புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
1 Post - 1%
prajai
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_m10ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாம் புலன் - Extra Sensory Perception (ESP)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 29, 2010 8:32 pm

சாதாரணமாக ஒரு மனிதனின் ஐம்புலன்களால் சாத்தியமாகும் பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், சுவைத்தல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட திறன் அதீதப் புலனுணர்வு - Extra Sensory Perception (ESP) என அழைக்கப்படுகிறது. இந்த சக்தி உள்ளவர்கள் இருக்குமிடத்திலிருந்தே தனது ஆறாவது புலனால், நடந்ததை நடப்பதை நடக்கப்போவதைச் சொல்லமுடியும் எனப்படுகிறது.

இந்த ஆறாவது புலனுணர்வு சக்தி உள்ளவர்களால் மற்றவர்களுடைய மனதைப் படிக்க முடியும்- அதேபோல் மற்றவர்களுக்குத் தங்கள் மனதிலிருந்து செய்திகளை அனுப்ப முடியும் என்று நம்புகிறார்கள். மனதோடு மனம் உறவாடும் இந்த சக்தி காலத்தையும் தூரத்தையும் கடந்தது. இந்த ஆறாவது புலன், ஒரு சிலரிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமே ஓரளவுக்கு ஒளிந்திருக்கிறது என்று இதை நம்பும் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

நமது வாழ்க்கையிலேயே நடக்கும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது இது உண்மையோ என்று கருதத் தோன்றுகிறது. உதாரணமாக சில நேரங்களில் தூக்கத்தில் ஒரு கெட்ட கனவு கண்டு திடீரென விழிக்கிறோம்- நெருங்கிய சொந்தத்திற்கு ஏதோ நடந்திருக்கிறது என்று உள்மனம் சொல்கிறது- அது சமயங்களில் நிஜமாகவும் இருக்கிறது. டெலிபோன் மணி அடிக்கும்போதும் வாசல் கதவு மணி ஒலிக்கும்போது அழைப்பது யார் என்று நாம் செய்யும் யூகம் சில சமயம் உண்மையாகவும் இருக்கும்.

இந்த அதீதப் புலனுணர்வு மூலம் வெகுதொலைவில் நடக்கும் நிகழ்வுகளைக்கூடச் சொல்ல முடியும், ஓரிடத்திலிருந்தே வேறு இடத்திலுள்ள ஒருவரது எண்ன அலைகளை மாற்றமுடியும் எனவும் சொல்லப்படுகிறது- உதாரணமாக அமெரிக்காவில், ஒருவர் 5 கிலோ ஆர்.டி.எக்சை வைத்து முக்கியமான இடங்களைத் தகர்க்கச் சதி செய்கிறார் என்றால், ஆறாவது புலனுள்ளவர் இந்தியாவிலிருந்தே அவரது எண்ணங்களை மாற்றி ஆர்.டி.எக்ஸ்சிற்கு பதிலாக அங்கே 5 கிலோ சாக்லெட்டை வைக்கச் செய்யமுடியும்- மேலும் ஒரு பொருளை அதன் தன்மையிலிருந்து மாற்றவும் முடியும்- உதாரணமாகச் சொல்வதென்றால் நமக்கு எதிரே இருக்கும் பாலைத் தண்ணீராக மாற்ற முடியும் (எங்கள் வீட்டுப் பால்காரருக்குக் கூட இ.எஸ்பி இருக்கிறதே- அவர் தண்ணீரைப் பாலாக மாற்றுவாரே என்று சொல்லவேண்டாம்.)

மற்றவரது மனதை வசப்படுத்தி அவரது உள்மனதில் உள்ளதை வெளிக்கொண்டுவரும் ஹிப்னாடிசத்தைக்கூட இந்த ஆறாவது புலனில் சேர்க்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தி, தியானம் அல்லது தவம் செய்யும்போது இந்த வலிமை ஏற்படுகிறது எனச் சொல்லலாம். அதனால்தான் முனிவர்களும் ரிஷிகளும் முக்காலத்தையும் உணர முடிந்தது. கோபத்தில் சாபம் கொடுக்க முடிந்தது. கூட்டுப்பிரார்த்தனைகள் பலிப்பதும் இந்த மனதை ஒருமுகப்படுத்துவதால்தான்.

இந்த எல்லா உணர்வுகளையும் ஒன்று திரட்டித்தான் அதிசயமான இந்த சக்திக்கு ESP என்று நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள். இதைப் பற்றிய ஆராய்ச்சியை Parapshycology எனக் கூறுகிறார்கள். இதுவரை இந்த ஆராய்ச்சியால் இந்தப் புலனுணர்வு சக்தி எப்படி வருகிறது என்பதிருக்கட்டும், இந்த மாதிரி ஆறாவது புலணர்வு என்று ஒன்று இருக்கிறதா என்பதைக்கூட முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இ.எஸ்.பி என்ற சொல் முதல் முதலில் 1870ல்தான் ஆராய்ச்சியாளர்களால் கையாளப்பட்டது. நைல் நதியின் முலத்தையும், அராபிய இரவுகள், காமசூத்ரம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த சர். ரிச்சர்ட் பர்ட்டன் என்பவர்தான் இ.எஸ். பி என்ற சொல்லை முதலில் உபயோகப்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.

சில பிரபல ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்பட்ட விஞ்ஞான சோதனைகள் மூலம் ESP என்ற ஆறாவது புலன் உண்மையிலேயே இருக்கிறது என அறுதியிட்டுச் சொல்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆனால் மனோதத்துவ நிபுணர்கள் இது நிரூபிக்கப்படவில்லை என மறுக்கிறார்கள். இதற்காக நடத்தப்பட்ட சோதனைகளால் இந்த சக்தியைத் தீர்மானமாக நிரூபிக்க முடியவில்லை என்பது பலரின் கருத்து.

1934ம் ஆண்டு. J.B. Rhine என்பவர், 1927லிருந்து செய்த ஆராய்ச்சியைப் பிரசுரிக்கும்வரை இ.எஸ்.பி பிரபலமாகவில்லை. Rhineம் McDougall என்றவரும் Zener cards என்ற சீட்டுக்களைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். இந்தக் கார்டுகளின் ஒரு கட்டில், நட்சத்திரம், சதுரம், வட்டம் என்ற பல குறிகளைக் கொண்ட 25 சீட்டுக்கள் இருக்கும். ஆராய்ச்சியின்போது அங்குள்ளவர்கள் சீட்டுக்களைத் திருப்பி வைத்த பிறகு அது என்ன குறியாக இருக்கும் என்று யூகித்துச் சொல்லவேண்டும். சாதரணமாக ஒருவர் சொல்லி அந்த சீட்டு வருவதற்கு ஐந்தில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கும் இந்த சீட்டுக்களை வைத்துக்கொண்டு செய்த 33 சோதனைகளில் 27 சோதனைகள் ஒரளவுக்குப் பயன்படும்படியான முடிவுகளைக் கொடுத்தன. இதில் ஒன்றில் 2400 யூகங்களில் 489 யூகங்கள் சரியாக அமைந்தன. ஐந்தில் ஒரு பங்கை விட அதிகமான யூகங்கள் இ.எஸ்.பி சக்தி இருப்பதைக் காட்டும்

ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 29, 2010 8:33 pm

இ.எஸ்.பியை கீழ்கண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. Telepathy

Tele என்றால் தூரம். Pathein என்றால் அனுபவிப்பது. இது ஒருவர் தனது மனதிலிருந்து வேறு இடத்திலுள்ள மற்றவருடைய மனதுடன் தொடர்பு கொள்ளும் சக்தியைக் குறிக்கும். இது உணர்வாகவோ, எண்ணங்களாகவோ, உணர்ச்சிகளாகவோ உருவங்களாகவோ இருக்கலாம். இது பற்றி செய்த ஒரு ஆராய்ச்சியில், சோதனை செய்யப்பட்டவர்கள் தூங்கும் நிலையில் வைக்கப்பட்டனர்- சோதனை செய்பவர்கள் செய்திகளை, மனதால் தூங்குபவர்களுக்கு அனுப்புவார்கள். பல வருடங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டு செய்த பரிசோதனைகளில் அனுப்பப்பட்ட செய்திகளுக்கும் பெறப்பட்ட செய்திகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

2. Telekinesis/Psychokinesis

Tele என்றால் தொலைவு. Kinen என்றால் நகர்த்துவது. இது ஒருவர் தனது மனதின் சக்தியைக் கொண்டு ஒரு பொருளை உடல்சக்தியை உபயோகப் படுத்தாமல் நகர வைப்பது. 1972ல் Telekinesisல் ஆர்வம் கொண்ட இரண்டு லேசர் விஞ்ஞானிகள் அந்த சக்தி உள்ளதாகக் கருதப்பட்ட ஒருவரை high-energy particle சோதனையில் உபயோகப்படுத்தப்படும் அதிவேகமாகக் கடத்தக்கூடிய நன்கு மூடப்பட்ட ஒரு magnetometer இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர், தனது கவனத்தைத் தீவிரமாகச் செலுத்தியபோது, வெளியேறும் சக்தியைக் காட்டும் மீட்டர் அளவை (Reading) வெகுவாக மாறியது. அந்த மாதிரி வேறுபாடுகள் அந்த நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னரும் எப்போதும் நடந்ததில்லையாம்.

3. Clairvoyance

clair-(clear) தடையில்லாமல் voyant- பார்ப்பது

இது டெலிபதியைப் போலத் தோன்றினாலும் இதற்கு செய்திகளையோ உருவத்தையோ அனுப்ப இன்னொருவர் தேவையில்லை. வேறு இடங்களில் நடப்பதை ஓரிடத்திலிருந்தே அறியும் சக்திதான் இது. செய்திகளை உணர்வது, தொடுதல் மூலம் உணர்வது, எதையும் சுவைக்காமலே நாவினால் சுவையை உணர்ந்து செய்திகளை அறிவது என்று இதில் ப ல்வேறுவகைகள் இருக்கின்றன. இந்த சக்தி உலகிலுள்ள பலவேறு அரசாங்கங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சக்தி உள்ளவர் இருந்தால் எதிரிமுகாமில் என்ன நடைபெறுகிறது என்று அறிய முடியுமே!

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு இது பற்றிய விஞ்ஞானம் பாதுகாப்புப் படைகளுக்கிடையே வரவேற்பைப் பெற்றது. இதுபற்றி பாதுகாப்புப்படையில் நடந்த ஒரு சோதனையில் Pat Price என்பவரிடம் சோவியத் யூனியனின் ஒரு பகுதியின் வரைபடம் கொடுக்கப்பட்டது. அதைவைத்துக் கொண்டு அவர் அந்த இடத்தில் இருக்கும் கனரக க்ரேன்களையும் அங்குள்ள கட்டடங்கள், டாங்குகள்பற்றியும் தெளிவாகக் கூறியது வியப்பிற்குரியது

4. Precognition

முன்கூட்டி அறிவது (Pre recognition): சீனாவில் ஜூலை 28,1976ல் டாங்ஷான் நகரில் 2,40,000 உயிர்களைப் பலிகொண்ட பூகம்பத்தை உதாரணமாகச் சொல்லலாம். இந்த பூகம்பம் நிகழ்வதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் இது நிகழப்போவதை 70 வயதைக் கடந்த ஒரு மூதாட்டி உணர்ந்தார். மற்றவர்கள் சொன்னால் கேலிசெய்வார்களே என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் சொல்லாமல் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி செக்ரட்டரியை அணுகி வரப்போகும் பேரிடர் பற்றிக் கூறினார் - எல்லாரும் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றும் சொன்னார். அவர் வெகு நேரம் சொல்லிய பிறகு அந்த செக்ரட்டரியும் மற்றும் ஒரு அதிகாரியும் வெளியில் தங்க சம்மதித்தனர்- அந்த பூகம்பத்தில் பிழைத்தது அவர்கள் மட்டும்தான்.

நீங்கள் உங்கள் இ.எஸ்பி. சக்தியைச் சோதிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக:

ஒரு சீட்டுக்கட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அமைதியான இடத்தில் அமர்ந்து சீட்டுக்களை நன்கு கலைத்து முன்னால் கவிழ்த்து வையுங்கள். மேலே இருக்கும் சீட்டு என்ன ஜாதி என்று யூகியுங்கள். சீட்டைத் தொட்டுப் பார்ப்பது உங்களுக்கு உதவலாம். உங்களுக்கு புள்ளியியல் கணக்குப்படி 4ல் 1பங்கு சரியாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அப்படிப்பார்த்தால் ஒரு சீட்டுக்கட்டில் 13 சீட்டுக்களை நீங்கள் சரியாக ஊகிக்க வாய்ப்பு உண்டு. அதைவிட அதிகமாக உங்களால் கணிக்க முடிந்தால்... ஒருவேளை உங்களுக்கு இ.எஸ்.பி சக்தி இருக்கிறதோ என்னவோ!

- டி.எஸ்.பத்மநாபன்

ஆறாம் புலன் -  Extra Sensory Perception (ESP) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக