உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து Empty அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Post by ayyasamy ram on Mon Sep 23, 2019 5:51 am

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து 201909230420563542_Contract-for-import-of-50-lakh-tonnes-of-gas-from-US--Sign_SECVPF



ஹூஸ்டன்,

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அமெரிக்க
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக
நேற்று அவர் ஹூஸ்டன் நகருக்கு சென்றார். அங்கு
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் எரிசக்தி நகரம் என்ற சிறப்பு பெயரை
பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், டெக்சாஸ் மாகாணத்திலேயே
அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம், அமெரிக்காவில்
அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள 4-வது நகரம் என்ற
பெயர்களையும் பெற்றுள்ளது.

இந்த நகரத்தில் 500 எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் உள்ளன.
மேலும், இங்கு நாள் ஒன்றுக்கு 23 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்
சுத்திகரிப்பு செய்கிற 9 ஆலைகள் உள்ளன.

இந்த நகரில் முதல் நிகழ்ச்சியாக பீபி, எக்ஸான் மொபில்,
ஸ்குளும்பெர்கர், பேக்கர் ஹியூஸ், வின்மார் இன்டர் நேஷனல்
உள்ளிட்ட 17 உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் தலைமை
செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வட்ட மேஜை கூட்டம்
ஒன்றை நடத்தினார்.

இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரும்
கலந்து கொண்டார்.

இந்திய தரப்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவு மந்திரி
எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே,
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ச வர்தன் சிரிங்லா
ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த 17 நிறுவனங்களும் உலகமெங்கும் உள்ள 150 நாடுகளில்
1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.71 லட்சம் கோடி) நிகர மதிப்பினை
கொண்டுள்ளன.

இந்த வட்ட மேஜை கூட்டத்தில் எரிசக்தி பாதுகாப்புக்காகவும்,
பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும் இந்தியாவும்,
அமெரிக்காவும் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்த
விவாதம் முக்கிய இடம் பிடித்தது.

இந்தியாவில் தங்களது காலடித் தடங்களை மேம்படுத்துவது
பற்றி விவாதித்த எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல்
அதிகாரிகள், இந்த துறையில் இந்தியா கட்டுப்பாடு களை
தளர்த்தி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டினர்.
இதற்காக அவர் கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்
கொண்டனர்.

இந்திய, அமெரிக்க வர்த்தக உறவில் எரிசக்தித்துறை புதிய
இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி முன்னிலையில்
அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனத்துடன் இந்தியாவின்
பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் 50 லட்சம் டன் இயற்கை
எரிவாயுவை (எல்.என்.ஜி), பங்கு முதலீடுகள் வாயிலாக இறக்குமதி
செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, டெல்லூரியன் நிறுவனம், அமைக்கவுள்ள
டிரிப்வுட் எல்.என்.ஜி. ஏற்றுமதி முனையத்தில் இந்தியாவின்
பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் 2½ பில்லியன் டாலர் (சுமார்
ரூ.17 ஆயிரத்து 750 கோடி) முதலீடு செய்யும்.

40 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை
எரிவாயுவை (எல்.என்.ஜி.) டெல்லூரியன் நிறுவனம், இந்தியாவுக்கு
வழங்கும்.

இதற்கான இறுதி ஒப்பந்தம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்
தேதிக்குள் கையெழுத்தாகும்.

கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு செய்தித் தொடர்பாளர்
ரவீஷ்குமார் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில்,
“முன்னணி எரிசக்தி நிறுவனங் களின் தலைமை செயல்
அதிகாரிகளுடனான சந்திப்பை பயனுள்ள விதத்தில் பிரதமர்
மோடி முடித்துக்கொண்டார்” என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஹூஸ்டன்
நகருக்கு வந்து விட்டு, எரிசக்தி பற்றி பேசாமல் இருக்க வாய்ப்பே
இல்லை. முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல்
அதிகாரிகளுடன் அற்புதமான கலந்துரையாடல் வாய்த்தது.
எரிசக்தி துறையில் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான
வழிமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். டெல்லூரியன்
மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனங்களுக்கு இடையேயான
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது” என கூறி உள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை