ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by சிவா on Wed Jul 15, 2009 8:50 pmஜே.கே. ரித்திஷ்‘‘பாரம்பரியம் மிக்கம்" தி.மு.க. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ரித்திஷை சோனியாவே ஆச்சர்யமாக பார்த்த கதையை பத்திரிக்கையில் படிச்சிருக்கலாம். கண்கூசுகிற மேக்கப்பில் நாடாளுமன்றத்தில் நுழைந்த ரித்திஷை சீனியர் எம்.பி.கள் மிரட்சியாக பார்த்தனர். ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற இந்திய தலைவர்கள் மண்ணைக் கவ்விய இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்ற ரித்திஷை சாதனையாளர் என்றே சொல்லலாம்.‘கோமாளி’ இமேஜ் வைத்தே தனக்கு ஆகவேண்டியதை சாதித்து கொள்ளும் முகவை குமார் என்கிற ஜே.கே. ரித்திஷின் பெரிய பலம் பணம். அனில் அம்பானி, விஜய் மல்லையா போன்ற பணத்தில் செழிக்கும் பெரும் முதலாளிகளே மக்களைவை தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை உறுப்பினராக ஆனார்கள். ஆனால் நம்ம ஜே.கே.பணத்தை வைத்து, மக்களவை உறுப்பினராகி மத்திய அமைச்சர் ஆகிற கனவிலும் இருந்தார். அமைச்சர் கனவு கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது’.

‘நதி மூலம் தெரிஞ்சாலும் ரிஷி மூலம் தெரியாது’னு சொல்லுவாங்க. ரித்திஷ் மூலமும் அப்படிதான். புரியாத புதிரா எல்லாருக்கும் இருக்கிற விஷயம்.உறுதியான தகவல்கள் கிடைக்க மலேசியா வரைக்கும் போக வேண்டியதாகி போச்சு.


‘‘பாரம்பரியமான தி.மு.க. குடும்பமாக இருந்தாலும் முகவை குமார் இராமநாதபுரத்தில் அன்றாடம் காய்ச்சியாகதான் இருந்தார். தூரத்து சொந்தமான தாத்தா சுப. தங்கவேலன் தி.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும் முகவை குமாருக்கும் தூரத்து சொந்தமான தாத்தாவுக்கும் தொடர்பு கிடையாது. சொந்த ஊரில் பஸ்ஸுக்கு காசில்லாமல் நடந்துபோன கதையெல்லாம் முகவை குமாருக்கு உண்டு. வறுமை விரட்ட சென்னையில் போய் ஏதாவது பிழைப்பு நடத்தலாம் என்று இராமநாதபுரத்திலிருந்து பஸ் ஏறியவருக்கு கோடம்பாக்கம் அடைக்கலம் கொடுத்தது. ஊரிலிருந்து சினிமாவுக்காக கோடம்பாக்கம் வந்த நண்பர்களிடம் தஞ்சம் புகுந்த குமாருக்கு,‘ எந்த வேலை செய்வது’ என்கிற குழப்பத்திலேயே காலம் வேகமாக சுழன்றது.


மலேசியா,சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் செட்டிலான தமிழர்கள் தாயகம் வந்தால், அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் ‘ஷுட்டிங்’வேடிக்கைப் பார்ப்பது தவறாமல் இடம்பெறும். திரையில் பார்த்த நட்சத்திரங்களை நேரில் எப்படியாவது சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரிய தொகையையே செலவு செய்வார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். இந்த ஆசையில் சென்னைக்கு வருகிறவர்களை நோக்கி வலையோடு காத்திருக்கிறது ஒரு கும்பல். சென்னைக்குள் ஷுட்டிங் எங்கு நடக்கிறது எனும் விவரங்களைத் தெரிந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களை அங்கு அழைத்துச் செல்வதற்கு பெரிய பணத்தை கறந்து விடுவார்கள். நட்சத்திரங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க தயாராக இருக்கிறவர்கள் இருப்பதால் தொழில் அமோகமாக நடைபெறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by சிவா on Wed Jul 15, 2009 8:50 pm

சினிமா வாய்ப்பு தேடி கிடைக்காமல் போனவர்களில் சிலர் இந்த வேலையையே முழுநேரமாக செய்யத் தொடங்கிவிட்டனர். முகவை குமாருக்கும் இதே வேலை முழுநேரமானது. ஊரிலிருந்த தி.மு.க தொடர்பு மற்றும் தூரத்து சொந்தமானதாத்தா சுப.தங்கவேலனின் பேரும் முகவை குமாருக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது. தி.மு.க.கட்சியில் அப்போது தீவிரமாக ஈடுபட்ட சரத் குமார், இப்போதைய மத்திய அமைச்சர் நெப்போலியன், தியாகு, வாகை சந்திரசேகர் போன்ற நடிகர்களைக் கட்சியின் பெயர் சொல்லி, முகவை குமாரால் எளிதில் அணுக முடிந்தது. தாத்தா மாநில அமைச்சர் என்பதும் மிகப் பெரிய பலமாக இருந்து தட்டிய கதவெல்லம் திறந்தது. பெரிய உழைப்பில்லாமல் வாழ்வதற்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க இந்த தொழில் நன்றாகவே கைக்கொடுத்தது. இந்த நிலையில் தாத்தாவுடனான உறவை வளர்த்துக் கொள்ளும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார் முகவை குமார்.


சென்னைக்கு வரும் வெளிநாடு வாழ் தமிழர்கள் சினிமா மீது பைத்தியமாக இருக்கின்றனர் என்பதை நேரில் பார்த்த முகவை குமாருக்கு சினிமா ஆசை அரும்பியது. சினிமாவில் இருப்பவர்களுக்கு அரசியல் ஆசை இருப்பதைக் கண்டு அரசியலிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீவிரமானார்.


காலம் கைக்கூடி வரும் என்பதற்கு சாட்சியாக மலேசிய பிரதமருக்கு மிகநெருக்கமான இருந்த ஒரு தமிழர் சென்னைக்கு வந்தார். மலேசிய அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு உடைய அவருடைய குடும்பத்தினருக்கு சினிமா ஆர்வம் அதிகம். திரை நட்சத்திரங்களை நேரில் பார்ப்பதற்காக எட்டு வருடத்திற்கு முன்பு சென்னையில் ஒரு வார காலம் முகாமிட்டது மலேசிய முக்கிய பிரமுகரின் குடும்பம். அப்போது சரத்குமார் கொஞ்சம் பரபரப்பான நடிகாரகவும் இருந்தார்.அந்த நேரத்தில் சரத்குமார் உள்ளிட்ட சிலரை சந்திக்க வைத்ததோடு, திரை நட்சத்திரங்களோடு உணவருந்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தார். மலேசிய பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து கவனித்த முகவை குமாருக்கு அடுத்த அதிர்ஷ்டம் அப்போதே அடித்தது.


முக்கிய பிரமுகரின் கடைசி மகனுக்கு கால் இடறி எலும்பு முறிவு ஏற்பட்டது சுவாரஸ்யமான கதையின் அடுத்த திருப்பம். மேலும் ஒரு வார காலம் தன்னுடைய பயணத்தை நீட்டிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் மலேசிய பிரமுகர். எல்லா வேலையையும் விட்டுவிட்டு கால்முறிவு சிறுவனுக்கு முழுநேர கவலாக இருந்து அக்கறையோடு பார்த்துக்கொண்டார் முகவை குமார். அப்போது முக்கிய பிரமுகருக்கும் குமாருக்கும் நெருக்கம் அதிகரித்தது. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் கடுமையாக உழைக்கிற குமாருக்கு கைமாறாக ஏதாவது செய்யவேண்டும் என்ற நினைப்பு விதையாக பிரமுகர் மனதில் விழுந்தது.


கைமாறு சர்க்கரையாக மாறி முகவை குமார் வாழ்க்கையில் பெரிய வசந்தத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள் அவரின் அடிப்பொடிகள். இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு 200டன் சர்க்கரையை இறக்குமதி செய்யும் பொறுப்பு முக்கிய பிரமுகரிடம் வந்து சேர்ந்தது. உதவிக்குக் கைமாறாக சர்கரையை இறக்குமதி செய்கிற வேலை முகவைகுமார் மூலமாக நடைபெற்று கணிசமான தொகையைப் பரிசாகப் பெற்றார் முகவை குமார்.அதுவரை அன்றாடம் காய்ச்சியாக வாழ்வை நகர்த்தியவருக்கு சொகுசு வாசலுக்கே வந்தது.


ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தைத் தொடுவதற்காக காலம்கனிந்த ஒரு நேரத்தில் தனக்கு கிடைத்தப் பணத்தை முதலீடா போட்டு பல இடங்களில் இடங்களை வளைத்தார் முகவை குமார். ஒரு ரூபாய் போட்டால் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற பணம் காய்க்கும் மரமாக ரியல் எஸ்டேட் தொழில் ராக்கெட் வேகத்தில் சீறிபாய்ந்தது. தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணம்புரள ஆரம்பித்தபோது சினிமா ஆசையை நிறைவேற்ற ஹீரோவாக நடிக்கும் முடிவை எடுத்தார் முகவை குமார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by சிவா on Wed Jul 15, 2009 8:50 pm

‘முகவை குமார் நடிக்கும்’னு போஸ்டர் அடிக்கிறது கஷ்டம் அண்ணே’னு என்று உடன் இருந்தவர்கள் சொல்ல முகவை குமார் என்கிற ஜே.கே. ரித்திஷ் குமாராக அவதாரம் எடுத்து அளப்பறைகளை கொடுத்தார் ரித்திஷ். வீட்டின் உள் அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நுழையும்போது, ‘அண்ணன் அவர்களை வருக வருகவென்று வரவேற்கிறோம்’ என்று போஸ்டர் அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தார். காசு இருந்தால் கேரோ செய்யும் காக்காய் கூட்டத்திற்கு சகலமும் ரித்திஷ்தான் செய்தாக வேண்டும். போஸ்டர் அடிக்க ஆகும் செலவையும் ஏற்று, கூடுதலாக கூலியும் கொடுத்த அண்ணன் ரித்திஷ் ‘வீரத்தளபதி’ என்ற பட்டங்களை சுமக்க ஆரம்பித்தார். ரித்திஷ் ஆட்டோ ஸ்டேன்ட்கள் வடபழனி ஏரிக்களில் திடீர் திடீரென் முளைத்து எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தன. சென்னையின் கோடம்பாக்கத்திலிருந்து வடபழனி வந்தாலோ, வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் போனாலோ வரவேற்பு பேனர்கள் கண்னை கூசஆரம்பித்தன.


இன்னொரு அதிர்ஷ்டம் கூரையைப் பிச்சுகிட்டு கொட்ட ஆரம்பித்தது. மலேசிய நாட்டிலிருந்து நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்க கட்டிடங்கள் கட்டும் முன்வந்தன. அதற்கான ஆர்டரை டி.எல்.எஃப் நிறுவனம் பெற்றது. ரியல்எஸ்டேட் தொழிலில் இந்தியாவின் பெரிய நிறுவனமான டி.எல்.எஃப் நிறுவனம் சென்னையில் கே.கே. ரித்திஷை வைத்து நிலங்களைத் தேடியது. தன்னிடம் கைவசமிருந்த நிலங்களை பெரிய தொகைக்கு ஜே.கே. ரித்திஷ் விற்றதாக தெரிகிறது.


ஜே.கே. ரித்திஷ் என்கிற வள்ளல் பிறந்த இடம் அதுதான். அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்ட்டதில் கொஞ்சம் கிள்ளி கொடுக்க தொடங்கியவரை எல்லோரும் வாய்விட்டு புகழ்ந்தார்கள். ‘நாங்க பாரம்பரியமா வள்ளல் பரம்பரை’என்ற பரம்பரை புகழைச் சொல்லி, பார்க்கிற எல்லோருக்கும் நூறு ரூபாய்நோட்டும், ஆயிரம் ரூபாய் நோட்டும் அள்ளி வீசினார். ‘ஐயா தர்ம பிரபுவே’என்று யாராவது கையை நீட்டினால் நூறு ரூபாய் நோட்டில் காந்தி சிரிப்பார்.‘ஐயா வள்ளல் மகராசனே’என்று கூறினால் ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தி சிரிப்பார். காசு கொடுத்தே பிரபலமான ரித்திஷை, ‘எப்படி சம்பாதிச்சாலும் எல்லாருக்கும் கொடுக்கிறாரே’என்று பாஸிட்டிவாக பார்த்தனர். கலவரமான விளம்பரங்களில் ரித்திஷ் மிரள வைத்தாலும், பணத்தை வாரி இறைத்து எல்லோரையும் அசர வைத்தார். ஷுட்டிங்க் நடக்கும் நேரத்தில் ‘லைட் மேன்’ சம்பளம் 400ரூபாய் என்றால், ரித்திஷ் ஆஜரான நாளில் 1,400 ரூபாய் சம்பளம். எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்றுகேட்டு, யூனிட்டுக்கே ஆயிரம் ரூபாய் நோட்டுகளைபறக்க விட்டார்.


‘ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் கண்டெய்னரில் ஒன்றை லபக்கி இப்படி வள்ளலாகி இருக்கிறார்’ எனும் வதந்திகளை ரித்திஷ் காதுகொடுத்தும் கேட்கவில்லை. ‘வித்தியாச கெட்டப்’ என்று இரண்டு பக்க பேட்டிக்கு நிருபர்கள் வந்தால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை காஸ்டியூம்க்கு செலவழித்தார் நாயகன். படம் ரிலீஸான நாளில் இருந்து பிரியாணியும் கொடுத்து, படம் பார்த்தால் நூறு ரூபாய் என்று பணமும் கொடுத்தே தன் படத்தை நூறு நாள் ஓட்டிய பெருமை தமிழ் சினிமா வரலாற்றில் ரித்திஷையே சேரும். எந்த விமர்சனத்தையும் சிரித்துக் கொண்டே ரசிப்பது அவருடைய இன்னொரு ப்ளஸ். சினிமா நட்சத்திரங்களை வேடிக்கைக் காட்ட மற்றவர்களை அழைத்து போன முகவை குமார்,ஜே.கே. ரித்திஷாகி தானே நட்சத்திரமான கதையை அப்படியா ஒரு சினிமாவாக எடுக்கலாம்.


இன்னொருப் பக்கம் அடிமனதில் ஆழங்கொண்டிருந்த அரசியல் ஆசைக்கு ஆதரவாக வந்து நின்றது நாடாளுமன்ற தேர்தல். அழகிரியின் ஆசிர்வாதத்தை தன் பணத்தினால் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இவ்வளவு நாள் தன்தூரத்து தாத்தா என்று யாரைக் கைக்கட்டி கொண்டிருந்தாரோ அவரையே வீழ்த்திதி.மு.க.வில் சீட் வாங்கிய போது காமெடியனாக இருந்த ரித்திஷை எல்லோரும் சீரியஸாக பார்த்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by சிவா on Wed Jul 15, 2009 8:51 pm

மாவட்ட செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் இருந்த சுப. தங்கவேலன் தன்னுடைய மகனுக்கு எம்.பி. சீட் வாங்கி விடுவதில் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கினார். தி.மு.க. கட்சியில் மாவட்ட செயலாளரை மீறி எம்.பி. சீட்வாங்கியதை எட்டாவது அதிசயமாகவே பார்க்கிறார்கள். ‘உங்க தொகுதிக்கு நீங்களே செலவு செஞ்சுக்குவீங்களா?’ என்று தி.மு.க. தலைமை கேட்டபோது, ‘பக்கதுலரெண்டு தொகுதியையும் நானே பார்த்துக்கிறேன்’ என்று வெகுளித்தனமாக சொன்னதோடு செய்து காட்டினார் ஜே.கே. அழகிரி எப்படியாவது தனக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கி விடுவார் என்று நம்பியவருக்கு சின்னதாக இப்போது பின்னடைவு.‘அண்ணன் தகுதிக்கு வெறும் எம்.பி போதாது. மினிஸ்டர் ஆக்கணும்’ என்று அவரோடு எப்போது சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்ற,‘ மினிஸ்டருக்கு எவ்ளோ செலவாகும்’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் அல்டிமேட் நாயகன்.


அடுத்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் அரசியலையும், சினிமாவையும் கைக்குள் கொண்டு வந்ததில் ரித்திஷ் குமாருக்கு கொஞ்சம் பெருமை இருக்கவே செய்கிறது. எம்.பி.ஆகிவிட்டாதால், பழனி முருகன் கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்தி அங்கு இருக்கும் எல்லா பஞ்சாமிர்த டப்பாக்களையும் அள்ளியிருக்கிறார் ரித்திஷ். சென்னையில் குடியிருக்கும் மிகப்பெரிய அப்பார்ட்மென்டான தோஷிகார்டனில் குடி இருப்பவர்கள் எல்லோரும் கடந்தவாரம் அதிகாலை கதவை திறந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுவாசலிலும் பழனி பஞ்சாமிர்தத்தை வைத்திருக்கிறார் ரித்திஷ். ‘கதவை தட்டியே கொடுத்திருக்கலாமே’ என்று சிலர் கூற மையமாக சிரித்திருக்கிறார் கலகல காமெடி ஹீரொ. இதற்கு முன்பு திருப்பதிக்குப் போய் லட்டு வாங்கிவந்து எல்லோருடைய வீட்டு வாசலிலும் வைத்தபோது பல லட்டுகளை திருப்பி அனுப்பினர் குடியிருப்பவர்கள். இந்த முறை வைத்த பஞ்சாமிர்தத்தை திருப்ப அனுப்பமனமின்றி எல்லா வீடுகளிலும் எடுத்துக் கொண்டுள்ளனர். ‘எம்.பி’க்கு இவ்ளோ பவரா என்று சிலிர்த்துபோய் ரித்திஷ் சொன்ன போது, ‘ஆமாண்ணே’ என்று உடனே தலையசைத்தவருக்கு ஆன்&தி&ஸ்பாட் ஆயிரம் ரூபாய் லாட்டரி அடித்தது.


நாடாளுமன்றத்தில் கைத்தட்டும் எம்.பி.களுக்கு காந்தி நோட்டை நீட்டிவிடுவாரோ என்று கொஞ்சம் பேர் பதறிப்போய் இருப்பதாக தகவல்’’

நன்றி:தெனாலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Wed Jul 15, 2009 8:56 pm

ஜெ கே ரித்தீஷ் நான் உங்களை நேசிக்கிறேன் மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by நிலாசகி on Wed Jul 15, 2009 8:58 pm

நல்ல உழைப்பாளி ...கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டார்.....காமெடியன் அல்ல பல மக்களின் ஹீரோ...இவரோட வாழ்க்கையே படமாக எடுக்கலாம் போல
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Wed Jul 15, 2009 8:59 pm

அப்படின்னா ஹீரோ யாரு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by நிலாசகி on Wed Jul 15, 2009 9:05 pm

அவரே நன்றாக நடிப்பார் நல்லா ஆடுவார்....................
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Wed Jul 15, 2009 9:07 pm

ஒ அப்படியா செரி செரி

ஒங்களுக்கும் அவரை பிடிக்குமா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by நிலாசகி on Wed Jul 15, 2009 9:08 pm

பிடிக்கும் நல்ல மனிதர்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ramesh.vait on Wed Jul 15, 2009 9:21 pm

good story
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ராஜா on Sat Jul 18, 2009 1:41 pm

அண்ணன் ஜே.கே. ரித்திஷ் வாழ்க!!!

நாமளும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் ஏதாவது காந்தி நோட் வருதான்னு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Sat Jul 18, 2009 1:55 pm

Kraja29 wrote:அண்ணன் ஜே.கே. ரித்திஷ் வாழ்க!!!


நாமளும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் ஏதாவது காந்தி நோட் வருதான்னு

அதானே

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ராஜா on Sat Jul 18, 2009 2:02 pm

நீங்களும் உங்களோட பேங்க் அக்கௌன்ட் நம்பர அப்டேட் பண்ணுங்க ஜெ.கே.ரிதிஈஷ் பணம் அனுப்புவாரு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Sat Jul 18, 2009 2:05 pm

Kraja29 wrote:நீங்களும் உங்களோட பேங்க் அக்கௌன்ட் நம்பர அப்டேட் பண்ணுங்க ஜெ.கே.ரிதிஈஷ் பணம் அனுப்புவாரு

வெளிநாட்டுல இருந்தாலும் இந்தியால உள்ளா விஷியம்லாம் அத்த்துப்படிதான் போல
சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ராஜா on Sat Jul 18, 2009 2:09 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:நீங்களும் உங்களோட பேங்க் அக்கௌன்ட் நம்பர அப்டேட் பண்ணுங்க ஜெ.கே.ரிதிஈஷ் பணம் அனுப்புவாரு

வெளிநாட்டுல இருந்தாலும் இந்தியால உள்ளா விஷியம்லாம் அத்த்துப்படிதான் போல
சிரி

பின்ன

காலையில அலுவலகத்துக்கு வந்தா முதலில் செய்தி தாள்களும் , அப்புறம்
ஈகரையும் தானே ஓபன் பண்ணுவோம் , அப்புறம் தானே வேலையெல்லாம் ஆரம்பிப்போம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Sat Jul 18, 2009 2:18 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:நீங்களும் உங்களோட பேங்க் அக்கௌன்ட் நம்பர அப்டேட் பண்ணுங்க ஜெ.கே.ரிதிஈஷ் பணம் அனுப்புவாரு

வெளிநாட்டுல இருந்தாலும் இந்தியால உள்ளா விஷியம்லாம் அத்த்துப்படிதான் போல
சிரி

பின்ன

காலையில அலுவலகத்துக்கு வந்தா முதலில் செய்தி தாள்களும் , அப்புறம்
ஈகரையும் தானே ஓபன் பண்ணுவோம் , அப்புறம் தானே வேலையெல்லாம் ஆரம்பிப்போம்

பரவாயில்லை

எங்கிருந்தாலும் தாய்நாட்டை மறக்காமல் இருக்கிறீர்களே.

உங்கள் பற்று என்னை மிகவும் கவருகிறது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ராஜா on Sat Jul 18, 2009 2:19 pm

நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by பரஞ்சோதி on Sat Jul 18, 2009 3:43 pm

தலைவா, தலைவா

அடுத்த முதல்வரே, அதற்கு அடுத்த பிரதமரே!

இதோ என் வங்கி கணக்கு, பணத்தை அதில் போட்டு விடுங்க.
avatar
பரஞ்சோதி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 196
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by நிலாசகி on Sat Jul 18, 2009 3:45 pm

ஆஹா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by சிவா on Sat Jul 18, 2009 3:48 pm

மனிதனுக்கு எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் அவனை எப்பொழுது அதிஷ்டம் அணைக்கிறதோ அன்றுதான் அவன் பிரகாசிக்க முடியும். திறமை இல்லாவிடினும் அதிஷ்டம் வந்துவிட்டால் முகவை குமாரும் முதல்வராகலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by kirupairajah on Sat Jul 18, 2009 3:49 pm

@சிவா wrote:மனிதனுக்கு எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் அவனை எப்பொழுது அதிஷ்டம் அணைக்கிறதோ அன்றுதான் அவன் பிரகாசிக்க முடியும். திறமை இல்லாவிடினும் அதிஷ்டம் வந்துவிட்டால் முகவை குமாரும் முதல்வராகலாம்!

இது 100% உண்மை

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ராஜா on Sat Jul 18, 2009 4:45 pm

தல சொன்ன சரியாதான் இருக்கும் நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Guest on Sat Jul 18, 2009 5:31 pm

@பரஞ்சோதி wrote:தலைவா, தலைவா

அடுத்த முதல்வரே, அதற்கு அடுத்த பிரதமரே!

இதோ என் வங்கி கணக்கு, பணத்தை அதில் போட்டு விடுங்க.

சிரி மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by ராஜா on Sat Jul 18, 2009 5:37 pm

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஜெ.கே.ரித்தீஷ் வாழ்க
(இது என்னுடைய பேங்க் அக்கௌன்ட் நம்பர், அப்படியே ஏதாவது நமக்கும் போட்டுடுங்க )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முகவை குமார் என்ற ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum