புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_m10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10 
21 Posts - 66%
heezulia
பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_m10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_m10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10 
63 Posts - 64%
heezulia
பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_m10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_m10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_m10பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 7:06 am

பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Large_161244657

எவ்வளவோ வேகமாகச் சென்றபோதும் நான் மீனாட்சி
சன்னதிக்குள் நுழைகின்ற போது திரையிட்டு விட்டார்கள். திரையை
விலக்க அரைமணி நேரம் ஆகும்.

தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டு இருந்தவர்களை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தேன். சிறப்புத் தரிசன வரிசையில் இருந்த
ஒரு நடுத்தரவயதுப் பெண் கண்ணீர் மல்கக் கைகளைக் கூப்பி
அம்பிகையிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

எதிரே தர்ம தரிசன வரிசையில் இருந்த ஒரு இளைஞன் கண்களை
மூடியபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தான். நிலை கொள்ளாமல்
தவித்துக் கொண்டிருந்த நாற்பது வயது நபர் ஒருவர், தீவிரமாகப்
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

ஐயோ பாவம்! இவர்களுக்கெல்லாம் என்ன கஷ்டமோ! பச்சைப்
புடவைக்காரி ஏன் இப்படிக் கல்நெஞ்சுக்காரியாக இருக்கிறாள்?
இவர்கள் கேட்டதைக் கொடுத்தால் தான் என்னவாம்?

''நீங்க வரலொட்டி தானே? கொஞ்சம் இப்படி வரீங்களா? உங்களோட
தனியாப் பேசணும்.''

என்னை அழைத்த அந்த அழகிய பெண்ணுக்கு முப்பது வயதிற்குள்
தான் இருக்கும். நிலவைப் பழிக்கும் அழகிய முகம். அவளைப் பின்
தொடர்ந்து சென்றேன். மீனாட்சி சன்னதிக்குப் பின்புறம் சென்ற
பிறகுதான் அழைத்தது யார் என்று புரிந்தது. பச்சைப் புடவைக்காரி.

''நான் கல்நெஞ்சுக்காரியா? என் பார்வையையும், சக்தியையும்
சில நிமிடங்கள் உனக்குத் தருகிறேன். அவர்கள் என்ன வேண்டிக்
கொள்கிறார்கள் என்று பார்.''

என்ன வியப்பு! தாயின் முன் பிரார்த்தனை செய்பவர்களை என்னால்
பார்க்க முடிந்தது. அவர்கள் மனதில் இருக்கும் பிரார்த்தனையையும்
என்னால் அறிய முடிந்தது.

நிலைகொள்ளாமல் தவித்த அந்த நாற்பது வயதுக்காரரின் பிரார்த்தனை
இதுதான்.

''தாயே எனக்குக் கோடி கோடியாகச் செல்வம் வேண்டும். அதன் மூலம்
நான் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.''

எனக்குச் சிரிப்பு வந்தது.

''இவன் இப்போது மத்தியதர வர்க்கத்தில் இருக்கிறான். எண்ணி எண்ணிச்
செலவழிக்க வேண்டிய பொருளாதாரச் சூழல். ஒழுங்காகப் படிக்கும் நல்ல
பிள்ளைகள். நல்ல மனைவி என்று மகிழ்ச்சியாக இருக்கிறான்.. இவனுக்குத்
திடீர் என்று சில கோடிகள் கிடைத்தால் என்ன ஆகும்?. செல்வம் ஒருவனுக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால் கோடீஸ்வரர்கள் எல்லாம் மகிழ்ச்சியில்
நடனமாடிக் கொண்டல்லவா இருக்கவேண்டும்?

பணக்காரன்தான் அதிகம் கவலைப்படுகிறான். இவன் கேட்டதைக்
கொடுத்து இவன் வாழ்க்கையைக் கெடுக்கவா? இல்லை கொடுக்காமல்
விடவா?''
''மகிழ்ச்சியாக இருக்கும் செல்வந்தர்களை நான் அறிவேனம்மா.''
''அந்தப் பக்குவம் இவனுக்கு இன்னும் வரவில்லை. அது வந்தவுடன்
இவனுக்குச் செல்வம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.''

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 7:06 am


அடுத்து அந்த இளைஞனின் பிரார்த்தனை
''தாயே, நான் உலக அளவில் புகழ் பெற்று அமைதியாக வாழ வேண்டும்.''
குபுக்கென்று சிரித்தாள் அன்னை.

''புகழ் பெற்றபின் எப்படி அமைதியாக இருக்கமுடியும்? கூடவே பாதுகாப்புக்கு
ஆட்கள் வேண்டும். இஷ்டப்பட்ட இடத்திற்குச் செல்ல முடியாது. விரும்பியபடி
வாழமுடியாது. நாம் எப்படி வாழ்கிறோம் என்று மொத்த உலகமும் பூதக்
கண்ணாடியின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கும்.

புகழைக் கொடுத்து இவனைக் கெடுக்க வேண்டாம் என்று பார்த்தால்
விடமாட்டான் போலிருக்கிறதே!''
பச்சைப்புடவைக்காரி பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் மல்க நின்றிருந்த
பெண்ணின் மனதில் இருந்த பிரார்த்தனை என்னவென்று புரிந்து கொண்டேன்.

''சரி தாயே., அவர்களை விடுங்கள். இந்தப் பெண்ணின் கணவர் ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இவள் என்ன பொன்னையும்,
பொருளையுமா கேட்டாள்? தாலிப்பிச்சைதானே கேட்கிறாள்.
இவளுக்காவது கேட்டதைத் தரலாமல்லவா?''

''இவள் அழுவதைப் பார்த்தால் எனக்கும் அவள் கேட்டதைக் கொடுக்க
வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால். . . ஆனால்.. ''

''என்ன ஆனால்.. இவள் கர்மக்கணக்கு தடுக்கிறதாக்கும்? அந்தக் கர்மவிதியைச்
செய்ததே நீங்கள் தானம்மா.''
பச்சைப்புடவைக்காரியின் அழகு முகத்தில் ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகை..

''இவளின் வலியையும், வேதனையையும் மட்டுமே பார்க்கிறாய்.
இவள் இப்போது பாடம் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை நீ அறியமாட்டாய்.
இந்த உலகம் கர்ம பூமி; ஆன்மிகப் பள்ளிக்கூடம். இங்கே நீங்கள் யாரும் இன்பச்
சுற்றுலாவிற்காக வரவில்லை

எந்த நேரமும் சுகித்திருக்க. இது சொர்க்கம் இல்லை. சுகமான மனித வாழ்க்கை
உன் லட்சியம் இல்லை. இருக்கவும் கூடாது. ஆன்மாவின் நீண்ட பயணத்தில்
பூவுலக வாழ்க்கை ஒரு சிறு பகுதி மட்டுமே. இதையும் தாண்டி ஆன்மிக வளர்ச்சியும்,
பரிணாம வளர்ச்சியும் இருக்கிறது. அதை இப்போது உன்னிடம் சொல்ல முடியாது

ஆயிரம் ஆயிரம் பள்ளிகளும் கல்லுாரிகளும் சொல்லிக் கொடுக்காத பாடங்களை
இவள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பமும் வேதனையும்
சொல்லிக் கொடுக்கும். என்னால் முடிந்தவரையில் இவளுடைய வேதனையைக்
குறைக்கிறேன்.''
''இதில் நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா தாயே?''
அன்னை சிரித்தாள்.

''உன் நண்பன் கண் பார்வையைப் பரிசோதிக்க மருத்துவரிடம் செல்கிறான்.
அவனைப் பலகையில் உள்ள எழுத்துக்களைப் படிக்கச் சொல்கிறார் மருத்துவர்.
அவனுக்கு அந்த எழுத்து சரியாகத் தெரியாததால் திணறுகிறான்.

அருகில் நிற்கும் உனக்கு எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன.
நண்பனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று எழுத்துக்களை அவன் காதில்
கிசுகிசுப்பாயா? அப்படிச் செய்தால் அவனுக்குக் கடைசிவரை கண்பார்வை
சரியாக இருக்காது.. இவளுக்கு நீ உதவ நினைப்பதும் அதே வகையைச்
சேர்ந்ததுதான்.

பார்வை சரியில்லை என்றால் மருத்துவர் இன்னும் சக்தி வாய்ந்த கண்ணாடியைத்
தருவார். இவளால் வேதனையைத் தாங்க முடியவில்லை என்றால் நான் இவளுக்கு
இன்னும் சக்தி வாய்ந்த மனதைத் தருவேன்.
இது தான் நான் ஏற்படுத்திய நியதி.''

''அப்படியென்றால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு நான் உதவவே முடியாதா?''

''ஏன் முடியாது? அவர்களின் மீது அதிகம் அன்பு காட்டலாம். அப்போது அவர்களுக்குத்
துன்பத்தைத் தாங்கும் சக்தி அதிகமாகும். இறைவன் அன்பு மயமானவன் என
அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்கலாம். அவர்களின் வளர்ச்சி இன்னும் விரைவாக
நிகழும்.''

''தாயே... உங்கள் துாய்மையான அன்பைப் புரிந்து கொள்ளாத நாங்கள் தான்
கல்நெஞ்சுக்காரர்கள். இந்தப் பாவியின் வாயால் உங்களைக் கல்நெஞ்சுக்காரி
என்று சொன்னது பெரிய பாவம் தாயே! என்னை மன்னியுங்கள்.''

அவள் மறைந்து விட்டாள். நான் தரிசன வரிசைக்கு ஓடி வந்தேன்.
இன்னும் திரையை விலக்கவில்லை. ஆனால் மனதில் இருந்த திரை முற்றிலுமாக
விலகியிருந்தது.
இன்னும் வருவாள்

-வரலொட்டி ரெங்கசாமி
நன்றி-தினமலர்

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 8:55 am

முன்பெல்லாம் தொடராக தினமலர் வாரமலரில் வந்துகொண்டு இருந்தன.
இப்போது வருவதில்லை.

முன்பு --பல ஆண்டுகளுக்கு முன், குமுதத்தில் கதை எழுதியவரும் இவர்தானோ????

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 1:35 pm

பச்சை புடவைக்காரி (9) - திரை விலகியது Tamil_News_large_2366361
-

தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 59 புத்தகங்கள் எழுதியவர்
வரலொட்டி ரெங்கசாமி. மதுரையின் 'எழுத்துலக முகமாக' இருக்கும்
இவரது எழுத்துப்பயணம் 1997 ல் துவங்கியது.

முதலில் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள் என துவங்கிய
எழுத்துப்பணி பின்னர் சமூக நாவல், தன்னம்பிக்கை புத்தகங்கள் என
விரிந்தது.

இப்போது இவர் ஆன்மிக எழுத்தாளர் என்றே பெரிதும் அறியப்படுகிறார்.
சனிக்கிழமை தோறும் வெளிவரும் தினமலர் ஆன்மிக மலர் புத்தகத்தில்,
'பச்சை புடவைக்காரி' என்ற தொடரை 52 வாரங்கள் எழுதினார்.

வாசகர்களின் பெரும் ஆதரவை பெற்ற அத்தொடரை தாமரை பிரதர்ஸ்
மீடியா பிரைவேட் லிமிடெட் புத்தகமாக வெளியிட்டது. இந்த புத்தகமும்
பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த எழுத்து தந்த உற்சாகத்தில் 'அன்பே ஆன்மிகம்' என்ற தலைப்பில்
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரிசையாக புத்தகங்கள் எழுத
உள்ளார். இந்த வரிசையில் முதல் புத்தகம் 'தாயென வந்தவள்' சில
நாட்களுக்கு முன்பு வெளியாகி, மதுரை தமுக்கத்தில் நடந்து வரும்
புத்தகத்திருவிழாவில் வாசகர்களை ஈர்த்துள்ளது.

நன்றி-தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 3:05 pm

அதுதானே பார்த்தேன்.
அந்த வரலெட்டி xxxxx கதைகள் வேறு மாதிரி இருக்கும்.!!!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக