புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
1 Post - 1%
prajai
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
284 Posts - 42%
heezulia
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
5 Posts - 1%
prajai
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருப்பாவை 24 Poll_c10திருப்பாவை 24 Poll_m10திருப்பாவை 24 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை 24


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Jan 08, 2020 8:23 pm



திருப்பாவை என்பது ஆண்டாள் என்ற ஒரு வசதியான தமிழ்ப்பெண் வேலை வெட்டி இல்லாததால் எழுத்தாக்கம் என்ற சுய திருப்திக்காக பாடியதல்ல ; கவிதாயிணி என்ற பட்டத்தை போட்டுக்கொண்டு தத்து பித்து கண்டேன் காதல்கொண்டேன் தவித்தேன் தடுமாறி தடுமாறி விழுகிறேன் என கணவர் காசில் புத்தகம் போட்டு புகழ் தேடுகிற ரகமும் அல்ல

முன்பே சொல்லியிருக்கிறேன் ; ராமாவாதாரத்தில் சீதையாக அவதரித்த பூமியின் வியாபகம் ஒரு ஆத்மாவாக பூமியில் வந்து விட்டதால் நிறைவடைய வேண்டி அந்த பரந்தாமனை பாடி துதித்து பக்தி ரசத்தை மானுடர்களுக்கும் கொடுத்து தானும் முழுமையடைய ஆண்டாளாக அவதரித்தது

பக்திரசம் மட்டுமல்ல ; ஞான ரகசியங்களும் ஆங்காங்கே அள்ளித்தெளித்திருப்பார் .

ஸ்ரீகிரிஷ்ணரே ராமாராக வந்தவர் என்பதை ஆண்டாளும் வெளிப்படுத்தினார் ; அதுமட்டுமல்ல கிருத யுகத்தில் சிவனார் அறிமுகப்படுத்திய மாயோன் சேயோன் குரு வழிபாட்டில் சேயோன் என முன்னறிவிக்கப்பட்ட முருகன் ; வேறு யாரோ அல்ல மாயோன் பூமியில் யுகங்கள் தோறும் அவதரித்து வரும் அவதாரம் என்பதின் முன்னறிவிப்பு என்பதையும் ஆண்டாள் வெளிப்படுத்தியுள்ளார்

திருப்பாவை 24 ல் இவ்விவரங்கள் உள்ளது

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

மாபலி சக்கரவர்த்திக்கு தானம் செய்கிறேன் என்ற சுயமகிமையே தடையாகி விடுகிறது . சுயத்தை நிக்கிரகம் செய்தால் ஒழிய அவருக்கு முழுமை கொடுக்க முடியாது . ஆகவே திரிவிக்ரமனாக வந்த பரமாத்மா ; ஜீவாத்மாவின் ஆணவம் , கன்மம் , மாயைகளை வெற்றிகொள்ள மூவடி கேட்டு ஒரே அடியில் உலகம் முழுவதும் அளந்தார் . அடுத்த அடியிலோ பிரபஞ்சம் முழுவதும் அளந்து விட்டார் மூன்றாவது அடிக்கோ இடமில்லை . தன்னை அவருக்கு கீழ்படிதலுள்ளவானாகி அவரின் பாதத்தில் ஒன்றுவதைத்தவிர வேறு வழி இல்லாமல்போகிறது .

ஒரு ஆத்மா உலகம் முழுவதையும் அறிந்து கடந்தாலும் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அறிந்து தெளிந்தாலும் பரமாத்மாவோடு ஒன்றி கடவுளுக்கு கீழ்படிதலுள்ள பக்தியை கற்றுக்கொள்ளா விட்டால் முழுமை என்பது இல்லை

சகல ஆத்மாக்களின் அடிப்படையான பரமாத்மாவானவர் சற்குருவாக சகலருக்கும் எது தேவையோ அதை படிப்படியே கற்றுக்கொடுத்து முழுமையடைய செய்வார் . இது அவரது பணியாக இருக்கிறது . அதனால்தான் அடி போற்றி என்கிறார்

இலங்கைக்கு ராமர் செல்லவேண்டியது அவரது அவதார நோக்கம் . சீதையை ராவணன் தூக்கி சென்றது ஒரு கருவி – உளவு . ராவணன் மாபெரும் தபஸ்வி . அவருக்கு அழிவு அவரது அடியிலிருந்தே சீதை என்ற மகளாக முழைத்தது . ராவணனும் அறிவார் .

அவரால் கடலில் விடப்பட்ட குழந்தை சீதை என்பது . குழந்தையை பாதுகாக்க தன்னால் தவம் செய்து பெறப்பட்ட சிவதனுஷையும் உடன் வைத்தே பேழையை கடலில் விட்டார் . அந்த சிவதனுஷை ராமர் முறித்தபோது மற்றொரு சிவதனுஷை வைத்திருந்த பரசுராமர் மற்றொரு வில்லையும் உன்னால் முறிக்க இயலுமா என கேள்வி கேட்கவில்லையா ?

ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு நபர் பரமாத்மாவின் அவதாரமாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை பரசுராமரும் அறிவார் . அதை சோதித்து உறுதி செய்துகொண்டார் . இவ்விசயம் ராவணனுக்கும் தெரிந்தேதான் இருந்தது . சீதையை கவர்ந்து சென்று காவல் செய்தாரே தவிர அவர் சீதையை கெடுக்க முயலவே இல்லை . மகளை வனவாசத்தின் கொடுமையிலிருந்து காப்பதும் ஒன்று . மற்றொன்று கிருத யுகத்தின் முடிவு காலங்களில் உலகத்தில் தன்னிச்சையாக வளர்ந்த ஒரு கோட்பாடு – மதமாச்சரியம் சைவம் மட்டுமே உண்மை – சிவன் மட்டுமே கடவுள் என்ற கொள்கை .

சிவன் பூமியில் இருந்து வழிநடுத்தும் வரை பூமி முழு தர்மத்தில் இருந்ததாகத்தான் சகல வேதங்களும் – குரானும் கூட ஒப்புக்கொள்கிறது . ஆனால் சிவன் வைரவனாக ஒளி சரீரம் அடைந்து பரலோகம் சென்று ருத்ரன் ஆன பிறகு பூமியில் அவரை குருவாக – குலதெய்வ வழிபாடாக வைத்து வழிபட ஆரம்பித்தார்கள் . அப்போது அவர் சொல்லி வைத்த மாயோன் சேயோன் மூலமாக கடவுளை வழிபடும் முறையை முற்றிலும் ஒதுக்கி விட்டு சிவனை மட்டுமே வழிபடும் முறையை மனிதர்கள் உருவாக்கிக்கொண்டார்கள் . அவர்கள் மாயோனின் தயவு தேவையில்லை என்பதுபோல உதாசீனம் செய்யும் நடைமுறையும் – சைவ வைணவ மதச்சண்டைகளும் வந்து விட்டது . வைணவம் மற்றும் சதுர்வேதங்களுக்கு ஆசானான வியாசரை சைவத்தில் ஒதுக்கி வைத்து சைவசித்தாந்தங்களை மட்டு கடைபிடித்தால் போதும் என்கிற மதமாச்சாரியம் ஆரம்பித்த காலம் இது .

சிவனிடம் வரம் பெற்றவர் என்ற முறையில் சைவவெறியை இலங்கையை தலைமையகமாக வைத்து ராவணன் முன்னின்று உலகத்தில் நடத்திக்கொண்டிருந்தார் . இமய மலை வரை ராவணனின் ஆட்கள் சென்று சதுர் வேதத்தை கற்பிக்கவும் வளர்க்கவும் செய்த வசிஸ்ட்டர் விசுவாமித்ரர் போன்றோரின் ஆசிரமங்களை தாக்கியும் வந்தார்கள் .
ஆகவே இதை சரி செய்ய ராவணாதிகளின் கொட்டத்தை அடக்கவே ராமர் அவதரிக்க வேண்டும் என்ற வேண்டுதல் இம்முனிவர்களால் ஏறெடுக்கப்பட்டு ராமர் அவதரித்தார் . ஆக ராம அவதாரமே குலதெய்வமான சிவனின் மூலமாக கடவுளை வழிபடுவது என்ற முறையை குலதெய்வத்தை மட்டும் வழிபடுவது என்பதாகவே மாற்றிக்கொண்டார்களே அந்த தவறை சரி செய்வதுதான் .

சீதையை ராமர் மணக்கும் முன்னமே முனிவர்களின் ஆசிரமங்களை தாக்க வந்த இலங்கையர்களை ராமர் அழித்தார் என்ற செய்தி ராவணனுக்கு தெரியாமலா இருந்திருக்கும் . அப்போதே பகை ஆரம்பித்து விட்டது

சிவதனுசோடு கடலில் விடப்பட்ட குழந்தை சீதையாக வளர்ந்திருக்கிறது என்ற விபரம் ஆரம்பத்தில் ராவணனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் ; ஆனால் சுயம்வர செய்திகளும் பரசுராமரிடம் இருந்த சிவனின் வில்லையும் ராமர் உடைத்தார் என்ற சேதியையும் ராவணன் அறிந்தபோது தனக்கு அழிவை தரும் சீதை தனது முரண்பாடான ராமருக்கு மனைவியும் ஆகி விட்டாள் என்பது இன்னும் ஆத்திரத்தை உண்டாக்கி விட்டது . சீதையும் ராமரும் சேர்ந்திருந்தால் தனக்கு விரைவில் அழிவு வரும் என்பதும் அவர்களை மறைத்து பிரித்து வைக்கவேண்டும் என்ற முடிவுக்கு ராவணன் வந்தது . கவணியுங்கள் வெளிப்படையாக சண்டை செய்து சீதையை தூக்கி செல்வதற்கு பதிலாக மறைவாக யார் என்று தெரியாமலும் எங்கு சீதை இருக்கிறாள் என்பது வெளிப்படாமல் இருக்கவேண்டும் என்றுதான் ராவணன் தூக்கி சென்றார் . ராவணன் பெரும்படையோடு வந்து காட்டில் தனியே இருந்தவர்களை தாக்கி சீதையை கொண்டு சென்றிருக்க முடியும் . அப்படி செய்தால் உடனே ராமர் ராவணனுடன் யுத்தம் செய்வார் ; ஆனால் காலத்தை நீடித்து சீதையை கண்டுபிடிக்கவே ராமர் அலையட்டும் என்றுதான் களவாக எடுத்தது ; ஆனாலும் சில சாட்சிகளால் ராவணனைப்பற்றிய சேதி வந்தது ; இருப்பினும் அனுமனை ரகசியமாக அனுப்பி உறுதி செய்யவேண்டியிருந்தது

இவைகளை நிதானித்தீர்களானால் சீதையின் நிமித்தமாக இச்சண்டை வரவே இல்லை . குலதெய்வத்தை மட்டும் வழிபட்டு விட்டு இறைவனை வழிபாடாமல் இரட்டடிப்பு செய்யும் தவறை சரி செய்ய உண்டானதே இந்த யுத்தம் .

சிவனை குலதெய்வமாக வழிபட்டதோடு தங்கள் முன்னோர்கள் யாரெல்லாம் நன்கு வாழ்ந்தார்களோ அவர்களின் சமாதியின் மீது லிங்கம் ஒன்றை வைத்து இவரும் ஈஸ்வரனாகி விட்டார் என அவரது பேருடன் ஈஸ்வரன் என்று சேர்த்து கோவில் கட்டும் பழக்கம் வந்துவிட்டது

ராவணனும் தனது பெயருடன் ஈஸ்வரன் என்ற நாமத்தை தரித்துக்கொண்டான் . இவைகளை மாற்றி சிவனின் மூலமாகவும் நாராயணன் மூலமாகவும் கடவுளை வழிபடும் நெறியை உருவாக்க வந்தவரே ராமர் . இலங்கையில் அசுர ஆவிகளின் ஆதிக்கத்தை அழிக்கவே ; சரியான நெறியை வளர்க்கவே விபீசனருக்கு ஸ்ரீரெங்க மூர்த்தம் வழங்கப்பட்டது . ஆனால் அது காவிரிக்கரையில் தங்கி இலங்கை போய்ச்சேரததும் இன்று வரை அசுர ஆவிகள் இலங்கையின் நிம்மதியை கெடுத்து வருகின்றன .

என் சிறு வயதில் எனக்கு உண்டான ஒரு கணவு - தரிசனம் பசுமையாக நினைவில் உள்ளது . இலங்கை கடலுக்கு இக்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் . விதவைக்கோலத்தில் உள்ள தாயார் ஒருவர் என்னிடம் கை எடுத்து கும்பிட்டு தாண்டி வாருங்கள் என்று கெஞ்சுகிறார்கள் . ரெம்ப சின்ன வயது ; எனக்கு ஒன்றுமே புரியவில்லை .

ஒருவேளை இறைவன் என்னை இறைபணிக்கு அபிஷேகித்து நான் இலங்கைக்கு செல்லும் காலத்தில் மட்டுமே அங்கு நிம்மதி திரும்பும்போல . இந்த எண்ணம் வந்தபிறகு நான் இரண்டுமுறை சேதுக்கரை சென்று என் ஆவிமண்டல குரு ஆஞ்சநேயரின் காலடியில் அமர்ந்து இலங்கைக்காக பிரார்த்தித்தேன் ; அப்போதெல்லாம் அங்கு ஏதோ சில மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது .

இந்த அசுர ஆவிகளை – இறைவனை வழிபடாமல் எப்படியாவது கெடுத்து பூமியில் வந்த அவதாரங்களை மட்டும் வழிபட்டால் போதும் என திரும்ப திரும்ப மனிதர்களுக்கு உபதேசிக்கும் ஆவிகளை கடிந்து கொண்டார் ராமர் . அடக்கியும் வைத்தார் . ஆண்டாளும் தென்னிலங்கை செற்றாய் ; திறம் போற்றி என்கிறார் . கலிகாலத்தின் முடிவு வரை அசுர ஆவிகளை முற்றிலுமாக அழிக்கமுடியாது ; ஆனால் அடக்கி வைக்கமுடியும் செற்றாய் என்பதின் அர்த்தம் அதுவே

அடுத்த வரி வென்று பகை முடிக்கும் நின் கை வேல் போற்றி என்கிறார் . நாராயணன் எங்குமே வேல் வைத்திருக்கமாட்டார் . ஆனால் ஞானவேல் உடையவன் முருகன் மட்டுமே . ஸ்ரீகிரிஷ்ணர்தான் ஸ்ரீராமர் என்பதை மட்டும் ஆண்டாள் சொல்லவில்லை ; முருகனும் நீ தான் என்கிறார் .

பூமியில் வருகிற அவதாரம் என்பதை அடையாளப்படுத்தி சிவனார் முருகன் என்று சொன்னார் . அவரே தனக்கும் ஞான குரு தகப்பன் சாமி என்றார் . அவரே மாயைகளை அழித்து ஞானத்தை வழங்கும் ஞானவேலை வைத்திருக்கிறவர் . இந்த வேலால் மட்டுமே எதிரிகளான மாயைகளை அழிக்கமுடியும் . திருப்பதியில் உள்ள சிலை முருகனா ; பெருமாளா என்ற குழப்பம் இருந்ததை உலகம் அறியும் . அதை பெருமாள் என்று ராமானுஜர் ஒரு டெஸ்ட் வைத்து தீர்ப்பளித்தார் என்பது வரலாறு . ராமானுஜர் வரும் வரை சிலர் அதை முருகன் என்றும் பெருமாள் என்றும் வழிபட்டு வந்தனர் .

உண்மை என்னவென்றால் பரலோகத்தில் பெருமாள் ஆகிய பரமாத்மா எப்போதெல்லாம் மனிதனாக அவதரித்து வருமோ ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவரும் முருகனே . இவர்களால் பூமிக்கு கொடுக்கப்பட்ட உபதேசங்களே – வேதங்களே ஞானவேல் .

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2020 7:28 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக