புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
31 Posts - 36%
prajai
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Jenila
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
jairam
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 5%
prajai
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
Jenila
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
Rutu
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_m10கலாட்டா கல்யாணம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாட்டா கல்யாணம் - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 04, 2023 12:13 am

கலாட்டா கல்யாணம் - சிறுகதை Vikatan%2F2023-02%2Fc70158db-b136-45d4-b65a-b4ccc09094a8%2F63f5b35aeab33.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

முகூர்த்தத்திற்கு நேரமாகிக் கொண்டிருந்தது.

மயில் கண் வேட்டியைக் கட்டி முடித்துவிட்டு, அவசர அவசரமாக அந்த ஊதா நிற ஜிப்பாவைத் தன் தலை வழியே நுழைத்தபோதுதான் சங்கீதாவின் குரல் அவனை அழைத்தது.

‘`கார்த்திக், இந்த ஜிப்பாவைத் தவிர உன்கிட்ட வேற எதுவுமே இல்லையா? இந்த ஜிப்பாவையே எல்லா விசேஷங்களுக்கும் போட்டுக்கிற. ஒரு வருஷம் முன்னாடி நடந்த என் மாமா பொண்ணு கல்யாணத்துக்கும் இதே ஜிப்பாவைத்தான் போட்டுண்டு வந்த.’’

“சரி. அப்போ அந்தக் காவி நிற ஜிப்பாவைப் போட்டுக்கறேன்’’ என்றான் கார்த்திக்.

“ஐயே! அதுவா? அதைத்தான் ஆறு மாசம் முன்னாடி, என் அத்தையோட சதாபிஷேகத்திற்குப் போட்டுண்டியே. நான்கூட சதாபிஷேகத்திற்குப் போகறியா, சன்யாசத்துக்குப் போகறியான்னு கேட்டேனே?’’

“சங்கீதா, இப்படி அடிக்கடி உங்காத்துல விசேஷங்கள் நடந்தா, நான் ஜிப்பாக் கடையைத்தான் வைக்கணும்!’’

“என்னவோ பண்ணித்தொலை கார்த்திக். உனக்கு வெச்சா குடுமி, செரச்சா மொட்டை’’ என்று சொல்லிவிட்டு முகூர்த்தத்திற்குத் தயாராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள் சங்கீதா.

நடந்த இந்தக் களேபரத்தில் என்ன அணிவது என்று தெரியாமல் வெறும் மார்போடு நின்று கொண்டிருந்தவனை பாத்ரூமிலிருந்து தன் ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“கார்த்திக், என்ன மசமசன்னு அப்படியே நிக்கிற? இப்படியே ஒண்ணும் போட்டுக்காம வரப்போறியா?’’

“ஆமாம். நான் பெரிய இந்திப் பட ஹீரோ. இப்படியே ஒண்ணுமில்லாம வர்றதுக்கு. நீ வேற... நானே என்ன போட்டுக்கலாம்னு யோசிக்கிறேன்’’ என்று இழுத்தான்.

“சரி சரி... அந்த ஊதா நிற ஜிப்பாவையே போட்டுக்கோ. நானும் அதுக்கு மேட்சிங் சாரீதான் போட்டுண்டிருக்கேன்.’’

‘இந்த மேட்சிங் கொடுமை எப்பதான் தீருமோ... இல்லாட்டாலும் இதை முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்கலாம்’ என முணுமுணுத்தான்.

பாத்ரூமிலிருந்து தன் அலங்காரத்தை முடித்துவிட்டு ஒரு வழியாக வெளியே வந்தாள் சங்கீதா.

“முகூர்த்தத்துக்கு நான் ரெடி. போகலாம் வா. எல்லாரும் வந்திருப்பா. சீக்கிரம்... சீக்கிரம்...’’ என்றாள்.

“வரேன்... வரேன். இவ்வளவு நேரம் நீ நேரத்தை எடுத்திட்டு என்னை அவசரப்படுத்தற. உங்காத்துலயும் நல்ல ப்ரம்ம முகூர்த்த நேரமா பார்த்துதான் கல்யாணத்தை வெச்சிருக்கா. இன்னும் நான் காபிகூட குடிக்கலை.’’

“அதெல்லாம் டிபன் சாப்பிடும்போது சுடச்சுட குடிச்சுக்கலாம். இப்ப ஒரு அவசரமும் இல்லை. அமெரிக்காவிலிருந்து என் சித்தி பொண்ணு வர்றா. அப்புறம் சிட்னிலேர்ந்து என் அக்கா, டோக்யோல இருக்கற என்னோட பெரியண்ணா பேரனும் வர்றான். இது எங்காத்துல, இந்தத் தலைமுறையோட கடைசிக் கல்யாணம் வேற... அதனால...’’

“போதும் உங்க பிறந்தாத்துப் பெருமை...அதான் முப்பது வருஷமா கேட்டுண்டிருக்கேனே. உலகத்துல இருக்கற மூலை முடுக்கெல்லாம் உங்காத்து மனுஷா இருக்கா. அதனால அவா வரா, இவா வரான்னு சொல்ல வேண்டியதில்லை. இன்னும் கமலா மாமி மட்டும்தான் உங்காத்து விசேஷங்களுக்கு வரலை.’’

“எந்தக் கமலா மாமி?’’

“கமலா ஹாரிஸ் மாமி.’’

“உனக்குக் கொழுப்புதான் கார்த்திக்…முகூர்த்தத்துக்கு நேரத்தோட போனாதான் டிபன்’’ என்று அவனின் தேவையை நன்கு அறிந்த சங்கீதா சொன்னதும், கார்த்திக் அமைதியானான்.

“சரி, முகூர்த்தத்துக்குப் போலாம் வா’’ என்று அவன் அழைக்க, சங்கீதா அவசர அவசரமாக மீண்டும் பாத்ரூமிற்குள் ஓடினாள்.

“இப்போ என்ன சங்கீதா?” என்றான் கார்த்திக், சற்றே கோபமாக.

“நீ போகறத்துக்கு ரெடி பண்ணு. கொஞ்சம் புடவைய அட்ஜஸ்ட் பண்ணிண்டு வரேன்.’’

“ஆமாம். நீ டிரஸ் பண்ணி கிளம்பறத்துக்குள்ள அங்க முகூர்த்தம் இல்லை, சாந்திமுகூர்த்தமே நடந்துடும்.’’

“அவா ரெண்டு பேரும் ஏற்கெனவே லிவிங் டுகெதர்’’ என்றாள்.

“பிரமாதம். அப்போ முகூர்த்தமே தேவையில்லையே.’’

“அப்போ டிபன் போயிடுமே. அது பரவாயில்லையா?’’ என்றாள் சங்கீதா.

“சரி... சரி... யாரு எப்படிப் போனா நமக்கென்ன? முகூர்த்தத்துக்குப் போலாம் வா’’ என்று கார்த்திக் அன்றைய ப்ரம்ம முகூர்த்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

முகூர்த்தத்துக்கு அவர்கள் இருவரும் சென்றதும், முதலில் அவர்களை வரவேற்றான் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆஜராகியிருந்த பரத்.

“கார்த்திக் சித்தப்பா! என்ன இப்படி சென்னைலேயே இருந்துண்டு லேட்?’’ என்று அவரிடம் ஒரு ‘ஹாய்’ சொன்னான்.

“இந்தக் கேள்வியை நீ உங்க சித்திகிட்டதான் கேட்கணும்’’ என்றான் கார்த்திக்.

அதற்குள் கார்த்திக் பின்னால் வந்த சங்கீதா, “டேய் பரத். ஹாண்ட்சம் பாய். பார்க்க நல்ல லேடி கில்லர் மாதிரி இருக்க. அக்கா எங்க?’’

“ஹலோ, நான் இங்க இருக்கேன்டீ’’ என்றாள் சிட்னியிலிருந்த அவள் அக்கா மீரா.

அக்காவைப் பார்த்த சந்தோஷத்தில், ஒரு கையை மட்டும் தூக்கி ஏதோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதுபோல் வரவேற்றாள் சங்கீதா.

இன்னும் சற்று நேரத்துக்கு சங்கீதாவும் மீராவும் பேச்சில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் என்று, வந்திருந்த மற்றவர்களைத் தேடினான் கார்த்திக்.

“ஹலோ கார்த்திக் அங்கிள்’’ என்று அழைத்தான் டோக்கியோவிலிருந்த சங்கீதாவின் பெரியண்ணா பேரன்.

“டேய் கௌரவ். எப்படிடா இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, அப்பா எங்க?’’

“அப்பா கொஞ்சம் பிஸி. போர்டு மீட்டிங். அதனால வர முடியலை. அங்கிள், உங்க டாட்டர் சிங்கப்பூர்லதானே இருக்கா. இஸ் ஷி ஹியர்?’’ என்றான்.

“இல்லடா. அவளுக்கு இன்னிக்கி ஏதோ தீசிஸ் குடுக்கணுமாம். அதனால வரலை. அடுத்த மாசம் அவ டாக்டர் ஆகிடுவா’’ என்று தன் மகளைப் பற்றி கொஞ்சம் பெருமையோடு பேசினான் கார்த்திக்.

“கூல் அங்கிள். எதுல டாக்டரேட் பண்ணறா?’’

“நியூரோ டெக்னாலஜி. ஏதோ ‘பிரைன் டம்ப்’ பற்றிப் படிக்கிறா” என்று சொல்லிவிட்டு டோக்கியோ வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் விசாரித்தான்.

இப்படி அவன் கௌரவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, சிட்னியிலிருந்து சங்கீதாவின் அக்கா கணவர் அவனை அழைத்தார்.

“என்ன சகலை, ஊதா கலர் ஜிப்பாவோட நீயே பாக்கறதுக்கு மாப்பிள்ளை மாதிரி இருக்கியே!’’ என்றார்.

“நீ வேற... இந்த ஜிப்பாவைப் போடறதுக்குள்ள, நான் பட்ட அவஸ்தை இருக்கே…’’ என்றான் கார்த்திக்.

“ஏன், ஜிப்பா தலையில மாட்டிண்டு கழுத்துக்குப் போகலையா?’’

“சங்கீதா கழுத்துல நான் மாட்டிண்டது போறாதா. ஜிப்பா வேறையா?’’

கார்த்திக் சொன்னதைக் கேட்டுச் சிரித்தவர், “நம்ம எல்லாருமே அப்படித்தான். இன்னிக்கி இன்னொரு விக்கெட் அப்படித்தானே இங்க போகப் போறது’’ என்றார்.

“ஆமாம்... கேட்கணும்னு நினைச்சேன். மாப்பிள்ளை எங்க?’’ என்றான் கார்த்திக்.

“அவனுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. இந்த மாதிரி கழுத்துல மாட்டிண்டு கஷ்டப்படாம இருக்கறதுக்கு?’’

“என்ன சான்ஸ்?’’

“அதான், காசி யாத்திரை. கொஞ்ச நேரம் வெளியில போய்ட்டு வர அனுப்பிச்சிருக்கா. நானா இருந்தா, இதான் நல்ல சான்ஸுன்னு சொல்லிக் கிளம்பியிருப்பேன்’’ என்று சொல்லி மீண்டும் சிரித்தவரின் முகத்தில் லேசாகக் கிள்ளினாள், அவர் மனைவி மீரா.

இப்போது சங்கீதாவும், மீராவும் அந்தப் பேச்சுகளில் கலந்துகொள்ள, அந்த இடம் களைகட்டியது.

இதற்கிடையே, காசி யாத்திரை முடிந்து மீண்டும் அந்த அரங்கிற்கு வந்த மாப்பிள்ளையை எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.

எல்லா அலங்காரமும் முடித்து ஊஞ்சலுக்குத் தயாராக இருந்தாள் கல்யாணப்பெண்.

“யாராவது பாட்டு பாடுங்கோ’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது.

ஒலித்த அடுத்த நிமிடம், எல்லோர் முன்னாலும் பாட எப்போது சான்ஸ் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்த குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

‘கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள்.... கண்ணூஞ்சல் ஆடி இருந்தாள் மன மகிழ்ந்தாள்’ என்று ஆனந்த பைரவியில் ஆரம்பித்து ராகம் தவறிய சில குரல்கள். அல்லது அந்த, ‘மன மகிழ்ந்தாள்’ என்று பாடும்போது சங்கதி சேர்க்க முடியாமல், வெறும் தலையை மட்டும் சங்கதி போல் ஆட்டிய முகங்கள். ஏதோ அந்தாக்‌ஷரி பாட்டுப் போட்டி அறிவித்தது போல், ‘சீதா கல்யாண வைபோகமே’ என்று ஒன்று முடிந்ததும் மற்றொன்றைத் தொடங்கிய சில முகங்கள்.

கார்த்திக்கின் காதில் பசியின் ரீங்காரம் ஒலித்தது.

அருகில் இருந்த சங்கீதாவிடம், “முகூர்த்தம் முடிஞ்சதும் டிபன்தானே?’’ என்றான்.

“பறக்காதீங்கோ. அங்க பாட்டுப் பாடறாளே, அதுதான் என்னோட அமெரிக்கா சித்தி. அங்க பெரிய பணக்காரி. அவ மூக்குல இருக்கற அந்த வைர பேசரி எவ்வளவு எடுப்பா இருக்கு.’’

“என்னது கேசரியா?’’ என்றான் கார்த்திக்.

“உன்கிட்ட பேசறது வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு சங்கீதா அந்த பேசரியைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

“சகலை” என்று ஆஸ்திரேலியாவை அழைத்தான்.

“முகூர்த்தம் முடிஞ்சதும் டிபனா, சாப்பாடா?’’ என்றான்.

“எங்களுக்கு சாப்பாடுதான்’’ என்றார் அவர்.

கார்த்திக் நேரத்தைப் பார்த்தான். காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டதால் அவனுக்குக் கொட்டாவி வந்துகொண்டிருந்தது. எல்லோருக்கும் முன் கொட்டாவி விட்டால் நன்றாக இருக்காது என்று கொஞ்ச நேரம் எழுந்து போய் நிம்மதியாகக் கொட்டாவியும் விட்டு, ஒரு கப் காபி மட்டும் குடித்துவிட்டு வந்தான். கொஞ்சம் முகம் தெளிந்தது.

இதற்கிடையே சங்கீதா அவனை அவசரமாக அழைத்தாள்.

“முக்கியமான நேரத்துல எங்க எழுந்து போற கார்த்திக்? நீ போன நேரத்துல, ஊஞ்சல் முடிஞ்சு இப்போ கன்யாதானம்கூட முடியப்போறது. அடுத்து, மாங்கல்யதாரணம்தான். சீக்கிரம் வா’’ என்றாள்.

அது முடிந்ததும் சாப்பாடுதான் என்று கொஞ்சம் வேகமாக வந்தான் கார்த்திக்.

இப்போது சாஸ்திரிகள் மந்திரத்தை ஓத, மாப்பிள்ளை ஏதோ முணுமுணுப்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. புரிந்தும் புரியாமலும் அவர் சொல்வதெற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு மாப்பிள்ளை ஏதோ செய்கைகள் செய்துகொண்டிருந்தான்.

சாஸ்திரிகள் மணப்பெண்ணை அழைக்க, அவளும் அந்த அரங்கிற்குள் வந்தாள்.

இப்போது சாஸ்திரிகள் அனைவரிடமும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, மாப்பிள்ளையிடமும், பெண்ணிடமும் பேசினார். அவர்களும், அவர் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டு தங்கள் கையால் ஏதோ செய்கை செய்தார்கள்.

கார்த்திக்கிற்குப் பசிக்க ஆரம்பித்தது. அந்தப் பசி இப்போது காதை அடைக்க, கொஞ்சம் எழுந்து சென்று மீண்டும் ஒரு கப் காபி குடித்து விட்டு வந்தான்.

அவன் திரும்பி வந்ததும், “ரெண்டாவது காபியா? சாப்பாட்டைக் கெடுக்கும்’’ என்றாள் சங்கீதா.

அதற்கு எந்த பதிலும் சொல்லாதவன், அரங்கத்தைப் பார்த்தவாறு, “என்ன சொல்லறார் சாஸ்திரிகள்?’’ என்றான்.

“இப்படிப்பட்ட ராட்சச வருஷத்திலேயும், நம்ம பாரம்பரியத்தைக் கடைப்பிடிச்சிண்டு கல்யாணம் பண்ணிவைக்கறது பற்றிப் பெருமையா சொல்லறார்.’’

“ஆமாம் அவருக்கென்ன, அவரோட பிட் வந்து சேர்ந்துடுமே. பேச்சை சீக்கிரம் முடிச்சார்னா, டிபன் கடை திறக்கும்.’’

“உனக்கு எப்பவுமே டிபன் ஞாபகம்தானா?’’

“பின்ன, அந்த நெய் ஒழுகற பொங்கல், உப்பின பூரி, அதோட மசால், காசி ஹல்வா, பில்ட்டர் காபி... பேசும்போதே...’’

“கார்த்திக், போன் எங்க? எல்லாரையும் கேட்கறா’’ என்றாள் சங்கீதா.

“ஹப்பா, ஒருவழியா கேட்டாளா. இப்பவாச்சும் டிபன் வரும்’’ என்றான்.

“பாஸ்கோட் வந்தாச்சா?’’ என்றாள் சங்கீதா.

“ஆமாம். இப்பதான் வந்துது’’ சொல்லிவிட்டு மற்றவர்களைப் பார்த்தான்.

ஆஸ்திரேலியாவிலிருக்கும் தன் சகலையும், டோக்கியோவிலிருக்கும் அவள் அண்ணா பேரனும் தங்கள் போனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அதில் எதையோ அழுத்திவிட்டு, கோட் வந்ததை ஆமோதிக்கும் வகையில், அனைவரும் அட்சதை போடுவது போல் ஆசீர்வாதம் செய்தனர்.

முகூர்த்தம் முடிந்த சற்று நேரத்தில் அவரவர் வீட்டின் வாசல் அருகே ஏதோ சத்தம் கேட்டது.

“கார்த்திக். நீ எதிர்பார்த்தது வந்தாச்சுன்னு நினைக்கிறேன்’’ என்றாள் சங்கீதா.

“ஒருவழியா வந்துதே’’ என்று சொன்னவன் வெளியே சென்று கதவைத் திறந்தபோது ஒரு ‘டிரோன்’ அன்றைய கல்யாண ஸ்பெஷல் உணவைத் தன் பிடியில் வைத்துக்கொண்டு, அவர்கள் வீட்டு வாசலில், காத்துக்கொண்டிருந்தது.

கார்த்திக் அந்த டிரோனிடம் தன் முகத்தைக் காட்டி அங்கீகாரம் கிடைத்த பின், அந்த போன் வழியே வந்த பாஸ் கோடையும் அந்த டிரோனின் தலையில் அழுத்தினான். உடனே அது, அவர்களுக்காகக் கொண்டு வந்த காலை ஸ்பெஷல் டப்பாவை அவன் வாசலில் வைத்துவிட்டு மீண்டும் பறந்து சென்றது.

மாப்பிள்ளையும் பெண்ணும்கூட இணையம் வழியே சேர்ந்திருந்ததால், தாங்கள் மணம் முடித்ததற்கு அத்தாட்சியாகச் செய்துகொண்ட டிஜிட்டல் கான்ட்ராக்ட்டிற்கு வந்திருந்த அனைவரும் தங்கள் போன் மூலம் பாஸ் கோட் போட்டு ஆமோதித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

சாஸ்திரிகளும் தனக்கு வந்து சேர்ந்த பிட்காயின் தட்சணைக்கு நன்றி தெரிவித்தார்.

கல்யாணத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் இணையம் வழியே வந்த அனைவரும் விடை பெறத் தொடங்கினர். அவரவர் இடங்களில், அந்த நேரத்துக்கு ஏற்ப கல்யாண ஸ்பெஷல் உணவு டிரோன் மூலம் வந்து சேர்ந்தது.

“கார்த்திக், நமக்கு 2005-ல கல்யாணம் ஆகும்போது ஒரு சாதாரண மொபைல் போன்தான் இருந்தது. இந்த 2035 ராட்சச வருஷமாம். டெக்னாலஜி ராட்சச வளர்ச்சி அடைஞ்சாச்சு. டிஜிட்டல் கல்யாணம். பிட்காயின் தட்சணை. பையனும் பெண்ணும்கூட ஒரே இடத்துல இல்லை. நேரா ஹனிமூன்ல மீட்டிங்.’’

“கல்யாணம் எப்படி ‘கல் ‘இ’ யாணமா’ மாறிடுதோ, அதே மாதிரி சாந்தி முகூர்த்தம்கூட இனிமேல் சாந் ‘இ’ முகூர்த்தம்தான்’’ என்று அவன் சொன்னதற்கு சிரித்தாள் சங்கீதா.

கார்த்திக்கும் சங்கீதாவும் உற்சாகமாக சாப்பிட உட்கார்ந்தனர்.

அந்த தெர்மல் பாக்ஸிலிருந்து வெளிவந்தது நெய் ஒழுகும் வெண்பொங்கல், உப்பின பூரி, முந்திரி நிறைந்த காசி ஹல்வா, சுடச்சுட பில்ட்டர் காபி.

2035 ஆகியும், இவை மட்டும் மாறவில்லை.

கே.பி.சிவகுமார்
விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக