புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_m10மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Page 2 of 2 Previous  1, 2

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 11:37 pm

First topic message reminder :

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

(பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய   சிவஞான போதம்)

உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு -  இருப்பு -  இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே  வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல்  அவதியுற்றுக் கொண்டும், எப்படியும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டும் வாழும் அநேக மானுடர் தினமும்  பசிதீர உண்பதும் உறங்குவதுமாகவே நாளைப் போக்குகின்றனர்.

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன என்பதை அவர்கள் சிந்தித்து,  அந்நோக்கம் மீண்டும் பிறவா நிலை எனப்படும் ஆன்ம முக்தியே எனத் தெளிவடைந்து, இங்கு இருப்பன அனைத்தும் பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்பதைப் புரிந்துகொண்டு, பிறரிடம் அன்பும் கருணையும் பூண்டு எண்ணம், சொல், செயல் ஆகியன மூன்றாலும்  உண்மையோடும் பற்றற்றும்  வாழ்ந்து, இங்கேயே இப்போதே  சொர்க்க சுகத்தை அனுபவிப்பதே  சரியான மானுட வாழ்வு என்பதை மானுடத்திற்குப் புகட்டவே நமது ஞானிகளும்,தவசிகளும்  மானுட வாழ்வுக்கு வழிகாட்டியும் அவர்களே வாழ்ந்துகாட்டியும் உள்ளனர்.

அவ்வாறான ஒருவர்தான் நம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில்  இருக்கும் பெண்ணாடம் என்னும் இடத்தில் பிறந்து  திருவெண்ணைநல்லூரில்  வாழ்ந்த மெய்கண்டார். இவர் இயற்றிய நூல்களுள் ஒன்றுதான் சிவஞான போதம் என்பதாகும். இந்நூல் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாக்கப்பெற்று சைவ சமய நூலாகச் சித்தரிக்கப் பட்டுவிட்டமையால் அதன் மேன்மையும் சிறப்பும் மானுடம் யாவைக்கும் மறுக்கப்பட்டு விட்டன.  

சைவ பக்தி ததும்ப நமது திருவாவடுதுறை  ஆதீனத்தால்  வெளிபிடப்பட்டுள்ள இந்நூலை அடியனும் படித்தேன். உண்மையில் அடியனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்காக அடியனுக்கு இறைபக்தி இல்லை என்பதாகாது. என்னில் இருந்து, என்னில் உறைந்து, என்னை நானாய் ஆக்கும் பரம்பொருளை என்னால் எப்படி மறுக்க முடியும் !  

ஆனால், சிவஞான போதம்  - உலக மனுடம் யாவைக்கும் பொதுவான ஒரு நூல் - சாதி, மதம், இனம், மொழி,கலாச்சாரம் ஆகிய அத்தனையும் புறந்தள்ளி, மானுட த்திற்காவது -  ஒவ்வொருவருக்குள்ளும் நின்று உறையும் ஆன்மாவைத்  தெளிவிப்பது. ஆன்மாவைப்பற்றி அறிந்து கொள்ளுதல் ஆத்மவித்யா என்பதாகும். ஆகையால் நாமும் இன்நூலைச் சிந்திக்கலாம்.  

சிவம் என்றால் மங்களம், நன்மை, முக்தி (பற்றின்மை),அருவம், களங்கமற்றது,நிறைதல்,மகிழ்தல், களித்தல்,யோகம், சுபம், உயர்வு என அநேக பொருள்கள் கொண்ட பல்பொருள் கொண்ட  ஒரு மொழி.

ஞானம் என்றால் தெளிந்த அறிவு, கல்வி , தன்மை, தகுதி என்று பற்பல பொருள்கள் உள்ளன.

போதம் என்றால்  உபதேசிக்கப்படும் இலக்கணம் என்றும் பொருள்.

ஆக சிவஞான போதம் என்றால் மங்களத்தைத் தரக்கூடிய தன்மையதானதின் இலக்கணம் என்றுபொருள்.

ஒவ்வொரு உருவமுள்ள உடலுக்குள்ளும் அருவமாக இருந்துகொண்டு இயங்கும் ஜீவாத்மா என்பதே அந்த மங்களத்தைத் தரக்கூடிய தன்மையதானது என்பதும் அதன் இலக்கணமும் இந்நூலில் மெய்கண்டாரால் உபதேசிக்கப்படுகிறது என்பதையும்   நூலில் தெளியவாகக் காணலம்.  ஆகையால் இந்நூல் மானுடம் யாவைக்கும்  -   உலகம் முழுமைக்கும் பொதுவானது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமும் வாய்ப்பும் இல்லை.

இந்த நூல் அறிமுகத்தோடு சிவஞானபோதத்தைச் சிந்திப்போமே!

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 27, 2016 10:55 am

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

எட்டாம் சூத்திரம் (நூற்பா -8)

ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே. (08)

பதம் பிரித்த பாடல் :

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

பதப் பொருள்:

வேடன் – விருப்பம்
அயர்தல்- களைப்பாதல்

பதவுரை:

ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தனை என – மெய் , வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களில் விருப்பம்போல் உலகாயத சுகதுக்கங்களில் ஆட்பட்டு அதில் மேலோங்கி இருந்து, தான் யார் என்பதையே அறிந்து கொள்ளாமல் களைத்து மயங்கிக் கிடக்கிறது என்னும் வகையில் இருக்கும் ஜீவாத்மா;

முதல் குருவுமாய்த் தம் தவத்தினில் உணர்த்த விட்டு - தன்னை ஆட்கொண்ட சான்றோருக்கெல்லாம் சான்றோராகிய குருதேவரால் தவமாகிய இராஜயோக நெறிகள் கற்பிக்கப்பெற்று , அந்நெறிகளைத் தன்னையே பழகவும் செய்விக்கப்பெற்று, தான் பரம்பொருளின் அம்சமே என்பதை அப்பயிற்சியின் பயனாய் உணர்ந்து கொண்டு;

அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே- ஜீவாத்மா என்னும் தான் வேறு , பரமாத்மாவேறு என்னும் வேற்றுமை இல்லை என்னும் உண்மையை இராஜயோக நெறிகளால் அறிந்து கொண்ட ஜீவாத்மா, பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து ஆன்ம விடுதலை என்னும் பிறவாமையை அடையும்.

தெளிவுரை:

உடம்பின் மெய் , வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களின் வழியே தன் விருப்பம்போல் உலகாயத சுகதுக்கங்களில் ஈடுபட்டு , அவ்வித ஈடுபாட்டில் மேலோங்கி இருந்து, தான் யார் என்பதையே அறிந்து கொள்ளாமல் களைத்து மயங்கிக் கிடக்கிறது என்னும் நிலையில் இருக்கும் ஜீவாத்மா ,

தன்னை ஆட்கொண்ட சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராகிய ஸ்ரீகுருதேவரால் தவமாகிய இராஜயோக நெறிகள் கற்பிக்கப்பட்டு, அந்நெறிகளைத் தன்னையே பழகவும் செய்விக்கப்பெற்று, தான் பரம்பொருளின் அம்சமே என்பதை அப்பயிற்சியின் பயனாய் உணர்ந்து கொண்டு, தான் வேறு , பரமாத்மாவேறு என்னும் வேற்றுமை இல்லை என்னும் உண்மையை இராஜயோக நெறிகளால் அறிந்து கொண்டதால் ஜீவாத்மா, பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து ஆன்ம விடுதலை என்னும் பிறவாமையை அடையும்.

கருத்துரை :

மானுட உடம்பில் இருந்தும் இயங்கியும் நிற்கின்ற ஜீவாத்மா, உடலின் ஐப்புலன்களின் மூலமாக உலக இன்ப துன்பங்களிலேயே முழுமையாக ஈடுபட்டு தன்னிலை அறியாது மயங்கி களைத்து உள்ளது. அது தன் பூர்வ ஜென்ம புண்ணிய வசத்தால் சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராகிய ஸ்ரீகுருதேவரை அடையாளம் கண்டு அவரது தாள்களைச் சரணடைகிறது. அப்பணிதலின் பலனாய் ஸ்ரீகுருதேவர் தவமாகிய இராஜயோக நெறிகளை ஜீவாத்மனுக்குக் கற்பிக்கின்றார். அதோடு அக்கல்வியைத் தினமும் அந்த ஜீவாத்மனையே பழகவும் செய்விக்கின்றார். இவ்வாறு இராஜயோக நெறிகளைப் பயின்றும் பழகியும் வரும் ஜீவாத்மா தன் பயிற்சியின் வளர்ச்சியால் தான் பரம்பொருளின் அம்சமே என்பதை உணர்கின்றது. அதன்பின் தான் வேறு , பரமாத்மாவேறு என்னும் வேற்றுமை இல்லை என்னும் உண்மையை இராஜயோக நெறிகளால் அறிந்து கொண்டதால் ஜீவாத்மா, பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து ஆன்ம விடுதலை என்னும் பிறவாமையை அடையும் என்பது இப்பாடலின் கருத்து.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 27, 2016 7:28 pm

நன்றி ,விளக்கமான பதிவு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 4:54 am

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள்

பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய
மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்.

ஒன்பதாம் சூத்திரம் (நூற்பா -9)

ஊனக்கண் பாச முணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
யுறாத்துனைத் தேர்த்தெனப் பாச மொருவத்
தண்ணிழலாம் பதிவிதி யெண்ணுமஞ் செழுத்தே. (09)

பதம் பிரித்த பாடல் :

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உறாத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்சு எழுத்தே. (09)

பதப் பொருள்:

ஊனம் – குறைபாடு.
கண் – விழி; பெருமை; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; உடலூக்கம்.
பாசம் – ஆசை; அன்பு; மும்மலம்; பற்று.
உணர்தல் – அறிதல்; நினைதல், கருதுதல்; ஆராய்தல்; இயல்புணர்தல்; தெளிதல்; பகுத்தறிதல்; நுகர்தல்.
பதி- தலைவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.
ஞானம் – அறிவு; கல்வி; பரஞானம்.
சிந்தை – மனம்; அறிவு; எண்ணம்; தியானம்.
நாடுதல் – தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல் நினைத்தல்.
உறு - மிகுதி; மிக்க.
உறா- மிகுதி இன்மை.
துனை – வேகம்; விரைவு.
ஒருவுதல் – விடுதல்; நீங்குதல்; கடத்தல்.
எண்ணுதல் – துய்த்தல்.
அஞ்சு - ஐந்து; அச்சம்; ஒளி.
எழுத்து -கல்வி; இலக்கணம்.

பதவுரை:

ஊனக்கண் பாசம் உணராப் பதியை – ஆசை தளைப்பட்டதால் குறையறிவுடையவர்களால் பகுத்து அறியமுடியாத பரம்பொருளை;
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி –மெய்ஞானம் என்னும் வாலறிவால் தியானத்தில் நாட்டம்கொண்டு;
உறாத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவ – அதிக விரைதல் இல்லாமல் மெதுவாக ஆசாபாசங்கள் எல்லாம் நீங்கப்பெற்று;
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்சு எழுத்தே – குளிர்ந்த நிழல்போல் ஆறுதல் அளிக்கவல்ல பரம்பொருள் அவரவருடைய வினைப் பதிவாகிய விதியைத் துய்த்து முடித்த பின்பு அறிவொளி என்னும் இலக்கணமாகப் புலனாகும்.

தெளிவுரை:

பகுத்து அறிதல் இல்லாது ஆசை தளைப்பட்ட குறையறிவு உடையவர்களால் அறியமுடியாதது பரம்பொருள்.அதனை மெய்ஞானம் என்னும் வாலறிவால் தியானத்தில் நாட்டம்கொண்டு, அத்தியானத்தில் ஈடுபடும் ஞானிகளுக்கு , அதிக விரைதல் இல்லாமல் சிறிது சிறிதாக ஆசாபாசங்கள் எல்லாம் நீங்கப்பெற்று,
அவரவருடைய விதி என்னும் வினைப்பதிவுகளைத் துய்த்து முடித்த பின்பு ஒளி என்னும் அறிவின் இலக்கணமாகக் குளிர்ந்த நிழல்போல் ஆறுதல் அளிக்கவல்ல பரம்பொருள் புலனாகும்.

கருத்துரை :

சுகபோகங்கள் என்னும் உலகாயத இன்ப துன்பங்களில் ஆசையுடையவர்கள் பகுத்தறிவு இல்லா குறையறிவு உடையவர்கள். அவர்களால் பரம் பொருளை அறிய முடியாது. ஆனால் மெய்ஞானிகள் தியானத்தில் நாட்டம் கொண்டு , அத்தியானத்தில் ஈடுபடுவார்கள். அதனால் அவர்களது ஆசாபாசங்கள் சிறிது சிறிதாக நீங்கப்பெற்று அவரவருடைய விதி என்னும் வினைப்பதிவுகளும் அவர்களால் துய்த்து முடிக்கப்பெற்றபின் ஒளி என்னும் அறிவின் இலக்கணமாகக் குளிர்ந்த நிழல்போல் ஆறுதல் அளிக்கவல்ல பரம்பொருள் அவர்களுக்குப் புலனாகும் என்பது கருத்து.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக