உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விண்டோஸ் டிப்ஸ் சில…………..
by T.N.Balasubramanian Today at 8:07 pm

» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...!!
by சக்தி18 Today at 8:04 pm

» அன்புடன் சீனாவிலிருந்து
by T.N.Balasubramanian Today at 8:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Today at 7:58 pm

» நல்லதோர் செய்தி.
by சக்தி18 Today at 7:54 pm

» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
by ayyasamy ram Today at 7:41 pm

» அத்திவரதர் !
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by T.N.Balasubramanian Today at 6:09 pm

» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி
by ayyasamy ram Today at 5:40 pm

» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !
by ayyasamy ram Today at 5:37 pm

» பெரியவாளுடைய கருணை !
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Today at 5:08 pm

» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by muthu86 Today at 4:47 pm

» -படித்ததில் பிடித்தது !
by ayyasamy ram Today at 4:36 pm

» கோபம் மனதில் இருக்ககூடாது...!!
by ayyasamy ram Today at 4:34 pm

» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....!!
by ayyasamy ram Today at 4:28 pm

» அன்றும் இன்றும் !
by ayyasamy ram Today at 4:12 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 3:51 pm

» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்
by ஜாஹீதாபானு Today at 3:32 pm

» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...
by ayyasamy ram Today at 3:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by krishnaamma Today at 2:24 pm

» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க !
by krishnaamma Today at 2:12 pm

» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
by krishnaamma Today at 2:12 pm

» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்
by krishnaamma Today at 2:09 pm

» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ !
by krishnaamma Today at 2:03 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by B.VENKATESAN Today at 12:07 pm

» கர்மா என்பது என்ன?
by krishnaamma Today at 12:00 pm

» 12 ராசிக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனை முறை !
by krishnaamma Today at 11:58 am

» ஆன்மீக சிந்தனைகள் !
by krishnaamma Today at 11:55 am

» அபிஷேக நீரின் மகிமைகள்!
by krishnaamma Today at 11:50 am

» திருப்பதிஏழுமலைகள்!
by krishnaamma Today at 11:39 am

» புத்திர்-பலம் யசோ தைர்யம்......
by krishnaamma Today at 11:36 am

» வெள்ளியன்று வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்!
by krishnaamma Today at 11:32 am

» பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் - ஏ.ஆர் ரஹ்மான்
by ayyasamy ram Today at 11:22 am

» திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?
by krishnaamma Today at 11:16 am

» குரு பக்தி - திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் !
by krishnaamma Today at 11:04 am

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by ayyasamy ram Today at 10:59 am

» அனபே சிவம் - கவிதை
by ayyasamy ram Today at 10:56 am

» 28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை வளருங்கள் !
by krishnaamma Today at 10:52 am

» ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» பெண் கருட ( கருடி) வாஹனம்!
by krishnaamma Today at 10:50 am

» வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் !
by krishnaamma Today at 10:49 am

» லலிதா ஸஹஸ்ரநாம மகிமை !
by krishnaamma Today at 10:48 am

» காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 10:30 am

» பக்தருடன்திருப்பதிபெருமாள்விளையாடும்தாயக்கட்டம்....
by krishnaamma Today at 10:27 am

Admins Online

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி Empty ‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

Post by ayyasamy ram on Thu Jul 11, 2019 5:55 am

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி 201907110219359759_Moments45-minute-bad-game--Kholi_SECVPF
-
மான்செஸ்டர்,

12–வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்றில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்துடன் பரிதாபமாக தோற்று மூட்டையை கட்டியது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:–

இந்த உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இந்த ஆட்டத்தில் 45 நிமிடங்கள் மோசமாக ஆடி, அதன் மூலம் போட்டியில் இருந்தே வெளியேற்றப்பட்டோம் என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

இதை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. எல்லா பெருமையும் நியூசிலாந்து பவுலர்களையே சாரும். ஸ்விங் செய்வதிலும், பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசுவதிலும் அசத்தினர். முதல் அரைமணி நேரம் அவர்கள் பந்து வீசிய விதம் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. ரவீந்திர ஜடேடேஜாவின் பேட்டிங் அருமையாக இருந்தது. அவருக்கு டோனி சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.

முந்தைய நாள் எங்களுக்கு பந்து வீச்சில் சிறப்பான ஒன்றாக அமைந்ததை அறிவோம். அவர்களை எட்டக்கூடிய இலக்கில் கட்டுப்படுத்தியதாகவே நினைத்தோம். ஆனால் முக்கியமான தருணத்தில் எங்களை விட கச்சிதமாக, சாதுர்யமாகவும் செயல்பட்டனர்.

இந்த வெற்றிக்கு நியூசிலாந்து தகுதியான அணி. பேட்டிங்கில் எங்களது ஷாட் தேர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். மற்றபடி இந்த தொடரில் நாங்கள் நன்றாகவே ஆடினோம். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் 240 முதல் 250 ரன்கள் வரை சவாலான ஸ்கோராக இருக்கும், அதை வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தோம்.

அதன்படியே செய்து காட்டியிருக்கிறோம். டோனியின் ரன்–அவுட் திருப்பு முனையாக அமைந்தது. எங்களது வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வெற்றிக்கு உதவினர். 2 நாள் நடந்த அரை இறுதியில் முடிவு திருப்திகரமாக அமைந்திருக்கிறது’ என்றார்.

டோனி ஓய்வு குறித்து கோலி பதில்

இந்த உலக கோப்பை போட்டியுடன் இந்திய மூத்த வீரர் 38 வயதான டோனி ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, தனது வருங்கால திட்டம் (ஓய்வு) குறித்து இப்போது வரைக்கும் டோனி என்னிடம் எதுவும் பேசவில்லை என்று பதில் அளித்தார்.

மேலும் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் டோனி ஒரு பக்கம் நிலைத்து நின்று, இன்னொரு பக்கம் ஜடேஜாவை இயல்பாக ஆட அனுமதித்தார். டோனி சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடினார்’ என்றும் குறிப்பிட்டார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46362
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி Empty Re: ‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

Post by T.N.Balasubramanian on Thu Jul 11, 2019 10:45 am

முன்னிலை பேட்ஸ்மான் மூவரும் அம்போ என விட்ட பிறகு
கடை நிலை பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினார்கள்.
தோல்விக்கு காரணம் முன்னிலை பேட்ஸ்மேனும் பிட்ச்சும்
தான்.
எப்பிடி இருப்பினும் ஜீரணிக்கமுடியாத அசிங்கமான தோல்வி.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24692
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8918

View user profile

Back to top Go down

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி Empty Re: ‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

Post by ayyasamy ram on Thu Jul 11, 2019 12:09 pm

இந்திய அணி தோல்வி அடைந்ததில் ஒரே நாளில் இத்தனை கோடி நஷ்டமா?
-
‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி 201907111141527810_cricket-world-cup-india-s-big-loss-bleeds-punters_SECVPF

புது டெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதி வரை போராடியும் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள சட்டா பஜார் என்ற சட்ட விரோத சூதாட்ட சந்தையில், நேற்றைய போட்டியின்போது இந்தியாவுக்கு ஆதரவாக பந்தயம் கட்டியதில் பல கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

இது குறித்து பந்தயத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது:

ஆட்டத்தின் சூழ்நிலைகளை பார்த்து யார் வெற்றிப் பெறுவர், தோற்பர் என கூறி, குறிப்பிட்ட பணத்தை அந்த அணியின் பெயரில் பந்தயத்தில் வைப்பர். நியூசிலாந்துடனான 2 நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது.

இந்திய அணி

நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் ஆடிய ஆட்டத்தில் இருந்தே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி பந்தயம் சென்றது. நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோலி, கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் வெளியேறினர்.

இதனால் சிலர் நியூசிலாந்துதான் வெற்றிப் பெறும் என பந்தயம் கட்டினர். பின்னர் டோனி-ஜடேஜா களமிறங்கியவுடன் வெற்றி இந்திய அணிப்பக்கமே என பலரும் பந்தயம் கட்டினர். எதிர்ப்பாராத விதமாக டோனி அவுட் ஆனார்.

எஞ்சிய நம்பிக்கையும் மொத்தமாக சிதைந்தது. இந்திய அணியை நம்பி பணத்தை கட்டிய பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்த தோல்வியால் பந்தயம் கட்டியவர்களுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் நஷ்டமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46362
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி Empty Re: ‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

Post by ayyasamy ram on Thu Jul 11, 2019 12:24 pm

ரசிகர்களை கலங்க வைத்த இந்திய வீரர்கள் - பெண்கள், சிறுவர்கள் கண்ணீர்
-
‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி 201907111205422624_Tears-for-girls-and-boys-India-loss-the-world-cup-semi_SECVPF
-
‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி 201907111205422624_2_ztms4yaa._L_styvpf
-
‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி 201907111205422624_3_mjkjs1ev._L_styvpf
-
எந்த விளையாட்டுக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம் கிரிக்கெட்டுக்கு மட்டுமே உண்டு.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து அணியிடம் மட்டுமே தோல்வியை தழுவி இருந்த இந்திய அணி சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை நேற்று முன்தினம் இந்திய அணி எதிர் கொண்டது. எப்போதும் போல இந்திய பவுலர்கள் நியூசிலாந்தை பந்தாடினர்.

மழை குறுக்கிட்டதால் விட்ட இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 239 ரன்களை மட்டுமே எடுத்து நியூசிலாந்து ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வென்று விடும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதே நேரத்தில் 2 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழை இந்திய அணிக்கு சோதனையாகவே அமைந்திருந்தது. 2-வதாக பேட்டிங் செய்யும் அணி, சேசிங் செய்வது கஷ்டம் என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதுபோலவே நடந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அப்போதே ரசிகர்களின் நம்பிக்கை தகர்ந்து போனது. இதன் பின்னர் வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் சோபிக்கவில்லை.

இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ரிசப் பந்த் இருவரின் விளையாட்டுத்தனமான ஆட்டமும் வினையாகிப்போனது.

இதன் பின்னர் களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். டோனியின் நிதானமான அனுபவ ஆட்டமும், ஜடேஜாவின் அதிரடி தாக்குதலும் இந்திய அணியை நிச்சயம் வெற்றி பெறச்செய்யும் என்றே ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் ஜடேஜா கேட்ச் ஆகி வெளியேறி ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக நொறுக்கினார்.

இதன் பின்னர் டோனி அடித்த சிக்சரால் ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால் கூடுதலாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு டோனியும் ரன் அவுட் ஆக... ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் உலக கோப்பை கனவு ஒரே நொடியில் கலைந்து போனது.

சோகத்தில் இந்திய ரசிகர்கள்


இதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனை மைதானத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும், தொலைக் காட்சிகளின் முன்பு வெற்றிக்காக தவம் கிடந்த ரசிகர்களும் கண்ணீர் விட்டனர்.

கண்ணீர் விட்ட ரசிகை


குறிப்பாக இளம் பெண்களும் சிறுவர்கள் பலரும் தோல்வியை தாங்க முடியாமல் ஏங்கி ஏங்கி அழுததையும் காண முடிந்தது. லீக் ஆட்ட வெற்றிகள் மூலம் இந்திய அணியை கொண்டாடிய ரசிகர்கள் அரை இறுதி தோல்வியால் கலங்கிப் போனார்கள்.

தோல்வி குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

சென்னை வால்டாக்ஸ் ரோட்டை சேர்ந்த ஜனா:-

இந்தியா தோல்வியை தழுவியது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் 3 பேரும் சேர்ந்து 50, 50 ரன்கள் எடுத்து இருக்கலாம். அதை விட்டுவிட்டார்கள். டோனியின் அனுபவமும், ஜடேஜாவின் அதிரடியும் படுதோல்வியில் இருந்து நம்மைக் காப்பாற்றியது.

ஜெயிக்க வேண்டிய நாம் மெத்தனம் காரணமாக தோற்றுவிட்டோம். நியூசிலாந்தை சாதாரணமாக எடைபோட்டிருக்க கூடாது. என்னை போன்ற ரசிகர்களுக்கு இதுபெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

சோகத்தில் சிறுவன்


என் வாழ்நாளில் கதறி கதறி அழுதது நேற்று தான். டோனியின் தீவிர ரசிகராக நான் இருந்ததில்லை. ஆனால் நேற்று அவருடைய ஆட்டமும், சூழ்நிலையும் அவர் மீது எனக்கு மிகுந்த அனுதாபத்தை உண்டாக்கியது. முதல் 3 விக்கெட் போனது முதல் தோல்வியாகும்.

தினேஷ் கார்த்திக் இறங்குவதற்கு முன்பாக டோனி இறங்கி இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருப்பார். டோனியும் ஜடேஜாவும் தான் ரன் ரேட் வித்தியாசத்தை குறைத்தனர். ஹர்திக் பாண்ட்யா அவரது ஆட்டத்தை கோட்டை விட்டார்.

2011-ல் டோனியின் முடிவால் கோப்பையை வென்றோம்.
கோலிக்கு டோனி மேல் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும்
உண்டு. அவரே நினைத்தாலும் டோனியை தகுந்த நேரத்தில்
களமிறக்காதது ரவி சாஸ்திரியின் முடிவாகத்தான் இருக்கும்.

எப்படியோ இந்தியாவின் தோல்வி நமது ரசிகர்களுக்கு மிகுந்த
ஏமாற்றம்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46362
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி Empty Re: ‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை