புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10 
52 Posts - 59%
heezulia
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_m10கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:04 pm

First topic message reminder :

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் -01

- வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 JgC8k2j

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 E2G5cTe


இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து க்ஷேமங்களும் கிடைப்பதற்கு, பகவான் நாராயணனை மனதாரப் பிரார்த்திக்கிறேன். சகல புண்ணியங்களையும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மிகப் பெரிய வேள்வி நடத்த வேண்டுமா? கங்கை, காவிரி முதலான புனித நதிகளில் நீராடவேண்டுமா? நித்யானுஷ்டானங்களைச் சரிவரச் செய்து, எங்கேனும் மலையுச்சியிலோ அடர்ந்த வனத்திலோ கடும் தவம் இருக்கவேண்டுமா? தினமும் ஒரு மணி நேரம் அல்லது வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் அனுஷ்டித்தால் சகல புண்ணியங்களும் கிடைத்துவிடுமா? வேறு என்னதான் செய்யவேண்டும்?

மிகவும் எளிதான காரியம்தான்.

சகல புண்ணியங்களும் பெறவேண்டும் என்றால், பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள்!

மகாபாரதம், மிகப் பிரமாண்டமானது. அதில் உள்ள எண்ணற்ற அத்தியாயங்களில், சகஸ்ரநாம அத்தியாயம் என்பதும் ஒன்று. பகவானின் நாமங்களைச் சொல்வதால் விளையும் நன்மைகளைச் சொல்கிற அத்தியாயம். அத்தனைப் பிரம்மாண்ட மகாபாரதத்தில், அத்தியாயம் என்பது ரொம்ப ரொம்பச் சின்னதுதான்!

ஆனால் என்ன... ஒரு சின்ன விதையில் இருந்துதானே மிகப் பெரிய ஆலமரம் உருவாகிறது?! ஒரு சின்ன கருத்தில் இருந்துதானே, பலப்பல அர்த்தங்கள் உண்டாகின்றன. இறைவனின் திருநாமங்களுக்கு, அதுவும் ஸ்ரீகண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு!

ஒரு குழந்தைக்கு என்ன தரவேண்டும் என இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நல்ல, சத்தான உணவில் இருந்துதான் நாம் கொடுக்கத் துவங்குகிறோம். 'சுவர் இருந்தால் தான் சித்திரம்’ என்பது போல், உடம்பு தெம்பாக இருந்தால்தானே ஓடியாடி விளையாட முடியும்!

அடுத்து, அந்தக் குழந்தைக்கு கல்வியைத் தருகிறோம்; இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும்; இன்ன படிப்பைப் படிக்க வேண்டும்; பெரியவனானதும் இப்படிப்பட்ட பதவியில் அந்தக் குழந்தை அமர வேண்டும் என யோசித்து யோசித்து, அனைத்தையும் செய்கிறோம்.

ஆக, உடம்பைக் கவனித்துக் காப்பாற்றுகிறோம்; கல்வியை வழங்குகிறோம்; குறிப்பாக, கை நிறைய சம்பளம் வாங்குவதற்கு உண்டான கல்வியை அளிக்கத் தயாராக இருக்கிறோம். இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்தால் போதுமா? மூன்றாவதாக ஒன்று இருப்பதையே நம்மில் பலர் கவனிக்கத் தவறுகிறோம்.

என்ன அது? ஆத்மா! அந்தக் குழந்தையின் ஆத்மா நல்லவிதமாக வளர்வதற்கு, நல்ல விஷயங்களைச் சிந்திப்பதற்கு, நல்ல காரியங்களில் ஈடுபடுவதற்கு நாம் ஏதாவது செய்கிறோமா? எதுவுமே செய்வதில்லையே?!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:32 pm

ஆனால், இந்தப் பூவுலகில், எவருக்கும் மாறவே மாறாத ஓர் ஆசை உண்டெனில், அது பகவானின் திருவடித் தாமரையை நாடுவதுதான்! இறுதிக் காலத்தில், அவனைச் சரணடைந்து, அவனது திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, மனிதர்களாகிய நம்முடைய ஆசையும் பிரார்த்தனையும்! மகாபாரதத்திலும் ஸ்ரீபகவத் கீதையிலும் இதை வெகு அற்புதமாக உணர்த்தியிருக்கின்றனர், ஆச்சார்ய பெருமக்கள்.
நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைக்கவேண்டும் எனில், அதற்கு நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும் அல்லவா?! எதுவுமே சும்மா நம் மடியில் வந்து விழுந்து விடுமா, என்ன? நாம் மெனக்கெட வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம்.
சரி... பகவானின் திருவடியில் சரணடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
கைங்கர்யம்... கைங்கர்யம்... கைங்கர்யம்! கிட்டத்தட்ட ஸ்வாமிக்கு தாசனாக வேண்டும். அதாவது, அவனுக்கு அடிமையாக வேண்டும். ஏனெனில், அவன்... ஆண்டான்; ஆண்டவன். நாம் எல்லோருமே அவனுக்கு அடிமைகள்!
'என்னது இது... அடிமைத்தனத்தைக் களைய வேண்டும் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள்! இதென்ன குழப்பம்?’ என்று தவிக்காதீர்கள். 'சுதந்திர இந்தியா என்று சொல்லும்போதே, எவ்வளவு சுகமாக இருக்கிறது. அப்படியிருக்க... ஆண்டான் - அடிமை இப்போது அவசியம்தானா?’ என்று கலங்கிவிடாதீர்கள்.
என்னதான் நாம் இப்போது சுதந்திர தேசத்தில் வாழ்ந்தாலும் சில நியமங்களுக்கு உட்பட்டு, சட்டதிட்ட வரையறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்கிறோம்?! அதேபோல், பூவுலகில் சில நியமங்கள் உள்ளன; சில விதிகள் இருக்கின்றன. இங்கே, இந்த உலகை ஆட்சி செய்கிற மிகப் பெரிய அதிகாரம் பரம்பொருளிடம் இருக்கிறது. அவனே ஆண்டான். அப்பேர்ப்பட்ட ஆண்டவனிடம் நாம் அடிமையாக, தாசனாக இருப்பதில் தவறே இல்லை. சொல்லப்போனால், இறைவனுக்குத் தாசனாக இருப்பதைவிட, வேறென்ன பெருமை இருக்கிறது, சொல்லுங்கள்!
முக்கியமாக, இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வார்த்தைக்குத்தான் அவன் ஆண்டான்; நாம் அடிமை - தாசன். ஆனால், அவனுக்கு நாம் தாசனாகிவிட்டால், உடனே அந்தப் பரம்பொருள், நமக்குத் தாசனாகிவிடுவான். அவனது குணம் அப்படி; சுபாவம் அப்படி! இதை எந்த நாளும், எவருக்காகவும் மாற்றிக்கொள்ளவே இல்லை, பகவான்!
மகாபாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாசனாக இருந்தான் அர்ஜுனன். ஆனால், மெள்ள மெள்ள அவனுக்கு தாசனாகிப் போனான், ஸ்ரீகிருஷ்ணன். அர்ஜுனன் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, அவனது தேரை ஓட்டியது கிருஷ்ண பரமாத்மாதானே?! தான் பரம்பொருள், இதோ... இந்த அர்ஜுனன் ஜீவாத்மா என்றெல்லாம் நினைக்காமல், அர்ஜுனக் கூட்டத்துக்காகத் தூதுபோன கண்ணனின் கதையை அறிவோம், இல்லையா? பகவானுக்கு நாம் தாசனாகிவிட்டால், அவன் நமக்குத் தாசனாகிவிடுவான் என்பது, இப்போது புரிகிறதா? ஆக, பகவானின் திருவடிக் கமலத்தைச் சரணடைவதற்கு, அவனுக்குத் தாசனாக இருந்து கைங்கர்யம் செய்ய வேண்டும். என்ன கைங்கர்யம்..? எப்படிச் செய்யவேண்டும்?

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:33 pm

எமலோகம். பூமியில் வாழ்ந்த ஒருவன், இறந்ததும் அங்கே வந்தான். அப்போது, எமதருமன் அவன் அருகில் வந்து, ஆதுரத்துடன் அவனுடைய தோளைத்தொட்டான். நடுநடுங்கிப் போனான் வந்தவன். ஆனால், எந்த முரட்டுத்தனமும் எமதருமனிடம் இல்லை; அந்த மானிடனின் தோளை மிருதுவாகத்தான் பற்றிக்கொண்டான். அதில் தனது வலுவையெல்லாம் எமதருமன் காட்டவில்லை. முகத்திலும் எந்தக் குரூரமோ ஆவேசமோ இல்லை. மாறாக, எமதருமனின் கண்களிலும் முகத்திலும் மெல்லிய சோகம்தான் படர்ந்திருந்தது.
அந்தச் சோகம் அவனுடைய குரலிலும் எதிரொலித்தது. வந்தவனின் தோளைப் பற்றிக்கொண்டு, மிகுந்த கனிவான, கருணை அடர்ந்திருந்த குரலில், ''எத்தனை வருடங்களாகப் பூமியில் இருந்தாய் நீ? இருபது வருடம் இருந்திருப்பாயா? முப்பது வருடங்கள் வாழ்ந்திருப்பாயா? அறுபது எழுபது வருடங்கள் வரை பூவுலகில் இருந்தவனா நீ?
சரி, இத்தனை வருடங்களாக பூமியில் இருந்திருக்கிறாயே? ஒரு முறை, ஒரேயொரு முறை 'கேசவா’ என்று ஏன் உச்சரிக்கவில்லை? உன் நாக்கு 'கேசவா’என்று உச்சரிக்க ஏன் மறுத்தது? கேசவனைப் பற்றிய சிந்தனை உனது புத்திக்குள் எட்டவே இல்லையா? உன் மனதில் ஒருமுறைகூட, கேசவனின் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதே கிடையாதா?
என்னுடைய ஊரான எமலோகத்துக்கு ஒருவன் வருகிறான் என்றால், சந்தோஷப்பட மாட்டேன், நான்! 'அடடா... என்ன கொடுமை இது!’ என்று வருந்தத்தான் செய்வேன். வாழ்வில், ஒருமுறையேனும் கேசவனின் திருநாமத்தைச் சொல்லியிருந்தால், இப்போது நீ இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
தண்டனை பெறுவதைவிட, தண்டனை கொடுப்பதுதான் ரொம்பவே கஷ்டமான காரியம். கேசவ நாமத்தைச் சொல்லாததால், இப்போது உனக்கும் கஷ்டம்; உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமே என்பதால், எனக்கும் கஷ்டம்!'' என்று கனிவுடன் சொன்னாராம் எமதருமன்.
'கேசவன்’ எனும் திருநாமத்தின் வலிமையைப் புரிந்து கொண்டீர்களா? அந்தத் திருநாமத்தைச் சொல்வதால் கிடைக்கிற மோட்ச பலனை அறிந்துகொண்டீர்களா?
எங்கே... சொல்லுங்கள், கேசவா... கேசவா... கேசவா!

இன்னும் வளரும்☔☔☔நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:34 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 FYoDx7u


கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - 05

- வேளுக்குடி கிருஷ்ணன்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

'பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். 'தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.

அதற்காக ஒரேயொரு திருநாமத்தை மட்டும், ஒரேயொரு முறை சொன்னாலே போதுமானது என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. 'கேசவா’எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்... அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்... பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!

'அது சரி... பகவானின் திருநாமத்தைச் சொன்னால், நம் ஊழிக்காலம் முதல் இன்று வரையிலான சகல பாபங்களும் தொலையும் என்கிறீர்கள். சுமார் ஆயிரம் வருடப் பாபம் என்றால், ஆயிரம் வருடங்கள் திருநாமத்தைச் சொல்ல வேண்டாமோ? அப்படிச் சொல்வதற்கு, ஆயிரம் வருடங்கள் நாம் உயிருடன் இருப்பது எவ்விதம்?’என்றும் கேட்கலாம், சிலர்.

மிகப் பெரிய மலைப் பாறை. அங்கே, மிகச் சிறிய குகை ஒன்று. அந்தக் குகைக்குள் இதுவரை எவரும் சென்றதில்லை. குகையின் கதவை இதுவரை எவரும் திறக்கவும் இல்லை. ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, குகையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் என்னாகும்? பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த குகைக்குள்ளேயே இருந்த இருட்டானது, சட்டென்று விலகிவிடும். அங்கே நம் கையில் உள்ள தீப்பந்தமானது, குகையின் இண்டு இடுக்குகளிலும் வெளிச்சப்பாய் விரித்திருக்கும். 'அதெப்படி... ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த இருட்டை விரட்டுவதற்கு, ஆயிரம் தீப்பந்தங்கள் தேவை இல்லையா? அல்லது, அந்த இருளை அகற்றுவதற்கு ஆயிரம் வருடங்களேனும் வேண்டாமா?’ என்று கேட்பது புத்திசாலித்தனம் இல்லைதானே?

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:35 pm

எத்தனை வருடங்களாக இருந்தால் என்ன... அந்த குகையின் கும்மிருட்டை விலக்குவதற்கு, ஒரு சின்ன தீப்பந்தமே போதுமானது. அதேபோல், நம் அத்தனைப் பிறவிகளின் பாபங்களும், அன்றைய பாபங்களும், ஏன்... இனி வரப் போகிற பாபங்களும்கூட, கண்ணனின் திவ்விய திருநாமம் ஒன்றைச் சொல்ல, பறந்தோடிவிடும். லட்சம் தீப்பந்தங்களுக்கு இணையானவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே, நம் பாபங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவான், அவன்!

கேசவா எனும் திருநாமத்தைப் போலவே, 'ஹரி’ எனும் திருநாமமும் உசத்தியானதுதான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்கின்றனர், ஆச்சார்யர்கள். இன்றைய காலத்தில், நமக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்பதே காலை ஏழு, ஏழரை என்றாகிவிட்டது. பிரம்ம முகூர்த்த வேளை என்று சொல்லப்படும், நாலு நாலரை மணிக்கு எழுந்திருங்கள். 'ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி...’ என்று பகவானின் திவ்விய நாமத்தை ஏழு முறை உச்சரியுங்கள்; மனதாரச் சொல்லுங்கள். நம் ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது உறுதி. ஹரி என்றாலே பாபங்களை அபகரிப்பவன் என்று அர்த்தம்.

ஒரேயொரு விஷயம்... பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! அந்த ஆசையை, பகவானின் மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்ம திருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:35 pm

முக்கியமாக ஒன்று... 'பகவானின் திருநாமத்தை 21 நாட்கள் சொல்லி வந்தால், செல்வம் சேரும்; 14 நாட்கள் உச்சரித்து வந்தால், கல்யாணம் கைகூடும்’என்கிற கொடுக்கல்- வாங்கல் வியாபாரமாக, பக்தியையும் பிரார்த்தனையும் ஆக்கிவிடாதீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி, ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வதில், ஆழ்ந்த ஈடுபாடு காட்டி னால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் தருவான், ஸ்ரீகண்ணபிரான்!

கற்பக விருட்சம், காமதேனு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும், அவை கொடுக்கத் தயாராக இருக்கும். ஆனால், 'என் தோட்டத்துக்கு வந்துவிடு’என்று சொன்னால், கற்பக விருட்சமும் வராது; காமதேனுவும் சம்மதிக்காது. இந்த ஆசையால் துன்பப்பட்டவர்களின் கதைகளை, புராணத்தில் அறிந்திருக்கிறோம். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர்தான் கற்பக விருட்சம்; அவர்தான் காமதேனு என்பதை நாம் உணருவதே இல்லை. அப்படிக் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம், 'என் செல்லக் கண்ணா, நீ என் வீட்டுக்கு வந்துவிடேன்’ என்று அழைத்துப் பாருங்களேன்... மிகச் சந்தோஷமாக உங்கள் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவான்! அது மட்டுமா? கேட்டதை, கேட்டதும் கொடுக்கிற கண்ணபிரான், அவனையே நமக்குத் தருவதற்குச் சித்தமாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவன், ஒரு முறை கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான். அவன் பிடித்த மீனின் வயிற்றுக்குள் விலை மதிப்பற்ற ரத்தினக் கல் இருந்தது. அவனுக்கு மீனின் அருமையும் ருசியும் தெரியும்; ஆனால் ரத்தினக் கல் பற்றித் தெரியவில்லை. அதை வெறும் கல் என்றே நினைத்தான், அவன்.

எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த ஊரில் இருந்த நகை வியாபாரியிடம் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். வியாபாரி, அது ரத்தினக் கல் என்பதையும், இந்த விஷயம் மீனவனுக்குத் தெரியவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 'இந்தக் கல்லோட விலை 20 ரூபாப்பா’என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொடுத்து, கல்லை வாங்கிக் கொண்டான். அந்தக் கல்லை அப்படித் திருப்பினால் நீல நிறமாகவும், இப்படித் திருப்பினால் பச்சை நிறமாகவும், இந்தப் பக்கம் திருப்பினால் சிவப்பு வண்ணத்திலும், அந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தால் வேறொரு நிறத்திலுமாகத் தெரிய... குதூகலத்தில் திக்குமுக்காடிய வியாபாரி, விறுவிறுவென அரண்மனைக்குச் சென்று, மன்னனிடம் ரத்தினக் கல்லின் மகிமையைச் சொல்லி, அதன் விசேஷங்களை எடுத்துரைத்து, 'அதன் விலை ஒரு கோடி ரூபாய்’ என்றான். உடனே மன்னனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, அந்த ரத்தினக் கல்லை வாங்கிக்கொண்டான். அதை ஆபரணமாக்கி, ராணியின் கழுத்தில் போட்டான். ஆக... மீனவன், வியாபாரி, மன்னன்... இவர்களில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:36 pm

அதாவது, அந்த மீனவனைப் போல, ரத்தினத்துக்கு இணையான பகவானின் சகஸ்ரநாமங்களை அறியாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது, 'நோயிலிருந்து விடுதலை வேணும்; கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, அந்த ரத்தினத்தை அந்த வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதுபோல, செயல்படப் போகிறீர்களா? அல்லது, அந்த ரத்தினத்தை ஆபரணமாக்கித் தன் மனைவி கழுத்தில் போட்டு அழகு பார்த்த ராஜாவைப்போல, 'எனக்கு எதுவுமே தேவையில்லை. அனுதினமும் பகவானின் திவ்விய நாமத்தைச் சொல்வதே ஆனந்தம்; நிறைவு’என்று வாழப் போகிறீர்களா?

அதாவது, நீங்கள்... மீனவனா? நகை வியாபாரியா? மன்னனா? இதை உணர்ந்து தெளிந்து நடப்பதில்தான், வாழ்வின் மொத்த இன்பமும் இருக்கிறது.

கோயிலில், நமது பெயர், நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். எதற்கு இது? அவசியமே இல்லை. 'நான் இன்னார்... என் பெயர் இது... கோத்திரம் இதுவே’ என்று நீங்கள் யாரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்?

விடிந்ததும் எழுந்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவிடம், 'ஹலோ... என் பேரு கிருஷ்ணன்; எனக்கு இத்தனை வயசு; என் கோத்திரம் இதுதான்!’என்று தினமும் சொல்லிக்கொண்டா இருக்கிறோம்? ஒருவேளை மூப்பு காரணமாக, பிணி காரணமாக, மறதி காரணமாக, அப்பாவிடமே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிற சூழலும்கூட ஒரு கட்டத்தில் ஏற்படலாம். ஆனால், நம் அப்பனுக்கெல்லாம் அப்பனாக, உலகத்துக்கே தந்தையாக, கடவுளாகத் திகழ்கிற பகவானிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அவனுக்குப் பிணியும் இல்லை; மூப்பும் இல்லை; மறதியும் கிடையாது!

எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது... உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

- இன்னும் வளரும்🍉🍉🍉நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:39 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் !  - Page 2 D7n0mBL

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - 06

- வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி !

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், குழந்தைகள் 50, 60 மார்க்குகள் வாங்கினாலே ரொம்பவும் சந்தோஷப்படுவார்கள், பெற்றோர்கள். ''அடடா..! எம் புள்ள என்னமா மார்க் வாங்கி, பாஸாகியிருக்கான் பாருங்க!'' என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்து, குழந்தையை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

ஆனால், இன்றைய காலமே வேறு! '60 மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா’ என்று அந்தக் குழந்தையை அவர்களின் வீட்டாரே இளக்காரமாகப் பார்க்கின்றனர். ''இப்படியெல்லாம் மார்க் எடுத்தா, எப்படி டாக்டராகிறது, எப்படி இன்ஜினீயர் ஆகுறது?'' என்று அலுத்துக்கொள்கின்றனர்.

அட... 90 மார்க்கே அந்தக் குழந்தை வாங்கியிருந்தாலும், ''ஏன், என்னாச்சு? பத்து மார்க் எதுல போச்சு? எங்கே கோட்டைவிட்டே? சரியா படிக்கலியா?'' என்கிற கேள்விகள்தான் பெற்றோர்களிடம் இருந்து வருகின்றன. கால மாற்றங்கள், போட்டிகள் நிறைந்த வாழ்க்கை என்றாகிவிட்ட உலகம்தான் இன்றைய நிலை.

மனனம் செய்கிற திறனும், எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்கிற கூர்மையும் குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் எளிதில் அதிக மதிப்பெண்கள் வாங்கமுடியும். அப்படியான திறமையும் புத்திக்கூர்மையும் இருக்கவேண்டுமெனில், குழந்தைகளுக்குச் சின்ன வயதிலிருந்தே புராணங்களையும் இதிகாசங்களையும் எடுத்துரைக்கவேண்டும்; பகவத்கீதையையும் ராமாயணத்தையும் விவரிக்க வேண்டும். அந்தக் கடமை, ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால், செய்பவர்தான் மிகமிகக் குறைவு!

சரி... பகவத்கீதை படிப்பதற்கும், பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

நிலாவைக் காட்டிச் சோறூட்டுகிறபோது அல்லது டி.வி-யில் கார்ட்டூனைக் காட்டி இட்லியைப் புகட்டுகிறபோது, ''இதுதான் பகவானின் திருநாமம். இதையும் கடந்து கடவுளுக்கு ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பகவத்கீதையில் இரண்டெழுத்தில் உள்ள திருநாமம், மூன்றெழுத்தில் உள்ள திருநாமம், நான்கெழுத்து திருநாமம் என்று எத்தனை உள்ளன தெரியுமா? பகவத்கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறித்து, ஒரே திருநாமம் இரண்டு முறை வந்திருக்கிறது; அந்தத் திருநாமம் இதுதான்...'' என்றெல்லாம் குழந்தைகளுக்கு ஆன்மிகத்தையும் கொஞ்சம் ஊட்டலாமே! அப்படி ஊட்டினால், அந்தக் குழந்தை, பக்தி மார்க்கத்தை அறிந்து, சாஸ்திர- சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிற, எதிலும் ஓர் ஒழுங்கைக் கொண்டிருக்கிற அற்புதமான மனிதனாக வருவது உறுதி.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:40 pm

அதுமட்டுமா? பகவானின் திருநாமங்களையும், அந்தத் திருநாமங்களுக்கான காரணங்களையும், ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து... என இருக்கிற திருநாமங்களையும் அந்தக் குழந்தைகள் மிக அழகாக புத்தியில் ஏற்றிக்கொள்ளும். இப்படியாக... நாம் சொல்கிற விஷயங்களையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிற, கிரகித்துக்கொள்கிற திறனானது சிறு வயதிலேயே வந்துவிட்டால், எல்.கே.ஜி படிப்பதில் துவங்கி, 6-வது, 7-வது படிக்கும்போது அந்தத் திறன் இன்னும் அதிகமாகி, பள்ளியிறுதிப் படிப்பில் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு, கல்லூரிப் படிப்பை மிகச் சுலபமாக எட்டுவார்கள். அப்போது, விரும்பிய படிப்பைக் கல்லூரியில் தொடர்வதற்கு அதிக மதிப்பெண்களை எடுக்கிற புத்திக்கூர்மையும், ஞாபக சக்தியும், மனனம் செய்து உள்ளே உருவேற்றிக் கொள்கிற சாதுர்யமும் மூளையின் எல்லா மூலைகளிலும் பரவி, வியாபித்திருக்கும். ஆகவே, வீட்டில் குழந்தைகளிடத்தில், புராண - இதிகாச - காப்பிய - காவியங்களை சொல்லிக் கொடுங்கள்; அறிவும் மேம்படும்; ஆன்மிகமும் தழைக்கும்!

பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரே திருநாமம், இரண்டு முறை வந்திருக்கிறது என்று சொன்னேன். அந்தச் சிறப்புக்கு உரிய திருநாமம் என்ன தெரியுமா? வசுப்ரதஹா!

இந்தத் திருநாமத்தின் அருமை- பெருமையைப் பார்ப்பதற்கு முன்பு, பகவானின் திருமேனியை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம். இதுவும், இன்றைய குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டிய ஒன்றுதான்!

ஜோதிமயமானவன் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்த்தோம், அல்லவா! பகவான் எனப்படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும்?! சரி... அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். ஆனால், அத்துடன் நின்றுவிடவில்லை அவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், 'நன்பொன்’ என்று பாடுகிறார். 'மாசறு பொன்னே...’என்கிறோமே, அப்படி நன்பொன் எனப் பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?!

'உரைத்த நன்பொன்’ என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று; நன்பொன் என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது; 'உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்’ என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 8:41 pm

இறுதியாக, 'சுட்டுரைத்த நன்பொன்’ என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார். அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்... 'இது சரிதானா? பகவானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா?’ என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப... சட்டென்று, 'சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது’ என்று பாடிவிட்டார் ஆழ்வார். 'அடடா... பகவானே! உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது’என்று பாடி முடித்து, வணங்குகிறார். இதுதான் தமிழின் அழகு; இதுதான், ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று! தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெல்லாம் கிடைத்திருக்குமா, சொல்லுங்கள்!

இப்படித்தான் பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். 'என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க... 'முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’என்றாராம் பராசரர்.

'அட... ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?’என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட... பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். ''மன்னிக்கவும் ரங்கா! உன்னை என்னால் பாட முடியாது!'' என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!

பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் 'பாட முடியாது’என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?

''என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன... பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!'' என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, ''அரங்கா... உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!'' என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர்.

என்னவொரு அற்புதமான உவமை, பாருங்கள்! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என யோசியுங்கள்.

முடிந்தால்... இதையும் உங்களின் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், பகவான் எப்போதுமே நம்மைவிட குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கமானவன்!

- இன்னும் வளரும்🔥🔥🔥நன்றி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக