புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
290 Posts - 42%
heezulia
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_m10மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

Page 2 of 2 Previous  1, 2

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 5:04 pm

First topic message reminder :

ஸ்ரீகுருவே நம:
மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

உலகின் ஞான பீடம், நமது பாரததேசம் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நமது பரத கண்டத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் எப்போதும் உலக மக்களுக்கு நமது கொடையாகும் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பவை என்பதிலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை.

ரிக், யஜுர், சாம , அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவை சதுர்வேதம் என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடப்படுபவை. நம் அமுதத்தமிழ் சதுர்வேதத்தை நான்மறை என நவிலும் . பொதுவாக மறை என்றும் வேதங்கள் , குறிப்பிடப்படுபவை.

மறை நான்கிலும் உரைக்கப்பட்ட செய்யுளாகட்டும், உரைநடையாகட்டும் அல்லது உரையாடல்களாகட்டும் அனைத்தும் மந்திரம் என்றே பெயர் பெறுபவை. மற்ற நூல்களுக்கு இத்தகைய உயர்வு இல்லை.

நிறைமொழி மாந்தர் சிந்தையிற் கிளர்ந்த மறைமொழிதான் மந்திரம். மனதால் திரும்பத் திரும்ப தியானிப்பதும் மந்திரம்.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். ஆழ்ந்து பார்த்தால் அறிவின் களஞ்சியம்தான் வேதங்கள். வேதங்கள் ஒரு பூங்கா என்றால் அதில் மலர்ந்த மலர்களே மந்திரங்கள். அற்புத அறிவை தெள்ளத்தெளிவாக அருளும் அந்த அமுத மொழிகளை நாமும் நமது கோவில்களிலும், வீட்டின் அனைத்து காரியங்களிலும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம்- பொருள் விளங்காமல்.

மந்திரங்கள் சிலவற்றின் பொருளைப் புரிந்து கொண்டால் தெய்வ வழிபாட்டின் போதும் இதர பிற நிகழ்வுகளின் போதும் அவை நமது மனத்திற்கு நிம்மதியையும் நன்மையையும் அளிப்பதாக இருக்கலாம் என்னும் நம்பிக்கையில் மந்திரப் பொருள் காணும் நோக்கமே , “மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்” என்னும் தலைப்பிட்ட இப்பதிவு. இனி மந்திர மலர்களின் அழகு, வண்ணம், அலர்வு, மணம் , அவற்றால் நமக்கு ஆகும் இன்பம் ஆகியனவற்றை ஒவ்வொன்றாக அறிவுப் பூர்வமாகக் காண்போம்.

முதலில் :

ॐ असतो मा सदगमय ।
तमसो मा ज्योतिर्गमय ॥
मृत्योर्मामृतम् गमय ।
ॐ सानति ॐ सानति ॐ सानतिः

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதி: கமய
ம்ருத்யோ: மா அம்ருதம் கமய
ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி:

இதற்கு அப்யாரோஹ மந்திரம் என்றும் பெயர். அதாவது அபி+ஆரோஹ = அப்யாரோஹ என்றால் உயர்த்துதல் என்று பொருள். இந்த மந்திரம் ஜபிப்பவரின் நிலையை உயர்த்துவதாவது.
இது சுக்ல யஜுர் வேதத்தில் வரும் ப்ரஹதாரண்யக உபநிஷத்தின் சாந்தி மந்திரம்.

பதப்பொருள்:

ॐ - ஓம் – அவ்வாறே ஆகட்டும்.
असतः –அஸத: - மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டது
मा – மா - என்னை
सत् – சத்- மாறாத உண்மை.
गमय -கமய –அழைத்துச் செல்க
तमसः –தமஸ: - அறியாமையாகிய இருள்
मा – மா - என்னை
ज्योतिः – ஜோதி: - அறிவுடைமை யாகிய ஒளி.
गमय -கமய –அழைத்துச் செல்க
मृत्योः – ம்ருத்யோ: - மனத்தின் மயக்கம்
मा – மா - என்னை
अमृतम् – அம்ருதம் – மனத்தெளிவு.
गमय -கமய –அழைத்துச் செல்க
सानति –சாந்தி - நிம்மதி அடிப்பொருள் விளக்கம்

பதவுரை :

முதல் அடி:

असतः मा सत् गमय - அசத: மா சத் கமய –

மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டநிலையில் இருந்து என்னை மாறாத உண்மைக்கு அழைத்துச் செல் ( அதாவது ஆன்ம விடுதலையை எனக்கு அளி)

இரண்டாவது அடி :

तमसः मा ज्योतिः गमय - தமஸ: மா ஜ்யோதி: கமய -

அறியாமையாகிய இருளில் இருந்து என்னை அறிவுடைமை யாகிய ஒளிக்கு அழைத்துச் செல்
( அதாவது எனது அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானத்தை எனக்கு அளி)

மூன்றாவது அடி :

मृत्योः मा अमृतम् गमय – ம்ருத்யோ: மா அம்ருதம் கமய –

மனத்தின் மயக்கத்திலிருந்து என்னை மனத்தெளிவிற்கு அழைத்துச் செல்
( அதாவது எனது மனமயக்கதை அகற்றி எனக்கு மனத்தெளிவை அளி)

நான்காவது அடி:

ॐ सानति ॐ सानति ॐ सानतिः - ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி ஓம் ஸாந்தி:-

என்னிடம் இருந்தும், எனக்கு அப்பால் இருந்தும் , இயற்கையிடமிருந்தும் ஆக மூவகையிலும் எனக்கு நிம்மதி உண்டாகட்டும் – அவ்வாறே ஆகட்டும்.

தெளிவுரை :
1. மாயை என்னும் மாற்றத்திற்கு உட்பட்டநிலையில் இருந்து என்னை மாறாத உண்மைக்கு அழைத்துச்
செல் ( அதாவது ஆன்ம விடுதலையை எனக்கு அளி);

2. அறியாமையாகிய இருளில் இருந்து என்னை அறிவுடைமை யாகிய ஒளிக்கு அழைத்துச் செல்
( அதாவது எனது அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞ்ஞானத்தை எனக்கு அளி);

3. மனத்தின் மயக்கத்திலிருந்து என்னை மனத்தெளிவிற்கு அழைத்துச் செல்
( அதாவது எனது மனமயக்கதை அகற்றி எனக்கு மனத்தெளிவை அளி);

4. என்னிடம் இருந்தும், எனக்கு அப்பால் இருந்தும் , இயற்கையிடமிருந்தும் ஆக மூவகையிலும் எனக்கு
நிம்மதி உண்டாகட்டும் – அவ்வாறே ஆகட்டும்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 6:07 pm

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்

(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

8. மரணத்தை ( அஞ்ஞானத்தை ) வெல்லும் மந்திரம்.

महामृत्युञ्जय मन्त्रः

ऊँ त्रयम्बकम् यजामहे सुगन्धिंपुष्टि वर्धनम् ।
उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात् ।। - शुक्ल यजुर्वेद सम्हिता ३.६०

மஹா ம்ருத்துஞ்ஜெய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்|
உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத்|| – சுக்ல யஜுர் வேத மந்திரம் 3.60

பதப் பொருள்:

முதல் அடி

ऊँ - ஓம் - அப்படியே ஆகட்டும்
त्रयम्बकम् – த்ரயம்பகம் - மூவுலகிலும் பரவி நிற்றல்
यजामहे –யஜாமஹே – உயர்ந்ததாக வணங்குகிறோம்.
सुगन्धिम् -சுகந்திம் - நற்குணமுடையதும்
पुष्टि –புஷ்டி- செல்வத்தைக் கொடுப்பதும்
वर्धनम् – பலத்தை அளிப்பது

இரண்டாவது அடி

उर्वारुकम् –உர்வாருகம் -வெள்ளரிப் பழம் தன் கொடிக் காம்பிலுருந்து தன்னை விடுவித்தல்
इव -இவ - போல
बन्धनात् – பந்தநாத் - ஆசை என்னும் பற்றுக் களில் இருந்து
मृत्योः –ம்ருத்யோஹோ – மயக்கமாகிய அஞ்ஞானத்தினுடைய
मुक्षीय –முக்ஷீய - விடுவித்து
मा – மா -என்னை
अमृतात्- அம்ருதாத் – மெய்ஞ்ஞானமாகிய தெளிந்த அறிவிலிருந்து.

(மரணம் என்றால் சம்ஸ்க்ருதத்தில் ம்ருத்யு: அதாவது மயக்கம், அறியாமை என்றும் பொருள்)

தெளிவுரை:

(கடந்தகாலம் – நிகழ்காலம் –எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நிலவுகின்ற) மூவுலகிலும் பரவி நிற்பதும் , நற்குணமுடையதும், செல்வத்தைக் கொடுப்பதும் பலத்தை அளிப்பதும் ஆகிய பரம்பொருளை (பிரபஞ்சப் பேராற்றலை) அனைத்திலும் உயர்ந்ததாகக் கருதி வணங்குகிறோம்.

வெள்ளரிப்பழம் முழுமையாகப் பழுத்தவுடன் தன்னைத் தன் கொடிக் காம்பிலுருந்து விடுவித்துக் கொள்ளுதல் போல , மயக்கத்தை அளிக்கும் அஞ்ஞானமாகிய ஆசை என்னும் உலகப் பற்றுக்களில் இருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ளுமாறு மெய்ஞ்ஞானமாகிய தெளிந்த அறிவை எனக்கு அளிப்பாயாக.

அப்படியே ஆகட்டும்.

விளக்கவுரை :

இந்த மந்திரம் மாயையாகிய உலகப் பற்றுக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, உண்மை அறிவை அளிக்கப் பரம்பொருளை வேண்டுகின்றது. அதாவது விடுவிக்கக் கூட வேண்டவில்லை. வெள்ளரிப்பழம் விளைந்து பழுத்த பின், தானே கொடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல் போல் தன்னைத்தானே உலகப் பற்றுக்களில் இருந்து விடுவித்துக் கொள்ளும் அறிவு வேண்டப்படுகிறது.

ஆனால், அறியாமையில் சஷ்ட்டியப்த பூர்த்தி(அறுபது வயது நிறைவு), பீமரத சாந்தி ( 80 வயது நிறைவு) சதாபிஷேகம்(100 வயது நிறைவு) ஆகிய நாட்களில் தனக்கு மரணம் என்பதே வராமல் இருக்க வேண்டும் என்று நம் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் சந்நிதியில் இந்த மந்திரத்தைச் சொல்லி யாகம் செய்து, தனக்கு மரணத்தை வெல்ல வகை செய்ய வேண்டும் என்று வேண்டப்படுவதை என்னென்பது !

பிறந்த அத்தனையும் மரணிக்க வேண்டும் என்பது இயற்கை. இந்த இயற்கை விதியை எந்த கடவுளாலும் மாற்ற முடியாது. இத்தகைய மூவகை யாகங்களை முறையாகச் செய்வித்த அத்தனை பேர்களும் நம் கண் முன்பாகவே மரணிகின்றார்கள். ஆனால் யோகாசனங்களோடு கூடிய பிராணாயாம வித்தை வாழ்நாள் காலத்தை உடல் ஆரோக்கியத்துடன் கொஞ்ச காலம் நீட்டிக்கலாம் - அதுவும் விதியின் பதிவிற்கு உட்பட்டு.

பின், இந்த மந்திரம் என்னதான் சொல்கிறது !
மரணத்தின் மீது பயம் கொள்ளாதே –அது இயற்கை.
உலகப் பற்றுக்களில் இருந்து நீயே விலகிக் கொண்டால் உனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இருக்காது என்கிறது

ஸ்ரீகுருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 9:03 pm

மரணத்தின் மீது பயம் கொள்ளாதே –அது இயற்கை.
உலகப் பற்றுக்களில் இருந்து நீயே விலகிக் கொண்டால் உனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இருக்காது என்கிறது

உண்மைதான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 7:40 pm

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)
கடோபநிஷத், சுவேடாஸ்வதர உபநிஷத், மற்றும் மஹாநாராயண உபநிஷத்                             ஆகியனவற்றின் சாந்தி மந்திரம்

9.

ॐ सह नाववतु ।  
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

சஹ நாவவது |
சஹ நௌ புனக்து |
சஹ வீர்யம் கரவாவஹை:
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பதப்பொருள் :

ॐ  - ஓம் – அப்படியே ஆகட்டும்  
सह – சஹ - சேர்ந்து
नौ – நௌ – நாம் இருவரும் ( குருவும் சீடனும்)
अवतु  – அவது – ஒருவரையொருவர் நேசிப்போமாக .
सह- சஹ - சேர்ந்து
नौ – நௌ – நாம் இருவரும் ( குருவும் சீடனும்)
भुनक्तु  – புனக்து –ஆனந்தித்து அனுபவிப்போமாக.
सह -சஹ - சேர்ந்து
वीर्यं – வீர்யம் - ஊக்கம்
करवावहै- கரவாஹை - செய்வோமாக
तेजस्वि –தேஜஸ்வி – உணர்வுப் பூர்வமாக்.
नौ – நௌ – நாம் இருவரும் ( குருவும் சீடனும்).
अधीतम् – அதீதம் – முழுமையாக.
अस्तु – அஸ்து – இருக்கட்டும்.
मा विद्विषावहै – மாவித்விஷாவகை – கற்பதில் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருப்போமாக.
ॐ शान्तिः शान्तिः शान्तिः -ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: -மூவகையிலும் இடரின்றி நிம்மதி நமக்கு அமையட்டும்.

தெளிவுரை:

கல்வி கற்பிப்பதிலும் கற்பதிலும்  குருவும் சீடனும் ஆகிய நாம் இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் நேசமுடன் இருப்போமாக!
நாம் இருவரும் சேர்ந்து இந்த கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு ஆனந்த அனுபவமாக்குவோமாக !
கற்பித்தலையும் கற்பதையும் ஊக்கமுடன் செய்வோமாக!
இக்கல்விகற்றல் எனக்கு (சீடனுக்கு)  உணர்வுபூர்வமாகவும் முழுமையாகவும் அமையட்டும் !
கற்கும் காலத்தில் கல்வியை விளக்குப்படுவதிலும் விளங்கிக் கொள்வதிலும் கருத்துவேறுபாடு இல்லாமல் இருப்போமாக.
நமக்குள் நம் உடலாலும், சுற்றுச் சூழலாலும் , இயற்கையாலும் ஆகிய மூவகையிலும் இடரின்றி நிம்மதி நமக்கு அமையட்டும்.
அவ்வாறே ஆகட்டும்.

விளக்கம்:

குருகுலத்தில் கல்வி கற்பிக்கத்துவங்குமுன் ஒவ்வொரு நாளும் இந்த சாந்தி மந்திரம் பாடப்படும். எவ்வளவு பொருளாழம் கொண்டதாக இப்பாடல் அமைந்துள்ளது . வேதகால குருமார்கள் அல்லவா ! அதுதான் இந்த அற்புதம்.
ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:23 am

தெரிந்த மந்திரம் - தெரிந்து கொள்ளாத பொருள்
(மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்)

10.
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி|
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா||

பதப்பொருள் :

सरस्वति– சரஸ்வதி –அனைத்துக் கல்வியும் அறிவுமாகிய பரம்பொருள்.
नमः – நம : வணக்கம்.
तुभ्यं – துப்யம் - உனக்கு.
वरदे – வரதே – முக்காலத்திலும் மாறாத நிலைத்த சான்றாண்மையே !
कामरूपिणि – காமரூபிணி - அன்பின் வடிவம்.
विद्यारम्भं - வித்யாரம்பம்- கல்விகற்கத் துவக்கம்.
करिष्यामि –கரிஷ்யாமி - செய்கிறேன் .
सिद्धिः –சித்தி: - புரிந்து விளங்கிக் கொள்ளுதல்.
भवतु-பவது – அமையவேண்டும் .
मे- மே - எனக்கு
सदा –சதா – எக்காலத்திலும்.

தெளிவுரை:

அனைத்துக் கல்வியும் அறிவுமாகிய பரம்பொருளே!
முக்காலத்திலும் மாறாத நிலைத்த சான்றாண்மையே !!
அன்பின் வடிவே!!!
உனக்கு வணக்கம்.
கல்வி பயிலத் துவங்குகிறேன்.
நான் புரிந்து விளங்கிக் கொள்ளுமாறு இக்கல்வி எல்லாகாலத்திலும் எனக்கு அமையட்டும்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 7:32 am

நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக