ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

View previous topic View next topic Go down

எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by gunashan on Mon Aug 16, 2010 5:08 pm

எந்திரன் - இசை விமர்சனம்
- நரேன்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் இதோ தயாராகிக்கொண்டிருக்கிறது! கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்பார்க்கபபடும் ஐஸ்-ரஜினி ஜோடியும் இதோ வந்தாகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில், இன்னும் ஒரு முறையாக "இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்" என்ற முத்திரையோடு வரப்போகிறான் எந்திரன். இப்படத்திற்கென்று ஒரு சிறு வரலாறு இருக்கிறது. ஷங்கர் "இந்தியன்" இயக்கிய சமயத்தில், கமலும் ஷங்கரும் "மீண்டும் இணைவோம்" என்று முடிவு செய்தபோது வந்த கதைதான் எந்திரனின் கதை. அப்பொழுது படத்திற்கு வைத்திருந்த பெயர் வேறு - ரோபோ! எழுத்தாளர் சுஜாதா கூட ஒரு பேட்டியில், "இந்த படத்தை கரெக்ட்டா எடுத்தா, ஸ்பீல்பர்க்கோட "ஏ.ஐ" படத்தை விட நல்லா வரும்" என்று சொல்லியிருந்தார்! அடேங்கப்பா!

அதன் பிறகு, கமலும் ஷங்கரும் அவரவர் பாதைகளில் சென்றுவிட, ரோபோவைத் தூக் கி பரண் மேல் வைத்துவிட்டார்கள். விக்ரமுடன் ஷங்கர் இணைந்தபொழுது, ரோபோவிற்குத்தான் "அந்நியன்" எனும் பெயரை வைத்துவிட்டார்கள் என்று கோடம்பாக்கம் நினைத்தது. ஆனால், அந்நியனுக்கும் சைன்ஸ்-பிஃக்ஷனுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஓரிரு வருடங்களில் ரோபோ வேலையில் மும்முரமாக இறங்கினார் ஷங்கர். ‘படத்தை ஹிந்தியில் எடுக்கப்போகிறார்கள், ஷாருக்கான் நடிக்கப்போகிறார்’ என்று கூட செய்திகள் வந்தன. கடைசியில் ஒரு வழியாக சிவாஜியின் வெற்றிக்குப் பிறகு, நம் சூப்பர்ஸ்டாரிடமே வந்து சேர்ந்தார் ஷங்கர்!

"ரோபோ" என்று ஆங்கிலத்தில் பெயரிட முடியாதே - நம் அரசாங்கம் வரியைத் தீட்டிவிடுமே! அதனால், ஒரு நல்ல தமிழ் ப்பெயரைத்தேட ஆரம்பித்தார்கள். ஷங்கரின் செண்டிமெண்டுக்கு இணங்க, ஐந்து எழுத்துக்கள் தேவை, "ன்" என்ற எழுத்தில் முடிந்தால் அமோகம் - இப்படி வந்ததுதான் எந்திரன்! இதற்கிடையில் எழுத்தாளர் சுஜாதாவைப் பிரிய நேர்ந்ததால், ஷங்கர் தன் முதல் படத்தில் பணிபுரிந்த பாலகுமாரனையும் எந்திரன் குழுவில் சேர்த்துக்கொண்டார்.

படம் கிட்டத்தட்ட ரெடியாம் - செப்டம்பரில் வெளிவர வாய்ப்பிருக்கிறதாம். அப்படி இப்படி என்று தள்ளிப்போட்டால் கூட, இந்த வருடத்திற்குள், அல்லது பொங்கலுக்காவது எந்திரனை திரையரங்குகளில் காணலாம்! படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. இசை யார் என்று கேட்கின்றீர்களா! வேறு யார்?இசைப்புயல் ரஹ்மான்தான். மலேஷியாவில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிட்டார்கள். கேட்போமா!


புதிய மனிதா

இது ஒரு சைன்ஸ்-பிஃக்ஷன் திரைப்படம் என்று முத்திரை குத்துவது போல, அக்மார்க் டெக்னோவில் முதல் பாடல்! யாரது கதீஜா ரஹ்மான்! இசைப்புயலின் மூத்த பெண் - சினிமாவில் பாடும் முதல் அனுபவம்! அதுவும் ரஜினிகாந்தின் படத்திற்கு! என்ன ஒரு வாய்ப்பு! ஒரு சில வரிகளே பாடியிருந்தாலும், அம்சமாக பாடியிருக்கின்றார். ரஹ்மானின் குரலும் ஆங்காங்கே கேட்கிறது! பாட்டுஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள் கழித்துதான் கேட்கிறது எஸ்.ப.பாலசுப்ரமணியத்தின் குரல். எந்திரனை வரவேற்பது போல் அமைந்திருக்கின்றன வைரமுத்துவின் வரிகள். சக்கை போடு போடுகிறார் எஸ்.பி.பி - எத்தனை மாற்றங்கள் குரலில்! ஆங்காங்கே பேசுவது போல மெட்டு அமைந்திருந்தாலும், பாடலுக்கு எஸ்.பி.பி. தரும் உயிர் இருக்கிறதே! அப்பப்பா! தாளம் போட வைக்கும் பீட்ஸையும், கொஞ்சம் கார்ட்ஸையும் கொண்டே மொத்த பாட்டையும் முடித்துவிட்டார் ரஹ்மான்.

காதல் அணுக்கள்

மென்மையான கிடார் ரிங்குடன் துவங்கும் மென்மையான காதல் பாடல் - விஜய பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷலின் குரல்கள். சைன்ஸ்-பிஃஷன் படம் என்றால், காதல் பாடலில் கூட அறிவியல் பேச வேண்டுமா? ந்யூடன், எலெக்ட்ரான் என்று என்னெல்லாமோ சொல்கின்றன வைரமுத்துவின் வரிகள். இசையின் ஆதிக்கம் இல்லாமல், கிடார், கார்ட்ஸ், லேஸான பீட்ஸ் என்று அழகிய மெலடியைத் தந்திருக்கிறார் ரஹ்மான். ரஜினி-ஐஸ்வர்யா டூயட்டைக் காணத்துடிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆசையைத் தீர்க்கப்போகும் பாடல் இதோ!

இரும்பிலே ஒரு இருதயம்

என்ன பாடுகின்றார்கள் என்று புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்! கார்க்கியும் "காஷ் ண் க்ருஸி"யும் எழுதியிருக்கும் வரிகள்! ஒரு நிமிடத்திற்குப் பிறகு_ ரஹ்மான் பாட ஆரம்பிக்கும் பொழுதுதான் காதில் புரியும்படி விழுகின்றன. ரோபோ ஒன்று காதல் பாடல் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடிகின்றதா? இந்தப் பாடலைக் கேளுங்கள் - புரியும்!


சிட்டி

படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வசீகரன் என்று பட்சி செய்தி சொல்லியது. அவர் ஒரு ரோபோ செய்கிறாராம் - அதன் பெயர் சிட்டியாம்! அந்த ரோபோ டான்ஸ் ஆடுவதற்கேற்றாற் போல இந்தப் பாடலில் . மீண்டும் டெக்னோவை அள்ளித் தந்திருக்கின்றார் ரஹ்மான். ஆங்காங்கே சில வரிகள்!மற்றபடி வெறும் இசை மட்டும்தான்! பிரவீன் மணி பாடல் எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து ப்ரதீப் விஜய்யும், யோகியும் பாடியிருக்கின்றார்கள். நடுவே மேற்கத்திய ஹார்மனி இசையும், ஏன் சொல்கட்டு ஸ்வரங்களும் கூட கேட்கின்றன.

அரிமா அரிமா

அரிமா என்றால் சிங்கம்தானே? ரஜினிகாந்திற்கு ஏற்ற பாடல் - பாடலின் இசையே ஒரு பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திவிட்டது. ட்ரம்பெட் போன்ற ஏதோ ஒரு கருவியில் அற்புதமான தொடக்கம்! அதன் பின்னர், ஹரிஹரன் "அரிமா அரிமா, நானோ ஆயிரம் அரிமா" என்று ஆரம்பிக்கின்றார். சாதனா சர்கமும் இணைந்து பாடுகின்றார். ஆங்காங்கே விஜய பிரகாஷும், நரேஷ் ஐயரும்கூட பாடுகின்றார்கள். ஷங்கரைப் பற்றி நன்கு தெரிந்ததால், இப்பாடலை எப்படி திரையில் காட்டப்போகிறார் எனும் ஆவல் இப்பொழுதே வந்துவிட்டது. வைரமுத்துவின் வரிகள் வேறு சக்கை போடு போடுகின்றன! "இவன் பேர் சொன்னது, பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்! இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதும் நிலவும் நிலவும் தலை முட்டும்" - ஆகா ஆகா ஆகா!!

கிளிமஞ்சரொ

இப்பாடலைத்தான் பெரு நாட்டில் அமைந்திருக்கும் மாச்சு பிச்சுவில் (இது ஒரு உலக அதிசயமாக்கும்) எடுத்தார்களாக்கும்? அங்கு எடுத்தால், பாடல் ஏன் ஆதிவாசிகள் பாடும் பாடலைப் போல் அமைய வேண்டும்? "அழகான ராட்சசியே" பாடலில் வந்தது போல இதிலும் வித்தியாசமான ஆடைகளைக் காட்டப் போகிறாரா ஷங்கர்? சரி சரி, கேள்விகள் போதும். பா.விஜய்யின் வரிகளில் இன்னுமொரு டூயட் இது. ஜாவேத் அலியும் சின்மயியும் அம்சமாக பாடியிருக்கின்றார்கள். குரலில் செய்யும் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சபாஷ் போட்டுவிடலாம். ரொம்ப சுலபமான மெட்டைத் தந்துவிட்டு அதையும் நம்மை ரசிக்க வைக்கிறார் ரஹ்மான்!

பூம் பூம் ரோபோ டா

கார்க்கியின் வரிகளில் யோகி, கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோஹன், தன்வி ஷா எல்லோரும் இணைந்து இப்பாடலைப் பாடுகிறார்கள். தீம் பாடல் போல. ஐஸாக் அஸிமோவ், ஐஸாக் நியூடன் என்று கவி பாடுகிறார்கள். அஸிமோவ் சைன்ஸ்-பிஃக்ஷனில் கலக்கியவர்! நியூடனோ எல்லோருக்கும் தெரிந்த அறிவியல் மேதை. ரசிக்ககூடிய பாடல். ஆங்காங்கு நடுவே மெட்டின் ‘மூடை’ மாற்றி அழகாய்த் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.


ரஜினிகாந்தின் படத்தில் வரும் பாடல்களை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்!! ஷங்கர் வேறு, ரஹ்மான் வேறு! படத்தை எப்பொழுது திரையரங்கில் காணப்போகிறோம் என்ற ஆவலைத் தூண்டுகின்றன இப்பாடல்கள். ஒரு அக்மார்க் ஆக்ஷன் - மசாலா திரைப்படத்தைக் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

அருமை தான் என்றாலும்.

Post by tthendral on Mon Aug 16, 2010 7:25 pm

????


Last edited by tthendral on Wed Nov 24, 2010 1:16 pm; edited 1 time in total (Reason for editing : ..)

tthendral
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by gunashan on Mon Aug 16, 2010 7:35 pm

@tthendral wrote:நன்றாக கவனித்தீர்களா..
புதிய மனிதா-வைத்தவிர பிற பாடல்கள் எல்லாமே எங்கேயோ கேட்டது போலவே தோன்றுகிறது. அதாவது ரி-மிக்ஸ் என்கிறார்களே! அது போலத்தான்.
திடீரென ஒரு பாடலின் இடையில் இளையராஜாவின் 'திருவாசக' வாசனை வீசுகின்றது. பிறகு மற்றொன்றில் ரகுமானே இசையமைத்த சமீபத்திய பாடலின் முதல் ஆலாபனை கேட்கிறது. இன்னொன்றில் பிரபலமான பாப் பாடகியின் ஆல்பம் ஒன்றின் அதிரடி ஒலிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை எந்திரன் படப்பாடல்கள் ஒரு கிச்சடியே தவிர ரகுமானின் ஒரிஜினல் நிச்சயமாய் மிஸ்ஸிங்.

ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். மீண்டும் சந்திப்போம்

தென்றல் இன்று புயலானதோ.....அமைதி அமைதி.......நாங்கள் எந்திரன் பாடல்களை இன்னும் கேட்கவில்லை.. நீங்கள் எல்லாப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள் போலிருக்கிறது.....அயா ஒன்று..எ,ஆர்,ரகுமானும் இளையராஜாவின் இசைக்குழுவில் இருந்தவர்தான். ஆகவெ தலைவரின் வாசம் சீஷ்யன் மீது வீசுவது சகஜமே.... இவ்வுலகில் அனைத்தும் ஒன்றொடொன்று ஒட்டிப் பினைந்தவை என்பது உண்மை......ஆகவே அவருடைய இசையில் இவரிருப்பதும்,,...இவருடைய இசையில் அவரிருப்பதும் இயற்கையே.....
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by அலட்டல் அம்பலத்தார் on Mon Aug 16, 2010 7:36 pm

நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?

எப்பிடி இருக்கு

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by gunashan on Mon Aug 16, 2010 7:42 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?

எப்பிடி இருக்கு

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்

யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by செங்கை ஆழியன் on Mon Aug 16, 2010 7:46 pm

@gunashan wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?

எப்பிடி இருக்கு

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்

யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
செங்கை ஆழியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by gunashan on Mon Aug 16, 2010 7:49 pm

சிட்னி சின்னப்பு wrote:
@gunashan wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?

எப்பிடி இருக்கு

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்

யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நல்லா போட்டீங்கையா..சிட்னி..........அந்த பெரிசு லவுசுக்காக ரொம்ப பேஜாரு பண்றாரு கண்டிடிலெ.... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by அலட்டல் அம்பலத்தார் on Mon Aug 16, 2010 7:54 pm

@gunashan wrote:
சிட்னி சின்னப்பு wrote:
@gunashan wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?

எப்பிடி இருக்கு

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்

யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நல்லா போட்டீங்கையா..சிட்னி..........அந்த பெரிசு லவுசுக்காக ரொம்ப பேஜாரு பண்றாரு கண்டிடிலெ.... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

என்ன ராசா நீன்கூட அந்த பஞ்சு மிட்டாய் தலையனுக்கு சப்போர்ட் பண்ணுறாய் ...அம்பதிலும் ஆசை வரும் கண்டியலே ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by gunashan on Mon Aug 16, 2010 7:58 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:
@gunashan wrote:
சிட்னி சின்னப்பு wrote:
@gunashan wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:நானும் நல்லா பாடுவேன் ராசாக்கள் எனக்கும் ஒரு சான்ஸ் தர மாட்டியளா ?

எப்பிடி இருக்கு

ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ச ச ச சனி தாசனி பானிதா மாத பாமக நிவேதா
ப பாதனிசா ரீக ரீகசா
ப பாதனிசா ரீக ரீகசா
.....
நல்லா இருக்கே ராசாக்கள்

யோவ் பெரிசு...இன்னாயா.......வந்தவுடனேயே.. பானிதா, நிவேதா, ரீகாசான்னு பொம்பள பேரா வருது... அடங்க மாட்டியா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சரியா சொன்னாய் தம்பியா ? அந்த நிவேதா யாரெண்டு கேளுடா தம்பியா ? கட்டையில போற வயசுல லவுசு கேக்குதாமே .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நல்லா போட்டீங்கையா..சிட்னி..........அந்த பெரிசு லவுசுக்காக ரொம்ப பேஜாரு பண்றாரு கண்டிடிலெ.... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

என்ன ராசா நீன்கூட அந்த பஞ்சு மிட்டாய் தலையனுக்கு சப்போர்ட் பண்ணுறாய் ...அம்பதிலும் ஆசை வரும் கண்டியலே ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

யோவ் பெரிசு...அவரு எவ்வளவு அழகா..இருக்காரு....அவர போயி பஞ்சு மிட்டாய் தலைய்ன்னு சொல்றீங்க.......ஒங்க வாயில இரும்ப காய்ச்சி ஊத்த....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by siva1984 on Mon Aug 16, 2010 11:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
siva1984
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 18

View user profile http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

Re: எந்திரன் - இசை விமர்சனம் - நரேன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum