ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

View previous topic View next topic Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Feb 16, 2018 8:09 pm

தி இந்துToggle navigation
இந்தியா
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏஎன்ஐ
புதுடெல்லி
614 Subscribe

படம்: வி.சுதர்சன்

Published : 16 Feb 2018 11:02 IST
Updated : 16 Feb 2018 12:30 IST
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி புதுச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு?எண் மாநிலம் நீரின் அளவு
1 கர்நாடகா 284.75 டிஎம்சி
2 தமிழ்நாடு 404.25 டிஎம்சி
3 கேரளா 30 டிஎம்சி
4 புதுச்சேரி 7 டிஎம்சி

தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு:

எற்கெனவே நடுவர் மன்ற வழங்கிய அளவில் இருந்து தற்போது தமிழகத்துக்கு வழங்கப்படக் கூடிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் கூறினார். இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு இனி காவிரியில் இருந்து மொத்தம் கிடைக்கக் கூடிய நீர் 404.25 டிஎம்சி என்ற அளவில் இருக்கும். முன்னதாக இது 419 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.

கர்நாடகாவுக்கு ஏன் கூடுதல் தண்ணீர்?

தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவுக்கு ஏன் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, "பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டும் கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அய்யாக்கண்ணு கருத்து:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, "தமிழகத்துக்கு தண்ணீரின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், அதேவேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும் தமிழகத்துக்கான நீர் பங்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பெற்றுத் தர வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

வழக்கு கடந்து வந்த பாதை..

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,'' மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

காவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று, "காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (வெள்ளி) காலை தீர்ப்பு வழங்கப்படும்'' என அறிவித்தது.

இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
நன்றி
தி இந்து
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Fri Feb 16, 2018 8:41 pm

அனுமதிக்கப்பட்ட அளவை ஒழுங்காக கொடுத்தால் நல்லது.
அதற்கும் தகராறு பண்ணினால் ....அமைக்க படப்போகும்
..காவிரி மேலாண்மை வாரியம் ..பொறுப்பேற்கவேண்டும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by ராஜா on Sat Feb 17, 2018 3:04 am

இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை தான் அவர்கள் (கர்நாடகம் ) மதிப்பதே இல்லையே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by கோபால்ஜி on Sat Feb 17, 2018 11:13 am

யதார்த்தமான தீர்ப்பு..கூடுதல் அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தாலும் அது ஏட்டளவில் தான் இருந்திருக்கும்,கண்டிப்பாக கர்நாடகம் அதை செயல்படுத்தாது.அவ்வளவு ஏன்,நாம் கன்னடர்களாக இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம்..500 tmc என்றே தீர்ப்பு வந்தாலும் அது நமக்கு கிடைக்கவா போகிறது? அதை விட இப்போது சொல்லப்பட்டிருக்கும் அளவை குறைக்காமல் பெற முயல வேண்டும்..அரசியலவியாதிகள் பிரித்தாளும் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்றும்,ஊடகங்கள் தங்கள் பரபரப்பு செய்திகள் போய் விடுமே என்று இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்..இரு மாநில மக்களும்,விவசாயிகளும் தான் இவர்களை ஓரம்கட்டி நல்லுறவு பேணி கிடைக்கும் நீரை சச்சரவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்
avatar
கோபால்ஜி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by SK on Sat Feb 17, 2018 12:33 pm

@SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 1:33 pm

gayathri gopal wrote:யதார்த்தமான தீர்ப்பு..கூடுதல் அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தாலும் அது ஏட்டளவில் தான் இருந்திருக்கும்,கண்டிப்பாக கர்நாடகம் அதை செயல்படுத்தாது.அவ்வளவு ஏன்,நாம் கன்னடர்களாக இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம்..500 tmc என்றே தீர்ப்பு வந்தாலும் அது நமக்கு கிடைக்கவா போகிறது? அதை விட இப்போது சொல்லப்பட்டிருக்கும் அளவை குறைக்காமல் பெற முயல வேண்டும்..அரசியலவியாதிகள் பிரித்தாளும் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்றும்,ஊடகங்கள் தங்கள் பரபரப்பு செய்திகள் போய் விடுமே என்று இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்..இரு மாநில மக்களும்,விவசாயிகளும் தான் இவர்களை ஓரம்கட்டி நல்லுறவு பேணி கிடைக்கும் நீரை சச்சரவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1259670

சரியாக சொன்னீர்கள். அரசியல்வாதிகள் செய்யும் சதிகள் அதிகம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 1:39 pm

@SK wrote:
@SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259677

தீர்ப்பை வரவேற்பதாக தானே கூறினார்.தண்ணீர் தருவதாக கூறவில்லையே.
தண்ணீர் இருந்தால் தருவதற்கு தடை இல்லையென்பார்.
தண்ணீர் இருந்தால் விவசாயிகள் தகராறு செய்கிறார் என்பார்.
நாம்தான் வேறுவழி பார்க்கவேண்டும்.
உதகமண்டலத்திலிருந்து ஏதோ ஒரு ஆறு காவிரியில் போய் கலக்கிறதாம்.
அதை இந்த பக்கம் திருப்ப முயற்சி செய்யலாம் என படித்தேன்.
முழு விவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.
முடிந்தால் தமிழக அரசிற்கும் தெரியப்படுத்தலாம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by M.Jagadeesan on Sat Feb 17, 2018 1:45 pm

இனியும் நம்பிக்கையில்லை ! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமானால் , நீர் நிர்வாகம் அதன் கைக்குப் போய்விடும் . எனவே அதை அமைக்க விடமாட்டார்கள் . காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டார்கள் . தமிழ்நாட்டில் பொம்மை அரசு நடப்பதால் அவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by M.Jagadeesan on Sat Feb 17, 2018 1:49 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:
@SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259677

தீர்ப்பை வரவேற்பதாக தானே கூறினார்.தண்ணீர் தருவதாக கூறவில்லையே.
தண்ணீர் இருந்தால் தருவதற்கு தடை இல்லையென்பார்.
தண்ணீர் இருந்தால் விவசாயிகள் தகராறு செய்கிறார் என்பார்.
நாம்தான் வேறுவழி பார்க்கவேண்டும்.
உதகமண்டலத்திலிருந்து ஏதோ ஒரு ஆறு காவிரியில் போய் கலக்கிறதாம்.
அதை இந்த பக்கம் திருப்ப முயற்சி செய்யலாம் என படித்தேன்.
முழு விவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.
முடிந்தால் தமிழக அரசிற்கும் தெரியப்படுத்தலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259690

ஐயா !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் ( ! ) , சித்தராமையாவைக் கேட்டுத்தான் தண்ணீர் விடவேண்டும் என்பதில்லை . நீர் நிர்வாகம் அவர்கள் கைக்குப் போய்விடும் . கர்நாடக அரசால் எதுவும் செய்யமுடியாது . அதனால் அமைக்கவிடமாட்டார்கள் . மோடியும் ஓட்டுக்காக எதையும் கண்டுகொள்ளமாட்டார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 1:58 pm

MJagadeesan wrote:தமிழ்நாட்டில் பொம்மை அரசு நடப்பதால் அவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது .

எந்த அரசு நடந்தாலும் அவர்கள் தரமாட்டார்கள் என்பது உறுதி.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், நீர்வரத்து சீர்படலாம்.
நடுநடுவே அணை கட்டாமல் இருக்கவேண்டும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by கோபால்ஜி on Sat Feb 17, 2018 8:29 pmஎந்த அரசு நடந்தாலும் அவர்கள் தரமாட்டார்கள் என்பது உறுதி.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், நீர்வரத்து சீர்படலாம்.
நடுநடுவே அணை கட்டாமல் இரு

நல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா..இறைவனையும் வேண்டுவோம்
avatar
கோபால்ஜி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 8:36 pm

அதுமட்டுமல்ல .
நாமும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்ட இப்பவே திட்டமிடல் வேண்டும்.
கடலில் நீர் அனாவசியமாக கலப்பதை தடுக்க முயற்சிக்கவேண்டும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:48 am

@T.N.Balasubramanian wrote:அனுமதிக்கப்பட்ட அளவை ஒழுங்காக கொடுத்தால் நல்லது.
அதற்கும் தகராறு பண்ணினால் ....அமைக்க படப்போகும்
..காவிரி மேலாண்மை வாரியம் ..பொறுப்பேற்கவேண்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259561
இது நடந்தால் நல்லது
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:50 am

gayathri gopal wrote:

எந்த அரசு நடந்தாலும் அவர்கள் தரமாட்டார்கள் என்பது உறுதி.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், நீர்வரத்து சீர்படலாம்.
நடுநடுவே அணை கட்டாமல் இரு

நல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா..இறைவனையும் வேண்டுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1259755
இது பற்றி நான் தனி திரி எழுதி
உள்ளேன் ஐயா நீங்கள்
தவறாது படிக்கவும்
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:54 am

gayathri gopal wrote:

எந்த அரசு நடந்தாலும் அவர்கள் தரமாட்டார்கள் என்பது உறுதி.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், நீர்வரத்து சீர்படலாம்.
நடுநடுவே அணை கட்டாமல் இரு

நல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா..இறைவனையும் வேண்டுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1259755
இது நடக்கும் என்று நம்புவோம்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நடக்கும் என்று நம்புவோம்.
ஆறு யாருக்கும் சொந்தமில்லை.
இது உண்மையாகும்?
பார்ப்போம்.
நன்றி காயத்ரி கோபால்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:57 am

@T.N.Balasubramanian wrote:
MJagadeesan wrote:தமிழ்நாட்டில் பொம்மை அரசு நடப்பதால் அவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது .

எந்த அரசு நடந்தாலும் அவர்கள் தரமாட்டார்கள் என்பது உறுதி.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், நீர்வரத்து சீர்படலாம்.
நடுநடுவே அணை கட்டாமல் இருக்கவேண்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259697
இன்னும் இதில் நமக்கு நம்பிக்கை வர மறுக்கிறது.
பார்ப்போம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:59 am

@SK wrote:
@SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259677
தண்ணீர் வரும் ...வரும்
நன்றி
நண்பா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 9:35 am

@ராஜா wrote:இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை தான் அவர்கள் (கர்நாடகம் ) மதிப்பதே இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1259594
மேலாண்மை ஆணையம் அமைத்து விட்டால்
ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்,
பார்ப்போம்
நன்றி ராஜா அவர்களே
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 9:36 am

@ராஜா wrote:இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை தான் அவர்கள் (கர்நாடகம் ) மதிப்பதே இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1259594
மேலாண்மை ஆணையம் அமைத்து விட்டால்
ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்,
பார்ப்போம்
நன்றி ராஜா அவர்களே
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 9:37 am

gayathri gopal wrote:யதார்த்தமான தீர்ப்பு..கூடுதல் அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தாலும் அது ஏட்டளவில் தான் இருந்திருக்கும்,கண்டிப்பாக கர்நாடகம் அதை செயல்படுத்தாது.அவ்வளவு ஏன்,நாம் கன்னடர்களாக இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம்..500 tmc என்றே தீர்ப்பு வந்தாலும் அது நமக்கு கிடைக்கவா போகிறது? அதை விட இப்போது சொல்லப்பட்டிருக்கும் அளவை குறைக்காமல் பெற முயல வேண்டும்..அரசியலவியாதிகள் பிரித்தாளும் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்றும்,ஊடகங்கள் தங்கள் பரபரப்பு செய்திகள் போய் விடுமே என்று இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்..இரு மாநில மக்களும்,விவசாயிகளும் தான் இவர்களை ஓரம்கட்டி நல்லுறவு பேணி கிடைக்கும் நீரை சச்சரவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1259670
நல்லது நடந்தால் சரி
நன்றி காயத்ரி கோபால்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by மூர்த்தி on Sun Feb 18, 2018 12:42 pm

மாநில பிரிப்பின் போது தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமலே எல்லாம் முடிந்தது.அதேபோல் ஆணையத்திலும் தமிழ் நாட்டிற்காக யாரும் இல்லையேல் கர்நாடகா சொல்வதையே கேட்பார்களே .
கோடை காலத்தில் நீர் இல்லை என்று எல்லாத் தண்ணீரையும் மார்கழியில் திறந்து விட்டால்?
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 1:00 pm

@மூர்த்தி wrote:மாநில பிரிப்பின் போது தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமலே எல்லாம் முடிந்தது.அதேபோல் ஆணையத்திலும் தமிழ் நாட்டிற்காக யாரும் இல்லையேல் கர்நாடகா சொல்வதையே கேட்பார்களே .
கோடை காலத்தில் நீர் இல்லை என்று எல்லாத் தண்ணீரையும் மார்கழியில் திறந்து விட்டால்?
மேற்கோள் செய்த பதிவு: 1259847
காவேரியையே மறந்து விட வேண்டும் போல் இருக்கிறது.
நன்றி மூர்த்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum