உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:42 pm

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி J2zeZbvKSde456SPKDoQ+Screenshot_20190330-204016

கடந்த ஆண்டு நவம்பர் முதல் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து பெரிய பூகம்பம் ஒன்று ஏற்படும் என்று அப்பகுதியில் பரவலாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.நவம்பர் 2018-ல் ம் நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கியதையடுத்து பல்கரின் நரேஷ்வாதி கல்வி மையத்தின் குழந்தைகள் பீதியில் ஆழ்ந்தன. 5-7 வயதுடைய குழந்தைகள் கண்களில் கண்ணீருடன் பீதியடைந்தனர். 5 மாதங்கள் சென்ற பிறகு மீண்டும் நிலநடுக்கங்கள் தொடங்கின, ஆனால் இப்போது இக்குழந்தைகள் அதற்குப் பழகத் தொடங்கி விட்டன.


நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:43 pm

ஒவ்வொரு முறை பூமி குலுங்கும் போதும் குழந்தைகளை வகுப்பறையிலிருந்து பொதுவெளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதைத்தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த மார்ச் 1 ம் தேதி பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்ட போது தீபாவளி அணுகுண்டு வெடிப்பது போன்ற ஓசைக் கேட்டது. அப்போது பெரிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு விரைவில் வெளியேறினார், ஆனல் சிறு குழந்தை மாணவர்கள் வகுப்பறையிலேயே இருந்தனர். அதாவது இதற்கு அவர்கள் பழகி விட்டதையே இது காட்டுகிறது என்கிறது பள்ளி நிர்வாகம்.

நலிவுற்ற குழந்தைகள் தங்கிப் படிக்கும் நரேத்வாதி கற்றல் மையப்பள்ளியின் படேல் மற்றும் பல்கார் மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னொரு முறை குலுங்கினால் தாங்கள் வசிக்கும் கட்டிடம் தாங்குமா என்று தெரியவில்லை என்று கூறுகின்றனர். பள்ளியின் டைனிங் அறையில் சுவற்றில் ஏற்கெனவே விரிசல்கள் விழத்தொடங்கியுள்ளன. ஹாலின் சரிவுக்கூரைகளைத் தாங்கும் உலோக ராடுகள் ஒவ்வொரு நிலநடுக்கத்தின் போதும் வளைகின்றன. அடுத்த நிலநடுக்கத்தில் கூரை சரியும் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளி டெண்ட்களில் குழந்தைகள் தங்க வைக்கப்படுகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:44 pm

மும்பையிலிருந்து வடக்கே 150 கிமீ தொலைவில் இருக்கும் பல்கார் மாவட்டத்தில் உள்ளூர் அளவின் படி 1 முதல் 4 என்று பதிவான நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பல்கார் மாவட்டத்தின் 18 கிராமங்கள் அதன் 63,000 ஜனங்கள் ஆகியோர் இதன் தாக்கங்களில் பீதியில் உறைந்து போயுள்ளனர், ஏனெனில் பூகம்ப மையத்தின் கோட்டில் இவர்கள் கிராமங்கள் உள்ளன.இதனையடுத்து டெல்லி நிலநடுக்க மையம் மற்றும் ஹைதராபாத்தின் தேசிய புவிபவுதிக ஆய்வு மையமும் சிறு நிலநடுக்க அளவெடுப்பு சாதனங்களை பொருத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் வீட்டில் படுத்து உறங்க பயப்படுபவர்களுக்காக தனி முகாம்களை அமைத்துள்ளன. 1300 டெண்ட்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் ஐஐடி மும்பை பொறியாளர்கள் அப்பகுதியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பல்கார் வந்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:44 pm

கட்டுமான முறைகள், விதிமுறைகள் ஒழுங்காக அமல்படுத்தப்பட்டிருந்தால் இப்போது இந்தப் பதற்றத்துக்கு வேலையே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த நிலநடுக்கங்களுக்கு நீண்ட காலம் முன்னரே பூகம்ப வாய்ப்புப் பகுதி எண் 3 என்று பல்காருக்கு வழங்கபட்டுள்ளது. அதாவது எண் 3 என்றால் 6 முதல் 6.5 என்ற ரிக்டர் அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு என்று பொருள். 1993 லட்டூர் பூகம்பம் ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது. எனவே இங்கு பூகம்ப பாதிப்பு தடுப்பு கட்டிட வடிவமைப்புகள்தான் அவசியம். விதிமுறையும் உள்ளது.சிலபல நிலநடுக்கங்களினால் சுவர்களில் விரிசல் சில சந்தர்ப்பங்களில் சுவர் கீழேயும் விழுந்துள்ளது. பல்காரின் மோசமாகப் பாதிக்கப்பட்ட தஹனு, தலசரி சப் டிவிஷன்களில் சுமார் 1,750 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:45 pm

பாம்பே ஐஐடியின் 2011-ம் ஆண்டு ஆய்வின் படி பல்கார் மாவட்டத்தின் 10 லட்சம் பேர் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் பலவீனமான வீடுகளில் வசித்து வருகின்றனர். இவை சரிசெய்யப்படவில்லை எனில் பெரிய பூகம்பம் ஏற்படும் போது உயிர்ச்சேதம் பெரிய அளவில் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.பல்காரின் இந்த நிலநடுக்கங்களுக்கு பூமிக்கடியில் புவியியல் பாறைப்பிளவினால் டெக்டானிக் நடவடைக்கைகள் துரிதமாகியுள்ளன என்று நிலநடுக்க ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். கண்டத்தட்டு நகரும், பாறைப்பிளவு நடவடிக்கை என்றால் சிறு சிறு நிலநடுக்கங்கள்தானே என்று அலட்சியம் காட்ட முடியாது. கிராமப்புறங்கள் பாதிக்கப்படும் என்று இருந்தால், நகர்ப்புறங்களுக்கும் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதே பொருள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:46 pm

சில வேளைகளில் பூமிக்கு அடியில் உருளும் சப்தம் கேட்கிறது, சில வேளைகளில் பெரிய வெடிபோட்டது போல் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என் இதயம் என் உடலிலிருந்து வெளியே வருகிறது, குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்க்கவும் என்கிறார் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த படேல்.இங்கு பெரும்பாலும் மழையினால் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது, அதாவது, கனமழை பெயதால் பூமிக்கடியில் அதன் மேற்புறத்திற்கு மழை நீர் செல்கிறது. பாறையை கீழே அழுத்துவதால் பாறைகளில் கண்ணுக்குப் புலப்படா சிறுதுளைகள் அடைக்கப்பட்டு அழுத்தம் அதிகரிக்கிறது. அதாவது நிலத்தடி நீரின் ஒவ்வொரு 10 மீ அதிகரிப்புக்கும் ஈடாக பாறைத்துளை அழுத்தம் 1 பார் அதிகரிக்கிறது. (பார் என்ற அளவு ஒரு லட்சம் பாஸ்கல்களுக்குச் சமம்)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 30, 2019 8:46 pm

மழைநீரால் ஏற்படும் நிலநடுக்கங்களுக்கு ஹைட்ரோ-சீஸ்மிசிட்டி என்று பெயர். ஹைதராபாத்தில் போர்பந்தா புறநகர் பகுதியில் நீர்த்தாக்க நிலநடுக்கங்கள் 2017-ல் ஒரு மாதம் வரை இருந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழக ஆய்வாளர் குசலா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வகை நிலநடுக்கங்கள் பெரும்பாலும் சப்தமிக்கதாக இருக்கும்.  இவை பெரும்பாலும் பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் ஏற்படும், டெக்டானிக் சீஸ்மிசிட்டி என்பது பூமிக்கு அடியில் சுமார் 60கிமீ ஆழத்தில் ஏற்படுவது.இந்நிலையில் பல்காரில்  மக்கள் அன்றாடம் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். குஜராத் மாநிலம் பூஜை உலுக்கிய பூகம்பம் மகாராஷ்டிரா லட்டூரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களுக்கு முன் கூட்டியே கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பே பெரிய பூகம்பம் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டது, ஆனால் ஒருவரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை


அதேபோல்தான் இப்போது பல்கார் பகுதி, எப்போதும் அச்சுறுத்தும் அதாவது இந்தியாவின் நில அமைப்பையே புரட்டிப் போடும் இமாலய பூகம்பம் ஆகியவை பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி Empty Re: கால்களின் கீழ் உருளும் பூமியின் சப்தம்: பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி மகாராஷ்ட்ரா பல்கார் மாவட்டம்- மக்கள் கடும் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை