புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_m10திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைத்துளிகள் - தொடர் பதிவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 03, 2021 8:33 am

First topic message reminder :

பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 TM_0701_CJ_doc7gw301ww0gp8ohido7x_31160243_kunalan
-
வில்­ல­னாக மிரட்டி, குணச்­சித்­திர வேடங்­களில் கவ­னம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மாகி இருப்­ப­வர் பசு­பதி.

ஆனால் ‘சார்­பட்டா பரம்­பரை’ படத்­தில் ஏற்று நடித்த ரங்­கன் கதா­பாத்­தி­ரம் தனது திரை வாழ்க்­கை­யில் மிக முக்­கி­ய­மா­னது என்­றும் தன் மன­துக்கு நெருக்­க­மா­னது என்­றும் கூறி­யுள்­ளார்.

இந்­தப் படத்­தில் குத்­துச்­சண்டை பயிற்­சி­யா­ள­ராக முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் பசு­பதி. அவ­ரு­டைய நடிப்பு மிக இயல்­பா­க­வும் கச்­சி­த­மா­க­வும் இருந்­த­தாக விமர்­ச­கர்­களும் ரசி­கர்­களும் வெகு­வா­கப் பாராட்டி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தாம் சமூக வலைத்­த­ளத்­தில் இயங்­க­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்டு, அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள பசு­பதி, தம்மை பாராட்­டிய அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

தமிழ் ரசி­கர்­கள் மட்­டு­மல்­லாது உல­கம் முழு­வ­தும் இருக்­கின்ற திரை ரசி­கர்­கள் கொண்­டா­டு­கிற பட­மாக ‘சார்­பட்டா பரம்­பரை’ வெற்­றி­பெற்­றுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“சென்­னை­யின் வாழ்­வி­ய­லை­யும் குத்­துச்­சண்­டை­யை­யும் கள­மா­கக் கொண்ட யதார்த்­த­மான படைப்­பைப் பார்த்து அனை­வ­ரும் வியந்து பாராட்­டு­கி­றார்­கள். தான் எடுத்­துக்­கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்­தி­யு­டன் படைப்­ப­தில் வித்­த­கர் ரஞ்­சித். ரங்­கன் வாத்­தி­யா­ராக என்­னைச் செதுக்­கி­ய­தற்கு அவ­ருக்கு என் நன்­றி­கள் பல. என் திரை வாழ்க்­கை­யில் ரங்­கன் முக்­கி­ய­மா­ன­வன், நெருக்­க­மா­ன­வன்.

“நண்­பர் ஆர்­யா­வு­டன் நடித்­த­தில் என்­னி­டம் மேலும் பெருமை சேர்ந்­து­கொள்­கிறது. என்­னு­டன் நடித்த அனைத்­துக் கலை­ஞர்­க­ளுக்­கும் தொழில்­நுட்­பக் கலை­ஞர்­க­ளுக்­கும் என் நன்­றி­கள். 22 ஆண்­டு­கள் என்­னு­டைய திரைப் பய­ணத்­தில் என்­னு­டன் பய­ணம் செய்த அனை­வ­ருக்­கும் நன்றி,” என்று பசு­பதி கூறியுள்ளார்.

தமிழ்முரசு-sg

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 10, 2021 9:38 am

திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 Main-qimg-a9ca0d96391a2fd90734f99e5f592367

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:36 am

மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108061515047759_4-heroines-landing-on-the-field-for-the-people-issue_SECVPF
-
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை
இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு,
‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்‌ஷா
ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-

‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும்
பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால்,
படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள்
இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து
இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி
குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது.

சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும்
சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக
இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில்
குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே
கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.’’

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:37 am

கேரளாவில் வசிக்கும் கன்னியாகுமரி கதாநாயகி!
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108080838518729_Resides-in-Kerala-Kanyakumari-is-the-heroine_SECVPF
-
நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது
இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன்
தொடங்கினார்.

அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை
தொடர்ந்தார்.

அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற
பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில்
நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.

‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய
தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான
கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’
என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும்
தமிழ் பெண் என்கிறார்.
அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:37 am

உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108111611206144_Health-Rumor-Actress-Saratha-Description_SECVPF
-
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா.

இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல
படங்களில் நடித்துள்ளார்.

குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம்,
என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன்
போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக
நடித்தார்.

சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில்
சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர்
வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின்
மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “நான் உயிருடன் நலமாக இருக்கிறேன்.
எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும்
நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான
செயலில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:38 am

உடல் தோற்ற கேலிக்கு இளம் நடிகை எதிர்ப்பு
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108111722239167_To-mock-the-physical-appearance-Young-actress-protests_SECVPF
-
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா
ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த
இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன்
100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில்
நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி
படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன்
காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று
விமர்சனங்கள் வந்தன.

குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி
இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை
அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள்
வருந்துகின்றனர்.

ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ
கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை
கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும்
செய்வேன்.

இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து
இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை
குறைக்கவில்லை’’ என்றார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:39 am

மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108111740202468_Again-in-controversy-Kareena-Kapoor_SECVPF
-
இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட
நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து
எதிர்ப்புக்கு உள்ளானார்.

இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை
கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை
எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர்.

பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி
அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார்.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.

ராமாயணம் படத்தில் கரீனா கபூர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு
கிளம்பியது. இந்த நிலையில் கரீனா கபூருக்கு பிறந்த 2-வது ஆண்
குழந்தைக்கு ஜெகாங்கீர் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல்
பரவி மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

1606-ம் ஆண்டு சீக்கிய குருவான அர்ஜுன் தேவை சிறையில்
அடைத்து கொடுமைப்படுத்திய முகலாய மன்னன் ஜெகாங்கீர்
பெயரை குழந்தைக்கு சூட்டுவதா? என்று வலைத்தளத்தில்
கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:50 am

தனி ஒருவனாய் விமானத்தில் பயணித்த மாதவன் – வைரலாகும் வீடியோ
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108111400164345_Tamil_News_Tamil-cinema-actor-madhavan-travel-alone-in-flight_SECVPF
-
நடிகர் மாதவன், கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற
பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள
நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில்
கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி
இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.

அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத பயணமாக மாறி உள்ளது.
ஏனெனில், அந்த விமானத்தில் சக பயணிகள் இன்றி அவர் மட்டுமே
பயணித்துள்ளார்.

இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மாதவன்,
“இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக
இருந்தது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர
வேண்டும் என வேண்டுகிறேன்.
அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்”
என குறிப்பிட்டுள்ளார்.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:50 am

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானத்தின் 3 படங்கள்?
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108111447129681_1_sjia5s._L_styvpf
-
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்
வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து
வருகிறார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பை
பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம்,
டிக்கிலோனா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு
தயாராக உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளதால் இந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட பேச்சு
வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கியும், டிக்கிலோனா
படத்தை கார்த்திக் யோகியும், சபாபதி படத்தை ஸ்ரீனிவாசராவும்
இயக்கி உள்ளனர். இப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:51 am

‘புட்ட பொம்மா’ மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு - Page 2 202108111117297874_Tamil_News_Tamil-cinema-anikha-in-Butta-Bomma-movie_SECVPF
-
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’
படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள்
என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும்
விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக
நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள்
செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும்
நடித்துள்ளார்

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின்
தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக
நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது

-மாலைமலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக