ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

View previous topic View next topic Go down

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Thu Jul 20, 2017 7:41 am

டெர்பி,
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்

8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2–வது அரைஇறுதிப்போட்டி
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளது.
ராசியான மைதானம்
இந்திய அணி 7 ஆட்டங்களில் 5–ல் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் கண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது.
வாழ்வா–சாவா? சூழ்நிலையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மிதாலிராஜ் சதம் அடித்தார். மன்பிரீத் கவுர் 60 ரன்னும், வேதா கிருஷ்ணமூர்த்தி 70 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணியை 79 ரன்னில் இந்தியா சுருட்டியது. ராஜேஸ்வரி கெய்க்வாட் 5 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்த மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானம் எனலாம். ஏனெனில் இங்கு நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பதிலடி கொடுக்குமா?
ஆடுகளத்தின் சாதகத்தை பயன்படுத்தி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும். ஆனால் அது எளிதான காரியம் கிடையாது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முதல் இரண்டு ஆட்டங்களில் ஜொலித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தனா நல்ல நிலைக்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா
அணிகள் 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
இதில் ஆஸ்திரேலிய அணி 34 முறையும், இந்திய அணி 8 தடவையும்
வெற்றி பெற்றுள்ளன.

உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 11 முறை மல்லுக்கட்டி
இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி 9 முறையும், இந்திய
அணி 2 தடவையும் வெற்றி கண்டுள்ளன. உலக கோப்பை போட்டியில்
9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் ஆஸ்திரேலிய அணி
6 முறை கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.

2005–ம் ஆண்டில் மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு
கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டது. எனவே இரு அணிகளையும்
ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருக்கிறது.


மிதாலிராஜ் நம்பிக்கை

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் அளித்த
பேட்டியில், ‘அரைஇறுதிப்போட்டி நடைபெறும் இடம் எங்களுடைய
உள்ளூர் மைதானமாகவே கருதுகிறேன்.

இங்கு நாங்கள் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம்.
ஆஸ்திரேலியா மிகவும் சிறப்பான அணியாகும். அந்த அணியில்
வீராங்கனைகளின் கலவை சிறப்பான முறையில் இருக்கிறது.

அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது.
சூழ்நிலைக்கு தகுந்தபடி அணியினர் எப்படி ஆடுகிறது என்பது தான்
மிகவும் முக்கியமானதாகும். முந்தைய ஆட்டங்களில் சிறப்பாக
விளையாடியது போல் நாங்கள் செயல்பட்டால் ஆஸ்திரேலிய அணியை
வெல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா
அளித்த பேட்டி ஒன்றில், ‘ஆஸ்திரேலிய அணியை இந்தியா நிச்சயம்
வீழ்த்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அணி வீராங்கனைகள்

இன்றைய போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் விவரம் வருமாறு:–

இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), எக்தா பிஷ்ட்,
ராஜேஸ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, மான்சி ஜோஷி,
ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, மந்தனா,
மோனா மேஷ்ரம், ஷிகா பாண்டே, பூனம் யாதவ்,
நுஷாத் பர்வீன், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, சுஷ்மா வர்மா.

ஆஸ்திரேலியா: மெக் லேனிங் (கேப்டன்), சாரா அலெய்,
கிறிஸ்டன் பீம்ஸ், அலெக்ஸ் பிளாக்வெல், நிகோல் பால்டன்,
ஆஷ்லிக் கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலே,
ஜெஸ் ஜோனசென், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மெகன் ஸ்கப்ட்,
பெலின்டா வகரெவா, வில்லானி, அமந்தா ஜாட் வெலிங்டன்.

நேரடி ஒளிபரப்பு

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த
ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு
செய்கிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

Post by T.N.Balasubramanian on Fri Jul 21, 2017 4:18 am


இந்திய ஜெயித்து இறுதி ஆட்டத்திற்கு தகுதி அடைந்தது.
விளையாட்டை முழுதும் பார்த்தேன் . இந்திய அணி நன்றாக விளையாடியது. ஹர்மன்பிரீத் கவுர் விளையாட்டு அபாரம் இந்திய வெற்றிக்கு அவரே காரணம். விளையாட்டின் சிறந்த வீரன்கையாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் தடுமாறி நடுவில் முன்னேறி பிறகு வழுக்கி விழ 10 விக்கெட்இ கடைசி ஆட்டக்காரர் இணையும் போது 9 /169 . கடைசி ஜோடிதானே நிச்சயம் 100 ரன் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என நினைத்தால் . Blackwood அபாரமாக ஆடி 56 பாலில் 90 ரன் .
36 ரன் வித்தியாசத்தில் இந்திய ஜெயித்தது.

வாழ்த்துகள்அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

Post by சிவனாசான் on Sat Jul 22, 2017 6:09 am

விளையாட்டால் நாட்டுக்கு ஏதேனும் நன்மை உண்டா?>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

Post by சிவனாசான் on Sat Jul 22, 2017 6:09 am

விளையாட்டால் நாட்டுக்கு ஏதேனும்  நன்மை உண்டா?>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum