உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 11:10 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Today at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Today at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Today at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by ayyasamy ram Today at 8:42 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Today at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Today at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Today at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Today at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Today at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Today at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Today at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Today at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Today at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Yesterday at 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Yesterday at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Yesterday at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Yesterday at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Yesterday at 12:13 pm

Admins Online

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by ayyasamy ram on Tue Feb 19, 2019 7:09 am

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழுக்கும், தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நற்றமிழ் நாவலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், அயல் நாடுகளில் தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கும், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநர்களுக்கும், தமிழகம் முழுமையும் மாவட்டந்தோறும் தமிழமைப்பு வைத்து தமிழ் வளர்க்கும் ஆன்றோர்களுக்கும், கணினித் தமிழில் சிறந்து விளங்கும் அறிஞர்களின் தமிழ்ப் பணியை போற்றி சிறப்பிக்கப்படுகிறது.

அந்தவகையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது’ எனக் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து அறிவித்து வரலாற்று சாதனைப்படைத்தார்.

அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2017-18-ம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும், 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் விருது, தமிழ்த்திரு அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018-ம் ஆண்டுக்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

அவ்வகையில் தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி.காசுமான், உ.வே.சா. விருது நடன காசிநாதன், கம்பர் விருது க.முருகேசன், சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமார், ஜி.யு.போப் விருது கு.கோ.சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானு, இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பன், அம்மா இலக்கிய விருது உலகநாயகிபழனி, சிங்காரவேலர் விருது பா.வீரமணி மற்றும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகள் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார், பழனி, அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.

விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும். மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் 32 மாவட்டங்களின் தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் யு.எஸ்.எஸ்ஆர். கோ.நடராசன் (சென்னை மாவட்டம்), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்), அ.ராமானுஜம் (காஞ்சீபுரம் மாவட்டம்), ப.சிவராஜி (வேலூர் மாவட்டம்), ஆ.கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம்), க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்), செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்), அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்), ஆ.கணபதி (சேலம் மாவட்டம்), பொ.பொன்னுரங்கன் (தர்மபுரி மாவட்டம்), சி.தியாகராஜன் (நாமக்கல் மாவட்டம்), வெ. திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்), வெ.கருவைவேணு (கரூர் மாவட்டம்), மா.நடராசன் (கோவை மாவட்டம்).

மு.தண்டபாணிசிவம் (திருப்பூர் மாவட்டம்), சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்), வீ.கோவிந்தசாமி (திருச்சி மாவட்டம்), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்), சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்), த.உடையார்கோவில் குணா (தஞ்சாவூர் மாவட்டம்), கவிஞர் நா. சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்), புலவர் மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்), க.சுப்பையா (ராமநாதபுரம் மாவட்டம்).

சு.லக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்), வதிலைபிரபா (திண்டுக்கல் மாவட்டம்), சு.குப்புசாமி (தேனி மாவட்டம்), க.அழகர் (விருதுநகர் மாவட்டம்), கவிஞர் பே.ராஜேந்திரன் (நெல்லை மாவட்டம்), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்) தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் விருதுத்தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவர்.

இந்த 56 அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
--
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45193
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by anikuttan on Tue Feb 19, 2019 7:20 am

நமது தெர்மோகால் விஞ்ஞானிக்கும் ஏதாவது ஆறுதல் பரிசு குடுக்க வேண்டும்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by T.N.Balasubramanian on Tue Feb 19, 2019 12:20 pm

@anikuttan wrote:நமது தெர்மோகால் விஞ்ஞானிக்கும் ஏதாவது ஆறுதல் பரிசு குடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1293540

அய்யா உங்களுக்கு தங்க மனசு.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24326
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by சக்தி18 on Tue Feb 19, 2019 2:38 pm

வைகை நதியை மூடிய தேர்மொகொல் விஞ்ஞானி.


மும்பாய் ரயில் தடங்கள் வெப்பம் காரணமாக விரிவடைவதை தடுக்க இலைகள் கொண்டு மூடிய விஞ்ஞானிகள்.மூடிக் கொண்டு போகும் போதே வாயு பகவான் அவற்றை எடுத்து அகற்றிக் கொண்டே சென்றார்.ஏன் இந்தக் கோபம்?

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Mumbaitraintrack-759
சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை