உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 4:48 am

» தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்
by ayyasamy ram Today at 4:46 am

» டில்லியில் தாக்குதல் நடத்த சதி:உளவுத் துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:42 am

» 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை
by ayyasamy ram Today at 4:40 am

» தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது?
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» அப்பாடா..கடைசியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அது வந்தே விட்டது!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» எடு பணத்தை- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புறநகர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» டெங்கு காய்ச்சலை தடுக்க டிப்!ஸ்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» மருந்து கவர்ல சீரியல் பெயர் எழுதி இருக்கே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:00 pm

» துன்பத்தில் இருப்பவனை உடனே போய்ப்பார்!
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» வாழ்க்கை தத்துவம்...!
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» சொன்னதை செய்த இமான்.... மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» அப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» வீட்டுக் குறிப்புகள்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am

» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» 2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» கற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 7:19 pm

» மருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி
by ayyasamy ram Tue Oct 22, 2019 6:14 pm

» தீபாவளி ஸ்பெஷல்! --ஸ்வீட் & கார வகைகள்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:47 pm

» கந்தன் வருவான்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:40 pm

» அஜித் படத்தில் நஸ்ரியா?
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:38 pm

» காய்ச்சலும் கடந்து போகும்!
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:33 pm

» புருஷனை test எலியா மாத்தாதீங்க.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:40 pm

» வாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:36 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 4:29 pm

» வைரல் சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:27 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:25 pm

» 13031- 3131- ஒரு வித்தியாசமான எண்கள் இந்த பதிவில்
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 3:54 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by pkselva Tue Oct 22, 2019 2:24 pm

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:47 pm

» சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா? – மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:30 pm

» ரவுடியாக ஆசை! ‘அசுரன்’ மாரியம்மா சொல்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:28 pm

» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:06 pm

» நடிப்பதே தெரியக்கூடாது! நடிகை அம்மு அபிராமி
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:01 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

» மாற்றம் ஒன்றுதான் மாறாதது...!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:22 am

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 09, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-123

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்


தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- றிவறிந்து - ற்றின்- டங்கப் , செறிவறிந்து - சீர்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 18, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-124

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- லையினும் - மாணப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 18, 2019 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-125

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எல்லார்க்கும்  நன்றாம்  பணித  லவருள்ளுஞ்
செல்வர்க்கே   செல்வந்  தகைத்து


தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எல்/லார்க்/கும்----- நன்/றாம்--------  பணி/த-----------  லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்  
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


செல்/வர்க்/கே-----செல்/வந்-------  தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்க்கும்  - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே   செல்வந்  
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 18, 2019 11:12 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-126

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை


எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-மைபோல்- ஏமாப்
மோனை- மைபோல்- ற்றின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-127

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை


சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 26, 2019 11:05 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-128

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்


தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை


நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- ன்றானுந்- நன்றாகா
மோனை- ன்றானுந்- ண்டாயி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 31, 2019 10:37 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-129

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு


தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 31, 2019 10:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-130

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கதங்காத்துக்  கற்றடங்கல்  ஆற்றுவான்  செவ்வி
அறம்பார்க்கும்  ஆற்றின்  நுழைந்து


தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்    
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர்  ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை


அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு  
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ற்றடங்கல் - ஆற்றுவான்  - அம்பார்க்கும் - ஆற்றின்  
மோனை- றம்பார்க்கும் - ற்றின் - ற்றுவான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 31, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒழுக்கம் விழுப்பம்  தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்


தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்    
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை  
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ம்பப் படும்- ழுக்கம்- யிரினும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 13, 2019 3:52 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-132

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை


தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 18, 2019 10:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-133

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்


தெளிவுரை
ஒருவனது குடிக்குப் பெருமை தருவது அவனது ஒழுக்கமே. ஒழுக்கம்
தவறினால் அவனது மனிதப் பிறவி பயனற்றுப் போகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கம்-------- உடை/மை--------- குடி/மை-------- இழுக்/கம்
நிரை/நேர்---------நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமா---------------புளிமா-------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


இழிந்/த--------- பிறப்/பாய்------------ விடும்
நிரை/நேர்--------நிரை/நேர்------------நிரை
புளிமா------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- ழுக்கம்- இழுக்கம்
மோனை- ழுக்கம் –டைமை, ழுக்கம்- ழிந்த
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 18, 2019 10:53 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-134

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்  பார்ப்பான்
பிறப்பொழுக்கம்  குன்றக் கெடும்


தெளிவுரை
தன் கற்ற  சாத்திரங்களை ஒருவன் மறந்துவிட்டாலும், மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அவனது ஒழுக்கம் ஒருமுறை கெடுமாயின் திரும்பப் பெற முடியாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மறப்/பினும்------ ஓத்/துக்---------- கொள/லா/கும்-----பார்ப்/பான்
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்  
கருவிளம்----------தேமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


பிறப்/பொழுக்/கம்------ குன்/றக்------- கெடும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை  
கருவிளங்காய்------------தேமா--------------மலர்
வெண்சீர் ------------------ இயற்சீர்
வெண்டளை--------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2. மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- மப்பினும்- பிப்பொழுக்கம்
மோனை-த்துக் கொளலாகும்- குன்றக்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 18, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-135

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு


தெளிவுரை
மனக்கோட்டம் உடையவனுக்கு வளர்ச்சி இல்லை . அதுபோல்
ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு இல்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கா-------- - றுடை/யான்/கண்----ஆக்/கம்/போன்------ றில்/லை
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்--------நேர்நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை-------- வெண்டளை


ஒழுக்/க---------- மிலான்/கண்------உயர்/வு
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா--------------புளிமா----------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயர்வு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5.மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- ழுக்கா- ஒழுக்க
மோனை- ழுக்கா- க்கம்போன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 09, 2019 11:32 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-136

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதல் படுபாக் கறிந்து


தெளிவுரை
ஒழுக்கக்கேடு இழிவைத் தரும் என உணர்ந்து எந்நிலையிலும்
அறிவுடையோர் ஒழுக்கம் தவறார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கத்/தின்----- ஒல்/கார்-------- உர/வோர்-------- இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


ஏ/தல்------------- படு/பாக்-------- கறிந்/து
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ழுக்கத்தின்- இழுக்கத்தின்
மோனை- ழுக்கத்தின் - ல்கார் - ரவோர் , ழுக்கத்தின் - தல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 09, 2019 11:48 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-137

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி


தெளிவுரை
ஒழுக்கம் புகழைத் தரும்; ஒழுக்கக்கேடு பழியை உண்டாக்கும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கத்/தின்------- எய்/துவார் ------மேன்/மை-------இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை

எய்/துவார்------- எய்/தாப்------- பழி
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழுக்கத்தின்- இழுக்கத்தின் , எய்துவார்- எய்துவார் -எய்தாப்
மோனை- ய்துவார்- ய்துவார் -ய்தாப் - ழுக்கத்தின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13048
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3141

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை