உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Empty ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்

Post by ayyasamy ram on Sun Feb 03, 2019 1:51 pm

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Sarvam_thaalamayam_new9_5
விலங்குகளின் தோலின் மூலம் மிருதங்கத்தை உருவாக்கும்
சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், மிருதங்க வித்வானாக
உயர ஆசைப்படுவதைப் பற்றிய திரைப்படம் இது.

கர்நாடக இசைத் துறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின்
ஆக்கிரமிப்பில் இருப்பதை, அந்த இசை எளிதில்
அணுகப்படாத புனிதப் பொருளாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும்
அரசியலை, ஆவேசமான குரலில் அல்லாமல் இயல்பான
உரையாடலில் முன்வைக்கும் இந்தப் படம், திறமையும்
விடாமுயற்சியும் கொண்ட எவனொருவனும், இந்தக் கதவுகளை
எப்படி உதைத்து திறக்க முடியும் என்கிற எதிர் அரசியலையும்
இயல்பாகப் பேசுகிறது-
-

ஜி.வி.பிரகாஷ் (பீட்டர் ஜான்சன்) விளிம்புநிலை சமூகத்தைச்
சேர்ந்த இளைஞன். அவனுடைய தந்தையான குமரவேல்
(ஜான்சன்) மிருதங்க வாத்தியத்தைத் தயாரிப்பவர். கல்வியில்
நாட்டமில்லாமலும் எவ்வித இலக்கும் இல்லாமலும் விஜய்
ரசிகனாக சுற்றிக் கொண்டிருக்கும் பீட்டர், ஒரு தற்செயலான
கணத்தில் மிருதங்க வித்வானான நெடுமுடி வேணுவின்
(வேம்பு ஐயர்) அசாதாரண திறமையைக் கண்டு வியந்து
போகிறான்.

அன்றிலிருந்து அவனுடைய வாழ்க்கை திசை மாறுகிறது.
அவரைப் போன்றே தானும் ஒரு வித்வானாகி, கர்நாடக
இசைக் கச்சேரியில் வாசிக்கவேண்டும் என்கிற லட்சியத்தை
மேற்கொள்கிறான்.

ஆனால் அது அத்தனை எளிதான பாதையாக அமையவில்லை.
----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Empty Re: ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்

Post by ayyasamy ram on Sun Feb 03, 2019 1:53 pm

சாதி என்னும் அரசியல், பிரம்மாண்டமான சுவராக குறுக்கே வந்து நிற்கிறது. கூடவே வர்க்க அரசியலும். எனவே அவன் பல்வேறுவிதமாக அலைக்கழிக்கப்படுகிறான். என்றாலும் விடாமுயற்சியினாலும் குரு பக்தியினாலும் தன் இலக்கை எவ்வாறு அவன் அடைகிறான் என்பதை உணர்ச்சிகரமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.

சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் பாத்திரத்தில் வெகு அநாயசமாகப் பொருந்திப் போகிறார் ஜி.வி.பிரகாஷ். ‘நாச்சியார்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘நான் உலகத்திலேயே நம்பர் ஒன் மிருதங்க வித்வானாக வரணும் சார்’ என்று அப்பாவித்தனமாக முறையிடுவதில் துவங்கி ‘உன்னால வேணா வாசிக்க முடியாம போகலாம். நான் ஜெயிச்சுக்காட்டுவேன்’ என்று தந்தையிடம் ஆத்திரத்துடன் எகிறுவது வரை பல இடங்களில் தன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார்.

நெடும் அனுபவமும் அசாதாரண திறமையும் கொண்ட ஒரு நடிகரால், ஒரு திரைப்படத்தை எத்தனை உயரத்திற்குக் கொண்டு செல்லமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் நெடுமுடி வேணு. உயர்வு மனப்பான்மையும் பாரம்பரிய இசைப் பாணியின் மீது அசைக்க முடியாத பக்தியும் கொண்ட ஒரு மிருதங்க வித்வானைத் தன் அற்புதமான உடல்மொழியின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்திவிடுகிறார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு காட்சியில், ஒரு கணத்தில் தன் தாளத்தைத் தானே ரசித்து உள்ளே ஆழ்ந்து போய், பின்பு விழித்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி போதும், வேணுவின் அசாத்தியமான நடிப்பிற்கு உதாரணம் சொல்ல. சாதியப் பிடிப்பு கொண்டிருப்பவரைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும், கற்றுக்கொள்ளும் தீவிரமான ஆர்வமுள்ள இளைஞனை இவர் அரவணைத்துக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Empty Re: ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்

Post by ayyasamy ram on Sun Feb 03, 2019 1:54 pm

-ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Wa7l45oFRo2qvdXwJW8X+sarvam_thaalamayam_new9_(2)xx
நம்ம மாதிரி ஆளுங்கல்லாம் இந்தச் சின்ன வாழ்க்கையை
அப்படியே ரசிச்சு வாழ்ந்துட்டு போயிடணும். மேல
போறதுக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது’ என்று எளிய
சமூகத்தைச் சார்ந்தவர்களின் அப்பாவிப் பிரதிநிதியாகத்
தன் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் குமரவேல்.  

ஜி.வி.பிரகாஷின் காதலியாக அபர்ணா பாலமுரளி.
(‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்னும் மலையாளப்
படத்தில் தன் இயல்பான தோற்றத்திலும் நடிப்பிலும்
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்).

இவருக்கு அதிகக் காட்சிகளில் தோன்ற
வாய்ப்பில்லாவிட்டாலும் ‘நீ ஏன் குருவைத் தேடறே..
இயற்கையிலேயே எல்லாத் தாளமும் இருக்கு” என்று
தன்னையே ஒப்படைத்து ஜி.வி.பிரகாஷை
ஊக்கப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்
-


Last edited by ayyasamy ram on Sun Feb 03, 2019 2:09 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Empty Re: ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்

Post by ayyasamy ram on Sun Feb 03, 2019 1:55 pm

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினீத். வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யராக வரும் இவர், ஜி.வி.பிரகாஷின் மீது பொறாமை கொள்வதும் குருவை எதிர்த்து அரசியல் செய்வதும் என எதிர்மறையான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது தங்கையாக நடித்திருக்கும் திவ்யதர்ஷிணியின் (டிடி) மூலம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் உள்ள வணிகத் தந்திரங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. சிக்கில் குருசரண், உன்னி கிருஷ்ணன், சீனிவாஸ், கார்த்திக் என்று பல இசைப் பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் தோன்றி காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் பாடகர் சுமேஷ் நாராயணனும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷின் ஆர்வத்தைக் கணவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய மனத்தை மாற்றும் காட்சியில் சாந்தா தனஞ்செயன் அற்புதமாக நடித்துள்ளார்.

இசையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர் மன்ற இளைஞர்கள் ஆடும் குத்துப்பாடலாக இருந்தாலும் சரி, ‘மாயா.. மாயா’ என்கிற மெல்லிசைப் பாடலாக இருந்தாலும் சரி, தனது வசீகரமான இசையின் மூலம் கவர்ந்து விடுகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து கலாசார இசைகளையும் ஒரு பாடலில் கொண்டு வந்து கேரளத்தின் செண்டை மேளத்துடன் நிறைவு செய்யும் ‘சர்வம் தாளமயம்’ பாடல் ஓர் அபாரமான அனுபவத்தைத் தருகிறது. ‘எப்போ வரும் எங்க காலம்’ என்ற பாடலில் எளிய சமூகத்தின் ஏக்கம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ரவி யாதவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஆண்டனியின் அற்புதமான எடிட்டிங்கும் படத்திற்கு மேலதிக சுவையைத் தந்திருக்கின்றன.

‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மறுபடியும் திரும்பியிருக்கிறார். ஒரு லட்சியவாத இளைஞனுக்குச் சாதியோ, வர்க்கமோ என எதுவும் தடையாக இருக்கமுடியாது, தனது தொடர்ந்த உழைப்பின் மூலம் எந்த இலக்கையும் அவன் எட்ட முடியும் என்கிற செய்தியை உறுத்தாத சாதிய அரசியலின் பின்னணியில் சொல்லியிருப்பதின் மூலம் ஒரு முக்கியமான ஆக்கத்தைத் தந்திருக்கிறார். ஏகலைவன், நந்தனார் போன்ற பிம்பங்களின் சாயல்கள் பிரதான பாத்திரத்திற்கு உகந்த வண்ணத்தைத் தருகின்றன.

ஆனால் படத்தில் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. மிகக் கச்சிதமாக நகரும் திரைப்படத்தின் முற்பாதி, அதன் பிறகு ஜி.வி.பிரகாஷைப் போலவே எங்கெங்கோ அலைபாய்கிறது. சினிமா, தொலைக்காட்சி போன்ற எளிய, தற்காலிக புகழ் வடிவங்களின் மீது நாட்டமின்மையும் ஒவ்வாமையும் கொண்டிருக்கும் நெடுமுடி வேணு, இறுதிக்காட்சியில் தன் சிஷ்யன் அதில் வெற்றி பெற ஆர்வம் காட்டுவது பெரிய முரணாக இருக்கிறது. ரியாலிட்டி ஷோ தொடர்பான காட்சிகள் படத்தின் இயல்பைக் கெடுப்பதாக உள்ளன. குறிப்பிட்ட பாரம்பரிய இசையின் மீது பக்தியும் விசுவாசமும் கொண்ட ஓர் இசைக்கலைஞன், காலத்தின் போக்கில் அதில் வந்து இணையும் இதர பாணிகளையும் புதுமைகளையும் இறுதியில் ஏற்றுக் கொள்வது மூத்த இசைக்கலைஞர்களுக்கு முன்னுதாரணமான செய்தியாக இருக்கிறது.

திரைக்கதையில் நிகழ்ந்திருக்கும் சில அலைபாய்தல்களையும் தேவையற்ற திணிப்புகளையும் தவிர்த்திருந்தால், ராஜீவ் மேனனின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இதுவும் ஒரு கச்சிதமான படைப்பாகியிருக்கும். என்றாலும் ‘உண்மையான திறமைக்கும் விடாமுயற்சிக்கும் முன்னால் எதுவும் தடையாக நிற்க முடியாது’ என்கிற ஆதாரமான செய்தியை சொன்ன விதத்தில் மிகவும் கவர்கிறது ‘சர்வம் தாள மயம்’.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம் Empty Re: ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ – திரை விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை