உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by ayyasamy ram on Mon Sep 09, 2019 7:58 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Dkn_Tamil_News_2019_Sep_03__653454005718232
-
உலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும்,
ரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள்
இன்று.

மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்
1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக,
சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு
போனார்.

கரடி ஒன்றை வேட்டையாட துரத்தி, அதன் ரத்தம் சிந்திய
ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள்
கருணை சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான
அன்பு அவரை எழுத்தாளனாக மாற்றியது.
அவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.

அவரது படைப்புகளான போரும் அமைதியும்,
அன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை
காலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும்
நாவல் பரந்த கதைக்களம் கொண்டது.
580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பல வரலாற்று
நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்துள்ளது.

19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.
என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்
பார்த்ததில்லை. இவருடைய புத்தகங்கள் ஏற்படுத்திய
தாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க
ஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை
விட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து
திடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக
அறிவித்தார். அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி
விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு
வேறு செய்தார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty Re: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by ayyasamy ram on Mon Sep 09, 2019 7:58 pmபணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்
நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள்.
ரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள் அன்றைய மத
வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை
விரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள்.

ஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில்
இருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை
விட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு.

இதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா அரசு
ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச்
செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த
மக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய்,
அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு
குளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்
இல்லை என்று எல்ேலாரும் புலம்பினர்.

ஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை டுகொபார்ஸ்
மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்
நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில்
குடியேறினர்.

இதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை
‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து
கொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி
வருகின்றனர்.


இவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத
வாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர்
20ல் தனது 82வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை
அவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட
பிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல்
நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம்
உள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம்
செலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக
இருக்கும்.
-
----------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty Re: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by சக்தி18 on Mon Sep 09, 2019 8:24 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் 1571444738

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே. வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,
'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்!

(இணையம்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1195
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 394

Back to top Go down

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Empty Re: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை