" என்கிறது.[14] குறைந்தபட்ச அல்லது சராசரி விகிதங்களையோ அல்லது எந்த மாதிரியான இன்டர்பேஸ்கள் 3ஜி சேவைக்கு பொருந்தும் என்றோ ITU தெளிவாக குறிப்பிடவில்லை, ஆகவே வாடிக்கையாளர்களின் பிராட்பேண்ட் டேட்டா எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு டேட்டா வேக விகிதங்கள் விற்கப்படுகின்றன.

பாதுகாப்பு
3ஜி வலையமைப்புகள், அதற்கு முந்தைய 2ஜி சேவைகளை விட அதிகளவிலான பாதுகாப்பு வசதிகளைத் தருகிறது. பயனர் கருவி அது இணையும் வலையமைப்பில் அங்கீகரிக்கப்பட அனுமதிப்பதன் மூலம், பயனர் தாம் விரும்பும் வலையமைப்பில் தான் இருக்கிறோம், வேறு வலையமைப்பில் கிடையாது என்பதை உறுதிப்படுத்தி கொள்ள முடியும். 3ஜி வலையமைப்புகள் பழைய ஏ5/1 ஸ்ட்ரீம் சிப்பருக்கு பதிலாக KASUMI பிளாக் க்ரிப்டோக்களைப் பயன்படுத்துகின்றன. இருந்தாலும், KASUMI cipher-ம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

3ஜி வலையமைப்பு கட்டமைப்பு பாதுகாப்பிற்கும் கூடுதலாக, IMS போன்ற பயன்பாட்டு கட்டமைப்புகள் அணுகப்படும் போது முற்றுமுதலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, இருந்தாலும் இது முழுவதுமாக ஒரு 3ஜி தொழில்நுட்பத்தைச் சேர்ந்தது என்று கூறிவிட முடியாது.

இரண்டாம் தலைமுறையில் இருந்து பரிணாம வளர்ச்சி

2ஜி வலையமைப்புகள் குறிப்பாக குரலொலி சேவைகளுக்காகவும், குறைந்த டேட்டா டிரான்ஸ்மிஷன்களுக்காகவும் உருவாக்கப்பட்டவை.

2ஜி சேவையில் இருந்து 2.5 தலைமுறைக்கு
ஜெனரல் பேக்கட் ரேடியோ சேவை ஜிபிஆர்எஸ் அறிமுகத்துடன், 3ஜி சேவையின் பரிணாமத்தின் முதல் முக்கிய படி தொடங்கியது. ஆகவே ஜிபிஆர்எஸ் சேவையுடன் கூடிய செல்லுலர் சேவைகள் 2.5ஜி ''' என்றானது.

ஜிபிஆர்எஸ் நொடிக்கு 56 கிலோபிட்ஸ் முதல் 114 கிலோபிட்ஸ் வரையிலான டேட்டா விகிதங்களை அளிக்க கூடியதாகும். வயர்லெஸ் அப்ளிகேஷன் புரோட்டோகால் (WAP) அக்சஸ், மல்டிமீடியா மெசேஜிங் சேவை (MMS) போன்ற சேவைகளுக்கும், மின்னஞ்சல் மற்றும் இணைய பயன்பாடு போன்ற இணைய தொலைதொடர்பு சேவைகளுக்கும் ஜிபிஆர்எஸ் பயன்படுத்தப்படுகிறது. ஜிபிஆர்எஸ் டேட்டா பரிமாற்றம் பெரும்பாலும் பரிமாறப்பட்ட ஒரு மெகாபைட் டிராபிக்கிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் பாரம்பரிய சர்க்யூட் ஸ்விட்சிங் வழியாக நடக்கும் டேட்டா கம்யூனிகேஷன், கனெக்சன் நேரத்தின் ஒரு நிமிடத்திற்கு ஏற்ப, பயனரால் உண்மையில் திறன் பயன்படுத்தப்படுகிறதா அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறதா என்ற அடிப்படையில் பில் செய்யப்படும்.

2.5ஜி சேவையில் இருந்து 2.75ஜி (எட்ஜ்) வரை
ஜிபிஆர்எஸ் வலையமைப்புகள் 8PSK என்கோடிங் அறிமுகத்துடன் எட்ஜ் வலையமைப்பாக பரிணமித்தது. என்ஹேன்ஸ்டு டேட்டா ரேட்ஸ் ஃபார் ஜிஎஸ்எம் எவலூசன் (EDGE), என்ஹேன்ஸ்டு ஜிபிஆர்எஸ் (EGPRS), அல்லது ஐஎம்டீ சிங்கிள் கேரியர் (IMT-SC) என்பது பழைய தொழில்நுட்பத்திற்கு பொருந்த கூடிய டிஜிட்டல் மொபைல் போன் தொழில்நுட்பமாகும், இது மேம்பட்ட டேட்டா டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அனுமதிக்கிறது, ஜிஎஸ்எம் தரமுறைகளின் மேல் ஒரு விரிவாக்கமாக இது உருவாக்கப்பட்டது. எட்ஜ் தொழில்நுட்பம் 3ஜி ரேடியோ தொழில்நுட்பமாகவும், ITU -ன் 3ஜி பரிந்துரைகளின் ஒரு பாகமாகவும் கருதப்படுகிறது, ஆனால் பொதுவாக இது 2.75ஜி தொழில்நுட்பமாகவே குறிக்கப்படுகிறது. அமெரிக்காவில், சிங்குலர் நிறுவனத்தால் (தற்போது ஏடி&டி) 2003ன் தொடக்கத்தில் ஜிஎஸ்எம் வலையமைப்புகளில் எட்ஜ் நிறுவப்பட்டது.

ஜிஎஸ்எம் குடும்பத்தின் ஒரு பாகமாக 3GPP -ஆல் எட்ஜ் தரமுறைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் ஜிஎஸ்எம்/ஜிபிஆர்எஸ் வலையமைப்புகளின் திறனில் மூன்று மடங்கு மேம்படுத்தப்பட்ட திறனில் இதன் சேவை அளிக்கப்பட்டது. ஜிஎஸ்எம் டைம்ஸ்லாட்டுகளுக்குள்ளேயே, மிகவும் நவீன கோடிங் முறைகளுக்கு (8PSK) மாறியதன் மூலம் உயர்ந்த டேட்டா விகிதங்களை இந்த தொழில்நுட்பம் எட்டுகிறது.


குறைபாடுகள்

உலகளவில் 3ஜி சேவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, 3ஜி சேவை அளிப்போர்களுக்கும், பயனர்களுக்கும் சில குறைபாடுகள் இருக்கின்றன:
சில சட்டமுறைகளில் 3ஜி சேவை உரிமங்களுக்கான அதிகளவிலான உள்ளீட்டு கட்டணங்கள்
நாடுகளுக்கு இடையிலான உரிம முறைகளில் இருக்கும் வேறுபாடுகள்
சில தொலைதொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடன் அளவு, இதனால் 3ஜி முதலீட்டிற்கு சிரமமாக இருக்கும்
நிதி பிரச்சனையில் இருக்கும் ஆப்பரேட்டர்களுக்கு அரசு உதவி இல்லாமல் இருப்பது
3ஜி போன்களின் விலை
சில பகுதிகளில் கவரேஜ் இல்லாமல் இருப்பது
கையடக்க சாதனத்தில் பிராட்பேண்ட் சேவைகளின் தேவை
3ஜி போன்களுக்கான பேட்டரிகள்

நன்றி - விக்கிபீடியா
நன்றி அன்பு மலர் ஓகே!!!!

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Dec 02, 2010 7:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 7:37 pm

நிறைய செய்திகள்...பாதி புரியவில்லை எதோ ஒரு மந்திர மாங்காய் தான் த்ரீ - ஜி என்பது மட்டும் புரியவருகிறது.

எம்டிஎனெல் சேவை உபயோகித்தோர் அழுது வடிகிறார்கள் இங்கே.. அதன் த்ரீ -ஜியும் கட்டை வண்டி தான்... அது என்னவோ அரசாங்கம் என்றாலே அணுகுண்டு கூட புஸ்வாணம் தான் ஆகிற்து.

தகவலுக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 02, 2010 11:49 pm

3ஜி-- முழு விவரம்  677196 3ஜி-- முழு விவரம்  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக