புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Rutu
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 6%
manikavi
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
1 Post - 3%
Rutu
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 02, 2018 3:32 pm

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 J9xuBSfR3esnKvgJo4TA+220px-Naanal_Film_Poster_



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 02, 2018 3:34 pm

மேல கூறிய விடை Wikipedia வில் இருந்து எடுத்து



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 02, 2018 4:02 pm

02 .01 .2018 


சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Dg11SlsTmKfAwF4Bc92g+The-Winner-Is-Smiley-Face1

நமக்கு கை குடுக்கிறதே Google தானே. ஒவ்வொண்ணை பற்றியும் லட்சக்கணக்கான தகவல்கள் கொடுக்கிறது அதுதானே. 

Heezulia 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 03, 2018 12:48 pm

இதை எல்லாம் மூளை உள்ளவங்கஃளால் தான் பதில் தர முடியும், என்னால முடியாது. தொடர்ந்து பதிலும் தந்திடுரீங்க, சின்ன பிள்ளைகள் நாங்கள் நிச்சயம் பரிட்சையில தேர்ந்திடுவோம். நன்றி பேகம் அம்மா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 03, 2018 12:54 pm

heezulia wrote:02 .01 .2018 


சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 2 Dg11SlsTmKfAwF4Bc92g+The-Winner-Is-Smiley-Face1

நமக்கு கை குடுக்கிறதே Google தானே. ஒவ்வொண்ணை பற்றியும் லட்சக்கணக்கான தகவல்கள் கொடுக்கிறது அதுதானே. 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255639

அப்போ பரிசு தொகை 50000 /- எப்போ தருவீங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 03, 2018 6:44 pm

03.01.2018 

என்ன SK, 


ஐம்பதாயிரம்தானே, அதுக்கு மேல வேண்டாமா? 


நான் daily daily அனுப்புறதே 50  கோடிக்கு மேல பெறுமே. 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 2:20 am

03.02.2018


ஒரு இளைஞனும், இளைஞியும் நிக்கிறாங்க. ஒரு பெரியவர் sofaல உக்காந்திருக்கார்.

பெரியவர் : இந்த உலகத்தில நன்றிங்கற வார்த்தைக்கே அர்த்தமில்லடா. எந்தக்கை குடுக்குதோ அந்தக்கையவே வெட்டுவாங்க. எந்த இதயம் அன்பு காட்டுச்சோ அந்த இதயத்துக்கே ஆபத்து உண்டாக்கிருவாங்க.  

இளைஞனும், இளைஞியும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து முழிக்கிறாங்க. 

பெரியவர் : பாஸ்கர், உங்க அப்பாவுக்கு ஒரு அவமானம்னா அது உன்னையும் சேர்ந்ததில்லியா? 

பாஸ்கர் : நிச்சயமா. 

பெரியவர் : அந்த அவமானத்த உண்டாக்கினவங்க யாராயிருந்தாலும்

பாஸ்கர் : என் எதிரீங்கப்பா 

பெரியவர் : [கோபமா] அப்போ அந்த எதிரியோட தங்கயயே நீ கல்யாணம் பண்ணிக்க போறியா ?

பாஸ்கர் [அதிர்ச்சியுடன்] அப்பா 

பெரியவர் : [அந்த இளைஞியா பார்த்து ] சட்டமே பெரிசுன்னு நெனச்சு உன் அண்ணன் போலீஸோட வந்து என் வீட்ட சோதன போட்டான். 

பாஸ்கரை தள்ளி விட்டுட்டு, அந்த இளைஞி பக்கத்தில பெரியவர் வர்றார். 

பெரியவர் : என் பணத்துக்கு அழிவு வந்தாகூட நான் கவலப்படமாட்டேன். ஆனா ஏம்மானத்துக்கு அழிவு வந்தா நிச்சயம் நான் விடமாட்டேன். [வெறுப்பா ] அன்னிக்கி நானே உங்க காதல வாழ்த்தினேன். இன்னிக்கி நானே அந்த காதல அழிக்கிறேன். 

இளைஞி திகைச்சு நிக்கிறா. அவ கண்களில் கண்ணீர். 

பெரியவர் : இனிமே பாஸ்கர் உன்ன பாக்கமாட்டான். நீயும் அவன பாக்கக்கூடாது. பார்க்கவும் முடியாது. 
[குரலை உசத்தி ] கெட் அவுட். 

கையைத்தூக்கி வாசலைக் காட்றார். இளைஞி அழுதுகொண்டே கவலையுடன்பாஸ்கரை பார்க்கிறா. அவனும் அவளை கவலையுடன் பார்க்கிறான். ஒண்ணும் செய்ய முடியாம, பேச முடியாம தலை குனிஞ்சு நிக்கிறான். அவள் எதிர்பார்த்தபடி அவன் பேசாததினால அவள் அழுதுட்டே வெளியே ஓடுறா. பெரியவர்பாஸ்கரனை திரும்பி பார்க்கிறார். அவன் பக்கத்தில வந்து, 

பெரியவர் : காதல எழக்கிறது கஷ்டந்தாண்டா. ஆனா கவுரத்த எழக்கிறது அதவிட கஷ்டம்.


சொல்லிட்டு அவர்பாட்டுக்கு நகர்ந்து போறார். இவன் அழுறான். 

அடுத்த ஸீன். 

ரெண்டு பேர், ஒரு பொண்ணும், சின்னப்ப பையனும் நிக்கிறாங்க. முகத்தை காட்டல. அவங்க பக்கத்தில ஒரு சின்ன மேஜை இருக்கு. அதுக்கு மேல ஒரு நகைப் பெட்டி. அதுல அந்தப் பொண்ணு நகைகளை கழத்தி அந்த நகைப்பெட்டில போடுறா. இப்போ கேமரா மேலே போவுது. அந்த ரெண்டு பேர் முகமும் தெரியுது. அவங்க ரெண்டு பேர் பக்கத்திலேயும் ஒருத்தர், கையில ஒரு ரெஜிஸ்டர் வச்சு, நகைகளை லிஸ்ட் போட்றார். இப்போ அந்தப் பொண்ணு வளையலையும், நெக்ளெசையும் கழட்றா. அந்த சின்ன பையன் அவன் போட்டிருந்த செயினை கழட்றான். லிஸ்ட் போன்றவர் "அவ்ளவுதானாம்மா?"ன்னு கேக்குறார். பொண்ணு ஒண்ணுமே சொல்லாமே நிக்கிறா. 

அந்த ஆள் : அவ்ளவுதானாம்மா, அத்தனையும் சேத்தாலும் 100 பவுன்கூட வர்லியே. ஒரு பத்தாயிரத்துக்கு பணம் சேத்துட்டாலும், பாக்கிக்கு தவண வாங்கிறலாம். 

பொண்ணு : எப்படி தீனதயாளன் மாமாவுக்கு கௌரவம் பெருசோ, அதேபோல எங்களுக்கும் நாணயந்தான் பெருசு. இனி பட்டினி கிடந்தாவது அவர் பணத்த கட்டிர்றதா சொல்லிருங்க. 

இந்த சமயத்தில அந்த இளைஞி வர்றா. இந்தப் பொண்ணு பக்கத்தில வந்து நின்னு, அவளையும், நகைப்பெட்டியையும் பார்க்கிறா. அந்த ஆளையும் பார்க்கிறா. அவள் மோதிரத்த கழட்றா. 

பொண்ணு : ப்ரபா, உன் நகையெல்லாம் இருக்கட்டும்மா. நாந்தான் வெளியே எங்கயும் போப்போறதில்லியே. எனக்கு இதெல்லாம் தேவ இல்லேம்மா. 

பிரபா : எனக்கு எதுவும் வேணாம். அண்ணி,அண்ணன் குடுத்ததுதானே இதெல்லாம். அவனுக்கு அவமானம் ஏற்படும்போது, எனக்கு மட்டும் எதுக்கு அலங்காரம்? 

சொல்லிட்டே நகையை கழட்றா. நகைப்பெட்டில போட்றா. வெளிலே இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் வர்றார். அவரும் இவங்க பக்கத்தில வந்து, அந்த பொண்ணுங்களையும், அந்த ஆளையும், நகைப்பெட்டியையும் பார்க்கிறார். 

அந்த ஆள் : மொதலாளி உத்தரவுங்க. அம்பதனாயிரம் கடன கேளு. தரலேன்னா, கோர்ட்டு மூலமா வசூல் பண்ணுவேன்னு சொல்ல சொன்னாரு. 

இன்ஸு : தீனதயாளன் சாருக்கு நான் கடன் குடுக்க வேண்டியதிருக்கு. அத உணர்றேன். ஆனா ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர், அம்பதாயிரம் ரூபாய ஒடனே கட்றதுங்கறது ரொம் ... ப  கஷ்டம். எப்டியாவது செரமப்பட்டு, நான் ஆய்சு முடியருதுக்குள்ளயாவது அந்த பணத்த குடுத்துர்றேன்னு சொல்லுங்க. 

அந்த ஆள் : சரி சார். 

அவன் அங்கேயிருந்து போறான். இன்ஸு  ரெண்டு பெண்களையும் பார்க்கிறார். பிரபா அந்த இடத்தை விட்டு அழுதுட்டே ரூம்குள்ள ஓட்றா. 

இன்ஸு : ப்ரபா 

பிரபா ஓடி வந்து bedல உக்காந்து அழுறா. பின்னாலேயே இன்ஸு ஓடி வர்றார். 

இன்ஸு : அழாத. எப்டியும் அந்த பணத்தை கட்டிர்லாம். 

பிரபா : [அழுதுட்டே] பணத்த கட்டிர்லாம். ஆனா, பறிபோன ஏங்காதல என்னண்ணா பண்ணுவ? பாஸ்கர இனிமே நான் பாக்ககூடாது, பேசகூடாதூன்னு, தீனதயாளன் மாமா சொல்லிட்டாருண்ணா. 

ஏங்கி ஏங்கி அழ்றா. இன்ஸு திகைச்சு நிக்கிறார். அவருக்கு கோவம் வருது. 

அடுத்த ஸீன் 

Busyயான ஒரு கடைத்தெரு. ஒரு பெரிய கார் வருது. தெருவில ஒருத்தன் ஜாலியா நடந்து போறான். கார் கதவு திறக்கவும், இவன் அந்த கதவில் மோதவும் சரியா இருக்கு. அதில அவர் வைத்திருந்த பாட்டில் கீழ விழுந்து ஒடஞ்சு போவுது. அவர் அலர்றான். கார்ல இருந்தவன் வெளில வர்றான். 

அவன் : அயோ அயோ அயோ பத்து ரூவா குடுத்து மருந்து வாங்கினேன் நானு. எங்க அம்மா அங்க சாவ கெடக்கறாங்க. மருந்து புட்டி ஒடஞ்சுட்ட  மாதிரி அவங்க செத்து போனாங்களா என்னான்னு தெரியலியேடா யப்பா. யம்மாடி ................. 

அவன் ஓ .................................. ன்னு அழுறான். அப்பதான் கார்ல இருந்து வெளிய வந்தவனை பார்க்கிறான். நடுங்குறான். கையெல்லாம் நடுங்குது. கார்காரன் தெனாவட்டாவும், நக்கலாவும் கேட்கிறான். 

கார்காரன் : அண்ணக்கி செத்தாங்களே அவங்க எத்தனையாவது அம்மா? 

அவன் : நீங்க சார், அது தெரியாது சார் [உளர்றான்] 

அவன் தப்பிக்க பாக்குறான். கார்காரன் அவன் சட்டையை பிடிச்சு "ராஸ்கல், பாட்ல ஒடச்சா நீ ஊர ஏமாத்ற, யார்யா, எல்லாரும் இங்க வாங்கய்யா"  

அதுக்குள்ள அங்க ஜனங்க வந்துர்ராங்க. 

கார்காரன் : பாத்தீங்களாய்யா, அம்மா சாகக்கிடக்றான்னு பொய்ய சொல்லி, பாட்ல ஒடச்சு எல்லார்ட்டயும் பத்து ருவா வாங்றான். இவான சும்மா விடலாமா? அரிசி வில கொறஞ்சு போச்சு. இவன் பத்ருவா ரே ... ட்டு கொறயலியாம். 


இப்படி சொல்லி கார்காரன் அவனை அடிக்க ஆரம்பிக்க, எல்லாரும் அவனை அடிக்கிறாங்க. அவன் கீழ உக்காந்துர்றான். உக்காந்தவன் அடிக்கிறவங்க கால்களுக்கு இடையே வந்து தப்பிச்சு ஓடுறான். அதப் பாத்தா ஜனங்க அவன வெரட்டிட்டு ஓடுறாங்க. தப்பிச்சவன் அவங்களுக்கு போக்கு காட்டிட்டு, வேற வழியா, வேற வேஷத்தில் வந்து, கார்காரனை பார்க்கிறான். கார்காரன் 'பிரபாத் டயர் கம்பெனி' ன்னு போர்ட் போட்டிருக்கிற இடத்துக்கு போயி நின்னு, பின்னால பாத்து "வரலாம்" னு சைகை காட்டிட்டு வேகமா அந்த கம்பெனிக்குள்ள போறான். அவனுக்கு பின்னால லாரி ஒண்ணு அந்த கம்பெனிக்குள்ள போகுது. இதையெல்லாம் அந்த பத்து ருவா பாக்றான். லாரி நம்பரை க்ளோஸ்ல காட்றாங்க. APQ 9911. இதையும் பத்து ருவா பாக்றான். 

அடுத்த ஸீன் 

போலீஸ் ஸ்டேஷன். ஒரு இன்ஸு அங்க உக்காந்திருக்கார். பத்துருவா அங்க வர்றான். 

பத்துருவா : அண்ணிக்கு நானு ............. பொட்டில பணம் வச்சிருந்தேன்னு .............. கேள்வி கேட்டீங்களே சாரு, அதே பொட்டியும் பணத்தையும்  கிளப்ல தகராறு பண்ணிகினாங்களே பசங்க, அதே பசங்கதான் ப்ரபாத் டயர் கம்பெனிக்குள்ள பூந்தத ஏங்கண்ணா ....... ல  பாத்துகினேன் நானு. சொய்.............ங், அப்டீயே வந்து கார் நிக்கிது, அவங்க என்னா doorர  தொறக்குறானுங்க என்னா நட நடக்குறானுங்க தெரியுங்களா அவன். த, ரைட்ல பாத்துக்றானுங்க, leftட்டையும் பாத்துக்னாங்க, ஆ ஜிங்கு ஆ ஜக்கு 

கைகளையும், உடம்பையும் ஆட்டி ஆட்டி பேசுறான். வேடிக்கையா இருக்கு. அதுக்குள்ள இன்ஸு குறுக்கால பேசுறாரு. 

இன்ஸு : தாஸு, உள்ள போனாங்க, அவ்வளவுதான. 

இப்பதான் அவன் பேர்  தாஸூன்னு தெரிஞ்சுது நமக்கு.    இனிமே பாத்துருவாதான்  தாஸ். 

தாஸ் : அதுமட்டுமா,  ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு லாரி கூடவே பூந்துச்சு, நான் இன்னா உட்டுப்னா ? அப்டியே குனிஞ்சு [தாஸும் குனிறான்] பாத்துக்னேன் நானு, APQ டபுள் நைன் டபுள் ஒண் 

இன்ஸு : APQ டபுள் நைன் டபுள் ஒண் 

தாஸ் : அதான் ............ டபுள் ஒம்போது டபுள் ஒண்ணு அது. இதான். IG சாரு, இன்னிக்கி நல்ல நாளோ கேட்ட நாளோ, ராகுகாலமோ எமகண்டமோ, அதுபத்தி எனக்கு தெரியாது, கவலபட்ல நானு. இந்த தொழில்க்கு இன்னோட முழுக்கு போட்டுக்றேன் சார், அப்போ எதுக்கு, tableல இதயெல்லாம் எடுத்து வச்சுகுறேன் சார் நானு, பாட்லெல்லாம்.  

கோட்  பாக்கெட்கள்லேயிருந்து ரெண்டு மூணு பாட்டில் எடுத்து இன்ஸு டேபிள் மேலே வைக்கிறான். 

தாஸ் : [பாட்டில்கள டேபிள் மேலே வச்சுக்கிட்டே] இதுக்கு ஒரு கார்க்கு. எப்டி தொறக்குது பாரு, [சொல்லிட்டே திறந்த ஒரு பாட்டில கார்க் வச்சு மூடுறான்.] இதெல்லாம் ......... [தொப்பியை கழட்டி ஒரு பாட்டில எடுக்கிறான்.]  தலயெழுத்து, தலைல கூட ஒரு புட்டி. ஏன்னா என்ன அடையாளம் தெரிஞ்சிகிட்டானுங்க இன்னிக்கி, அர்ஜண்ட் சலவைய வெளுவெளுவெளுன்னு வெளுப்பங்களே  அதுமாதிரி வெளுத்து கட்னானுங்க. [மேஜைல இருக்கிற பாட்டில்களை காட்டி] நாளக்கி இதே பிஸ்னஸ நான் continue பண்ணினேன்னு வச்சுக்கோங்க நீங்க, ஆலம்சாயிப் கடதெருவுல ஆட்டுக்கறி தொங்க விட்றானே அதமாதிரி தொங்கவிட்ருவானுங்க நானு. எதுக்கு IG சார், எனக்கு இதெல்லாம்? 

இன்ஸு : இந்தாப்பா, போலீஸ்க்கு துப்பு குடு. ஒனக்கு அப்பப்போ சன்மானம் தரசொல்றேன். சரிதானா?

தாஸ் : [சிரிக்கிறான்] அய்யய்யோ அய்யய்யோ. இப்டீ சொல்லிட்டே, கையை ஆட்டுறான். 

இன்ஸு : வேண்டாங்றியா? 

தாஸ் : ஐயோ, எனக்கு, என்னது சந்தோஷ்த்ல கைய ஆட்டிக்கினேன் நானு, எனக்கு ஏன் சார் இத போயி, ஐயோ, நான் வறேன் சாரு. [உளர்றான்]

இன்ஸு : ஏம்பா, பாட்ல் [மேஜை மேல இருக்கிற பாட்டில்களை காட்றார்]

தாஸ் : மஞ்சிக்குங்க, ஓல்டு பிஸ்ஸுனெஸ்ஸு மறுபடியும் இதல்லாம் எடுத்துகின்னு, எடுத்துகிறேன் நானு, நான் வரேன் சார். 

தாஸ் பாட்டிலையெல்லாம் கையில எடுத்துட்டு IG ரூமை விட்டு வெளியே வர்றான். ஸ்ப்ரிங் கதவை தொறந்துட்டு வெளியே வரவும் அந்த இன்ஸு உள்ளே வரவும் சரியா இருக்கு. ரெண்டு பெரும் மோதி, தாஸ் கையிலிருந்த பாட்டிலெல்லாம் கீழே விழுந்து ஒடஞ்சுருது. தாஸ் பழக்க தோஷத்துல ஓ ............................ அழுறான். இன்ஸு அவனை அதட்டி,

இன்ஸு : ஷ்ஷ்ஷ்ஷு மறுபடியும் ஏங்கிட்டியே ஒவ்வேலய ஆரம்புச்சுட்டே. 

தாஸ் : மறந்தே போய்கினேன் சாரு  நானு. பாட்லு உழுந்துச்சு ஒடஞ்சுதோ இல்யோ, ஆட்டோ...மேடிக்கா அழ வந்துருது. நான் என்னா பண்றது? பாட்ல ஓடக்கிற தொழில இன்னியோட ராஜினாமா பண்ணிக்கிறேன் நானு. [போட்டிருக்கின கோட்டை ஆட்டிகினே] IG எனக்கு நல்ல போஸ்ட்டு குடுத்துகினாரு. 

இன்ஸு வெளியே போறதுக்கான வழியை காட்டி "Getout " னு சொல்றார்.  

தாஸ் : வரேன் சார்.

இன்ஸு IG ரூம்குள்ள போறார். தாஸ் வெளியே போறான். IG ரூம்க்கு வெளில துப்பாக்கி வச்சுட்டு ஒரு கான்ஸ்டபிள் நிக்கிறான். அவன் தாஸுக்கு சலூட் அடிச்சுகினான். தாஸ் வெளிய போறான். இன்ஸு IG ரூம்குள்ள போயி IG க்கு சலூட் அடிச்சுகினார். 

IG : அன்னிக்கி க்ளப்புல தாஸ் கூட பணத்துக்காக சண்டை போட்டவங்க, ப்ரபாத்  டயர்  கம்பெனிகுள்ள  நொழஞ்சத தாஸ் பார்த்தானாம். 

இன்ஸு : நான் ஏற்கனவே அந்த கம்பெனிய சோதன போட்டுட்டேன். அங்க ஒரு துப்பும் கெடக்கல சார். 

IG : அதோட ஒரு லாரி உள்ள நொழஞ்சத பார்த்ருக்கான். லாரி நம்பர் APQ  தொண்ணுத்தொம்பது பதினொண்ணு. 

இன்ஸு : உடனடியா நான் நடவடிக்க எடுக்றேன். 

இதுக்கு மேல எழுதுக்கினா சரியில்ல. இது எந்த படத்துல வந்துகிது, இந்த வசனங்கள பேசிக்கினது யாரு யாரு ?சொல்லுங்க. 


1967ல வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் படம்.  

ɐᴉlnzǝǝH  மீண்டும் சந்திப்போம்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Jan 04, 2018 6:54 am

நண்பர்களே யாருக்காவது இளையராஜா இசை அமைத்த அனைத்து தமிழ் திரைப்படத்தின் பெயரும் அதில் வரும் அனைத்து பாடல்களின் விவரங்களும் தெரியுமென்றால் தயவு செய்து பதிவிடுங்களேன் .வலைதளித்தில் தேடினால் சரியான விடை இல்லை.நன்றி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 04, 2018 10:29 am

எதிரிகள் ஜாக்கிரதை



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4205
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 10:49 am

04.01.2018 
இளையராஜா இசை அமைத்த அனைத்து தமிழ் திரைப்படத்தின் பெயரும் அதில் வரும் அனைத்து பாடல்களின் விவரங்களும் தெரியுமென்றால் தயவு செய்து பதிவிடுங்களேன் 
நான் ரெடி. 1976 அன்னக்கிளில இருந்து இளையராஜாவின் பாட்டு நான் தருகிறேன். ஆனா லிங்க் எப்படி குடுப்பதுன்னுதான் தெரியல. link கொடுத்தா, இந்த தளத்தில வரல. எப்படி குடுப்பதுன்னு சொல்லுங்க. நான் ஆரம்பிக்கிறேன். வேற யாருக்கு என்ன பாட்டு வேணும்? 

Heezulia

Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக