ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைவிமர்சனம்: கொடி

View previous topic View next topic Go down

திரைவிமர்சனம்: கொடி

Post by ayyasamy ram on Sun Oct 30, 2016 8:28 am


-
இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’
படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால்
இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர்.

தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும்,
‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும்
படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன.

கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின்
அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச
முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க
வேண் டும் என்று விரும்புகிறார்.

ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு
தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில்
தீக்குளித்து இறந்து விடுகிறார். அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்றபடி,
கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோ தரர்களில்
இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர்.
இவன் பயந்த சுபாவம் உடையவன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: கொடி

Post by ayyasamy ram on Sun Oct 30, 2016 8:29 am-
கொடியைப் போலவே சிறு வயதி லிருந்தே அரசியலில் இருக்கிறார்
ருத்ரா (த்ரிஷா). இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும்
காதலிக்கிறார் கள். தம்பி அன்பு, முட்டை வியாபாரம் செய்யும்
மாலதியைக் (அனுபமா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், சட்ட மன்ற
இடைத்தேர்தலில் கொடியும், ருத்ராவும் எதிரெதிர் அணிகளில்
நிற்கவேண்டிய சூழல் உருவாகிறது.

இதற்கிடையில் ஊரில் மூடப்பட்ட தொழிற்சாலை குறித்த சர்ச்சையும்
பெரிதாகிறது. அரசியல் வெற்றியா, காதலா என்று வரும்போது யார்
எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? இந்த அரசியல் விளையாட்டில் எதிர்
பாராமல் நுழையும் அன்பு என்னவாகிறான் என்பதுதான் ‘கொடி’.

இயக்குநர், கொடி கதாபாத்திரத் துக்குக் கொடுத்திருக்கும் தெளிவான
பின்னணியை மற்ற கதாபாத்திரங் களுக்குக் கொடுக்கத்
தவறியிருக்கிறார். குறிப்பாக, கொடி கதாபாத்திரத்துக்கு இணையான
வலிமையுடைய ருத்ராவின் கதாபாத்திரம் அந்த அளவுக்குத்
தெளிவாக எழுதப்படவில்லை. ருத்ராவுக்கு அரசியல் ஆர்வம்
வருவதற்கான பின்னணி சரியாக நிறுவப் படவில்லை.

ருத்ராவின் போக்கில் ஏற்படும் அதிர்ச்சிகரமான மாற்றமும் நம்பும்
விதத்தில் காட்டப்படவில்லை.

இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம்
செய்திருக்கிறார். கொடி கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு செறிவாக
உள்ளது. கனமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா சில இடங்களில்
சமாளிக்கிறார். சில இடங்களில் தடுமாறுகிறார். அவர் அரசியல்
மேடைகளில் பேசும் காட்சிகள் மேலோட்டமாகக் கடந்து சென்று
விடுகின்றன.

மாலதியாக அனுபமா கொஞ்சம் நேரம் வந்தா லும் துறுதுறு நடிப்பை
வெளிப் படுத்தியிருக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்களில்
நடித்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா, காளி வெங்கட் ஆகியோர்
தங்கள் பங்களிப்பைச் செம்மையாகச் செய் திருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயண் இசையில் ‘ஏ சுழலி’, ‘சிறுக்கி வாசம்’
பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வெங்க டேஷின் கேமராவும்,
பிரகாஷின் படத் தொகுப்பும் படத்தில் அந்த அளவுக்கு எடுபடவில்லை.

திரைக்கதை வழக்கமான பாணி யிலேயே நகர்கிறது. பலசாலி
அண்ணன், பயந்தாங்கொள்ளி தம்பி, பழிவாங்கும் படலம் என
எல்லாமே எதிர்பார்க்கும்படியே நகர்கின்றன. அரசியலில் வளர்வது,
எம்.எல்.ஏ., எம்.பி. ஆவதெல்லாம் விளையாட்டு சமாச்சாரம்போலக்
காட்டப்படுகின்றன.

காமெடி இல்லாத குறைக்கு இப்படியா?! த்ரிஷா, தனுஷ் இடையே
அரசியல் களத்தில் போட்டியும் தனிப் பட்ட முறையில் காதலும்
இருப்பது ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருகிறது. கட்சிக்குள்
த்ரிஷா மேற் கொள்ளும் காய் நகர்த்தல்கள் பரவாயில்லை.

இடையில் வரும் ‘திடுக்கிட’ வைக்கும் திருப்பம் செயற்கையாக
உள்ளது.

அரசியலில் ஓர் ஆண் நினைத்தால் நேர்மையாக, நல்லவனாக
இருக்க முடியும். ஆனால், ஒரு பெண் அரசியல்வாதி என்றால்
அவள் வில்லியாகத்தான் இருக்க வேண்டுமா?

இதுபோன்ற சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’
இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்.
-
---------------------------------------
தி இந்து


Last edited by ayyasamy ram on Sun Oct 30, 2016 8:36 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: கொடி

Post by ayyasamy ram on Sun Oct 30, 2016 8:29 am


-

-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: கொடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum