உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
by சக்தி18 Today at 5:15 pm

» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...
by ayyasamy ram Today at 1:58 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்
by ayyasamy ram Today at 1:54 pm

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by ayyasamy ram Today at 12:12 pm

» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்
by சக்தி18 Today at 12:11 pm

» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
by ayyasamy ram Today at 12:07 pm

» தொழில் நுட்பம் - புதுவரவு
by சக்தி18 Today at 12:04 pm

» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
by சக்தி18 Today at 11:52 am

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by ayyasamy ram Today at 11:41 am

» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு
by கோபால்ஜி Today at 11:39 am

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by ayyasamy ram Today at 11:38 am

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by ayyasamy ram Today at 11:36 am

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by ayyasamy ram Today at 11:33 am

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by ayyasamy ram Today at 11:29 am

» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...!!
by ayyasamy ram Today at 11:23 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 11:15 am

» தன்னடக்கம்...!
by ayyasamy ram Today at 10:51 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:34 am

» மாயாவதி போட்டியிடாதது ஏன்? சிவசேனா பத்திரிகையில் விளக்கம்
by ayyasamy ram Today at 10:26 am

» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
by anikuttan Today at 7:30 am

» தினத்தந்தி ஆதிச்சநல்லூர்
by Monumonu Today at 6:23 am

» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 pm

» நெடுநல்வாடை -விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm

» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 pm

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by கோபால்ஜி Yesterday at 12:09 pm

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி
by ayyasamy ram Yesterday at 9:18 am

» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by mahasme Yesterday at 12:02 am

» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது
by dilipsenth Thu Mar 21, 2019 11:16 pm

» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..!
by ayyasamy ram Thu Mar 21, 2019 8:04 pm

» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:41 pm

» நமக்கு தேவையான விளக்கு...!
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:39 pm

» கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:18 pm

» கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:17 pm

» கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Thu Mar 21, 2019 2:23 pm

» ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:40 pm

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:36 pm

» மழைச்சிறுமி - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:34 pm

» அண்ணிமார் கதை - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:33 pm

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:30 pm

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by ayyasamy ram Thu Mar 21, 2019 1:29 pm

» சர்வதேச சிறுநீரக தினம் - மார்ச் 14
by ayyasamy ram Thu Mar 21, 2019 12:11 pm

Admins Online

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Post by ayyasamy ram on Sat Jul 14, 2018 2:07 pm


இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான
2-வவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன்
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான டி 20 தொடரை இந்திய அணி
2-1 என்ற கணக்கில் வென்றது.

இதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட
தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இதில் நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்
ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

269 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது அதிரடியால்
40.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி
பெற்றது.

ரோஹித் சர்மா 114 பந்துகளில், 4 சிக்ஸர்கள்,
15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் விளாசி கடைசி வரை
ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 82 பந்துகளில்,
7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்தார். 2-வது
விக்கெட்டுக்கு இந்த ஜோடி 167 ரன்கள் குவித்திருந்தது.

மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவணும் 27 பந்துகளில்
8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசி சிறந்த தொடக்கம்
கொடுத்து வெற்றிக்கு உதவினார்.

முன்னதாக இங்கிலாந்து அணியை 268 ரன்களுக்குள்
சுருட்டியதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய
பங்கு வகித்தார். அவர், 10 ஓவர்களை வீசி 25 ரன்களை
மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில் 6 விக்கெட்களை
வேட்டையாடியிருந்தார்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய
அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில்
1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும்
இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில்
மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில்
இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வெல்லும்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்திய அணி
தொடர்ச்சியாக ஒன்பது, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட்
தொடர்களை இழக்காமல் கோப்பையை வென்றுள்ளது.

இந்த எண்ணிக்கையை 10 ஆக அதிரிக்கச் செய்வதில்
விராட் கோலி குழுவினர் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

டி 20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தற்போது ஒருநாள்
கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்திலும்
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்த குல்தீப் யாதவ்
மீண்டும் மிரட்ட காத்திருக்கிறார்.

அவரை கையாள்வதற்காக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்
புதிய திட்டம் வகுக்கக்கூடும். முதல் ஒருநாள் போட்டியில்
6-வது இடத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் மட்டுமே
அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்.

இன்றைய ஆட்டத்தில் அவரது பேட்டிங் வரிசை மாற்றி
அமைக்கப்படக்கூடும். முதல் ஆட்டத்தில் குல்தீபுக்கு
உறுதுணையாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு
நெருக்கடி கொடுத்த மற்ற இந்திய அணி பந்து வீச்சாளர்கள்
அதிக ரன்களை வழங்கினர்.

உமேஷ் யாதவ் 70 ரன்களையும், சித்தார்த் கவுல் 62,
சாஹல் 51 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இதனால் வேகப்பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்கக்
கூடும். புவனேஷ்வர் குமார் முழு உடல்தகுதியை எட்டாததால்
இன்று களமிறங்குவது சந்தேகம்தான். அநேகமாக சித்தார்த்
கவுலுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெறக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் தொடரை
இழக்க நேரிடும் என்பதால் இங்கிலாந்து அணி கூடுதல்
கவனத்துடன் விளையாடக்கூடும்.

நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு:

சோனி சிக்ஸ்
-
----------------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43680
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11766

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Post by SK on Sat Jul 14, 2018 2:32 pm

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்திய அணி 
தொடர்ச்சியாக ஒன்பது, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் 
தொடர்களை இழக்காமல் கோப்பையை வென்றுள்ளது. 

வெற்றி பெற வாழ்த்துக்கள்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8048
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

Re: இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Post by Mr.theni on Sat Jul 14, 2018 3:19 pm

கமெண்ட் நோ.கிரிக்கெட்டின் மீது வெறுப்பு.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை