உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்
by சிவனாசான் Today at 9:43 pm

» வயதாகும்போது கண்ணும் காதும் முதலில் செயலிழப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 7:49 pm

» தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 7:48 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by Dr.S.Soundarapandian Today at 7:45 pm

» உலகைச் சுற்றி...
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 7:42 pm

» ‘குஞ்சுண்ணி’ எழுதிய இரண்டு கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:41 pm

» மைக்ரோ கதை
by Dr.S.Soundarapandian Today at 7:39 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by ayyasamy ram Today at 2:47 pm

» மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை
by ayyasamy ram Today at 11:29 am

» ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:48 am

» பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79
by ayyasamy ram Today at 10:45 am

» உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை
by Guest Today at 10:06 am

» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
by ayyasamy ram Today at 9:28 am

» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
by ayyasamy ram Today at 8:55 am

» பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?
by ayyasamy ram Today at 8:44 am

» #திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.
by velang Today at 7:40 am

» வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter
by velang Today at 7:37 am

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே- சினிமா பாடல் காணொளி
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சிறிய இடைவேளைக்குப் பின் - குறும்படம்- காணொளி
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by kuloththungan Yesterday at 1:25 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by aeroboy2000 Yesterday at 11:28 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை-(பிரியா ஸ்ரீதர் )
by aeroboy2000 Yesterday at 10:52 am

» ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது டெல்லி ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
by ayyasamy ram Yesterday at 9:27 am

» காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'அத்திமலைத்தேவன்'
by HariSkumar Yesterday at 9:19 am

» யாரோவாகிப் போன அவள்..கவிதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» “தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» Dr. கவிதாசன் - புத்தகம் தேவை
by ManiThani Sun Mar 24, 2019 9:46 pm

» சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:40 pm

» வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி
by ayyasamy ram Sun Mar 24, 2019 5:38 pm

» அஜித் பட பாணியில் சிஎஸ்கே அணியினர் ! வைரலாகும் மாஸ் புகைப்படம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:25 pm

» மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:22 pm

» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:12 pm

» இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. -
by ayyasamy ram Sun Mar 24, 2019 1:10 pm

» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது
by ayyasamy ram Sun Mar 24, 2019 12:33 pm

» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
by சக்தி18 Sun Mar 24, 2019 12:17 pm

» புள்ளிகளால் ஆன ஏரி!
by சக்தி18 Sun Mar 24, 2019 12:09 pm

» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
by சக்தி18 Sun Mar 24, 2019 12:04 pm

» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:33 am

» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

» பாலைவனச் சோலை!
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:27 am

» தண்டனை! - கவிதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:25 am

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:55 am

» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:48 am

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:44 am

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by ayyasamy ram Sun Mar 24, 2019 9:40 am

» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!
by ayyasamy ram Sun Mar 24, 2019 6:06 am

Admins Online

முதல் பார்வை: கண்ணே கலைமானே

முதல் பார்வை: கண்ணே கலைமானே

Post by ayyasamy ram on Fri Feb 22, 2019 7:43 pmகாதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள்
எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'.

அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார்.

முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

மதுரை கிராம வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார் பாரதி (தமன்னா). உதயநிதி மாடு வாங்குவதற்காக பெற்ற வங்கிக் கடனை அடைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் எச்சரிக்கிறார் தமன்னா.

அதற்குப் பிறகான பல சந்தர்ப்பங்களில் உதயநிதியின் நல்ல குணத்தைப் புரிந்துகொள்கிறார். இவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது.

மகனின் காதலை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட அப்பா 'பூ' ராம் அவசரப்படாமல் இருக்கச் சொல்கிறார். அப்பத்தா வடிவுக்கரசி தமன்னாவின் வீட்டுக்குச் சென்று அவர்களின் வரலாற்றை அறிந்துகொள்கிறார். இருவருக்கும் ஒத்துவராது என்று வடிவுக்கரசி முடிவெடுக்க, உதயநிதியின் பிடிவாதத்தால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் இனிதாக நடைபெறுகிறது.

சில நாட்கள் மகிழ்ச்சியாகச் செல்லும் உதயநிதி- தமன்னா வாழ்வில் ஒரு தீராத நோய் வந்து இடியாக இறங்குகிறது. அதிர்ந்து பேசாத உதயநிதி அடிவாங்குகிறார்.

தமன்னாவின் நிலை என்ன, அவரை உதயநிதியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா? தமன்னாவுக்கு எப்படி என்ன நோய் போன்ற கேள்விகள் என்பது திரைக்கதையில் பதில்களாக விரிகின்றன.

மனிதர்களுக்கிடையே நடக்கும் உறவுப் போராட்டங்களை, பாசப் பிணைப்பை தனக்கே உரிய பாணியில் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்திலும் அதை நிவர்த்தி செய்திருக்கிறார்.

இயக்குநர் பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை' படத்தில் வரும் பாடல் வரி கண்ணே கலைமானே. அதையே படத்தின் தலைப்பாக்கி குருவுக்கு மரியாதை செய்திருக்கும் இயக்குநர் சீனு டைட்டிலுக்கான காரணத்தையும் தர்க்க ரீதியாக படத்தில் சொல்லியிருக்கும் விதம் பொருத்தமானது.

'மனிதன்' படத்திற்குப் பிறகு உதயநிதிக்கு இது முக்கியமான படம். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தையும், தமன்னா மீதான காதலையும் மிக நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். பயம், பதற்றம், பதைபதைப்பு, தயக்கம் ஆகிய உணர்வுகளைக் கடத்தும் விதத்திலும் நடிப்பில் முன்னேறி இருக்கிறார்.

தமன்னாவின் பார்வையில்தான் படம் பயணிக்கிறது. தமன்னாவும் நடிப்பின் வழியே அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சின்னச் சின்ன அசைவுகளில், எதிர்பார்ப்பில், தவிப்பில், காதலின் லயிப்பில் தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

குடும்பம் உடைந்துவிடக் கூடாதென்று பார்த்துப் பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் காட்டும் 'பூ' ராமு, ஈகோவால் எகத்தாளமாகப் பார்த்து பின் பிரச்சினையின் வேர் புரிந்து பாசம் காட்டும் வடிவுக்கரசி ஆகிய இருவரும் மிகச்சிறந்த உறுதுணை கதாபாத்திரங்கள். இருவரும் அநாயசமான நடிப்பில் மனதில் நிறைகிறார்கள்.

நண்பனுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் வசுந்தராவும், வங்கியின் மேலாளராக உயரும் ஷாஜியும் தத்தம் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

மதுரை மண்ணையும், வயல்களின் செழிப்பையும், மனித மனங்களில் சுமக்கும் அன்பையும் ஜலந்தர் வாசன் தன் கேமராவில் அழகாகப் படம் பிடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் செவ்வந்திப் பூவே, நீண்ட மலரே பாடல்கள் வசீகரிக்கின்றன.

எந்தன் கண்களைப் பாடல் நெஞ்சைப் பிழியும் சோகத்தைக் கொட்டுகிறது. பின்னணி இசையில் கதையோட்டத்துக்குத் தேவையான ஒத்திசைவைக் கொடுத்திருக்கிறார் யுவன். காசி விஸ்வநாதனின் முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

''எங்கே நேர்மை இருக்கோ அங்கே மூர்க்கம் கோபம் ரெண்டுமே இருக்கும்'', ''ஒரு சேலை நெய்ய ஒரு நெசவாளி 20 ஆயிரம் முறை கையைக் காலை ஆட்டணும், அவங்களுக்காகத்தான் இந்த சேலையை உடுத்துறேன், இந்தப் பேச்சுல நம்ம பேச்சை மறந்துடாதீங்க'' போன்ற எளிமையான வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

விவசாயக் கடன், விவசாயி தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம், கல்விக் கடன், மாட்டு அரசியல் என்று முதல் பாதி முழுக்க கருத்துகளால் நிறைத்திருக்கிறார் சீனு ராமசாமி. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வின் பாதகம், கர்ண மகாராஜா வேடம் போடுபவர் வட்டி கொடுக்க முடியாமல் அவஸ்தைப்படுவது என பல நீளும் சம்பவங்களின் நீட்சியைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மற்றபடி மனித வாழ்வின் அனுபவங்களை, அன்பை ஒரே நேர்க்கோட்டில் பதிவு செய்திருக்கும் திரைக்கதை உத்தி மனசுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகிறது. கெட்டதை நினைக்காத, கெட்டதைச் செய்யாத மனிதர்கள் சூழ் உலகை அருகிருந்து பார்ப்பது போன்ற உணர்வையும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அன்பு அத்தனை குறைகளையும் மறக்கடிகும் என்பதையும் அழுத்தமாகச் சொன்ன விதத்தில் சீனு ராமசாமி வெற்றி பெற்றிருக்கிறார்.
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43743
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: முதல் பார்வை: கண்ணே கலைமானே

Post by T.N.Balasubramanian on Fri Feb 22, 2019 8:15 pm

ஹீரோ........ தேர்தல் சமயம் ...ஹஹஹஹஹஹா .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24273
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8766

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை