உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து?
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:43 am

» வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:39 am

» பேப்பரில் பேனா... மூங்கிலில் டூத் பிரஷ் எல்லாத்துக்குமே மாற்று உண்டு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:33 am

» பாரதியின் வரிகளில் பிடித்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by anikuttan Today at 7:16 am

» பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
by ayyasamy ram Today at 6:30 am

» புதியவன் - ராஜேஷ்
by mohamed nizamudeen Yesterday at 11:40 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நோபல் பரிசு அதிக அளவில் பெற்ற நாடு
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» தெரிஞ்சிக்கோங்க- பொது அறிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» தெரிஞ்சுகோங்க! – கொய்யா பழம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:59 pm

» கற்கண்டு வடை
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» அர்த்தங்கள் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி அனுபவங்களை எழுதி வைத்தவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:27 pm

» சிறுவர் பாடல் – குருவி பார்..!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» நேர்த்தி கடனை நிறைவேற்றும் வாடகை மனிதர்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm

» முதல் பார்வை: திமிரு புடிச்சவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» செள செள மோர் கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:32 pm

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» மகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» வறியநிலை வேறுண்டோ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:19 pm

» 2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய புள்ளினங்கள் பாடல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது - நீதிமன்றம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» தி.நகர் சத்யா பஜாரில் போலீஸார் திடீர் சோதனை: 700 செல்ஃபோன்கள் பறிமுதல்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: காற்றின் மொழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:57 pm

» அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am

» முருங்கைப்பூ கூட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 am

» உலகச் செய்திகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:11 am

» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 am

» கற்கண்டு வடை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:01 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Yesterday at 4:47 am

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:14 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 7:09 pm

Admins Online

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !

Post by krishnaamma on Fri May 25, 2018 1:47 pm

இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!

எஸையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு மிகவும் செல்லமான குழந்தை!

ஒருமுறை சாதுர்மாஸ்யத்துக்கு எஸையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார்.

அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான, கோகிலாப்பாட்டி என்ற எஸையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு!

"வேதபுரி..... தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டு வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்...என்ன?"

கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி கடைப்பிடித்தான். ஒருநாள், ஶ்ரீமடத்தில்,  ஶ்ரீசந்த்ரமௌலீஶ்வரர் பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார். வேதபுரி தீர்த்தம் வாங்க கையை நீட்டியதும், பெரியவாளின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் வேதபுரியின் குட்டிக் கைகளில் விழுந்தது.... கூடவே, திருவாயிலிருந்து ஒரு கட்டளையும் விழுந்தது!

"இங்கியே.... ஓரமா நில்லு...."

என்னமோ, ஏதோ, என்று பயந்து கொண்டு திரு திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக நிற்கும் வேதபுரியைப் பார்த்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே, அதிக வாஞ்சையுடன்,

"பயப்படாதடா! ஒங்கிட்ட பேசணும்!..."

ஜகதாச்சார்யனுக்கு, இந்த சிறுவனிடம் அப்படி என்ன பேச வேண்டுமோ?

தன் பாதங்களில் விழ வேண்டிய புஷ்பங்களை பகவானே தேர்வு செய்வான்! இல்லையா?

எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தானதும், வேதபுரியைக் கூப்பிட்டார்.

"ஆமா....தெனோமும் பூ கொண்டு வரியே?...... நீயா கொண்டு வரியா? இல்லேன்னா... யாராவுது சொன்னதுனால கொண்டு வரியா?..."

குழந்தை மனஸில் உள்ள ஸத்யம், பளிச்சென்று வாயிலும் வந்தது!

"கோகிலாப்பாட்டிதான் எங்கிட்ட, 'தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு'-ன்னு சொன்னா! அதான் செய்யறேன்"

"ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?......."

"ஆத்துல யாராவுது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே எனக்கு தெரியும்? நா....சின்னக் கொழந்தை, ஒண்ணுமே தெரியாது....சொல்லிக் குடுத்தா செய்வேன்"

"வாடா! என் அன்பு மகனே!....."

தெய்வம் தன் மகிழ்ச்சியை சிரிப்பாக கொட்டியது.

"எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு..... நீ.... எங்கூட வரியா?..... என்ன ஸம்பளம் வேணும்? சொல்லு......"

"உம்மாச்சி... என்ன குடுக்கறேளோ, அத... வாங்கிக்கறேன்"

பெரியவாளின் முகத்தில் புன்னகை அரும்பியது.

தன்னையே அல்லவோ முழுஸாகத் தந்துவிட்டார்! கோடிகோடியான பணமெல்லாம் இனி.... எந்த மூலைக்கு?

"உம்மாச்சி..... என்னோட அம்மா..... நா... சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டா! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா, 'ஸெரி'ன்னு சொன்னா.... ஒங்களோட வரேன்"

"நீங்க எத்தனை கொழந்தேள்..... ஒங்க அப்பாக்கு?...."

"நா..... ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி புக்காத்துல இருக்கா....."

"அப்போ ஸெரி.... ஒன்னோட தம்பி வந்து... ஒங்கப்பாவை பாத்துக்கட்டும்..! நீ... என்னோட வா!....."

என்ன ஒரு பாக்யம் !

"ஏண்டா வேதபுரி...! பெரியவா என்னடா பேசினா? சொல்லு...."

கோகிலாப்பாட்டி குருநாதரின் திருவாக்கில் வந்ததை கேட்க ஆசைப்பட்டாள்.

"என்னை பாத்து, 'எங்கூட வரயா?'ன்னு கேட்டா.... என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா....."

"நீ என்னடா சொன்ன?..."

"நா.....பெரியவா... என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்....."

பாட்டியின் முகத்தில் லேஸாக கோபம் தெரிந்தது!

"அஸடே! பெரியவாகிட்ட ஸம்பளம்-லாம் வாங்கப்டாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்..!ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்..!"

"ஸெரி பாட்டி......"

கொஞ்சநாட்கள் கழித்து, நம்முடைய தாயுமான'குழந்தை'ஸ்வாமி, வேதபுரியின் வாயைக் கிண்டியது......

"என்னடா? ...ஒனக்கு... எவ்ளோ ஸம்பளம் வேணும்? சொல்லவேயில்லியே..."

"எனக்கு... பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்..."

"ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி சொன்னாளாக்கும்?..."

"ஆமா......."

பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எஸையனூரை விட்டுக் கிளம்பினார்.

சிறுவன் வேதபுரியின் வீட்டுவாஸலில், அந்த வேத முதல்வனின் பல்லக்கு நின்றது! வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நமஸ்காரம் செய்தனர்.

"அன்னிக்கி என்னோட வரேன்னியே?......வரியா?...."

குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்ற சிறுவன் வேதபுரியிடம் கேட்டார்.

"ஓ ! வரேனே!..."

"என்ன? இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?........"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோகிலாப்பாட்டியிடம், முறையாக permission கேட்கிறாராம்!

..............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57051
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11806

View user profile

Back to top Go down

Re: 'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !

Post by krishnaamma on Fri May 25, 2018 1:48 pm

பாட்டியோ, வேதபுரியின் பரம பாக்யத்தை எண்ணியெண்ணி கண்கள் ஆறாகப் பெருக,

"ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்.... தாயில்லாக் கொழந்தை! பெரியவாதான்... பாத்துக்கணும்"

".நீ.....நெறைய்ய செஞ்சுட்ட..! இனிமே.....இந்தக் கொழந்தைய... நா..... பாத்துக்கறேன்! [ஆஹா! எப்பேர்ப்பட்ட அனுக்ரஹ அரவணைப்பு!] ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே, இவன்ட்ட, எங்கூட வரியான்னு கேட்டேன்...."

அழகாக சிரித்துவிட்டு, வேதபுரியிடம்,

"போ! ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர்ட்ட,

'பெரியவா என்னை கூப்பட்றா...... நா... அவரோட போறேன்-ன்னு சொல்லு'..........

....ஒங்கப்பா, 'மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்.......

அதுக்கு நீ......"என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்ன.... தம்பி பாத்துப்பான்னு சொல்லு!.."

ஒரு சின்னக் குழந்தைக்கு, 'மோனோ ஆக்டிங்' பண்ணி, சொல்லிக் குடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு போக "ஜகத்குரு" அடமாக இருந்திருக்கிறார் என்றால், வேதபுரி மாமாவின் மஹா மஹா என்று கோடி கோடி மஹா போட்டாலும் அளவிட முடியாத பாக்யத்தை என்னவென்று சொல்லுவது?

வேதபுரி, பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பா ஸீதாராமய்யரிடம் ஒப்பித்ததும், அவரும் மகனை நெஞ்சார ஆனந்தமாக அனுப்பி வைத்தார்.

பல்லக்கிலிருந்து 'மஹா மாதா'வின் உத்தரவு பிறந்தது....

"ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு...... எடுத்துண்டு வா!...."

அவ்வளவுதான்!

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து: ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவா......"

இந்த ஸ்லோகம் வேதபுரி என்ற திவ்யமான சிறுவனுக்காகவே பாடப்பட்டதோ என்னவோ? அந்த க்ஷணத்திலிருந்து, பெரியவா என்ற "உம்மாச்சி"தான்.... அவருக்கு ஸர்வமும் !

பெரியவாளின் பல்லக்கு கிடுகிடுவென்று கிளம்பி வேகமாகப் போய்விட்டது! வேஷ்டி, துண்டு, சொம்பு ஸஹிதம் பெரியவாளைத் தொடர்ந்து ஓடினான் சிறுவன் வேதபுரி! அவன் ஓடி வருவதைப் பார்த்ததும், பெரியவாளின் மாத்ருபாவமும் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது! பல்லக்கிலிருந்து எட்டிப் பார்த்து....

"நீ....கொழந்த.!... ஒன்னால நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!..."

வேதபுரியின் உயர்ந்த குணம்.. "implicit obedience" !

உடனே பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான். ஆனால், வண்டியில் இருந்தவர்களோ.....

"நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்ன..... தேடுவா! நீ போ!..."

வண்டியில் ஏறவிடவில்லை.

'ஓடு! பெரியவாளிடம் ! 'என்று மறுபடி பல்லக்கின் அருகில் ஓடினான்.

"உம்மாச்சி...! என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!..."

"ஸெரி....அதோ..... அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல போறான் பாரு! அவனைக் கூப்டு!..."

[பெரியவாளுடைய யாத்ரையில், மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது, என்று இந்த பரிவாரங்களும் கூடவே போகும்]

வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன், பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.

"இந்தக் கொழந்தைய... ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!...."

"ஸரிங்க எஜமான்.."

இந்த வண்டியில் ஏறும்போதே முன்ஜாக்ரதையாக, "பெரியவா சொல்லித்தான் வந்தேன்! ஆத்துல சொல்லிட்டுத்தான் வந்தேன்" என்று சொன்னதும், வண்டியில் இருந்தவர்கள் வேதபுரியை பயபக்தியுடன் பார்த்தார்கள்.

யாத்ரை, அடுத்து ஏதோ ஒரு ஊரில் நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை அழைத்தார்....

"ஸெரி... இப்போ சொல்லு...... எந்த மாமா ஒன்னை வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?......"

"எதுக்கு... யாரையும் மாட்டிவிடணும்? " என்ற நல்லெண்ணத்தில், 'இல்ல... வேண்டாம்' என்று தலையாட்டினான் வேதபுரி.

"ஏண்டா பயப்படற? அவா... ஒன்ன... ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?...."

"இல்ல... ஒங்களுக்கு கைங்கர்யம் செய்யக் கெடைக்காதோன்னு, பயமா இருக்கு பெரியவா"

இந்த ஒரேயொரு உயர்ந்த சிந்தைக்காகவே, வேதபுரி பெரியவாளுக்கு அணுக்கமானான்.

"நா..... இருக்கேன்! பயப்படாம காட்டு"

வேதபுரி ஒருவரைக் கைகாட்டினான்.

"வெங்கட்ராமா! நாந்தான்... கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்.....! ஜாக்ரதையா பாத்துக்கோ...!"

"உத்தரவு பெரியவா......"

ஸாதாரண அம்மாவே அன்பின் ஶிகரமாக இருப்பாள்! இவரோ..... ஜகன்மாதா! இந்த பேரன்பை அளக்க முடியுமா?

சிறுவன் வேதபுரி, ப்ரஹ்மஶ்ரீ வேதபுரி மாமாவாக பரிமளித்தாலும், என்றுமே.... நம் வேதமாதாவுக்கு செல்லப் பிள்ளையானான்!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57051
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11806

View user profile

Back to top Go down

Re: 'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !

Post by T.N.Balasubramanian on Fri May 25, 2018 2:44 pm
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23286
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: 'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !

Post by krishnaamma on Fri May 25, 2018 10:59 pm

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57051
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11806

View user profile

Back to top Go down

Re: 'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை