புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
62 Posts - 57%
heezulia
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
104 Posts - 59%
heezulia
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10நாடி ஜோதிடம் - Page 4 Poll_m10நாடி ஜோதிடம் - Page 4 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடி ஜோதிடம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:14 am

First topic message reminder :

இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம்ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரிகால ஞானிகள்" என்று அழைப்பர்.

இவர்களில் பலர் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும், சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு "ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச சென்றனர்.

அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு.
அதன் பெயர் "நாடி சாஸ்திரம்"
அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர்.

ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச ்சுவடிகளில ்எழுதப்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர், பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டு அந்த ஏடுகளில் காணப்படும்.

தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை.

"கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகுஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது.

நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள்.

தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டன. மேலும் பல மறைந்து போயின. தற்சயம் மிகவும் பிரபலமானவை சென்னையில் உள்ள காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிக நாடியும்தான்.வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது.

இப்போது சிறிது "Theory" (Want to skip?)

பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும ்முறையை ஒரு பாடல் கூறுகிறது:

"பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை".


('மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே?' என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை).

பலாப்பழத்தின காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் இருக்கும் சுளையின் எண்ணிக்கை.

இப்போது ஒரு சந்தேகம்.

சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள் தோன்றினவா?
அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில இயங்குகின்றனவா?

காரணத்தின் விளைவாகக் காரியமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?

மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது.

துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக் கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன.

நிகழ்ச்சிகளீன் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சா¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன.

மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம் நிகழவேண்டியது; தவிர்க்க முடியாதது; வேறு வழியில்லை.

"அவனுடைய இறப்பு எனப்படும் 'கட்டாயம்', நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள் தோன்றின", என்று வைத்துக் கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம்.

கொடியசைந்தும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?


ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகரில் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது. தலைமை குருக்கள் மஹா பரிநிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கொடியன்று அசைந்தது.

அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது. அதன் தொடர்பாக வாக்குவாதமும், அதன் விளைவாகப் பொரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன.

இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும நியதியும், கட்டுக்கோப்பும் விளங்குகின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும்.

இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட, நிச்சயமான நியதிகள் இருப்பதால்தான் "Goddoes not play dice with the Universe", என்று Einstein கூறினார்.

காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தொரிந்திருக்கின்றன.

இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும். அதிலும் யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும்.

இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு.
ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது.



நாடி ஜோதிடம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 30, 2011 9:56 pm

குடந்தை மணி wrote:
மஞ்சுபாஷிணி wrote:உடல் சிலிர்க்கிறது இத்தனை விஷயங்கள் யப்பா....

நாடிஜோதிடம் பார்க்க என்னை கோயம்புத்தூரில் இருந்து ஒரு இடத்துக்கு கூட்டிக்கொண்டு போனாங்க.. நாடி ஜோதிடம் பார்க்கும் வரை எனக்கு இதில் நம்பிக்கை இல்லாது இருந்தது...

அதனால் யாராவது என்னிடம் பேச்சு கொடுத்து என்னிடம் விஷயம் வாங்குவார்களோ என்று நினைத்து அமைதியாய் உட்கார்ந்திருந்தேன் என் கை ரேகையை கொடுத்துவிட்டு...

உள்ளே அழைத்தார்கள் வெளிச்சம் அத்தனை இல்லை...

விளக்கு வெளிச்சத்தில் ஒருவர் டேப்ரிக்கார்டர் சகிதம் உட்கார இன்னொருவர் வாசிக்கிறார் எனக்குண்டான ஓலையை...

சொன்னால் நம்ப மாட்டீர்கள் இதோ இப்போதும் சிலிர்க்கிறது எனக்கு...

என் பெயரில் ஆரம்பித்து என் அப்பா என் அம்மா என் தங்கை என் தம்பி என்று முழு விவரங்களும் அப்பா என்ன வேலை செய்கிறார் என் அம்மா என்ன வேலை செய்கிறார் என்று கூட சொன்னார்கள் என் இஷ்ட தெய்வமும் சொன்னார் நான் இப்ப என்ன செய்கிறேன் எனக்கு திருமணம் ஆகி விட்டதையும் என் குழந்தை பற்றியும் இனி ஐந்தாண்டில் இன்னொரு புத்திரன் பிறப்பான் என்பதையும் என்னை திருமணம் செய்தது யார் அவர் பெயர் என்ன அவர் செய்யும் வேலை என்ன சொந்த வீடா என்னென்ன விவரங்கள் அப்பப்பா....

வழிந்த கண்ணீரை துடைக்க கூட முடியாது அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தேன்... என் ஓலைச்சுவடியில் என் தாய்க்கு ஏற்பட்டிருக்கும் நோய் கூட சொன்னார்கள் என்றால் எத்தனை ஆச்சர்யம்....

இதெல்லாம் சொல்லிவிட்டு முற்பிறவி ரகசியமும் சொல்லி வரும்காலமும் எப்படி இருக்கும் என்று சொல்லி...

இதுநாள் வரை நாடி ஜோதிடத்தில் சொன்னபடி எல்லாம் நடந்தது என்றால் நம்புவீங்களாப்பா?

நாடி ஜோதிடம்னு தலைப்பை பார்த்ததும் அதான் ஓடி வந்தேன்...

விஷயங்கள் எல்லாம் படித்து ஆச்சர்யமாக இருக்கிறது சிவா...

இன்னும் நிறைய தெரிந்துக்கொள்ள வேண்டும்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

அக்கா
நீங்க எங்க பார்த்தீங்க??

பொள்ளாச்சியில் எங்கயொ ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க மணி... 1998 ல பார்த்தது..... இப்ப எனக்கு அந்த இடம் தெரியவில்லை... எனக்கே திரும்ப அந்த இடத்துக்கு போகணும்.. ஆனால் வழி தெரியவில்லை சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாடி ஜோதிடம் - Page 4 47
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Feb 02, 2012 1:02 pm

நல்ல தகவல் தல மீண்டும் சந்திப்போம் .

நாடி ஜோதிடம் பார்ப்பதில் மிகவும் பிரபலமாக ஒரு ஊர் உண்டே அது இன்னாது?



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நாடி ஜோதிடம் - Page 4 Mgr
செந்தில் முருகன்
செந்தில் முருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011

Postசெந்தில் முருகன் Thu Feb 02, 2012 5:20 pm

நாடி ஜோதிடத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் சரியான இடம் தான் எனக்கு தெரியவில்லை, எனக்குள் தோன்றும் முன் ஜென்ம கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன், அவர்களுடைய தொடர்பு அட்ரஸ் கிடைக்குமா..........



மெய் பொருள் காண்பது அறிவு.............
VARATHARAJAN
VARATHARAJAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011

PostVARATHARAJAN Wed Mar 27, 2013 2:00 pm

பல நல்ல விசயங்களை நாடி ஜோதிட மூலமாக அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி .

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 27, 2013 2:12 pm

நானும் பார்க்க வேண்டுமென ஆவலகா உள்ளேன் சரியாக சொல்ல கூடியவர் முகவரி வேண்டும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Mar 27, 2013 2:37 pm

ஏடு ஜோசியம் சிதம்பரம் அருகே உள்ள வைதீஸ்வரன் கோவிலில் பார்ப்பார்கள். அனைத்துமே நம்பிக்கைக்கு உட்பட்டது. இது தான் நடக்கும் என்றால் வாழ்வு சுவராஸ்யம் அற்று பயத்துடனே கழியும். காற்றின் திசையில் செல்லும் பாய்மர கப்பலே மனித வாழ்க்கை திசையை நாம் தேர்ந்தெடுக்க முடியாது அது கடவுள் என்ற காற்றிடம் உள்ளது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக