புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_m10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10 
21 Posts - 66%
heezulia
தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_m10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_m10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10 
63 Posts - 64%
heezulia
தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_m10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_m10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_m10தாங்க முடியாத கொசுத்தொல்லை... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாங்க முடியாத கொசுத்தொல்லை...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 2:22 pm

தாங்க முடியாத கொசுத்தொல்லை... Ht445170292122
-
நன்றி குங்குமம் டாக்டர்
------------------------------

* ‘நான் ஈ’ படம் பார்த்திருக்கிறீர்களா? சர்வ வல்லமையும்
படைத்த, மிகப்பெரிய ஒரு தொழிலதிபரை ஒரு ஈ படாத
பாடுபடுத்தும்.

அதுபோலத்தான் இன்று நம் நிலைமையும். சகலவிதத்திலும்
நாம் மருத்துவ முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
சின்னஞ்சிறிய கொசுவை இன்னும் சமாளிக்க முடியவில்லை.

டெங்கு, மலேரியா என்று பல நோய்களைப் பரப்பும் ஆதாரமாக
கொசுக்கள் இருப்பதால் அவைகளை சமாளிப்பது மருத்துவ
உலகத்துக்கு சவாலானதாகவே இருக்கிறது.

இதற்காக கொசு தினம் என்றே ஒன்று அனுசரிக்கப்படுகிறது
என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

* சர்வதேச கொசுதினம் அனுசரிக்கப்படக்கூடிய இந்த மாதத்தில்,
உயிர்களைக் கொன்று உலகையே அச்சுறுத்தும் மிகச்சிறிய
உயிரினமான கொசுவைப் பற்றிய சில தகவல்களை இங்கு
நாம் தெரிந்துகொள்வோம்.

* கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களுக்கு முன்பே
தோன்றிவிட்டன. இவை டைனோசர் காலம் முதலே இருந்து
வருகின்றன. 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில்கூட இவை வாழ்கின்றன.

* உலகளவில் கொசுக்களில் 3,000-கும் மேற்பட்ட வகைகள்
உள்ளது. அதில் உலகளவில் மூன்று விதமான கொசுக்கள்
மட்டும்தான் மிகக் கொடிய நோய்களைப் பரப்புகின்றன.

மலேரியாவைப் பரப்பும் அனோபிலஸ் (Anopheles), டெங்கு
மற்றும் சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் (Aedes) மற்றும்
யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலெக்ஸ் (Culex)
போன்றவையே அந்த மூன்று கொசுக்கள். அனாஃபிலஸ்
என்கிற பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மலேரியா நோய்
பரவுவதை, 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று மருத்துவர்
சர்.ரெனால்டு ரோஸ் என்பவர் கண்டுபிடித்தார்.

இந்த நாளின் நினைவாகவும், கொசுக்கடியினால் ஏற்படுகிற
ஆபத்துக்கள் குறித்தும், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும்
இந்த தினம் சர்வதேச கொசு தினமாக அனுசரிக்கப்பட்டு
வருகிறது.

* கொசுவானது க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த
ஒரு பூச்சியினம். இவை உருவத்தில் சிறியவையாக இருந்தாலும்
நோய்களைப் பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை.

* ஒரு சிறிய கொசுக்கடி பெரிய ஆபத்துகள் உருவாக வழிவகுக்கிறது. கொசுக்கடியால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய
மூளையழற்சி, யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல்,
சிக்கா வைரஸ் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்
நோய்கள் ஏற்படுகிறது.

* உலகிலேயே மிகவும் கொடூரமான விலங்கினம் என்றால்
அது கொசுதான். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அதிகம்
பேர் உயிரிழக்க காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.

* மலேரியாவால் 2015-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் பாதி பேர்,
அதாவது 320 கோடி பேர் தாக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கினர். 21 கோடியே 40 லட்சம் பேர் இந்த நோயால் தாக்கப்பட்டனர்.

4 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்தனர் என்கிறது
புள்ளிவிபரம். உலகளவில் மலேரியாவின் பாதிப்பை 90 விழுக்காடு குறைப்பதற்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 870 கோடி டாலர் ஒவ்வோர்
ஆண்டும் தேவைப்படுவதாக தெரிவித்திருக்கிறது அந்த புள்ளிவிவரம்.

உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5-ஆவது இடத்தில் உள்ளது. மலேரியாவால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பதாகவும், இந்நோய் தாக்கப்பட்ட ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை வீதம் பலியாவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

* கருமைநிற துணிகள் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பதால் அவை கொசுவை அதன் பக்கம் ஈர்க்கும் தன்மையுடையதாக இருக்கிறது.

* சில கொசு வகைகள் மனிதனை கடிப்பதில்லை. உதாரணமாக க்யூலி செட்டா மெலனுரா (Culiseta melanura) என்ற கொசு வகை பறவைகளை மட்டுமே கடிக்கிறது. மனித உடலிலிருந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, வியர்வை போன்றவற்றை கொசுக்களால் அறிய இயலும். மேலும் அவை மனிதனின் வெப்பத்தை உணர்ந்து எவரை கடிக்கலாம் எனவும் தீர்மானிக்கிறது.

* ஆண் கொசுக்கள் தேன் அல்லது தாவரச் சாற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதத்தை பெறுவதற்காகவே மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் ரத்தத்தை உறிஞ்சி உணவாக எடுத்துக் கொள்கிறது.

* கொசுக்களால் அதன் எடையைவிட 3 மடங்கு ரத்தத்தை உறிய முடியும். ரத்தத்தை உறிஞ்சும்போது பெண் கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப்
பரப்புகின்றன. ஆனால், கொசுக்களால் எய்ட்ஸ் நோயைப் பரப்ப இயலாது.

* ஏடீஸ் (Aedes) வகை கொசுக்கள் நம்மை பகல் நேரத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. க்யூலெக்ஸ் (Culex) வகை கொசுக்கள் இரவு நேரத்தில் கடிக்கின்றன.

* உலக வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன இந்த கொசுக்கள். அவர் கி.மு. 323-ல் மலேரியா தாக்கி இறந்தார்.

* தேங்கிய நீர் நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், குப்பைத் தொட்டிகள், மூடப்படாத நீர் இருக்கும் பாத்திரங்கள் மூலமாக கொசுக்கள் பெருகுகிறது. மழைக் காலமானது கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

* கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் பைலேரியா என்கிற யானைக்கால் நோய் உருவாகிறது. இவ்வகை கொசுக்கள் இரவில்தான் கடிக்கும். சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இவ்வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகுகிறது. யானைக்கால் வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 2:22 pm

கொசுக்களுக்கு பற்கள் கிடையாது. அவை நீளமான நுண்துளை உறிஞ்சிகள் (Proboscis) மூலமாக நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. இந்த உறிஞ்சிகள் மூலம் நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் ரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. இதனால் அந்த இடம் லேசாக மரத்துப் போவதால் கொசு கடிப்பதை நம்மால் சட்டென உணர முடிவதில்லை.

* பெண் கொசுக்கள் தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும். அவை ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை இடுகிறது. இந்த வேகத்தில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடும்.

* ஆண் கொசுக்கள் 10 நாட்களுக்கும் குறைவாகவே உயிர்வாழும், பெண் கொசுக்கள் 6 முதல் 8 வாரம் வரை உயிர் வாழும். கொசுக்கள் வெகுதூரம் பயணிப்பதில்லை. அவை 3 மைல்களுக்குள்ளாக பறப்பதை நிறுத்திக்கொள்கின்றன.

* கொசுப்புழுக்களால் நீரில் மூச்சுவிட முடியாது. அவை மூச்சு விட நீரின் மேல் மட்டத்திற்கு வரும். எனவே, கொசுக்களை அழிக்க நீரின் மீது மண்ணெண்ணெய் தெளிப்பது ஒரு நல்ல உத்தியாக இருக்கும். இதேபோல் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கலாம். வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்றுப் பச்சிலை செடியை வளர்க்க கொசு வருவது குறையும். பூண்டு வாசனையும் கொசுவுக்கு ஆகாது. பெரும்பாலான கொசு விரட்டிகளில் Diethyltoluamide என்கிற வேதிப்பொருள் உள்ளது. இதைத் தொடர்ந்து சுவாசித்தால் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கொசு மருந்தாக உள்ள Picaridin, Lemon Eucalyptus Oil மற்றும் மின் பூச்சி விரட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

* மீன்கள், பூஞ்சைகள், தட்டான், பல்லிகள் போன்ற உயிரியக் கட்டுப்படுத்திகள் மற்றும் மலட்டு ஆண் கொசுக்களைப் பெருக்குதல் போன்ற வழிகளிலும் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

* நமது சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். டயர்கள், தகரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் குட்டைகளிலும் திறந்த வெளிகளிலும் மண்ணெண்ணெய் தெளிப்பதன் மூலம் கொசு பெருகுவதைத் தடுக்கலாம். அதோடு நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

* கொசு ஒழிப்புக்காக அரசு எடுக்கக்கூடிய முன்முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் கொசுவால் பரவும் கொடிய நோய்களைத் தடுக்கலாம்.
-
தொகுப்பு : க.கதிரவன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2019 3:42 pm

ஒரு 'கொசு'று செய்தி.
O+ மனிதர்களை அதிகம் கடிக்கும் என்றும்
A+ மனிதர்களை அதிகம் கடிக்காதாமே!
தெரிந்தவர் யாராவது இருப்பின் உறுதி செய்யுங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 01, 2019 5:06 pm

படித்தது…………..
பகலில் Dengue- Yellow Fever- Chikungunya ,பரப்பும்,இரவில் Dengue- Yellow Fever- Chikungunya பரப்புகிறதாம்.
A ஐ விடO வை இரண்டு மடங்கு அதிகமாக விரும்புகிறதாம்.மற்ற பிரிவுகள் இடைப்பட இருக்கிறதாம்.அதற்குக் காரணம் lactic acid,ammonia,CO2 போன்றவை அதிகமாக O வில் உள்ளதால் ஈர்க்கப்படுகிறதாம். உலகில் O- , A- பிரிவுள்ளவர்கள் மிகக் குறைந்தவர்களே இருப்பதால் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை. (NIH-USA/NBC)



பெண் கொசுவை காதல் (serenade) செய்ய வைத்தால் கடிக்க வருவது குறையும்.



O + A + இவை பற்றி Bugs லைவ் படத்தில் காட்டி இருக்கிறார்கள்.நல்ல படம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக