உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:31 pm

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:24 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by ayyasamy ram Today at 5:15 pm

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Today at 3:59 pm

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Today at 3:35 pm

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:25 pm

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Today at 12:07 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:52 am

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Today at 11:27 am

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by ayyasamy ram Today at 10:21 am

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Today at 10:09 am

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Today at 10:03 am

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Today at 10:00 am

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Today at 9:59 am

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Today at 9:57 am

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Today at 9:37 am

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Today at 9:33 am

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 9:25 am

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Today at 9:14 am

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Today at 9:11 am

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 9:05 am

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Today at 9:03 am

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Today at 9:00 am

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

Admins Online

சென்னையில் ஒரு திருக்கடையூர்

சென்னையில் ஒரு திருக்கடையூர் Empty சென்னையில் ஒரு திருக்கடையூர்

Post by T.N.Balasubramanian on Thu Feb 21, 2019 8:50 pm

சென்னையில் ஒரு திருக்கடையூர்

கீழப்பாவூர் கி. ஸ்ரீ முருகன்


சென்னையில் ஒரு திருக்கடையூர் Chennayil-1jpg
மார்க்கண்டேஸ்வரர் - மரகதவல்லி


பிரகலாதனின் பேரன் பாணாகரன் சிவபக்தன். சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற சாளக்ராம லிங்கங்களைத் தினமும் பூஜித்தபின் ஆற்றில் விட்டுவிடுவான். ஆற்றிலிடப்பட்ட லிங்கங்களைப் பிற்காலத்தில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து, முனிவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பாணாசுரன் பூஜித்ததால் பாணலிங்கம் என அழைக்கப்படும் சாளக்ராம லிங்கம் சிவசாந்நித்யம் மிகுந்தது. அவற்றுள் ஒன்று ஷீர நதியிலும் (பாலாறு) கிடைத்துள்ளது. பூலோகவாசம் செய்தபோது மகாலட்சுமி உள்பட சப்த மகரிஷிகளும் இந்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
மார்க்கண்டேய முனிவரும் தம்முடைய ஆயுளை நீட்டிப்பதற்காகத் தலங்கள்தோறும் சென்று ஈசனை வழிபட்டுவந்தபோது, ஷீர நதிக்கரையிலுள்ள இந்த பாணலிங்கத்தையும் வழிபட்டு, எமபயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற்றுள்ளார். இந்த புராணப் பெருமை கொண்ட திருத்தலம் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள மகப்பேறீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் மார்க்கண்டேஸ்வரர் கோயில்.
தொண்டை மண்டலத்தில் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த சிவபக்தனான சம்புவராயன் என்ற அரசன் வாரிசின்றி வருந்தினான். தம் பக்தனின் துயர்தீர்க்க முன்வந்த ஈசன்அரசன் கனவில் தோன்றி, “ஷீர நதிக்கரையில் மகாலக் ஷ்மியும் சப்த மகரிஷிகளும் மார்க்கண்டேய முனிவரும் பூஜித்த லிங்கம் உள்ளது. அங்கு சிவ-விஷ்ணு ஆலயம் அமைத்து வழிபடு, மழலைச் செல்வம் பெறுவாய்” என்று கூறினார். அதன்படி ஷீர நதிக்கரைக்கு வந்த சம்புவராயன் அங்கே கவனிப்பாரின்றிக் கிடந்த ஈசனுக்கு, நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு ராஜகோபுரங்களுடன் ஆலயம் அமைத்தான். மார்க்கண்டேஸ்வரரை மனமுருகி வழிபாடு செய்தான்.
நன்றி :   தமிழ்  ஹிந்து  
தொடருகிறது.
ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

சென்னையில் ஒரு திருக்கடையூர் Empty Re: சென்னையில் ஒரு திருக்கடையூர்

Post by T.N.Balasubramanian on Thu Feb 21, 2019 8:53 pm

தொடர்ச்சி.............2 

தொண்டை மண்டல பாணியில் கருவறை
ஈசனின் கருணையால் சம்புவராயருக்குப் புத்திரப்பேறு வாய்த்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய சம்புவராயன் ஈசன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரத்தை மகப்பேற்றை வழங்கும் சந்தானமங்கலம் என்று பெயரிட்டார்.
சென்னையில் ஒரு திருக்கடையூர் Chennaiyiljpg
மகாலக் ஷ்மி

தம்முடைய வேண்டுதலை வெற்றிபெறச் செய்த ஈசனை சித்தேஸ்வர், சிதானந்தேஸ்வரர் என்றும், அம்பிகையை மரகதவல்லி, சந்தான கௌரி என்றும்அழைத்து மகிழ்ந்தான். குழந்தைக்கு மல்லிநாதன் என்று பெயரிட்டான். மல்லிநாதன் இளைஞரானதும் இவ்வாலயத்துக்கு விரிவாக்கப் பணிகள் செய்துகொடுத்துப் பெருமிதம் கொண்டான்.
தொண்டை மண்டல பாணியில் கஜப்பிருஷ்டக் கருவறை அமைப்பு கொண்ட இவ்வாலயம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை வடிவ ஆவுடையார் பீடத்தில் மார்க்கண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இங்கு வரும் பக்தர்களின் எம பயத்தை அகற்றி, நீண்ட ஆயுள் தருகிறார்.
ஈசனுக்கான நித்ய பூஜைக்குத் தேவையான தீப எண்ணெய், புஷ்ப மாலைகள், பூஜைப்பொருட்கள் வழங்கி அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது இவ்வாலயத்தின் மரபு. மார்க்கண்டேஸ்வரரை வழிபடுவோருக்கு உடல் ஆரோக்கியம், மன அமைதி, தொழில் வளம், பதவி உயர்வு போன்ற பலன்கள் கிட்டுகின்றன. மேலும், எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் இத்தல ஈசன் நல்வழி காட்டுவதாக பலன் அடைந்த பக்தர்கள் கூறுகிறார்கள்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

சென்னையில் ஒரு திருக்கடையூர் Empty Re: சென்னையில் ஒரு திருக்கடையூர்

Post by T.N.Balasubramanian on Thu Feb 21, 2019 8:55 pm

தொடர்ச்சி........3  .


சத்புத்திர பாக்கியம்
அம்பாள் வரதஹஸ்த நாயகியாக, நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவ்வன்னையை ஐந்து திங்கள் கிழமை, ஐந்து தீபங்கள் வீதம் ஏற்றி வழிபடத் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 11 அல்லது 21 எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலை கோத்து அணிவித்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி, மகப்பேறு வாய்க்கிறது. கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று, காலையில் உணவருந்தாமல் தம்பதியாக வந்து வழிபடத் தொடங்கி, பின்னர் ஐந்து வெள்ளிக்கிழமை இவ்விதம் வழிபட்டால் சத் புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.
திருக்கடையூருக்கு இணையானது இத்தலம். எனவே, இங்கு ஆயுஷ் ஹோமம் செய்து ஆயுள் நீட்டிப்புப் பெறலாம் என்பது ஐதிகம். மேலும், சஷ்டியப்தப் பூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகமும் செய்து கொள்ளலாம்.
இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலக் ஷ்மித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பவுர்ணமி தோறும் மாலை 6 மணிக்கு மகாலக் ஷ்மிக்கு 11 வகை அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக இங்கு சித்திர குப்தர்தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சுமார் இரண்டரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலம் கொண்டுள்ள சித்திர குப்தரை கேதுவுக்கு ப்ரீதியாக கொள்ளு தீபம் ஏற்றி வழிபடலாம். சித்திர குப்தரை வழிபடுவதற்கு பௌர்ணமி உகந்த நாள். அன்று வணங்கினால், புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

சென்னையில் ஒரு திருக்கடையூர் Empty Re: சென்னையில் ஒரு திருக்கடையூர்

Post by T.N.Balasubramanian on Thu Feb 21, 2019 8:57 pm

தொடர்ச்சி ......4 

எப்படிச் செல்லலாம்?
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துஅம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும்வழியில் கோல்டன் பிளாட்ஸ்பேருந்து நிறுத்தம் அருகிலுள்ளது மேற்கு முகப்பேர். இங்கு மங்கள்ஏரி அருகேயுள்ள பாரதிதாசன் 2-ஆவது தெருவில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கு முகப்பேருக்கு பேருந்து வசதியும் உள்ளது.
ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

சென்னையில் ஒரு திருக்கடையூர் Empty Re: சென்னையில் ஒரு திருக்கடையூர்

Post by ayyasamy ram on Thu Feb 21, 2019 9:52 pm

சென்னையில் ஒரு திருக்கடையூர் 103459460 சென்னையில் ஒரு திருக்கடையூர் 3838410834
-சென்னையில் ஒரு திருக்கடையூர் 201802071259094542_Mogappair-eswarar-temple_SECVPF
-
படம்- தினத்தந்தி
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் ஒரு திருக்கடையூர் Empty Re: சென்னையில் ஒரு திருக்கடையூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை