உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Padmajavasudevan Today at 5:13 pm

» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

Admins Online

பழைய தமிழ் திரைப்படங்கள்

best பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Dr.S.Soundarapandian on Wed Mar 28, 2018 9:09 pm

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5059
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Wed Mar 28, 2018 11:00 pm

28.03.2018

உங்க ரெண்டு அருமைங்களுக்கும் நன்றி நன்றி SP சார். 

ஆமா................... இந்த ரெண்டு அருமைங்களும் தாலி பாக்கியத்துக்கா, இல்ல கண்ணாம்பா வீட்டுக்கா? இல்ல அதுக்கு ஒண்ணு, இதுக்கு ஒண்ணா? 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Mar 29, 2018 8:38 am

@heezulia wrote: தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
[url=http://www.eegarai.net/t141193p150-topic#1252468]மேற்கோள் செய்த பதிவு: 1252468[/ஊர் நல்ல தகவல்கள் இருந்தா அனுப்புங்களேன். பயனாக இருக்குமே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4389
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1342

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Mon Apr 09, 2018 9:08 pm

09.04.2018

வித்தியாசமான படம்

13. இதய வீணை  1972

ஒரு வக்கீல். இவருக்கு ஒரு பொம்பள புள்ள, ஒரு ஆம்பள பையன். பையனோட நண்பன்  செஞ்ச ஒரு குழப்பத்தால, அந்த பையனோட அம்மாவும், அப்பாவும் மகனை  வீட்டை விட்டு வெரட்டிர்றாங்க. அப்பாவும், மகனும் சத்தியம் செஞ்சுகிறாங்க. சாகுற வரைக்கும்  மகனேன்னு கூப்பிட மாட்டார்னு அப்பாவும், அப்பான்னு யார்ட்டையும், எங்கேயும் சொல்ல போறதில்லேன்னு மகனும் சத்தியம் செய்றாங்க. பையன் வீட்டை விட்டு வெளியே போறான்.

பையன் வளர்ந்து வாலிபனாகிறான். இவன் வளந்தா, தங்கச்சியும் வளந்துதானே ஆகணும். ஒரு சந்தர்ப்பத்தில, தங்கச்சிய அண்ணன் அடையாளம் கண்டுகிறான். ஆனா உண்மைய சொல்ல முடியல.

ஒரு பணக்காரனை தங்கச்சி காதலிக்கிறா. காதலுக்கு  சில தடைகள் வருது. அண்ணன்ங்கற முறைல, அவன் கஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்தை முடிச்சு வைக்கிறான். ஆனா வேற யாருக்கும் அவன்தான் அண்ணன்னு தெரியாது. அம்மாவுக்கு கூட. இதுக்கிடையில அண்ணனுக்கும் ஒரு காதல் வருது.

வில்லன்கள் வேணுமே. அவங்க இல்லாமலா? அவங்களால அண்ணன் மேல ஒரு வீணா போன கொலைபழி விழுது. ஒரு தலைமறைவு வாழ்க்கை. ஒரு நாள் போலீஸ்காரங்க துரத்துறாங்க. அண்ணன் ஓடி வந்ததுல தங்கச்சி வீட்டுக்கு வந்துட்டான். அதுவும் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுட்டு இருக்கான். தங்கச்சி குளிச்சிட்டு வெளிய வந்துட்டா. அவள் புருஷன் பாத்ரூமுக்கு வர்றத பாத்துட்டு, அண்ணன் அங்கிருந்து தப்பிச்சு போறான். புருஷனோ, மனைவி குளிச்சிட்டு இருந்ததை பார்க்கதான் வந்திருந்தான்னு நெனச்சுட்டான்.

அதனால அண்ணனையும், தங்கச்சியையும்  சந்தேகிக்கிறான். தன் குழந்தைக்கு, தான் அப்பா இல்லேன்னு வேற சொல்றான் பாவி. அண்ணன் தங்கச்சிங்கற உறவை வெளியே சொல்ல முடியாத நிலை. சொன்னா அப்பா பேரையும்ல சொல்ல வேண்டியதிருக்கும்! இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில சிக்கி தவிக்கிறான் ஹீரோ.

தங்கச்சி துடிக்கிறா. இப்டி ஒரு அபாண்டமான பழி தாம்மேல விழுந்துருச்சீனு அழுறா.

ஒரு கட்டத்தில மனைவியின் அம்மா, அப்பா முன்னாலேயே அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தகாத உறவு இருப்பதாக புருஷன்  சொல்றான். அப்புறம் அண்ணனே தன் திறமையால எல்லா பிரச்னையையும் முடிச்சு வைக்கிறான். இப்பதான் அப்பாவைத்தவிர மத்தவங்களுக்கு அண்ணன் யாருன்னு தெரியுது. கொலைபழியும்  நீங்குது. எல்லாருக்கும் சந்தோஷம்.

இப்படி ஒரு வித்தியாசமான கதை தான் இதய வீணை.

விகடனில் வாரா வாரம் வந்த கதை இந்தப் படமா உருவாச்சு. மணியன் எழுதினது. கதையை மாத்தாம, அப்படியே எடுக்கப்பட்ட படமாம். மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் தயாரிப்பு. சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். மஞ்சுளா, லட்சுமி, சச்சு, ஜி.சகுந்தலா, ஏ.சகுந்தலா, எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்கரபாணி, சிவகுமார், நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன் இவங்கல்லாம்  நடிச்சிருந்தாங்க. வாலியும், புலமைப்பித்தனும் பாட்டு எழுதியிருந்தாங்க. சங்கர் கணேஷ் ம்யூசிக் போட்டிருந்தார். கிருஷ்ணன், பஞ்சு டைரக் ஷன்.

பாட்டுக்கள் : காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது, திருநிறை செல்வி மங்கையர்க்கரசி, ஆனந்தம் இன்று ஆரம்பம், நீராடும் அழகெல்லாம், ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே.

நூறு நாளுக்கு மேல ஓடி வெற்றி கண்ட படம்.


- ரமணி

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Tue Apr 24, 2018 11:54 am

24.04.2018

30. பழைய திரைப்படங்கள்  

மாயா மாயவன் 1938

ட்டி.கே. சம்பங்கி – துப்பறிவாளர் ஜெகதீஷ், ஹீரோ
கே. கோகிலா - ஹீரோயின்
ஜி.ஆர். வரதாச்சார் – வில்லன்
ட்டி. சுசீலாதேவி – வரதாச்சாரின் மனைவி
சீதாபாய், வேணுகோபால சர்மா, கே. காவேரி செட்டியார், வி.வி.எஸ். மணி, வேணு செட்டி, தேவராஜு.


தென்னிந்திய சினிமா ஜாம்பவான் ட்டி.ஆர். சுந்தரம். இவர்தான் மாயா மாயவன் படத்தை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிச்சார். இந்த படத்தை ‘உன்னத தமிழ் சண்டை படம்’ னு விளம்பரம் செஞ்சாங்க. ஏன்னா பயங்கர சண்டை காட்சிகள் இருந்த முதல் தமிழ் படம். 

மைசூரை சேர்ந்த B சம்பத்குமார் டைரக்ட் செஞ்சார். இவர் 1936ல டைரக்ட் செஞ்ச பாகவதரோட படங்கள்ல சத்தியசீலன் படம் குறிப்பிடத்தக்கது. 

மாயா மாயவன் படத்துக்கு கதையும், பாட்டுக்களும் எஸ். வேல்சாமி கவி எழுதினார். இவருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ், சுந்தரம் இவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

இந்தப் படம் ஒரு ஆக் ஷன் கதை. ஒரு அழகான நாட்டியக்காரி. அவளோட புருஷன் பொம்பள பித்தன். ஆனா தன் மனைவிட்ட நல்லவன் போல வேஷம் போட்டுட்டு இருக்கான். அவளும் நம்புறா. 

ஒரு அழகான பொண்ணு. இவளை அடைய என்னவெல்லாமோ..................... ஜெகஜ்....................ஜாலங்கள் செஞ்சு, அவளை கடத்தி, ஒரு தனீ..................... எடத்தில அடச்சு வச்சிருந்தான். 

பின்ன என்ன கடத்தி வச்சிருந்தவள பப்ளிக்லியா கொண்டு போய் வைப்பான்.

ஊடால பேசாதீங்கன்னு சொல்றேன்ல.

பேசல பேசல சொல்லு. 

ஜெகதீஷ்னு ஒரு துப்பறிவாளர். இவரோட காதலியத்தான் அந்த வில்லன் கடத்தி வச்சிருந்தான். அவளை மீட்கிறதுகுள்ள அவன் பட்............ட பாடு. வில்லனும், அவனோட அடியாளுங்களும் குடுத்த கஷ்டங்கள். ஏ................கப்பட்ட எடஞ்சல்கள். எல்லா......................தையும் சண்ட போட்டு, தன் இதயக்கனியை மீட்டு, கல்யாணம் செஞ்சுகிறான். இதாங்க மாயா மாயவன் படத்தின் கதை. 

இந்தப் படத்தின் செட் மாடர்ன் தியேட்டர்குள்ளேயே போட்டுகிட்டாங்க. ஹீரோயினை கடத்துறது, ஹீரோ மாடில இருந்து குதிக்கிறது, வில்லனையும், அவனோட ஆட்களையும் சூப்பர் சுப்பராயன் ஸ்டைல்ல தாவி தாவி அடிக்கிறது, கார் ச்சேஸிங் எல்............லாமே இருந்துச்சு. இவ்ளத்தையும் சம்பத், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தோட சேர்ந்து செஞ்சார். ஜனங்கள் விசிலடிச்சு, விசிலடிச்சு ரசிச்......................சு பாத்தாங்களாம். அந்த காலத்தில இப்படி சமாச்சாரங்கள்லாம் ஜனங்களுக்கு புதுசுல. படமும் ஓஹோன்னு ஓடுச்சு. 

துப்பறிவாளராக நடிச்ச சம்பங்கி, நாடக குழு வச்சு, தென்னிந்தியாவில நாடகங்களை நடத்திட்டு இருந்தார். கொஞ்ச படத்திலதான் நடிச்சார். ஆனா பேர் கெடக்கல. ஹீரோயினாக நடிச்ச சுசீலாதேவி அழகா இருப்பார். நாட்டியம் தெரியும். அதனால 1930கள்ல வந்த சில படங்கள்ல கேபரே டான்ஸ் ஆட்றவரா நடிச்சார். இல்ல இல்ல ஆடினார். 1936ல வந்த சதிலீலாவதி படத்ல அட்..................காசம்....................மா  ஒரு டான்ஸ் ஆடியிருந்தார். 

PG வேங்கடேசன்னு ஒருத்தர். இவர் நடிகர், பாடகர். இவர் இந்த படத்ல சில பாட்டுங்க பாடினார். வேணுகோபால் சர்மா சென்னைல ஒரு வக்கீல். இவருக்கு சினிமால புடிக்கும். இவர் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருந்தார். 

மாயா மாயவன் ஜனங்கள் மனசில அவ்வளவா தாக்கத்த ஏற்படுத்தல. சுந்தரம் தன் சேலம் மாடர்ன் தியேட்டர்ல தயாரிச்ச மூணாவது படம். முதல் ரெண்டு படங்கள் சதி அகல்யா & பத்மஜோதி. 

மாயா மாயவன் படம்  சண்டைகள் நிறைந்த, அந்த காலத்தில ஒரு புதுமையான படம். 


Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by SK on Tue Apr 24, 2018 11:58 am

மாயா மாயவன் 1938

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sat Jun 15, 2019 8:38 pm

15.06.2019
நான் வந்துட்டே............................................ன்.

வித்தியாசமான படங்கள் 
14. வனராஜ கார்ஸன் 1938

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 0?ui=2&ik=25ecfa0c99&attid=0

டைரடக்கர் : K சுப்பிரமணியன் 
தயாரிப்பு : வாடியா மூவிடோன் நிறுவனம் 
அந்த காலத்தில இங்கிலிஷ், ஹிந்தி படங்கள்ல, ஹீரோயின்கள் தொடை தெரிய ட்ரெஸ் போட்டு நடிச்சாங்க. இதை பார்த்து தமிழ் சினிமாக்காரங்க சும்மா இருந்தாங்களா? இல்லியே. அவங்களும் அப்டி முயற்சி செய்ய, முயற்சி என்ன முயற்சி, செயல்படுத்தவே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு தைரியம்தான் போங்க. அதன் விளைவு, வனராஜ கார்ஸன். தென்னிந்திய சினிமாவுக்கு  முதல் வனத்திரைப்படம். 

டார்ஜான் னு இங்க்லீஷ்ல நிறைய படங்கள் வந்துச்சு. டார்ஜான் படங்களை இங்கிலிஷ்லயே   பார்த்த  ஜனங்களுக்கு, அப்படிப்பட்ட படத்தை தமிழ்ல பாத்தா எப்.............படி  இருந்திருக்கும், யோசிச்சு பாருங்க. 
அதேதாங்க, அதுதான் 1938ல வந்த  இந்த வனராஜ கார்ஸன் படம்.  பெரிய விருந்து போல இருந்துச்சு. ஆனா என்ன, இந்த படத்ல ஆபாச, கவர்ச்சி  ஸீன் நிறையவாம். இதுக்கு பலத்த எதிர்ப்பு. பத்திரிகைல கன்னாபின்னான்னு எழுதிட்டாங்க. தமிழ் நடிகை இப்டி கண்ராவியா நடிக்கலாமா ?  இதுதாங்க பிரச்சன. 
ஆனா கதாநாயகன் நிர்வாண ஆடையோடு நடிச்சாராமே. அதுபத்தி யாரும் மூச்................
அந்த காலத்ல இருந்த பத்திரிக்காரங்க, இந்த காலத்துல உள்ள தமிழ் படங்கள பாத்தா, என்ன செய்வாங்களோ ? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மனச மாத்திக்குவாங்களா ? வேற வழி ?
சின்ன வயசிலிருந்தே காட்டில வாழற ஒருத்தன், பேச தெரியாம ஆ, ஊ ன்னு கத்துறான். மிருகங்கள் கூட பழகுறான். மனுஷங்களை பார்த்தா பயப்பட்றான். சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகளை காட்டணும்னா கூட ஆ, ஓ தான். 
இப்டி நடிச்சவரோட பேரு  ஜான் காவஸ். குரங்கு மரத்துக்கு மரம் தாவுறதை இவரும் செஞ்சு, பல சாகசங்களை செய்றார். குரங்கு, நாய் லாம் இவரோட நெருங்கிய  friends. . தனக்கு ஏதாவது தேவைன்னா, இந்த குரங்குகள், நாய்கள் கிட்ட சொல்லி, அவை செஞ்சு கொடுத்துச்சு. 
இந்த படத்தின் ஹீரோயின் KR செல்வம். இந்தம்மா என்னான்னா, காட்டுக்குள்ள வந்துர்றாங்க.  வந்தவங்க, காட்டை சுத்தி பாத்துட்டு போக வேண்டியதுதானே.  நீச்சல் உடைல காட்டருவியில குளிச்சாங்களாம், படத்லதான். கார்ஸன் அதுவரைக்கும் பொம்பளயவே பாத்ததில்லையா !!! செல்லத்தை அலே.................க்கா தூக்கிட்டு போனார். காட்டு மனுஷன்கிட்ட மாட்டிகிட்டோமேன்னு செல்லம் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சார். 
 கதாநாயகியை நீச்சல் உடையில் பார்த்த ரசிகர்கள், ஒரே...................... கூச்சல்தான், விசில்தான். 
செல்லம் அப்போ ஒரு சோப்பு விளம்பர கம்பெனிக்கு போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க. 
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 0?ui=2&ik=25ecfa0c99&attid=0

நம்ம செல்லம்,  கார்ஸனுக்கு நாகரீகத்தை பற்றி சொல்லி குடுத்து, திருத்துறார். நடுவுல லவ்வ பத்தியும் சொல்லி கொடுத்து, அப்புறமென்ன, ரெண்டு பேருக்கும் டும்டும்தான். 
கடேசில பார்த்தா, சின்ன வயசில தொலஞ்சு போன செல்லத்தோட மொறப்பையனாம் கார்ஸன். எப்படி இருக்கு பாருங்க. படம் முடியும்போது, ஹீரோ வேஷ்டி சட்டையோடும், ஹீரோயின் சேலை கட்டிக்கிட்டும்   வாறாங்க. 
கார்ஸன் பல ஆக் ஷன் படங்கள்ல நடிச்சிருக்கார். இந்த படத்ல இங்கிலிஷ் பட ஹீரோ மாதிரி துணிச்சலா நடிச்சிருந்தார். இவரோடு நடிச்ச நாய் பேர் மோதி. 
"கதாநாயகிக்கு இப்டி நடிக்க இவ்ளோ துடுக்குத்தனம் கூடாது" இது பத்திரிக்கை விமர்சனம். 
கவர்ச்சியா நடிச்ச செல்லம், "என்னை இவ்ளோ கவர்ச்சியா நடிக்க வைப்பாங்கன்னு எனக்கு தெரியாது. அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டதால, ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு" ன்னு  ஓர் பேட்டியில சொல்லியிருந்தார். 
செல்லம் கவர்ச்சியாய் நடிச்சதை பார்க்க, தியேட்டர்ல  வசூல் பிச்சுக்கிட்டு போச்சாம்.   
- ரமணி 
- ஹிந்து 

- தொடரும் 
பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by சக்தி18 on Sat Jun 15, 2019 9:44 pm

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 1571444738

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 15chrcjlux%20beuty
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1530
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by ayyasamy ram on Sun Jun 16, 2019 4:55 am

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 103459460 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by T.N.Balasubramanian on Sun Jun 16, 2019 12:58 pm

KR செல்லம் கவர்ச்சியை விட 
அதிகமாக பேச வைத்தவர் தவமணி தேவி --வன தேவதை என்ற படம் , எந்தன் நினைவு சரி என்றால்.
1947 -48 வருடங்களில் வந்த படமென நினைக்கிறேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26185
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by heezulia on Sun Jun 16, 2019 11:31 pm

16.06.2019
நீங்க சொன்னபிறகு நான் தேடிட்டேன்ல. நீங்க சொன்ன தவமணிதேவி நடிச்ச அந்த படம் வனதேவதை இல்ல. வனமோகினி, 1941. 
துணிமணிய கொறச்சு நடிச்ச இவருக்கு, அந்த காலத்துல இருந்த பெருசுகள்  [நான் படிச்சதுல இப்டித்தான் போட்டிருக்கு] பரம ரசிகர்களாம். 
எனக்கென்னவோ வனராஜ கார்ஸன் செல்லம் நல்லா இருக்கிறாப்போல தோணுது. 
உங்களுக்கு தவமணி பிடிச்சிக்கிறதால, அவங்கள பத்தின தகவல்கள் வேணுன்னா நிறைய இருக்கு. கொடுக்கிறேன். என்ன சொல்றீங்க ? 
நான் எழுதியிருக்கிறதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல. தவமணி ஞாபகமோ? 
பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by கண்ணன் on Mon Jun 17, 2019 11:34 am

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 11 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 17, 2019 5:37 pm

தொடருங்கள் உங்கள் பணியை. படிக்க நல்ல தகவல்கள் தானே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4389
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1342

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 9:19 pm

நான் எழுதியிருக்கிறதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல. தவமணி ஞாபகமோ? 
பேபி 
தனிமடல் பார்க்கவும் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 9:19 pm; edited 1 time in total (Reason for editing : deletion)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26185
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

best Re: பழைய தமிழ் திரைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை