உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 11:20 am

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க FQZ1yWhOQGOs7eJM4GUz+015d88545464d9f5e5917208c9dffe09

அருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு.
குண்டாறு என்பது நீர்த்தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை. தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை. ‘‘இங்க,அணைக்கட்டு ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்’’ என்று சந்தேகத்தோடு தாடையைச் சொறிகிறார்கள். ‘‘செமையா இருக்கும்ணே... தண்ணி எப்பவுமே விழும்! போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க!’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty Re: குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 11:22 am

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க MiYP5DYIRFCPniDwPyPu+dabf9f3453225d84cb108f2a95f656ca

வெளியூர்க்காரர்கள் என்றால், தென்காசியிலோ குற்றாலத்திலோ ரூம் எடுத்துத் தங்கிவிடுவது பெஸ்ட். தென்காசியில் மட்டும் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். ‘பசிக்கலை; கொஞ்சம் லேட்டா சாப்பிட்டுக்கலாம்’ என்று காலை உணவை ஸ்கிப் பண்ணினால், பன்னும் பட்டர் பிஸ்கட்டும் மட்டும்தான் கிடைக்கும். 10 மணிக்கு மேல் தென்காசியில் டிஃபனைத் தேடியபோது, வடிவேலு போல கையை விரித்து பெப்பே காட்டிவிட்டார்கள். பசி தாங்கும் பார்ட்டிகள் என்றால், நேரடியாக 1.30 மணி வாக்கில் மதிய உணவில்தான் கை வைக்க முடியும்.
குண்டாறுக்கு, தென்காசி வழியாக பண்பொழிச் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இங்குள்ள திருமலைக் கோயில் எனும் இடம் ஆன்மிக அன்பர்களுக்கு சரியான ஆப்ஷன். பார்க்கிங் 50 ரூபாய் கட்டிவிட்டு திருமலைக் கோயிலுக்கு வண்டியை விட்டால்... அற்புதமான அனுபவமாக இருக்கிறது. ஊட்டி மலை, வால்பாறை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பாதையெல்லாம் தோற்றுவிடும் அளவுக்கு பாதை செம போதையாக இருக்கிறது. குட்டிக் குட்டி ஹேர்பின் பெண்டுகளைத் தாண்டிப் போனால், டைம் மெஷினில் ஏறி நம்மை அழைத்துச் சென்றதுபோல இருந்தது. கோயிலில் அத்தனை பழைமை வாசம். 625 படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய முடியும். இந்தக் கோயிலின் ஸ்பெஷல் - ஆளையே தள்ளிவிடும் அளவுக்கு ‘பரான் பரான்’ என்று சுழற்றியடிக்கும் காற்று. அடிக்கும் காற்றில் ஒரு ஸ்கார்ப்பியோவே ஆடியது என்றால் கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty Re: குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 11:24 am

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க KpeTyTkLRNeRrCFs3CpN+6e0680c5aad53e918cc2cd530e119e82

மலை இறங்கி குற்றாலத்துக்குத் திரும்பும் பாதையில் முன்கூட்டியே வளைய வேண்டும். கண்ணுப்புளி மெட்டு எனும் இடம் வருகிறது. இங்கேதான் குண்டாறு நீர்த்தேக்கம் இருக்கிறது என்றார்கள். மற்ற அணைகள், அருவிகளில் மீன் வறுவல் ஸ்பெஷல் என்றால், இங்கே ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள்தான் ஃபேவரைட். ‘‘எல்லாமே எங்க தோட்டத்துல விளைஞ்சதுங்க’’ என்றார் பழம் விற்கும் பாட்டி.

/
குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க OiOMYjFT4yvvxYJVQE5w+f299c4aaf28db6c17ebbed307519da69
குண்டாறு அணையின் ஆழம் 36.6 அடி என்றார்கள். நெல்லை மாவட்டத்திலேயே குறைந்த அளவு அடி கொண்ட, ஒல்லியான அணை இதுதானாம். மதிய வெயிலுடன் இதமான தென்றல் காற்று போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. குண்டாற்றில் இப்போதுதான் படகுச் சவாரி ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், டாஸ்மாக்கைப்போல இதை தமிழக அரசு நடத்தவில்லை. ‘‘தனியார் போட்டிங் சார்.. எத்தனை பேரா இருந்தாலும் 300 ரூபாய்தான்’’ என்றார் படகோட்டி ஒருவர். கூட்டமும் அவ்வளவாக இல்லை. ‘300 ரூபாய் போனாப் போகுது’ என்று படகு சவாரி செய்தால், அற்புதமான அனுபவம் கிடைக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty Re: குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 11:27 am

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க AGFkvxtQOm16bQvUp4IB+7de66bd476b14131914b0e52a2450165

‘‘அருவின்னாங்களே... காணுமே’’ என்று தேடினால், ஜீப் டிரைவர் ஒருவர் அப்ரோச் செய்தார். ‘‘குண்டாறு அருவிக்கு மேல போகணும் சார்... ஒரு ட்ரிப்புக்கு 2,000 ரூபாய் சார்... இருந்து கூட்டிட்டு வந்துடுவோம்’’ என்றார். இங்கேயும் எத்தனை பேர் என்றாலும் அதே கட்டணம்தான். அதனால், குண்டாறுக்கு நண்பர்கள் குழுவுடன் 8 பேர் பேக்கேஜா வந்தால், நமக்குத்தான் செமத்தியான லாபம். இப்போது சீஸன் டைம் என்பதால், பேரம் பேச யாருமே முன் வரவில்லை. குண்டாற்றின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜீப் சவாரிசெய்து அருவியை அடையலாம். ‘‘நைட் 2 மணிக்கு கூப்பிட்டாக்கூட நாங்க ரெடியா இருப்போம்’’ என்றார் ஜீப் டிரைவர். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300).
குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க CXSO6Va3T1mDw1FSFFVV+c8ad8cc8ec1262c035a2d0699c263ae5

நாலரை கி.மீ கடுமையான காட்டுப் பாதை வழியாகத்தான் ஜீப் போனது. திடும்மென பாறைகள்... சலசலக்கும் ஓடைகள்... காலைப் புதைக்கும் மணல்திட்டுகள் வழியாக ஜீப் சவாரி செம த்ரில்லிங். ஜீப்பைத் தவிர இங்கே வேறு வாகனங்களை நினைத்தே பார்க்க முடியாது. 1.3 கி.மீ தாண்டி வருவது நெய்யருவி. ‘‘ஜீப் கட்டணம் அதிகமா இருக்கே’’ என்று ஃபீல் செய்பவர்கள், 1. கி.மீ தூரம் நடந்து வந்து நெய்யருவிக்கு வரலாம். நெய்யருவிக்கு இன்னொரு பெயர் ‘பப்ளிக் ஃபால்ஸ்’. அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நெய்யருவிக்கு நடந்து வந்து குளிக்கலாம். தனிக்குடித்தனம் புகுந்த கப்புள்ஸ் மாதிரி, கூட்டம் ரொம்ப சிக்கென இருந்தது. ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. அருவித் தண்ணீர் செம ஜில்..! நெய்யருவியில், ஒகேனக்கல் மாதிரி ஆயில் மசாஜெல்லாம் செய்து விடுகிறார்கள். ‘‘இப்போதாண்ணே எங்களுக்கு டைம்... அதான் 150 ரூபாய்’’ என்று கொழுக் மொழுக்கென ஆயில் மசாஜ் நடந்துகொண்டிருந்தது. நெய்யருவிக்குப் பக்கத்தில் ஒரு மளிகைக் கடை உண்டு. சாப்பாடுகூட இங்கேயே சிம்பிளா சாப்பிட்டுக்கொள்ளலாம். செம ஜில்லென்ற குளியல், வெயிலுக்கு ஆனந்தமாக இருந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty Re: குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 11:30 am

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க GjlkvJTnKHLf8Oh2Duug+6d0f8a8765a0b93d2d8f188f4e788d3c

நெய்யருவியைத் தாண்டி ஜீப் பயணத்துக்கு மட்டும்தான் அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அடுத்து வருவது எல்லாமே தனியார் அருவிகளாம். 1 கி.மீ தூரத்தில், தன்னந்தனியாக ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. ‘அருண்பாண்டியன் அருவி’ என்கிறார்கள் இதை. இங்கே தங்கும் வசதியும் உண்டு. ஒரு நாள் வாடகை, ரூ.2,000. சமைத்துச் சாப்பிடவும் ஆப்ஷன் உண்டாம். மேலே போகப்போக, போன் நெட்வொர்க்கெல்லாம் காலியானது. ஆனால், மனசு நிறைவாக இருந்தது. ‘‘BSNL மட்டும் கிடைக்கும் சார்’’ என்றார் ஜீப் டிரைவர் விஷ்ணு. மனித நடமாட்டமே இல்லை. ஜீப் பயணம் மேலும் த்ரில்லிங்கைக் கூட்டியது.
குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க DP3xKLUjSbSFylDIugLD+475330f2ff0f96e4739f82ff6535248e


மாலை 6.30 மணிக்கு மேல் விலங்குகளைப் பார்க்கலாம் என்றார் டிரைவர். ‘‘யானை, சிறுத்தை, காட்டெருமை எல்லாமே இருக்கு. கரடியும் இருக்குங்கிறாங்க... ஆனா, நான் இதுவரை பார்த்ததே இல்லை’’ என்றார். நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள். எங்கு வேண்டுமானாலும் ஜீப்பை நிறுத்தி குளிக்கலாம். மேலே போகப் போக, குண்டாறு அருவி வந்தது. பெரிதாகக் கூட்டம் இல்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தது. அருவி அமைந்திருந்த இடமே அதகளமாய் இருந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty Re: குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 06, 2018 11:31 am


குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க VaIlL99sS1CJPc1RJEYr+7618218c10b508931856f7e2142a2e09

‘இசை’ பட ஹீரோயின் மாதிரி தன்னந்தனியாய் அருவியில் ஃப்ரீடம் பாத் எடுத்துவிட்டு, கொண்டுவந்த கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டால்... வெயிலை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. குற்றாலத்துக்குக் கிளம்புபவர்கள், அப்படியே குண்டாறு பக்கமும் வண்டியைத் திருப்பினால், ஓர் அற்புதமான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க Empty Re: குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை