உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 1:25 pm

» அம்மாவுக்கு கல்யாணம் - குறும்படம்
by ayyasamy ram Today at 1:22 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 12:38 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Today at 11:23 am

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by ayyasamy ram Today at 9:54 am

» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
by ayyasamy ram Today at 9:45 am

» படித்ததில் வலித்தது!!
by ayyasamy ram Today at 9:29 am

» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்!
by ayyasamy ram Today at 8:49 am

» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
by ayyasamy ram Today at 8:29 am

» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
by ayyasamy ram Today at 8:23 am

» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Today at 8:20 am

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Today at 8:18 am

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Today at 8:14 am

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Today at 8:00 am

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Today at 7:57 am

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Today at 7:54 am

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Today at 7:33 am

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Today at 7:29 am

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Today at 7:16 am

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by M.Jagadeesan Today at 6:10 am

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 7:23 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 6:33 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:05 am

Admins Online

வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்

வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள் Empty வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்

Post by ayyasamy ram on Thu Apr 18, 2019 4:32 pm

வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள் 201903301424148492_Worship-tips_SECVPF
-
ஒவ்வொரு மனிதனுடைய நாவில் இருந்து வரும் சொற்கள், மற்றவர்களை தாக்கும் விதத்தில் அமையக்கூடாது. அவர்களை பரவசப்படுத்தக் கூடிய விதத்தில் அமைய வேண்டும். ஒரு சிலர் தங்கள் பணியாளர்களிடம் ‘இந்தக் காரியத்தைச் சென்று முடித்து வா’ என்று சொல்வார்கள். முடித்து விட்டு வந்தவுடன் “வேலை முடிந்ததா?” என்று கேட்டால், கார் ஏறியது முதல் காரியம் முடிந்தது வரையான அனைத்து வேலைகளையும் அடுக்கிக்கொண்டே செல்வார்.

உடனே முதலாளி கோபப்பட்டு “வேலை முடிந்ததா, இல்லையா?” என்பார். அதற்காகத் தான் ரத்தின சுருக்கமாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை எதிர்மறை சொற்களை பேசாமல் இருப்பது நல்லது. நேர்மறைச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க நேர்த்தியான வாழ்வு அமையும். நாம் சொல்லும் சொற்கள், வெல்லும் சொற்களாக அமைய வேண்டும். அதற்குத்தான் அவ்வையார், ‘நயம்பட உரை’ என்று சொல்லி வைத்தார்.

ஒரு மனிதன் வாழ்வில் நாணயத்தோடு வாழ்ந்தால் தான் மதிப்பு அதிகம். நாணயம் என்பது நீதி, நேர்மை, ஒழுக்கத்தோடு, சொன்ன சொல் மாறாமல் நடந்துகொள்வது. அந்த நாணயத்தோடு, நாம் சொல்லக் கூடிய சொல் சுருக்கமாகவும், மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும். அதைத் தான் ‘நா நயம்’ என்கிறோம். நாவால் உரைக்கும் சொற்கள் நயம்பட இருக்க வேண்டும். பேசுவது என்பது எல்லோருக்கும் அமையாது. சிலர் சிடுசிடுவென்று பேசுவர்.

சிலர் வம்பு வரும்படி பேசுவர். சிலர் அழகாகப் பேசுவதாக அடுத்தவரைப் புண்படுத்துவர். சிலர் அன்பாகப் பேசி அனைவரையும் தம் வசம் இழுப்பர். பழகும் நண்பர்கள் அனைவரும் நண்பர்களாகவே இருக்க, பேச்சில் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதைத்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்று சொல்கிறார். ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் ‘பேச்சுக்கலை’ என்பது ஒரு பெரும் கலை. இந்தப் பேச்சுக்கலை மட்டும் ஒரு மனிதனிடம் இருந்தால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எவ்வளவு பொல்லாத மனிதராக இருந்தாலும் கூட சமாளித்து விட இயலும். அதற்கு சரஸ்வதி தேவியின் அருட் கடாட்சம் தேவை. பேச்சுக்கலை உள்ளவர்களிடம் பெரிய மனிதர்கள் கூட ஐக்கியமாகி விடுவார்கள். பெண்பால் புலவராக வாழ்ந்த அவ்வையார், வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் அந்தக் காலத்திலும், ரத்தினச் சுருக்கமாக கருத்துக்களை எடுத்துரைத்தார். அவை நூற்றுக்கணக்காக இருந்தாலும், ‘ஒரு பானை சோற்றிற்கு ஒருசோறு பதம்’ என்பதைப் போல, ஒரு சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

அவ்வையின் ஆத்திச்சூடியில் ‘அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், நன்றி மறவேல்’ போன்றவற்றை கடைப்பிடித்தாலே அற்புதமான வாழ்க்கை அமையும். அறம்செய்ய விரும்பவேண்டும், கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், நன்றி மறக்கக்கூடாது என்று இரண்டேசொற்களால் இனிதாகப் புரியும் படி சொல்லி இருக்கிறார், அவ்வையார். இன்று வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமுதாயத்தில் கண்ணியமான மனிதனாக இருந்தாலும், கடமை தவறாமல் இருந்தாலும், பணப்புழக்கம் அதிகம் உள்ளவராக இருந்தாலும் நாணயமானவராக, நம்பிக்கைக்குரிய விதத்திலே வாழவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அனைவரும் உங்களைப் போற்றிக் கொண்டாடுவர்.

கம்ப ராமாயணத்தில் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று கம்பர் வர்ணிப்பார். “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை என் கண்களால்” என்ற ஒரே வரியின் மூலம், சீதையைக் கண்டதையும், அவள் கற்புத் தவறாமல் இருப்பதையும் அழகாகச் சொல்கிறார். ‘கண்டேன்’ என்பது ஒரு சொல். அதைக் கேட்டதும் ராமனுக்கு ஆனந்தம்.

அடுத்து ‘சீதை எப்படி இருக்கின்றாளோ?’ என்ற சந்தேகம் ராமனுக்கு வராமல் இருக்க, ‘அந்தக் கற்பினுக்கு அணியை’ என்பார் அனுமன். அடுத்து முத்தாய்ப்பாக ‘என் கண்களால்’ என்று சொல்வதன் மூலம், யார் சொல்லியும் அறிந்து வரவில்லை. நானே நேரில் கண்டுவந்தேன் என்பதை எடுத் துரைக்கிறார். அனுமன் கூறியதைக் கேட்டு ராமனே மெய்மறந்து நின்றதாக கம்பர் சொல்கிறார்.

நம் இல்லங்களில் கூட நல்ல வாக்கியங்களை ஆங்காங்கே எழுதி பதித்து வைக்கலாம். அதைப் படிக்கப் படிக்க நமக்கு வளர்ச்சி கூடும். அதனால் தான் சிலர் ‘வாழ்க வளமுடன்’, ‘வளர்க நலமுடன்’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘கந்தா வருவாய் கருணை புரிவாய்’ போன்ற வார்த்தைகளை எழுதிப் பதித்து வைத்திருப்பர். சிலர் தொலைபேசியை எடுத்தவுடன் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்வர்.

இதுபோன்று நல்ல சொற்களை உச்சரிப்போம். நலமான வாழ்வை ஏற்போம். உச்சரிப்புகள் தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47490
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை