புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
22 Posts - 65%
ayyasamy ram
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
10 Posts - 29%
Ammu Swarnalatha
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
M. Priya
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
65 Posts - 71%
ayyasamy ram
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 5:57 pm

First topic message reminder :

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில், கணவனின் மர்ம உறுப்பை துண்டித்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர்,சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, தம்பதி ஷேர் சிங், ௨௬ - சந்தோஷி, ௨௪. இவர்கள், ௧௦ நாட்களுக்கு முன், வேலை தேடி, ஐதராபாதுக்கு வந்தனர்.இந்த தம்பதிக்கு, ௪ வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐதராபாதில் உள்ள, 'மார்பிள்' தொழிற்சாலையில், ஷேர் சிங் வேலைக்கு சேர்ந்தார். சந்தோஷி, வீட்டிலேயே தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்தாள்.இந்நிலையில், ஷேர் சிங், நேற்று முன்தினம், போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதில், கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சந்தோஷி, கணவனின் மர்ம உறுப்பை, கூர்மையான ஆயுதத்தால் துண்டித்தாள்.ஷேர் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த, அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவமனையில், சேர்த்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், சந்தோஷி மீது வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷேர் சிங், நலமுடன் இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சந்தோஷி கைது செய்யப்படாத நிலையில், மருத்துவமனையில், கணவனுக்கு உதவியாக இருந்து வருகிறாள்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 26, 2019 9:46 pm

பெரம்பலுார்: தம்பியை கொலை செய்த அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவன் ராமதாஸ், 37; இவனது சகோதரர் கோவிந்தராஜ், 36. இருவருக்கும் சொந்தமான நிலம், நக்கசேலத்தில் உள்ளது.இந்த நிலத்தில், 'போர்வெல்' அமைத்தனர். ஆனால், இதற்கான செலவு தொகை முழுவதையும், ராமதாஸ் செய்ததாக தெரிகிறது. இது குறித்து, நேற்று முன்தினம் இரவு, சகோதரர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமதாஸ், பீர் பாட்டிலை உடைத்து, கோவிந்தராஜை குத்தினான். படுகாயம் அடைந்த அவரை, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று கோவிந்தராஜ் உயிரிழந்தார். பாடாலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராமதாஸை நேற்று கைது செய்தனர்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 26, 2019 9:50 pm

பாட்னா : பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தில் போலி ஆவணங்களுடன் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.பிடிபட்ட பயங்கரவாதிகள் இருவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பி ன்னர் அவர்களிடமிருந்து 2 போலி வாக்காளர் அடையாள அட்டை , போலி பான் கார்டு , மெமரி கார்டு , 3 மொபைல் , கோல்கட்டா ,கயா, பாட்னா , டில்லி ஆகிய நகரங்களுக்கு செல்ல போலி ரயில் டிக்கெட் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் சட்டப்பூர்வ ஆவணம் இன்றி நாட்டில் நுழைந்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.ஏ.டி.எஸ். நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 26, 2019 9:54 pm

சென்னை: ''தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 1,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக,1,011 வழக்குகள்; அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதியாக, 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுவர் விளம்பரம் தொடர்பாக, அதிகபட்சமாக, திண்டுக்கல்லில், 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், மிரட்டல் போன்ற புகார்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில், உண்மை நிருபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோருக்கு, ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 26, 2019 9:57 pm

சென்னை: பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித பாடத்துக்கான தேர்வு நடந்தது. வழக்கமாக, கணிதம் என்றாலே மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண் பெறுவர். இந்த ஆண்டு மாணவர்களும், அப்படி எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கணித வினாத்தாள் கடினமாக இருந்தது.பெரும்பாலான கேள்விகள் விடை அளிக்க முடியாத வகையில், மாணவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தன. புத்தகத்தின் உள்பகுதி பாடங்களில் இருந்து வந்த கேள்விகள், சுற்றி வளைத்து கேட்கப்பட்டன. அதனால், தெரிந்த விடையானாலும், அதை எப்படி எழுதுவது என, தெரியாமல், மாணவர்கள் தவித்தனர். இது குறித்து, கணித ஆசிரியர்களும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, கணித ஆசிரியர்கள் கூறியதாவது:குறைந்தது, 25 சதவீதம் கடினமான கேள்விகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு தேர்வில், 75 சதவீதம் கடினமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன. கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெறுவதே சந்தேகமாக உள்ளது. சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்கள், தங்களின் தேர்ச்சிக்காக தேர்ந்தெடுத்து படிக்கும், எந்த வினாவும், நேற்றைய தேர்வில் இடம் பெறவில்லை. அதனால், சராசரி மாணவர்களின் தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளதால், மாணவர்களுக்கு சமப்படுத்தும் மதிப்பெண் வழங்க வேண்டும். வினாத்தாள் தயாரிப்பவர்கள், மாணவர்களின் கல்வித் தரம், பயிற்றுவித்தல் முறையையும் மனதில் வைத்து, வினாத்தாளை தயாரிக்க வேண்டும்.இவ்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 29, 2019 8:06 pm

மோடியை கொல்ல சதி ராஜஸ்தான் நபர் கைது
ஜெய்ப்பூர், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவனை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், பிரதமர் மோடியை கொலை செய்வதற்காக, சதித்திட்டம் பதிவிடப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நடந்த விசாரணையில், ஜெய்ப்பூர் மாவட்டம், திரிவேணி நகரில் ஒருவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், ஹரியானா மாநிலம், ரேவரியை சேர்ந்த,நவீன் குமார் யாதவ் என்பது தெரிய வந்தது.பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்பட்டதால், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'பிரதமர் மோடியை கொலை செய்வதற்கான திட்டம், என்னிடம் உள்ளது; யாரேனும் ஒப்பந்தம் செய்தால், முடித்து தருகிறேன்' என, பதிவிட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், பதிவை நீக்கிவிட்டதாகவும் கூறினான். இதையடுத்து, அவனுக்கு எதிராக, தேசதுரோக வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 29, 2019 8:11 pm

'83 சதவீத எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்கள்'
புதுடில்லி, கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, 543 எம்.பி.,க்கள் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரங்கள் வாயிலாக, 521 பேர் அளித்த சொத்து விபரங்கள் அடிப்படையில், தன்னார்வ அமைப்பான, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய லோக்சபா, எம்.பி.,க்கள், 521 பேரில், 83 சதவீதம் பேர், அதாவது, 430 பேர், கோடீஸ்வரர்கள். இதில், 227 பேர், பா.ஜ.,வையும், 37 பேர் காங்கிரசையும், 29 பேர், அ.தி.மு.க.,வையும் சேர்ந்தவர்கள்.இதில், 32 எம்.பி.,க்கள், 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்து கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 29, 2019 8:13 pm

கர்நாடக அமைச்சர் வீட்டில் விடிய விடிய சோதனை
பெங்களூரு கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான புட்டராஜு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.கர்நாடகாவில் முதல்வர்குமாரசாமி தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது.லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.இந்த தொகுதியில் தேர்தல் பணிகளை பார்க்கும் பொறுப்பை நீர்ப்பாசனத் துறை அமைச்சர் புட்டராஜுவிடம் முதல்வர் குமாரசாமி ஒப்படைத்திருந்தார்.இந்நிலையில் மாண்டியாவில் உள்ள புட்டராஜுவின் வீடு மற்றும் பெங்களூரு மைசூரு ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாகச் சோதனை நடத்தினர்.சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்தது.இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பெங்களூரு மாண்டியா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 29, 2019 8:15 pm

ஓட்டுக்கு பணம் பட்டுவாடா : இதுவரை, 50.70 கோடி ரூபாய் பறிமுதல்
சென்னை, ''தமிழகத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதுவரை, 50.70 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும், இரண்டு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும், வருமான வரி துணை கமிஷனர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில், சந்தேகத்திற்குரிய முறையில், பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என, கண்காணிக்கப்படுகிறது.தமிழகத்திற்கென, சிறப்பு செலவின பார்வையாளர், மது மஹாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று போலீஸ், வருமான வரித் துறை, கலால் துறை அதிகாரிகளை, அழைத்து பேசினார். உளவுத் துறை மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் அதிகம் கூடும், பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.அனைத்து தொகுதிகளிலும், வாகன சோதனை நடத்த, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவர்களின் வாகனங்களில், இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு பணி செய்கின்றனர் என்பது கண்காணிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, வாகன சோதனையின் போது, 50.70 கோடி ரூபாய்; 223.5 கிலோ தங்கம்; 346 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு, 69 கோடி ரூபாய்.பறிமுதல் செய்யப்பட்ட, ரொக்கப் பணத்தில், 19 கோடி ரூபாய், உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 2.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 22.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தனிநபர், 50 ஆயிரம் ரூபாய் வரை, பணம் எடுத்து செல்லலாம். அதை விட, அதிக பணம் எடுத்து செல்வதாக இருந்தால், உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.விவசாயிகள், வியாபாரிகள் என, யாராக இருந்தாலும், உரிய ஆவணங்களுடன், பணம் எடுத்து சென்றால், பறிமுதல் செய்யப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.தி.மு.க., மீது 10 வழக்குகள்!தேர்தல் விதிகளை மீறியதாக, அனுமதியின்றி வாகனங்களை இயக்கியதாக, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக, 44 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., மீது, 10; அ.தி.மு.க., - ஒன்பது; பா.ஜ., - இரண்டு; பா.ம.க., - மூன்று; மக்கள் நீதி மையம் - மூன்று; சுயேச்சைகள் மீது, 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 29, 2019 8:19 pm

இரட்டை கருப்பை மூலம் 3 குழந்தை பெற்ற பெண்
தாகா, அண்டை நாடான, வங்க தேசத்தை சேர்ந்த பெண், ஒரு மாத இடைவெளியில், இரட்டை கருப்பை மூலம், மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார்.வங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள, ஜெசோர் மாவட்டத்தை சேர்ந்தவர், சுமோன் பிஸ்வாஸ்; இவரது மனைவி அரீபா சுல்தானா, 20.கடந்த மாதம், சுல்தானாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பின் வீடு திரும்பிய சுல்தானா, வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில், மீண்டும், சுல்தானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து, தனக்கு ஏற்கனவே சிகிச்சையளித்த டாக்டரிடம், அவர் சென்றார். சுல்தானாவை பரிசோதித்த டாக்டர், மற்றொரு கருப்பையில், இரட்டை குழந்தைகள் இருப்பதை அறிந்தார். உடனடியாக, சுல்தானாவுக்கு அறுவை சிகிச்சை செய்ததில், ஒரு ஆண் மற்றும் பெண் என, இரட்டை குழந்தைகள் பிறந்தன.இந்த மூன்று குழந்தைகளையும் நல்லபடியாக வளர்த்து ஆளாக்கப் போவதாக, சுல்தானாவும், அவரது கணவரும் தெரிவித்தனர்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக