புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
34 Posts - 52%
heezulia
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
9 Posts - 1%
Jenila
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - அ


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:28 pm

அம்மாறு - பெருங்கயிறு : வடக்கயிறு : வடம்.
அம்மானை - கலம்பகவுறுப்பு.
அம்மானை வரி - மகளிர் அம்மானையாடும் போது பாடும் பாட்டு.
அம்மான் - தந்தை : கடவுள் : தாயுடன் பிறந்தவன் : மாமன்.
அம்மி - அம்மிக்கல் : மாமி.


அம்முக்கள்ளன் - தீயவன்.
அம்முதல் - வெளிக்காட்டாது ஒளித்தல் : பரவிப் படர்தல்.
அம்மை - தாய் : பார்வதி : அமைதி : அழகு : முற்பிறப்பு : வருபிறப்பு : வைசூரி.
அம்மையப்பர் - உமாபதி.
அயநம் - போதல் : வழி.


அயக்கம் - நோயின்மை : நிராமயக்கம்.
அயக்காந்தம் - ஊசிக்காந்தம்.
அயக்குதல் - அசைத்தல்.
அயமகம் - அசுவமேதயாகம்.
அயமுகம் - ஓர் இருக்கை.


அயம் - ஆடு : குதிரை : இரும்பு : குளம் : சேறு : நீர் : நிலம் : நல்வினை : விழா : ஐயம் : பள்ளம்.
அயணம், அயநம் - போதல் : வழி : செலவு : ஆண்டிற்பாதி : வாசஸ்தலம்.
அயர்கம் - செய்வோம்.
அயர்ச்சி - உணர்வழிவு : செய்தல் : சோம்பல் : பலவீனம் : மறதி : வருத்தம் : வெறுப்பு.
அயர்தல் - உணர்வழிதல் : இளைத்தல் : செய்தல் : சோர்தல் : விரும்புதல் : விளையாடுதல்.


அயர்பதி - செலுத்துவாயாக.
அயர்ப்பிய - கையறவு எய்துவிக்க.
அயர்மார் - செய்தற்கு.
அயர்வு - அகலம் : உன்மத்தம் : சோர்வு : மனக்கவர்ச்சி : வருத்தம் : வெறுப்பு.
அயர்வுயிர்த்தல் - சிந்துதல் : தளர்ச்சி : நீங்குதல் : வருத்தம் நீங்குதல்.


அயலவர் - பக்கத்தார்.
அயலி - வெண்கடுகு.
அயலுரை - அயலார் ஒருப்பட்டவுரை.
அயல் - அருகிடம் : பக்கம் : வேறு : அயலார்.
அயவனம் - ஒட்டகம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:28 pm

அயவந்தி - ஓர் ஊர்.
அயவி - சிற்றரத்தை.
அயறு - புண்வழலை : புண்ணிலிருந்து வடியுஞ் சீழ்.
அயற்படல் - விலகிச் செல்லல்.
அயனம் - வழி : ஆண்டிற் பாதி.


அயனாள் - உரோகினி நாள் : நான்முகன் வாழ்நாள்.
அயன் - நான்முகன் : அருகன் : மகேசுவரன்.
அயன்மணம் - பிரசாபத்தியம் : எண்வகை மணங்களுள் ஒன்று.
அயன்மை - அந்நியம்.
அயா - வருத்தம் : தளர்ச்சி.


அயாவுயிர்த்தல் - நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல் : வருத்தம் நீங்குதல் : அறிவு மயக்கமாக விருந்து எழுதல் : இளைப்பாறுதல்.
அயிக்கம் - ஒன்றுபடுகை.
அயிங்கிதை - கொல்லாமை.
அயிஞ்சை - வருத்தாமை.
அயிந்திர திசை - கிழக்கு.


அயிந்திரம் - ஐந்திரம்.
அயிராணி - இந்திராணி.
அயிராபதம், அயிராவதம் - இந்திரன் யானை.
அயிரை, அயிலை - அசரை : ஒரு வகைச் சிறு மீன் : நுண்மணல் : சேர நாட்டில் உள்ள மலை : ஓர் யாறு.
அயிர் - சருக்கரை : நுண் மணல் : நுண்மை : ஐயம் : அயிரென்னேவல் புதைக்கும் வாசனைப் பொருள் : வெல்லம் : ஊதுவத்தி.
அயிர்க்கல் - ஐயப்படல்.


அயிர்ப்பு - சந்தேகம் : மறதி : மந்தம் : சோம்பல்.
அயிலவன் - முருகன்.
அயிலுழவன் - வீரன்.
அயில் - அழகு : கூர்மை : இரும்பு : வேல் : கோரை : கலப்பை உண்ணென்னேவல் வேலம்பட்டை : எஃகு சூலாயுதம்.
அயில்தல் - உண்ணுதல்.


அயிற்பெண்டு - ஒரு வகைக் கூத்து.
அயினி - சோறு : நீராகாரம் : ஆலத்தி.
அயுதம் - பதினாயிரம்.
அயுத்தம் - தகுதியின்மை.
அயோநி - யோநியிற் பிறவாதது.


அர, அரவு - பாம்பு.
அரக்கர் - இராக்கதர்.
அரக்கல் - தேய்த்தல் : அரைத்தல் : அழுத்தல் : வருத்துதல் : துடைத்தல் :
அரக்கம் - அவலரக்கு : நன்னாரி : இரத்தம் : பாதுகாப்பு.
அரக்காம்பல் - செவ்வாம்பல்.


அரக்கு - செம்மெழுகு : சிவப்பு : சாதிலிங்கம் : தேன் : சாராயம்.
அரங்க - முற்றாக : முடிவாக : ஈறாக : ஒருமிக்க : தேய : குறைய : கெட : அரங்கத் தொடர்பான.
அரங்கபூசை - வெற்றித் திருமடந்தையாகிய அரங்க தேவதைக்குச் செய்யும் பூசை : களப்பூசை.
அரங்கம் - சிலம்பக்கூடம் : சபை : நாடக சாலை : போர்க்களம் : சுடுகாடு : ஆற்றிடைக்குறை : சீரங்கம்.
அரங்கி - வஞ்சகம் உடைவள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:29 pm

அரங்கு - நாடகசாலை : நடனசபை மன்றம் : சூதாட்டறை.
அரங்குதல் - தைத்தல் : அழிதல் : அழுந்துதல்.
அரங்கேற்றுதல் - சபையார் ஏற்கச் செய்தல்.
அரசம் - சுவையின்மை : மூலநோய்.
அரசவாகை - வேந்தன் இயல்பு கூறும் புறத்துறை.


அரசவாரியன் - குதிரை நடத்துவோரிற் சிறந்தவன்.
அரசவிலை முருகு - காதணி வகையில் ஒன்று.
அரசவை - அரசனுடைய அவை.
அரசாட்சி - அரசு புரிதல்.
அரசாணி - அரசி : மணப்பந்தலில் அரசங்கால் நாட்டுதல்.


அரசியல் - அரசாட்சி முறை.
அரசிருக்கை - அரசு வீற்றிருக்கும் இடம்.
அரசிலை - அரைமூடி : மிருகங்களுக்கிடும் சூட்டுக் குறி.
அரசிறை - அரசர்க்கரசன் : கப்பம்.
அரசு - அரசியல் : அரசன் : நாடு : அரசமரம் : திருநாவுக்கரசு நாயனார்.


அரசு கட்டில் - அரியணை.
அரசுவா - அரச யானை : பட்டத்து யானை.
அரசோனம் - வெள்ளைப் பூண்டு.
அரட்டமுக்கி - குறும்பர்களை ஒடுக்குபவன்.
அரட்டம் - பாலை நிலம் : விரிந்த மணற்காடு : வெருட்டல் : புரட்டல்.


அரட்டர் - குறும்பர் : ஆறலைப்பார் : குறுநில மன்னர்.
அரட்டல் - அச்சுறுத்தல்.
அரட்டல்புரட்டல் - நோய்முற்றலால் நிகழும் வலி.
அரட்டன் - மிடுக்கன்.
அரட்டி - அச்சுறுத்தி : நடுங்கச் செய்து : வெருட்டி.


அரட்டு - செருக்கு : குறும்பு.
அரணம் - கோட்டை : காவற்காடு மதில் : வேலி : கவசம் : வேல் : கதவு : மஞ்சம் : செருப்பு : கருஞ்சீரகம்.
அரணம் வீசுதல் - கவசம் அணிதல்.
அரணாம்பரம் - மதில் : வேலி : கோட்டை.
அரணி - காடு : மதில் : சூரியன் : கவசம் : தீக்கடை கோல் : தீத்தட்டிக் கல் : மதில்.


அரணித்தல் - காவல் செய்தல் : உரத்தல் : சிறப்பித்தல் : மறைத்தல் : ஆட்சிபுரிதல் : காத்தல்.
அரணிப்பு - படைப்பு : அழகு : காவல் : சிறப்பிக்கை : முறைப்பு : வைரிப்பு : சேமிப்பு.
அரணியன் - அடைக்கலமானவன் : காட்டிலிருப்பவன்.
அரணை - பல்லியினம்.
அரதனம் - இரத்தினம் : சிலம்பணி.


அரதி - வேண்டாமை : துன்பம்.
அரதேசி - உள்ளூரில் திரிபவன்.
அரத்தகம் - அரத்தம் : அலத்தகம்.
அரத்தம் - செம்மெழுகு : செம்பஞ்சு : செம்பட்டு : செம்பரத்தம் : சிவப்பு : பவளம் : குருதி : செங்கழுநீர் : பொன் : கடம்பு : துகில்.
அரத்தை - பேரரத்தை : முடக்கொற்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:29 pm

அரந்தை - துன்பம் : குறிஞ்சி : யாழிசை : நீர்நிலை.
அரப்பிரியை - உமை.
அரப்பொடி - இரும்புத்தூள்.
அரமகள், அரமங்கை, அரமாதர் - தெய்வப் பெண்.
அரமாரவம் - நாயுருவி.


அரமி - கடுக்காய்.
அரமியம் - நிலா முற்றம் : அரண்மனை : நாயுருவி.
அரம் - அராவும் கருவி : பாதலம்.
அரம்பு - குறும்பு : தீமை.
அரம்பை - வாழை : தெய்வப் பெண் : ஓமம்.


அரரி - கதவு.
அரர் - தீர்த்தங்கரருள் ஒருவர்.
அரலை - விதை : ஒரு குன்றம் : பரல் : குற்றம் : கழலை : கடல் : கொடும்பு : கோட்டை : மணல் : பொடிக்கல் : அரளி : அலரி.
அரவக்கிரி - வேங்கடமலை.
அரவக்கொடியோன் - துரியோதனன்.


அரவங்கலக்கம் - சாகுங்காலத்துண்டாகும் தெளிவு.
அரவணை - சேடசயனன் : சர்க்கரைப் பொங்கல் : ஆதரிப்பு : பாம்பு போல் தழுவல்.
அரவணைத்தல் - தழுவுதல் : ஆதரித்தல்.
அரவப்பகை - கருடன்.
அரவம் - ஒலி : சிலம்பு : ஆரவாரம் : பாம்பு : ஆயிலியம் : கலக்கம் : பதஞ்சலி முனிவர் : பேரொலி : படையெழுச்சி.


அரவதண்டம் - யமதண்டனை.
அரவாட்டிப்பச்சை - தொழுகண்ணி.
அரவாய்க் கடிப்பகை - அரம்போன்ற விளிம்புடைய வேப்பிலை.
அரவாள் - பழைய நாணய வகை.
அரவித்தல் - ஒலி செய்தல்.


அரவிந்தம் - தாமரை : நாரைப் பறவை : செம்பு : காமன் கணைகளுள் ஒன்று.
அரவிந்தப்பாவை - திருமகள்.
அரவிந்தராகம் - பதுமராகம்.
அரவிந்தன் - நான்முகன்.
அரவிந்தை - இலக்குமி.


அரவு - பாம்பு : ஒலி : ஒரு தொழிற் பெயர் விகுதி.
அரவுக்கிளர்ந்தன்ன - பாம்பு படம் எடுத்தாற் போன்ற.
அரவுருட்டுதல் - வைக்கோற்புரியை உடைப்பிற் செலுத்துதல்.
அரளி - பீநாறி.
அரளுதல் - பீதியடைதல் : மிக அஞ்சுதல்.


அரளைசரளை - பருக்கைக் கல்.
அரறுதல், அரற்றுதல் - அழுதல் : ஒலித்தல் : கதறுதல்.
அரனெறி - திருவாரூர்க் கோவி்லுக்குள் உள்ள மற்றொரு கோயில்.
அரன் - சிவன்.
அரனாள் - திருவாதிரை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:29 pm

அரா - பாம்பு.
அராகம் - அடங்காமை : முடுகியல் : அவா : அவாவின்மை : பாலை யாழ்த்திறம் : சிவப்பு : கலிப்பாவின் ஓர் உறுப்பு.
அராக்கோள் - இராகுகேதுக்கள்.
அராசகம் - தேசம் அரசியலற்றிருக்கை.
அராசித்தல் - இடையறாது கடுகிச் செல்லுதல்.


அராந்தாணம் - சினாலயம் : சைனப் பள்ளி.
அராபதம் - வண்டு.
அராமம் - பைங்கூழ் : சோலை.
அராமி : கொடியோன்.
அராமுனிவர் - பதஞ்சலி முனிவர்.


அராமை - கீழ்மக்கள் : தீயவர்கள்.
அராவணை - பாம்பிருக்கை.
அராவல் - அராவுதல் : உராய்தல்.
அராவாரம் - கொடிமுந்திரி.
அராளகடகாமுகம் - நிருத்தக்கை முப்பதனுளொன்று.


அராளம் - இருவாட்சி : குங்கிலியம்.
அரிகண்டம் - கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் : தொந்தரை.
அரிகயிறு - தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி.
அரிகரன் - திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி.
அரிகல் - மகாமேருமலை.


அரிகால் - அரிந்து விட்ட தாள்.
அரிகிணை - கிணைப்பறை வகை.
அரிகுரல் - கரகரத்த குரல்.
அரிகூடம் - கோபுர வாயில் மண்டபம்.
அரிகேசரம் - கதிரவன் கதிர்களுள் ஒன்று.


அரிக்கஞ்சட்டி - அரிசி களையுஞ் சட்டி.
அரிக்கரியார் - சிவன்.
அரிக்குரல் - அரித்தெழும் ஒலி.
அரிசந்தனம் - ஐந்தருவில் ஒன்று : ஒரு வகைச் சந்தன மரம் : தாமரைப் பூந்தாது : நிலவு : மஞ்சள்.
அரிசமயதீபம் - ஆழ்வாராதிகள் சரித்திரம் கூறும் நூல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:30 pm

அரிசம் - மகிழ்ச்சி : அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள்.
அரிசயம் - சரக்கொன்றை : எலுமிச்சை.
அரிசனம் - மஞ்சள்.
அரிசிக்காடி - புளித்த கஞ்சி.
அரிசிப்புல் - மத்தங்காய்ப் புல்.


அரிசில் - சோழ நாட்டில் உள்ள ஓர் ஊர் : ஓர் ஆறு.
அரிசு - மிளகு.
அரிச்சந்திரம் - கூரைக் கைதாங்கும் கட்டை.
அரிச்சுவடி - நெடுங்கணக்குச் சுவடி.
அரிடம் - அதிட்ட கீனம் : கேடு : மூலத்திலே வரும் ஒருவகை நோய் : விடாமழை : களிப்புக் குணம் :
வேப்ப மரம் : தீங்கு.


அரிட்டம் - கேடு : கொலை : கள் : காக்கை : முட்டை : மோர் : வேம்பு.
அரிட்டை - கடுகு ரோகணி : தீங்கு : கந்தருவர் : ஆயிரவர் தாய்.
அரிணம் - சிவப்பு : பொன் : மான் : யானை : வெள்ளை : கடல் : கதிரவன் ஒளி : வெய்யில்.
அரிணி - சித்திநி சாதிப் பெண் : பெண்மான் : பொன்னாலய வுருவம் : மான் சாதிப் பெண் : வஞ்சிக் கொடி.
அரிணை - கள்.


அரிதகி - கடுக்காய் மரம்.
அரிதம் - திசை : பசும்புல் நிலம் : பொன்னிறம்.
அரிதாட்புள்ளி - கதிர் அறுத்த தாளைக் கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு.
அரிதாரம் - ஒரு மருந்து : திருமகள்.
அரிதாள் - கதிரறுபட்ட தாள்.


அரிதினம் - ஏகாதசி.
அரிதொடர் - துவக்குசங்கிலிகளுள் ஒரு வகை.
அரித்தல் - தினவெடு்த்தல் : மாபிரித்தல் : தூசு போக்கல் : பசையறக் காய்தல் : மேய்தல் : வருத்துதல் : அறுத்தல்.
அரித்துவசன் - சிங்கக் கொடியை உடையவன் : வீமன்.
அரித்தை - துன்பம் : கிலேசம்.


அரிநர் - நெல்லறுப்போர்.
அரிநூற்பொறி - தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி.
அரிந்தமன் - பகைவரை யடக்குவோன்.
அரிப்பரித்தல் - கொழித்தெடுத்தல்.
அரிப்பனி - இடைவிட்ட துளி.


அரிப்பறை - அரித்தெழும் ஒலியையுடைய பறை.
அரிப்பிரத்தம் - இந்திரப்பிரத்தம்.
அரிப்பு - தினவு : சினம் : குற்றம்.
அரிப்புக்கூடை - சல்லடை : கரிப்பெட்டி.
அரிப்புழுக்கல் - அரிசிச்சோறு.


அரிமஞ்சரி - குப்பைமேனி : பூனை வணங்கி.
அரிமந்திரம் - சிங்கக் குகை.
அரிமர்த்தநன் - ஒரு பாண்டியன்.
அரிமா, அரிமான் - ஆண் சிங்கம்.
அரிமாநோக்கு - முன்னுக்குப் பின் தொடர்புபடுத்துவதாகிய சூத்திர நிலை : சிங்கப்பார்வை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:30 pm

அரிமுகவம்பி - சிங்கமுக ஓடம்.
அரிமுகன் - சிங்கமுகாசுரன்.
அரியகம் - காற்சரி என்னும் அணிகலம் : கொன்றை மரம் : சிங்கங்கள் தங்கும் மலைக்குகை :
பாடகம் : பரியசம் : கசாப்புக் கடை : பலிபீடம்.
அரியசாரணை - மாவிலங்கு மரம்.
அரியமான் - பிதிரர் தலைவன்.


அரியணை - சிங்காசனம்.
அரியம் - வாச்சியம்.
அரியர் - கிடைத்தற்கருமையானவர்.
அரியல் - கள் : அரிதல் : அரித்தல்.
அரியாசம் - ஒரு மணப் பொருள்.


அரியாயோகம் - அரைப்பட்டி : மருந்து.
அரியெடுப்பு : கிராம ஊழியக்காரருக்கு களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம்.
அரியேறி - துர்க்கை.
அரியேறு - ஆண்சிங்கம்.
அரில் - குற்றம் : பகை : பிணக்கு : சிறு தூறு : மூங்கில் : தூறுபட்ட காடு : பின்னல்.



அரில்வலை - முறுக்குண்டு கிடந்த வலை.
அரிவரி - அரிச்சுவடி.
அரிவருடம் - ஒன்பது கண்டத்துள் ஒன்று.
அரிவாட்டாயர் - திருத்தொண்டர் புராணத்தில் வரும் ஒரு சிவனடியார்.
அரிவாள்மணை - கறியரி கருவி.



அரிவி - அரிகதிர் : அறுக்குங்கருவி.
அரிவிமயிர் - வீரர் வேல் நுனியில் அணியும் பறவை மயிர்.
அரிவை - இருபத்தைந்து வயதுடைய பெண்.
அரிள் - பயம் : திகில் : கலக்கம் : நடுக்கம்.
அரு - உருவற்றது : அணு : கடவுள் : காணப்படாத தன்மை : காயம் : புண் : மாயை.



அருகசரணம் - அருகனைச் சரண்புகும் வகை.
அருகணி - பிரண்டைக் கொடி.
அருகந்தம் - அதீதம்.
அருகந்தர் - சமணர்.
அருகந்தாவத்தை - வீடுபேற்று நிலை.



அருகம் - சமண் மதம் : தக்கது.
அருகர் - அருக சமயத்தவர் : அருகில் இருக்கிறவர் : இருடிகள் : தக்கோர்.
அருகல் - அருகு : பக்கம் : குறைவு.
அருகன் - சைனன் : பக்குவி : பூச்சியன் : தோழன்.
அருகன் எண்குணம் - கடையிலா அறிவு : சடையிலாக் காட்சி : கடையிலா வீரியம் : கடையிலா இன்பம் : காமம் இன்மை : கோத்திரம் இன்மை : ஆயுலின்மை : அழியாவியல்பு.



அருகாசனி - திருஞானசம்பந்தர்.
அருகாழி - கால்விரல் மோதிரம்.
அருகிய வழக்கு - குறைந்த உபயோகமுள்ள வழக்கு.
அருகு - அடுத்த இடம் : அண்மை : ஓரம்.
அருகுதல் - குறைதல் : அஞ்சுதல் : கெடுதல் : நோவுண்டாதல் : குறிப்பித்தல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:30 pm

அருக்கம் - எருக்கு : சூரியன் : பொன் : அருமை : குறைவு : நீர்க்காக்கை : தாமிரம் : தீயநிமித்தம் : நெருப்பு : படிக்கல் : சுருக்கம் : சொற்பம் : வெயில் : ஒளி : செந்நிறம்.
அருக்களிப்பு - அருவருப்பு.
அருக்கன் - சூரியன் : சுக்கு.
அருக்காணி - அருமை : அழுத்தம்.
அருக்கியம் - மந்திர நீர் இறைத்தல்.



அருக்கு - அஞ்சுகை : அருக்காணி : அருக்கென்னேவல் : அருமை : எருக்கு : சுருக்கம் : தடங்கல் : பாராட்டு.
அருக்குக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம்.
அருக்குதல் - தவிர்தல் : நீக்குதல் : பாராட்டுதல் : அச்சமுறுதல்.
அருங்கலச் செப்பு - அணிகலப் பேழை.
அருங்கலம் - அணிகலம்.


அருங்கலை விநோதன் - நூலாராய்ச்சியே விளையாட்டாக உடையவன்.
அருங்கிடை - கடும்பட்டினி : நோய்வாய்ப்பட்டிருக்கை.
அருங்கு - அருமை : சிறந்தது : உயர்ந்தது.
அருங்குரைய - அரிய.
அருங்கேடு - கேடின்மை.



அருங்கோடை - மிகுந்த வெப்பமுடைய கோடைக்காலம்.
அருசி - சுவையின்மை : விருப்பமின்மை.
அருச்சனை - கோயிற் பூசை : ஆராதனை.
அருச்சிகன் - சந்திரன்.


அருச்சுனம் - வெண்மை : எருக்கமரம் : மருதமரம் : பொன்.
அருஞ்சிறை - கடுங்காவல்.
அருஞ்சுரம் - நிழலற்ற நீளிடம்.
அருஞ்சோதி - ஒருவகை நெல்.
அருட்குறி - சிவலிங்கம்.


அருட்சித்தி - பாதரசம்.
அருட்சோதி - கடவுள் : கௌரி பாஷாணம்.
அருட்டல் - அச்சுறுத்தல்.
அருட்டுதல் - ஏவிவிடுதல்.
அருட்குடையோன் - அருகன் : கடவுள் : பதி.


அருட்கொடையோன் - கடவுள்.
அருணம் - மிகு சிவப்பு : எலுமிச்சை : மான் : ஆடு : ஒரு மொழி : சிந்தூரம் : ஒரு நீர் நிலை : விடியல்.
அருணவம் - கடல்.
அருண வூரி - இந்திரகேயம்.
அருணன் - சூரியன் தேர்ப்பாகன் : சூரியன் : புதன்.


அருணி - மான்சாதிப் பெண்.
அருணை - திருவண்ணாமலை.
அருணோதயம் - வைகறை.
அருண்முனி - அருகதேவன்.
அருத்தம் - சொற்பொருள் : பாதி : பொன் : பொருள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:31 pm

அருத்தநாரீசுவரன் - உமையொரு பாகன்.
அருத்த இலக்கணை - விட்டுவிடாத இலக்கணை.
அருத்தபதி - அரசன் : குபேரன் : கலைவல்லோன்.
அருத்தல் - உண்பித்தல்.
அருத்தாபத்தி - சொல்லிய ஒன்றைக் கொண்டு சொல்லாத ஒன்றை அறிதல்.


அருத்தி - இரப்போன் : கூத்து : செல்வமுடையவன் : புசிப்பு : விருப்பம் : பணியாளர்கள்.
அருநிலை - கடந்து செல்லற்கரிய நிலம் : பாலை நிலம்.
அருநெல்லி - சிறுநெல்லி.
அருநெறி - பாலைவனம்.
அருந்ததி காட்டுதல் - அருந்ததி போலக் கற்புடையவள் ஆகுக என்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல்.


அருந்தல் - உண்டல்.
அருந்தவர் - முனிவர்.
அருந்திறல் - அரிய திறமையை உடையவர்.
அருந்துதன் - வேதனை செய்வோன்.
அருந்தானை - வெல்லுதற்கரிய படை.


அருந்துதி - அருந்ததி.
அருந்தேமாந்த - உண்ண அவாக் கொண்ட.
அருப்பம் - அருமை : மருத நிலத்தூர் : காடு : வழுக்கு நிலம் : மலைமேற் கோட்டை : கள் : நோய் :
கொலை : பிட்டு : மோர் : சிறிது : அரண் : நெற்கதிரின் கரு : பிள்ளை : கீரை : பனி.
அருப்பலம் - அனிச்ச மரம் : பூங்கணை மரம்.
அருப்பு - கிளைத்தல் : அரும்பு : கொலை : துக்கம் : அருப்பம் : காட்டரண் : தயிர் : திண்ணம்.


அருமணவன் - ஒரு தீவு : அத்தீவின் யானை.
அருமந்தது - அருமருந்தன்னது.
அருமருந்து - தேவாமிர்தம்.
அருமவதி - ஒரு பண் : ஓர் இராகம்.
அருமறை - அரியமறை : இரகசியம்.


அருமிதம் - அளவின்மை.
அருமை - எளிதிற் கிடைக்கக் கூடாமை : பெருமை : இன்மை : சிறுமை : கொடுமை :
ஆற்றாமை : முடியாதது : எளிதிற்கிடைக்காதது.
அருமை செய்தல் - பேராண்மை காட்டுதல்.
அரும்பதம் - அரிய செவ்வி : அரிய உணவு : விளங்கற்கரிய சொல்.
அரும்பல் - முகைத்தல் : முளைத்தல் : விரிதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:31 pm

அரும்பாலை - பாலைப் பண்வகை.
அரும்பாவி - பெருந்தீவினையாளன்.
அரும்பிஞ்சு - மிக இளங்காய்.
அரும்பித்தல் - தோன்றுதல்.
அரும்பு - முகை : இண்டை : பூவரும்பு போன்ற வேர் : அணிகல ஒட்டு :
மெல்லிய மலர்.


அரும்பெறல் - பெறுதற்கரியது.
அரும்பொருள் - முயன்று உணரும்படியாக அமைந்துள்ள சொல்.
அருவம் - உருவமில்லாதது.
அருவருப்பு - மிகு வெறுப்பு.
அருவர் - தமிழர்.


அருவல் - கிட்டிப் போதல் : மெல்ல மெல்லப் போதல்.
அருவாதல் - பிறப்பறுதல்.
அருவாவசு - கதிரவன் பக்கலில் நின்று பாட்டயர்வோரில் ஒருவன் :
கதிரவன் கதிர்களுள் ஒன்று.
அருவா - அருவா நாடு.
அருவாட்டி - அருவா நாட்டுப் பெண்.


அருவாணம் - செப்புத் தாலம் : கோயிற் பிரசாதம்.
அருவாணாடு - கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று.
அருவாவட தலை - கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று.
அருவாளர் - ஒரு சாதியார்.
அருவி - மலை வீழாறு : சிற்றாறு : நீரோட்டம் : ஒழுங்கு : தினைத்தாள் : உருவமில்லாதது.


அருவுடம்பு - சூக்குமவுடல்.
அருவுதல் - கண்கரித்தல் : நெருங்கல்.
அருளகம் - வெள்ளெருக்கு.
அருளறம் பூண்டோன் - புத்தன்.
அருளல் - காத்தல் : கெடுத்தல் : படைத்தல் முதலிய கடவுளரின் தொழில்கள்.


அருளன்மாறு - அருளுதலால்.
அருளிச் செய்தல் - அருளுடன் உரைத்தல்.
அருளிப்பாடியன் - கட்டளை நிறைவேற்றுவோன்.
அருளிப்பாடு - ஆக்ஞை : ஆணை.
அருளின்மாறு - மறம்.


அருளீயல் - அருளுதல்.
அருள் - கருணை : சக்தி : ஆசிரியர் : அறிவுரை : கடவுளின் அருட்பேறு : ஈயென்னேவல்.
அருள்வாக்கு - இறைவன் அருள் பெற்றவரின் வாக்கு.
அரூபம் - ஆகாயம் : உருவமற்றது : குறைவு : வெறுமை : இல்லாதது.
அரூபை - அழகில்லாதவன் : உருவமற்றவன் : ஒப்பில்லாதவன்.


அரூவி - கடவுள் : கற்பூரம் : சிவன்.
அரேசிகம் - வாழை.
அரேனுகம் - கடுக்காய் வேர் : வால்மிளகு : அரேணுகை.
அரை - பாதி : மரத்தின் அடிப்பக்கம் : தண்டு : வயிறு : அடியிடம் : மேகலை : உடம்பின் நடுவிடம் : அரசியல் : அரையென்னேவல்.
அரைகல் - அம்மிக்கல் : ஆட்டுக்கல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக