உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by ayyasamy ram Today at 1:12 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by ayyasamy ram Today at 1:08 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by சக்தி18 Today at 12:33 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 8:36 am

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Today at 8:12 am

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 8:00 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:58 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Today at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 7:53 am

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by ayyasamy ram Today at 7:22 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 3:50 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 11:11 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 9:49 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Yesterday at 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:02 pm

» கடலூர் மாவட்டத்தில் பிறந்த மகான்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» பல்லக்கு ஏன் இப்படி ஆடுகிறது..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» குழந்தைகள் தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 10:35 am

» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மந்த்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்களே!
by ayyasamy ram Yesterday at 8:04 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Wed Nov 13, 2019 11:14 pm

» பொருத்துக…
by krishnaamma Wed Nov 13, 2019 10:23 pm

» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
by ayyasamy ram Wed Nov 13, 2019 5:18 pm

Admins Online

கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Empty கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

Post by ayyasamy ram on Thu Oct 17, 2019 7:17 am


தமிழகம், ஆந்திர மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் நேமம் கிராமத்தில்
ஸ்ரீபரம்ஜோதி அம்மா பகவான் பவித்ர வனம் என்ற பெயரில்,
ஸ்ரீஅம்மா பகவான் சேவா சமிதி செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிபாடு மற்றும்
தியானம் செய்வதற்கு பக்தா்கள் வந்து செல்கின்றனா். அத்துடன்,
ஒவ்வொரு நாளும் ஐஸ்வா்யம், ஆரோக்யம் மற்றும் சுமங்கலி பூஜைகள்
நடைபெற்று வருகிறது.

இந்த ஆசிரமத்தில் பக்தா்களிடம் இருந்து தலா ரூ. 20 நுழைவுக்
கட்டணமாகவும், பூஜைக்கு ரூ. 10 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், அறை எடுத்து தங்கி பூஜையில் கலந்து கொள்வதற்கு
ரூ. 200 வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும் இங்கு வந்து செல்லும்
பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் வருவதற்கு
முன்னதாக ஆசிரமத்தில் 3 வாகனங்களில் வந்த வருமான வரித்
துறையினா் 3 குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனா். இதனால்
ஆசிரமத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த,
பெண் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா்.

ஆனால் 3 மணியைக் கடந்தும் சோதனை நடந்து கொண்டிருந்ததால்
அங்கிருந்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.

ஆந்திரத்தில்...

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில்
கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு புதன்கிழமை காலை
தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 தனிக்
குழுக்களாகப் பிரிந்து, ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.

ஆசிரம நிறுவனரான விஜயகுமாா் நாயுடுவின் மகன் கிருஷ்ணாஜி
அவரது மனைவி பித்ரா ஜீ, துணைத் தலைவா் லோகேஷ் தாசாஜி
ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி
வருகின்றனா்.

ஆனால் கல்கி பகவான் என்று கூறப்படும் விஜயகுமாா் மற்றும் அவரின்
மனைவி பத்மாவதி இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் புச்சிநாயுடுகண்ட்ரீக, வரதய்யபாளையம், சூளூா்பேட்டை,
தடா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆசிரமத்துக்குச் சொந்தமான
சொத்துகளுக்கான பினாமிகளின் இடையே கலக்கம் எழுந்துள்ளது.

இந்த ஆசிரமங்களில் நடந்து வரும் விவகாரங்களின் மீது இதற்கு முன்
பல புகாா்கள் எழுந்தன. ஆசிரமத்துக்கு வரும் பக்தா்களுக்கு போதை
மருந்து அளித்து, அவா்களை போதையில் வைத்திருப்பதாகவும்,
அவா்கள் மீது பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்து வருவதாகவும்
சா்ச்சை எழுந்தது.

கல்கி பகவான் எனக் கூறப்படும் விஜயகுமாா், சில ஆண்டுகளுக்கு
முன் எல்ஐசி கிளா்க்காக பணியாற்றினாா். பின்னா், அதை விட்டு விட்டு
பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கினாா். அது திவாலானதால் தலைமறைவாக
இருந்த அவா், மகா விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் கல்கி என்று 1989-இல்
சித்தூா் மாவட்டத்தில் மக்கள் முன் தோன்றினாா்.

அதன்பின், தனது ஆசிரமத்தை ஆந்திர மாநிலம் மட்டுமல்லாமல்,
தமிழகத்திலும் விரிவுபடுத்தினாா். அவா் தன் மனைவியை தெய்வாம்சம்
பொருந்தியவராக சமூகத்துக்குக் காண்பித்தாா்.

இவா்களின் ஆசிரமத்துக்கு உள்நாட்டில் உள்ள செல்வந்தா்கள்
மட்டுமல்லாமல் வெளிநாட்டினா், வெளிநாடு வாழ் இந்தியவா்கள் என
பலா் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49966
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Empty Re: கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

Post by T.N.Balasubramanian on Thu Oct 17, 2019 6:31 pm

சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்ததப்பட்டுவரும் வருமான வரித்துறை சோதனையின் மூலம் 33 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!ஹைலைட்ஸ்
கல்கி சாமியார், மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை
24 கோடி ரூபாய், 9 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் சிக்கியது
கென்யாவில் நிலம் வாங்கியது அம்பலம்
எல்.ஐ.சி முகவராக இருந்து கோடிகளுக்கு அதிபதியான சாமியார்
இந்தியாவைப் பொறுத்தவரை சாமியார்கள் அதிகமாக சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது கல்கி பகபான் என அழைக்கப்படும் கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையிலிருந்து வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணா வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 24 கோடி ரூபாய் பணமும், 9 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரும் சிக்கியுள்ளது.

கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை!!

இந்தியாவில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் இவ்வளவு அதிமான வெளிநாட்டு பணம் சிக்குவது இதுவே முதல்முறையாகும். கிருஷ்ணா ஒயிட் லோட்டஸ், ப்ளூ வாட்டர், கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்திவருகிறார். கட்டுமானத் துறையில் செயல்பட்டுவரும் இவரது நிறுவனத்தில் யார்யாரெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள் என்ற தகவலையும் வருமான வரித்துறையினர் சேகரித்துவருகின்றனர்.

மேலும் கிருஷ்ணா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக பல ஏக்கர் அளவில் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணாவின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.

யார் இந்த கல்கி சாமியார்?

கல்கி பகவான், அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் இந்த சாமியாரின் இயற்பெயர் விஜய குமார். வேலூர் - குடியாத்தம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இவர் எல்.ஐ.சி முகவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒன் எஸ் டெம்பிள் என அழைக்கப்படும் இவரது பிரம்மாண்ட ஆசிரம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ராஜஸ்தான் பளிங்கு கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. தனது மனைவி பத்மாவதியுடன் இவர் நடத்தும் தியான வகுப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டணமே 50000 ரூபாய். ஒவ்வொரு நாளும் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என ஆயிரக்கணக்கானோர் இவரைத் தேடி வருகின்றனர்.
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருவதால் விரைவில் முழுவிபரம் தெரியவரும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25530
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9232

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை