உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 9:07 pm

» பெரியாரும் ரஜினியும்
by சக்தி18 Yesterday at 9:01 pm

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Yesterday at 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Yesterday at 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Yesterday at 8:40 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Yesterday at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Yesterday at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Mon Jan 20, 2020 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Mon Jan 20, 2020 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Mon Jan 20, 2020 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

Admins Online

தமிழ் அகராதி - ஈ

தமிழ் அகராதி - ஈ Empty தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:49 pm

ஈ - தமிழ் நெடுங்கணக்கில் நான்காம் உயிரெழுத்து; வீட்டு ஈ; தேனீ; சிறகு; அழிவு; ஓர் வியப்புக் குறிப்பு; ஒரு முன்னிலையசை; கொடு; கற்பி; படைத்தல் செய்; ஈனுதல் செய்; சம்மதித்தல் செய் [ஏதல்]
ஈகை - கொடை; பொன்; கற்பகமரம்; காடை என்ற பறவை; இண்டங்கொடி
ஈங்கண் - இவ்விடம்
ஈங்கு - இவ்விடம்; இவ்வாறு
ஈசல், ஈயல் - இறகு முளைத்த கறையான்

ஈசன் - கடவுள்; இறைவன்; சிவபிரான்; அரசன்; தலைவன்; பச்சைக் கர்ப்பூரம்
ஈசானம் - சிவபிரானின் ஐந்து முகங்களில் ஒன்று; வடகீழ்த்திசை
ஈசாவியம் - வடகீழ்த் திசை
ஈசுரன், ஈசுவரன் - தலைவன்; கடவுள்; சிவபிரான்
ஈசுவரி - பார்வதி தேவி

ஈஞ்சு - ஈந்து; ஈச்ச மரம்
ஈட்டம் - பொருள் சம்பாதித்தல்; கூட்டம்; சேமிப்பு; மிகுதி; வலிமை
ஈட்டி - கூரிய முனையுடைய கோல்; குந்தம்
ஈட்டு - சம்பாதித்தல் செய் [ஈட்டுதல், ஈட்டல்]
ஈடு - இடுதல்; பூசுதல்; பிரதிப்பொருள்; தகுதி; பொருத்தம்; ஒப்பு; அடைமானம்; வலிமை; பெருமை; நிலைமை

ஈடுகொடு - எதிர்ப்புக்குத் தளராமலிரு; நிகராயிரு; திருப்தி செய் [ஈடுகொடுத்தல்]
ஈடுபடு - மனங்கவரப்படு; வலிமை குறைவுபடு; வலையில் சிக்கு [ஈடுபடுதல், ஈடுபாடு]
ஈடேற்று - உய்வி; விடுதலையுறச் செய் [ஈடேற்றுதல்]
ஈண்டு - இவ்விடத்தில்; இப்பொழுது; இம்மையில்; விரைவு; கூட்டமாகச் சேர்ந்திரு; எண்ணிக்கை மிகுந்திரு; விரைந்து செல்; தோண்டியெடு [ஈண்டுதல்]
ஈண்டை - இங்கு; இவ்வுலகில், இவ்விடம், இவண்.

ஈது - இது
ஈந்தி, ஈந்து - ஈச்சமரம் : சிற்றீச்ச மரம் : நஞ்சு.
ஈமக்கடன், ஈமவிதி - இறந்தவர்க்குச் செய்யும் கிரியை
ஈமத்தாழி - பண்டைக் காலத்தில் இறந்தோரை வைத்துப் புதைக்கும் ஒருவகைப் பாண்டம்; முதுமக்கள் தாழி
ஈமம், ஈம் - சுடுகாடு; பிணம் சுடும் விறகுக் குவியல் : சுடுகாடு : பாதிரிமரம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:50 pm

ஈயம் - காரீயம்; வெள்ளீயம்
ஈயல் (ஈசல்) - இறகு முளைத்த கறையான்
ஈர் - பேன் முட்டை; ஈர்க்கு; இறகு; நுண்மை; ஈரம்; பசுமை; இனிமை; நெருப்பு
ஈர்க்கு - ஓலை நரம்பு; அம்பின் இறகு
ஈர்ப்பு - இழுத்தல்; வலிப்பு நோய்ஈரம் - நீர்க்கசிவு; குளிர்ச்சி; அன்பு; தயை; அறிவு; கரும்பு; வெள்ளி
ஈரொட்டு - நிச்சயமில்லாமை
ஈவு - கொடை; பங்கிடுதல்; ஒழிதல்; ஓர் எண்ணை மற்றொன்றால் வகுத்துக் கிடைக்கும் பங்கு எண்
ஈவோன் - கொடையாளி; ஆசிரியன்; கல்விக் கொடையளிப்பவன்
ஈழம் - ஸ்ரீலங்கா; சிங்களத் தீவு; கள்; கள்ளிஈழை, ஈளை - கோழை; காசநோய்; இழைப்பு நோய்
ஈற்றா - (ஈற்று + ஆ) கன்று போட்ட பசு
ஈற்று - ஈனுதல்; ஈனப்பட்ட குட்டி
ஈறு - முடிவு; எல்லை; மரணம்; பற்களைக் சூழ்ந்து நிற்கும் தசை
ஈன் - கருவுயிர்த்தல் செய்; பிறப்பித்தல் செய்; உண்டாக்கு; விளைவி [ஈனுதல், ஈனல்]ஈன்றாள் - தாய்
ஈனம் - இழிவு; குறைபாடு
ஈனல் - பிரப்பித்தல்; தானியக் கதிர்
ஈனோர் - இவ்வுலகினர்
ஈதல் - கொடுத்தல்
ஈகம் - சந்தன மரம் : விருப்பம் : சந்தனம் : ஈகாமிருகம் : செந்நாய் : ரூப வகை.
ஈகுதல் - கொடுத்தல் : படைத்தல்.
ஈகையன் - கொடையாளன்.
ஈகையரியவிழை - மங்கலிய சூத்திரம்.
ஈக்க - தருக.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:50 pm

ஈக்குடி - சாவிக்கதிர்.
ஈக்கை - புலிதொடக்கி : உப்பிலி.
ஈங்கம் - சந்தன மரம்.
ஈங்கனம் - இருப்பிடம் : இங்ஙனம்.
ஈங்கன் - ஈங்கனம்.


ஈங்கிசை - கொலை : நிந்தை : துன்பம் : வருத்தம் : வருத்துதல் : தீங்கு.
ஈங்கு - இவ்விடம் : இண்டங்கொடி.
ஈங்கை - இண்டங்கொடி : இண்டஞ்செடி.
ஈசன்தார் - கொன்றை மாலை.
ஈசன் தினம் - திருவாதிரை.


ஈசாவாசியம் - நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
ஈசானகோணம் - வடகீழ்த்திசை.
ஈசானி - உமையவள்.
ஈசானியம் - வடகீழ்த்திசை.
ஈசி - ஓர் இகழ்ச்சிக் குறிப்பு.


ஈசிகை - சித்திரமெழுதுங் கோல் : யானை விழி.
ஈசிதன் - ஆள்பவன் : செங்கோல் செலுத்துபவன் : ஈசுவரன்.
ஈசிதை - ஈசத்துவம் : எண்வகைச் சித்திகளுள் ஒன்று.
ஈசுரலீலை - கடவுள் திருவிளையாடல்.
ஈசுரார்ப்பணம் - கடவுளுக்குரிய தாக்குகை.


ஈசுவரவிந்து - பாதரசம் : இரசம்.
ஈசுவரிபிந்து, ஈசுவரிவிந்து, ஈசுவரி நாதம் - கந்தகம் : கெந்தகம் : பாதரசம்.
ஈசுவை - பொறாமை.
ஈசை - ஏர்க்கால் : உமையவள் : கலப்பை.
ஈச்சப்பி - உலோபி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:50 pm

ஈச்சு - ஈச்சமரம்.
ஈச்சோப்பி - ஈப்பிணி : ஈயோட்டி.
ஈஞ்சை - இகழ்ச்சி : நிந்தை : கொலை.
ஈடகம் - மனத்தைக் கவர்வது.
ஈடணம் - புகழ்.


ஈடணை - அவா : பேரவா.
ஈடழிதல் - பெருமைகள் கெடுதல்.
ஈடழிவு - சீர்கேடு.
ஈடறவு - பெருமைக்கேடு.
ஈடன் - பெருமையுடையவன் : ஆற்றலுடையவன்.


ஈடாட்டம் - போட்டி : பணப்புழக்கம் : நெகிழ்ச்சி : கொடுக்கல் வாங்கல்.
ஈடாதண்டம் - ஏர்க்கால்.
ஈடுகட்டுதல் - பிணைகொடுத்தல் : பிணையாதல் : பொருளிழப்பிற்கு ஈடுகட்டுதல்.
ஈடுகொடுத்தல் - எதிர் நிற்றல் : நிகராதல் : மன நிறைவு செய்வித்தல் : போட்டி போடுதல் : மனங்கவிதல்.
ஈடுபாடு - சங்கடம் : மனங்கவிகை : ஊதியமும் பொருளிழப்பும்.


ஈடேறுதல் - உய்யப் பெறுதல் : கடைத்தேறுதல் : வாழ்வடைதல்.
ஈடேற்றம் - உய்வு : மீட்பு.
ஈடேற்றுதல் - உய்வித்தல்.
ஈடை - ஈகை : புகழ்ச்சி.
ஈட்சணம் - நோக்கம் : பார்வை : பார்த்தல்.
ஈட்டல் - தேடுதல் : தொகுத்தல் : செய்தல்.
ஈட்டுக்கீடு - சரிக்குச் சரி.
ஈட்டுதல் - கூட்டுதல்.
ஈட்டுப்பத்திரம் - அடைமான சாசனம்.
ஈணவள் - ஈன்றவள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:51 pm

ஈணை - அகணி : தெங்கு பனை இவற்றின் நார்.
ஈண்டுதல் - கூடுதல் : செறிதல் : விரைதல் : அடர்ந்து வளர்த்தல் : திரளுதல் : தொகுதல் : வருதல் : நிறைதல் : பெருகுதல் : தோண்டுதல்.
ஈண்டுநீர் - கடல்.
ஈதல் - கொடுத்தல் : அருளல் : இடதல் : உதவல் : படிப்பித்தல்.
ஈதா - இந்தா.


ஈதி - மிகுந்த மழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, அரசின்மை என்னும் ஆறினாலும் நாட்டிற்கு வருங்கேடு.
ஈதியாதை - தருமசங்கடம்.
ஈதை - துன்பம் : வருத்தம் : துயர்.
ஈத்த - கொடுத்த.
ஈத்தந்து - கொடுத்து.


ஈநம் - இழிவு.
ஈப்பிணி - உலோபி.
ஈப்பிலி - ஈயைக் கொல்லும் ஒரு வகைப் பூச்சி : நாய்ப்புலி விளையாட்டு.
ஈமப்பறவை - கழுகு : காகம் : விறகு : பருந்து.
ஈமவனம் - சுடுகாடு.


ஈமவாரி - வசம்பு.
ஈமன் - சிவன்.
ஈமான் - கொள்கை.
ஈயக்குழவி - நீலப்பாஷாணம்.
ஈயவரி - பெருமருந்து.


ஈயன்மூதாய் - இந்திரகோபம்.
ஈயுநர் - கொடுப்போர்.
ஈயுவன் - இராவணன்.
ஈயெச்சிற்கீரை - புதினாக்கீரை.
ஈயை - புலி தொடக்கி : இரண்டு : இஞ்சி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:51 pm

ஈயோட்டி - ஈயை விலக்குங் கருவி.
ஈயோப்பி - ஈயோட்டி.
ஈரங்கொல்லி - வண்ணான்.
ஈரசைச்சீர் - இரண்டசைச்சீர் : அது தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்ப்பாட்டான் வருவது.
ஈரடி - இணையடி : இரண்டடி : ஈரொட்டு : கவர் : ஐயம்.


ஈரடிப்பயன் - கவர்பொருள் : ஐயம் : மாறுபாடு.
ஈரடிவெண்பா - குறள் வெண்பா.
ஈரடுக்கொலி - இரட்டையாக அடுக்கி வரும் ஒலிக் குறிப்புச் சொல்.
ஈரணம் - வெறுநிலம் : களர்நிலம்.
ஈரணி - புனலாடும் போது மகளிர் அணிதற்குரியவை.


ஈரணை - இரண்டு சோடி மாடு : இரண்டு அணை.
ஈரநா - புறங்கூறும் நாக்க.
ஈரந்தி - காலை மாலை.
ஈரந்தை - ஈரந்தூர்.
ஈரப்பசை - ஈரக்கசிவு : இரக்கம்.


ஈரப்பலா -ஆசினிப்பலா : ஆசினி மரவகை : ஒரு மரம் : பலாசம்.
ஈரப்பற்று - அன்புப் பற்று : நன்றி.
ஈப்பாடு - ஈரமாயிருக்கை : மனநெகிழ்ச்சி.
ஈரல் - ஈருள் : [ கல்லீரல், மண்ணீரல்] வருந்துகை : சுருள் : வருத்துதல் : மார்பிலுள்ள ஊன்.
ஈரவன் - சந்திரன்.
ஈரவுள்ளி - ஈருள்ளி : ஈரவெண்காயம்.
ஈராட்டி - இரண்டு மனைவி : காற்று மாறி அடிக்கை : காற்றின் அமைதி : நிலையின்மை.
ஈராட்டை - இரண்டு ஆண்டு.
ஈரி - மகளிர் விளையாட்டில் ஒன்று : தந்தை : பலாக்காய்ச் சடை : பலாக்காய்த்தும்பு : மனக்கனிவுள்ளவன்.
ஈரிச்சல் - குளிர்தல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:51 pm

ஈரிணம் - கரைநிலம் : பாழடைந்த நிலம்.
ஈரிதம் - தள்ளப்பட்டது.
ஈரித்தல் - குளிர்தல்.
ஈரிப்பு - ஈர்த்தல்.
ஈரிய - குளிர்ந்த : அன்புடைய.


ஈரியது - ஈரமுள்ளது.
ஈரிய நெஞ்சம் - அன்புள்ள மனம்.
ஈரிழை - ஆடையின் இரட்டை நூல்.
ஈருதல் - ஈர்த்தல்.
ஈருள் - ஈரல்.


ஈருயிர்க்காரி - சூல் கொண்டவள்.
ஈருயிர்ப் பிணவு - சூல்கொண்ட பிணவு.
ஈருள்ளி - ஈரவெங்காயம்.
ஈரெச்சம் - பெயரெச்சம் : வினையெச்சம்.
ஈரொட்டு - உறுதியின்மை.


ஈரொற்றுவாரம் - இரண்டு மாத்திரை பெற்று வரும் செய்யுள்.
ஈர்க்காட்டு - கார்காலத்து உடை.
ஈர்க்கிறால் - இறால் மீன்வகை.
ஈர்ங்கட்டு - கார்காலத்து உடை.
ஈர்ங்கண் - குளிர்ந்த இடம்.


ஈர்ங்கதிர் - திங்கள்.
ஈர்ங்கை - உண்டு கழுவிய கை.
ஈர்தல் - அரிதல் : பிளத்தல் : அறுத்தல் : இழுக்கப்படுதல்.
ஈர்த்தல் - இழுத்தல் : உரித்தல் : கூர்மையாதல் : எழுதுதல் : பிளத்தல் : அறுத்தல்.
ஈர்மை - நுண்மை : இனிமை : பெருமை : வருத்தம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:51 pm

ஈர்வலி - ஈர் உருவுங் கருவி.
ஈர்வாள் - மரம் அறுக்கும் வாள்.
ஈலி - கைவாள் : கரிகை.
ஈவித்தல் - பங்கிடுதல்.
ஈவிரக்கம் - கொடையும் இரக்கமும் : மனக்கசிவு.


ஈவுசோர்வு - சமயா சமயம்.
ஈழங்கிழங்கு - பெருவள்ளி.
ஈழதண்டம் - ஏர்க்கால்.
ஈழத்தலரி - ஒருவகை அலரி.
ஈழநாடு - இலங்கை.


ஈழவர், ஈழுவர் - சாணார்.
ஈளைத்தரை - ஈரத்தரை.
ஈறல் - நெருக்கம் : துன்பம் : பின்னல்.
ஈறிலான், ஈறிலி - கடவுள்.
ஈறுதப்பின பேச்சு - தகாத மொழி.


ஈற்றம் - ஈனுகை.
ஈற்றயல் - இறுதியடிக் கடுத்தது.
ஈற்றேறுதல் - பயிர்க்கரு முதிர்தல்.
ஈனசுரம் - தாழ்ந்த குரல்.
ஈனதை - இழிவு : கீழ்மை : தாழ்வு.


ஈனத்தார் - கொன்றை.
ஈனமாந்தர் - அற்பர் : கீழ்மக்கள்.
ஈனவன் - இழிந்தோன்.
ஈனக்குமரி - மகப் பெறாத இளம் பெண்.
ஈனில் - கருவுயிர்க்கும் இடம் : பொறையுயிர்த்தற்குரிய இடம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by சிவா on Tue Feb 02, 2010 11:52 pm

ஈனுதல் - பெறுதல் : உண்டாக்குதல் : விடுதல் : குலைவிடுதல் : தருதல்.
ஈனும் - பெறும்.
ஈனை எழுதுதல் - சித்திரக் குறிப்பு வரைதல்.
ஈன்றணிமை - அண்மையில் ஈனப்பட்டமை : புனிறு.
ஈன்றார் - தாய் தந்தையர்.
ஈன்றான் - தந்தை : நான்முகன்.
ஈகையாளன் _ கொடையாளன்.
ஈசத்துவம் _ யாவர்க்கும் தேவனாதல் : செலுத்துகை : எண் வகைச் சித்திகளுள் ஒன்று.
ஈச்சப்பி _ கஞ்சன் : உலோபி.
ஈசானன் _ வடகிழக்குத் திக்குப் பாலகன் : சிவன்.
ஈசுரமூலி _ பெரு மருந்துக் கொடி: தராசுக் கொடி.ஈசுவர _ ஒரு தமிழ் ஆண்டு.
ஈச்சுரம் _ சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று.
ஈடிகை _ அம்பு : எழுதுகோல்.
ஈடுகொள்ளுதல் _ மனம் கனிதல்.
ஈட்டுத் தொகை _ உதவித் தொகை.


ஈண்டல் _ நெருங்குதல் : கூடுதல் : நிறைதல் : விரைதல்.
ஈண்டையான் _ இவ்விடத்தான்.
ஈமத்தாடி _ சிவபிரான்.
ஈமவனம் _ சுடுகாடு.
ஈயக் கொடி _ இண்டங் கொடி : புலி தொடக்கிக் கொடி.


ஈரப்பாடு _ மன நெகிழ்ச்சி : ஈரமாயிருத்தல்.
ஈரல் கருகுதல் _ மிகவும் அஞ்சுதல் : வேதனை மிகுதல்.
ஈராடி _ ஈரம் : மழைத் தன்மை.
ஈர்கொல்லி _ ஈரைக்கொல்லும் கருவி.
ஈர்க்கட்டு _ குளிர் கால உடை.


ஈர்வடம் _ பனையீர்க்குக் கயிறு.
ஈழமண்டலம் _ இலங்கை.
ஈழர் _ சான்றார் : சாணார்.
ஈழர் குலச்சான்றார் _ ஏனாதி நாயனார்.
ஈற்றசை _ பாட்டின் முடிவில் நிற்கும் அசை.


ஈனனம் _ வெள்ளி.
ஈனன் _ இழிந்தவன்.
ஈனாயம் _ நிந்தை : இழிவு :அவமதிப்பு.
ஈனை _ இலை நரம்பு : ஒரு நோய் : சித்திரம்.
ஈன்றல் _ உண்டாதல் : ஈனல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - ஈ Empty Re: தமிழ் அகராதி - ஈ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை