புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
செயற்கை உணவு நிறங்கள் Poll_c10செயற்கை உணவு நிறங்கள் Poll_m10செயற்கை உணவு நிறங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை உணவு நிறங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 2:41 pm

செயற்கை உணவு நிறங்கள் What-did-you-know-about-food-clolourants.jpg

செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும் போது நிகழும் பல கட்ட செயல்முறைகள் எதுவும் இந்த செயற்கை நிறங்களின் தயாரிப்பில் இருப்பதில்லை.

எளிமையாகவும் விரைவாகவும் அதிக அளவிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பண்புகளே, இயற்கை நிறங்களைப் பயன்படுத்துவதை சிறிது சிறிதாகத் தவிர்த்து, முழுவதும் செயற்கை உணவு நிறங்களுக்கு உணவு நிறுவனங்கள் மாறிவிட்டதற்கான முக்கிய காரணமாகும். செயற்கை உணவு நிறங்கள் யாவும் பொடியாகவோ, பசையாகவோ, களிம்பாகவோ, நீரில் கரையக் கூடியவையாகவும் இருப்பது, பல வகைகளில் சேர்மானத்துக்கான எளிய வழியாக இருக்கின்றது.

1856-இல் ஹென்றி பெர்கின் கண்டுபிடித்த நிறம்தான் செயற்கையாகப் பெறப்பட்ட முதல் உணவுநிறம். இந்த செயற்கை நிறமானது, நிலக்கரி தாரில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. செயற்கை உணவு நிறங்கள் அவற்றின் வேதியியல் வடிவமைப்பு மற்றும் நீரில் கரையும் தன்மையைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன.

1. நீரில் கரையும் செயற்கை உணவு நிறங்கள்


(i).Allura Red

– இந்த நிறமூட்டி செயற்கை உணவு நிறமூட்டியாக மட்டுமல்லாமல் இயற்கையாவும் பூச்சியில் இருந்து பெறப்படுகிறது. செயற்கையாக, பெட்ரோலிய உபரிப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான ஊட்ட பானங்கள், தானியங்கள், மசாலா பொருட்கள், இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

(ii).Amaranth

– காவி கலந்த சிவப்பு நிறமான இந்த நிறத்தை மதுபானங்கள், கேக் வகைகள், ஐஸ்கிரீம், ஜாம் மற்றும் ஜெல்லி உணவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

(iii).Sunset yellow

– அடர் ஆரஞ்சு சிவப்பு நிறமூட்டியான இவை, ரொட்டி, குளிர் பானங்கள், சிற்றுண்டி தானியங்கள், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றில் சேர்க்கப்படுகின்றன. இவை 205 டிகிரி வெப்பநிலையையும் தாங்கக்கூடியவை.

(iv).Brillint blue மற்றும் brilliant black

– நீலம் மற்றும் கருப்பு உணவு நிறங்களான இவை பொடியாகவும், கொரகொரப்பாகவும் கிடைக்கின்றன. மதுபானம், சாஸ் வகைகள், குளிர்பானங்கள், சீஸ் போன்றவற்றிற்கு நிறமளிக்கப் பயன்படுகின்றன.

(v).Tartrazine

– ரொட்டி, பானங்கள், தானியங்கள், மணிலா வகை உணவுகள், இனிப்புப் பொருட்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றிற்கு எலுமிச்சை மஞ்சள் நிறமியாகப் பயன்படுகிறது. சுமார் 200 டிகிரி வெப்பநிலையிலும் மங்காதத் தன்மை கொண்டிருப்பதால், பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

(vi).Erythrosine

– பென்சீன் மற்றும் எரித்ரோசின் வேதியியல் வடிவமைப்பையொத்த இந்த நிறமி, சிவப்பு நிறமூட்டியாகப் பயன்படுகிறது. சுயிங்கம், ஐஸ்கிரீம், இனிப்புகள், ஜெல்லி உணவுகள், மிட்டாய் வகைகள், குளிர் பானங்கள் தயாரிக்கும் பொடி வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

(vii).Quinoline yellow

– பச்சை கலந்த மஞ்சள் நிறம் பெறுவதற்கும், இனிப்புகள், ஜெல்லி, ஜாம், குளிர் பானங்கள் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.

(viii).Brown FK & Brown HT

– புகையூட்டப்பட்ட மீன், இறைச்சி வகைகள், சிப்ஸ் வகைகள், பிஸ்கட், சாக்லேட், கேக் வகைகள் போன்றவற்றில் நிறமூட்டியாகப் பயன்படுகிறது.

மேல் குறிப்பிட்டவையுடன், Green S, Indigoine, Litolurubin BK, Ponso 4R மற்றும் Azorubin போன்றவையும் செயற்கை உணவு நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

2. கொழுப்பு, எண்ணெயில் கரையும் செயற்கை உணவு நிறங்கள்


நீரில் கரையும் நிறமிகள் போன்று உப்புப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் இவ்வகை நிறமூட்டிகள் நீரில் கரைவதில்லை. எனவே, இவற்றைக் கரைப்பதற்கு கொழுப்பு அல்லது எண்ணெய் தேவைப்படுகிறது. இதனால், நச்சுப்பொருட்கள் சேரும் நிலை இருப்பதால், பெரும்பாலும் இவற்றை உணவுப்பொருட்களில் கலப்பதற்கு அனுமதி கிடையாது. 1976க்கு முன்பு இவ்வகை செயற்கை உணவு நிறங்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், Penso SX என்ற நிறமி வெண்ணெய், மார்கரின் போன்றவற்றில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. Yellow AB போன்ற நிறங்கள் ஆரஞ்சு பழத்தோலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் முரப்பா, மர்மலாட், பழத்தோல் ஜாம் போன்றவற்றில் தடைசெய்யப்பட்டுள்ளது.

3. லேக் நிறமிகள்


அலுமினியம் ஹைட்ரேட்டின் நீரில் கரையாத படிமானங்கள் பொடியாக்கப்பட்டு உணவுகளில் நிறமூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. கேக் வகைகள், பிஸ்கட்டுகள், இனிப்புப் பொருட்கள், குளிர்பானங்கள், சூப் வகைகள், மசாலா பொருட்கள் போன்றவற்றிற்கு நிறமளிக்கப் பயன்படுகின்றன.

4. கலப்பு செயற்கை உணவு நிறங்கள்


Tetrazine, Erythrozine போன்ற முதன்மை நிறமூட்டிகளுடன், அவற்றிலிருந்து பல்வேறு அளவீட்டு வண்ணங்களில் பெறப்படும் இரண்டாம்நிலை நிறமூட்டிகளை தனித்தனியாகவோ அல்லது இரண்டு மூன்று நிறங்கள் சேர்த்தோ கலந்து உருவாக்கப்படுகின்றன இவ்வகை செயற்கை உணவு நிறங்கள். எ.கா. Egg yellow blended food color, Dark chocolate blended food color, Apple green blended food color, coffee brown blended food color.

பெரும்பாலான செயற்கை நிறங்கள் அனைத்தும் azo வகை வேதிப்பொருட்கள்தான். ஒருவருக்குப் பிடித்த உணவு பிடித்தமான நிறத்திலும் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். அதற்காகத்தான் இத்தனை வகையான செயற்கை உணவு நிறங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இவையனைத்தும் உணவுத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். காரணம், ஒவ்வொரு நிறமூட்டியின் இயற்பியல், வேதியியல், உணவு அறிவியல் பண்புகள், உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படுகிறது, அல்லது உபாதையளிக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து, அனுமதிக்கப்பட்ட நிறங்கள், அனுமதிக்கப்படாத நிறங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட செயற்கை உணவு நிறங்கள்


Carmoisine / Azorubine E122), Ponceau 4R (E 124), Erythrosine (E 127), Allura red (E 129), Tartrazine (E 102), Sunset yellow FCF (E110), Indigotine / Indigo carmine (E 132), Brilliant blue FCP (E 133), Fast green FCF (E 143).

அனுமதி மறுக்கப்பட்டுள்ள செயற்கை உணவு நிறங்கள்


Fast red, Rhodamine B, Metanil yellow, Bromocresol purple, Green S, Sudan 1, Sudan 2, Sudan 3 and Sudan 4.

உணவு கலப்படத் தடுப்புப் பிரிவில் அனுமதிக்கப்படாத செயற்கை உணவு நிறங்கள் ஏறக்குறைய 11% உணவுப் பொருட்களிலும் 4 % பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சான்றுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் அனுமதிக்கப்படாத செயற்கை உணவு நிறங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. காரணம், இந்திய உணவுகளில், Metanil yellow மற்றும் malachite green போன்றவை கேக் மற்றும் ஐஸ்கிரீம் வகை உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளைத்தான் நமது குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுக்கிறோம் என்பதையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்.

செயற்கை உணவு நிறங்களை அனுமதிப்பதிலும் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படுகிறது. நாடும் அவை அனுமதிக்கப்பட்டுள்ள உணவு நிறங்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியா (8) இலங்கை (9), பாகிஸ்தான் (18), ஐக்கிய நாடுகள் (7), ஈரான் மற்றும் ஆஸ்திரேலியா (13), ஐரோப்பிய நாடுகள் (16). ஏந்த உணவிலும் 1 கிலோவுக்கு 0.1 கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால், கண் கவர்ச்சிக்காக அந்த அளவைத் தாண்டுவதும் நடைபெறுகிறது. குறிப்பாக, Tartrazzine மற்றும் sunset yellow போன்ற நிறங்கள், இந்தியாவில் திருவிழா, பண்டிகை காலங்களில் இனிப்பு வகை உணவுப் பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்படுகின்றன.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 செயற்கை உணவு நிறங்கள் Ponceu 4R 124, Carmoisine 122, Erythrosine 127, Tartrazine 102, Sunset yellow FCF 110, Indigo Carmine 132, Brilliant blue FCF 133, Fast green FCF 143 ஆகியவை மட்டுமே. உணவு நிறங்களைப் பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறை மற்றும் சட்டவிதிகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

குங்குமம் டாக்டர்
உணவியல் நிபுணர் வண்டார்குழலி


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2023 6:51 pm

பயனுள்ள பதிவு.

அடுத்த பதிவை எதிர்பார்த்து இருக்கும்

ரமணியன்

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 05, 2023 6:51 pm

உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்


செயற்கை உணவு நிறங்கள் 10a

வானவில் உணவுகள்


நாம் ஒவ்வொருவரும் கண்களால்தான் உணவை உண்கிறோம் என்று கூறலாம் அல்லவா? காரணம், உண்ணும் உணவின் மீதுள்ள விருப்பம், கண்ணால் பார்க்கும் நிறத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான் பல நூறு வண்ணங்களை உணவுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சாகும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். இது இந்த உணவு நிறங்களுக்கும் பொருந்தும்.

உணவின் மீது அதிக ஈர்ப்பு வரும் பொருட்டு, அளவுக்கு அதிகமான உணவு நிறங்களைப் பயன்படுத்துவது, மனித உடலுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், தரமற்ற உணவுகளைத் தரமான உணவுகள் போல் காட்டுவது, அந்த நிறமே நஞ்சாக மாறுவது, உருவத்தில் ஒற்றுமையுடைய வேறொரு உணவுப்பொருளுக்கு வண்ணம் சேர்த்து ஏமாற்றுவது போன்ற பல்வேறு தவறான செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது.

என்னென்ன உணவு நிறங்களை எந்தெந்த அளவில் உணவுச் சேர்மானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய கன்பெக்சனரி அமைப்பு 1899 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கை கொடுத்தது. அதில் 21 உணவு நிறங்கள் தீமை ஏற்படுத்துவதாகவும், 33 உணவு நிறங்கள் தீமையற்றவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 1906-ல் உணவு மற்றும் மருந்துச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு நிறங்கள் தடை செய்யப்பட்டன. இதன் விளைவாக, உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மூலமாக உணவு நிறங்களுக்கு அனுமதிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.

டெலானி சட்ட உட்கூறு (Delaney Clause)


உணவு நிறங்களின் சேர்மானம், அளவுகள், நன்மை தீமைகள் குறித்து முக்கியத்துவம் அதிகரித்ததால், 1959 ஆம் ஆண்டில் உணவு, மருந்து மற்றும் ஒப்பனை சட்டமும், 1960 ல் நிறங்கள் சேர்மானத் திருத்தச் சட்டமும் ஏற்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல், Delaney Clause என்னும் ஒரு சிறப்பு சட்டப்பிரிவு நியூயார்க்கைச் சார்ந்த James Delaney என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறிப்பிடுவது என்னவென்றால், மனிதன் அல்லது விலங்குகள் என்று எவ்விதத்திலும், எதற்கும் அல்லது யாருக்கும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணியுள்ள எந்த ஒரு உணவுச் சேர்மானமும் சேர்க்கப்படவோ, கலந்திருக்கவோ கூடாது என்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதாகும்.

இந்த சிறப்புப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு, உணவு நிறங்கள் மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. சான்றிதழ் பெற்றவை மற்றும் சான்றிதழ் மறுக்கப்பட்டவை. சான்றிதழ் பெற்றவையில், நிரந்தர சான்றிதழ், தற்காலிக சான்றிதழ் என்றும் பிரிவுகள் உள்ளன. இவை மட்டுமல்லாமல், உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் உலக சுகாதார மையம் போன்றவை, உணவில் சேர்க்கப்படும் நிறங்கள் குறித்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உணவு விவரத் தகவல் பட்டியலில் (Food Labelling) உணவு நிறங்கள்


செயற்கை உணவு நிறங்கள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒரு உணவுப்பொருளை, கீழ்க்கண்ட தகவல்களை, அப்பொருளின் உணவு விவரத் தகவல் பட்டியலில் (Food label) குறிப்பிடாமல் அந்த உணவை விற்பனை செய்ய முடியாது.

1.உணவு நிறங்கள் என்று தனியாகக் குறிப்பிடப்பட வேண்டும். உணவு நிறத்தின் வேதியியல் அல்லது பொதுப்பெயர் மற்றும் அதில் கலக்கப்பட்டிருக்கும் உட்பொருள் குறித்த தகவல் இருக்க வேண்டும்.

2.உணவுச் சட்ட விதிமுறைகளில் கொடுக்கப்படாத எந்த ஒரு உணவு நிறமும் உணவுப்பொருளில் சேர்க்கக்கூடாது. உணவுப் பொருளில் சேர்க்கப்பட்ட நிறமி, இயற்கை உணவு நிறமா அல்லது செயற்கை உணவு நிறமா என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

3.இயற்கையும் செயற்கையும் அல்லாத, உலோகம் அல்லது கனிமப்பொருள் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உணவு நிறங்கள் பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட லேக் உணவு நிறங்களான அலுமினியம் மஞ்சள் அதன் உச்ச வரம்பான 0.04ppm (எடையளவிற்கு) மிகாமலும், உண்ணக்கூடிய உணவில் 4.4 ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.உலர் நிலையில் இருக்கும் உணவு நிறங்கள், மீண்டும் திரவ உணவுகள் அல்லது பானங்கள் தயாரிப்பின்போது, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

5.உணவுப் பொருளில் சேர்க்கப்பட்டிருக்கும் உணவு நிறங்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட வேண்டும். உண்ணக்கூடிய நிலையில் இருக்கும் எந்த உணவுப்பொருளிலும், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை உணவு நிறமானது, 100 ppm அளவிற்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

உணவு நிறங்களின் சேர்மானத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள்


ஐஸ்கிரீம், பால் சாக்லேட், உறைநிலை இனிப்புகள், வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பால் உணவுகள், ஐஸ்கிரீம் மிக்ஸ் பொடி, பிஸ்கெட்டுகள் மற்றும் அதன் அனைத்து வகைகளும், கேன்டிஸ் எனப்படும் கடினத்தன்மையுள்ள சர்க்கரை சார்ந்த இனிப்புகள் பச்சைப் பட்டாணி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பப்பாளி, கொள்கலனில் அடைக்கப்பட்ட தக்காளி ஜூஸ், பழச்சாறுகள், பழக்கூழ், பழத்தோல் இனிப்புகள், ஜெல்லி இனிப்புகள், ஜாம் வகைகள், குடிப்பதற்குத் தயாராக இருக்கும் ஆல்கஹால் கலக்காத குளிர்பானங்கள், சர்பத் வகைகள், பழக் கட்டிகள், பழத்தில் தயாரிக்கப்பட்ட பிற பானங்கள், செயற்கை பழ வாசனை அடங்கிய அடர் திரவக் கலவைகள், கஸ்டர்ட் பொடி, கூழ்ம நிலையிலுள்ள பழங்கள் அல்லது நட்ஸ் கலந்த பானங்கள் போன்றவற்றில் உணவு நிறங்கள் சேர்ப்பதற்கு அனுமதி உண்டு.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் விதிமுறைகள் (FSSAI))


இந்திய உணவுகளுக்காக இந்த அமைப்பு கொடுத்துள்ள உணவு நிற சேர்மான விதிமுறைகள் அனைத்தும் “Colouring Matter” என்ற தொகுப்பில், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் உணவுச் சேர்மானங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 2011 என்பதன் கீழ் தரப்பட்டுள்ளது. இயற்கை உணவு நிறங்களானாலும், செயற்கை உணவு நிறங்களானாலும், இந்த அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனித உயிருக்குத் தீங்கிழைக்காதவாறு சேர்க்கப்பட வேண்டும்.

Erythrosine உணவு நிறம் சேர்க்கும்போது, பொருளின் எடைக்கு 87% குறையாமலும், உலர் நிலையில் 13%-க்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். கனிம அயோடின் 0.2%-க்கு அதிகமாகாமலும், ஈயம், ஆர்சனிக், துத்தநாகம் போன்ற கன உலோகத் தாதுக்கள் அதன் எடைக்கு முறையே 10, 3, 50 மற்றும் 40 மில்லி கிராமுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். உணவு நிறம் சேர்க்கும்போது, எவ்விதத்திலும் பாதரசம், தாமிரம், குரோமியம், சயனைடு போன்ற வேதிப் பொருட்கள் இருக்கக்கூடாது.

உலக நாடுகளில் உணவு நிறங்களுக்கான விதிமுறைகள்


உணவு நிறங்களின் சேர்மானத்திற்கு, ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. கனடா மற்றும் ஐக்கிய நாடுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. கனடாவில் அனுமதிக்கப்பட்ட உணவு நிறத்திற்கான சான்றிதழ் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

மெக்சிகோவில் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் விதிமுறைகளை ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு இல்லாத நிலையில், Codex, ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விதிமுறைகளைப் பின்பற்ற அனுமதி உண்டு. சீன உணவுகளுக்கான நிறங்களின் விதிமுறைகள் GB 2760-2011 என்ற வகைப்பாட்டின் கீழ் வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் அதன் நன்மை தீமை குறித்த அறிவியல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஐப்பானில், உணவு நிறங்கள் சேர்க்கப்படும் உணவுப்பொருட்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, உடல் நலனுக்குத் தேவையான சிறப்பு உணவுகள் (FOSHU) மற்றும் ஊட்டச்சத்து செயல்பாடுகளை உள்ளடக்கிய உணவுகள் (FNFC). கொரிய நாட்டின் உணவுநிறங்களின் விதிமுறைகள் சற்று வித்தியாசமானவை. துரித உணவுகள் மற்றும் ரெடிமேட் உணவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் பொருட்டு, பள்ளிகள் இருக்கும் வளாகத்தைச் சுற்றியும் 200 மீட்டர் தொலைவில் இப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று விதிமுறைகளைக் கொடுத்துள்ளது.

இந்த வரையறைக்குள் வரும் இடங்கள் “Green Food Zone” (பசுமை உணவுப் பகுதி) என்றழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் விதிமுறைகள் “Australia New Zealand Food Standards”” என்பதன்கீழ் Alimentarious கொடுத்துள்ள விதிமுறைகளையும் பின்பற்றுகிறது.

உணவியல் நிபுணர் வண்டார்குழலி



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 21, 2023 10:24 am

செயற்கை உணவு நிறங்கள் 103459460 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக