புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
3 Posts - 2%
bala_t
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
1 Post - 1%
prajai
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
1 Post - 1%
Kavithas
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
280 Posts - 42%
heezulia
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
6 Posts - 1%
prajai
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
5 Posts - 1%
manikavi
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குறளில் காணும் நிறை Poll_c10குறளில் காணும் நிறை Poll_m10குறளில் காணும் நிறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளில் காணும் நிறை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 12:41 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும்  பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது.  அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)

தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.


பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.

பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.

கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்

விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு  அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர்  மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 12:44 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – ( 7. திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (40-02)

தெளிவுரை:
(தாம் கசடறக் கற்கும் கல்வியை வாழ்வில் நடைமுறைப் படுத்தும்போது) கிடைக்கப்பெறும் அனுபவங்களும் அவற்றாலாகும் நல்லொழுக்கலாறுகளும் ஆகிய இந்த இரண்டு பண்புகளுமே, இவ்வுலகில் பிறவி எடுத்து வாழ்கின்ற அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் அறிவு எனப்படுவதாகும்.

பதப்பொருள்:
எண் - அனுபவம்.
ஏனை –தவிற, மேலும்.
எழுத்து - ஒழுக்கம்.
கண் – அறிவு.
வாழ்தல் – செழிப்பு, வளம்.
உயிர் – ஜீவாத்மா.

பதவுரை:
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
- வாழ்வில் கிடைக்கப்பெறும் அனுபவங்களும் அதனாலாகும் நல்லொழுக்கலாறுகளும் ஆகிய இந்த இரண்டு பண்புகளுமே;
கண்என்ப வாழும் உயிர்க்கு
- இவ்வுலகில் பிறவி எடுத்து வாழ்கின்ற அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் அறிவு எனப்படுவதாகும்.

விளக்கவுரை:
இவ்வதிகாரதின் முதல் குறளில் வாழ்க்கைக்கான கல்வியைப் பிழையறவும் குறையறவும் கற்கவேண்டும் எனப்பட்டது. அவ்வாறு கற்பதனாலேயே கற்பவனுக்கு முழுமையான அறிவு ஏற்பட்டுவிடாது. அக்கல்வியாலாகும் அறிமுகத்தை வாழ்வில் நடைமுறைப்படுத்துபோது உண்டாகும் அனுபவங்களும் அவ்வனுபவங்களால் அறநெறியில் தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஒழுக்கமுமே முழுமையான அறிவு என இக்குறளில் உபதேசிக்கப்படும் மாண்பு வெகு அற்புதம்.

“உற்ற கலை மடந்தை இன்னமும் ஓதுகிறாள்” என்னும் வழக்கு இந்த அனுபவக் கல்வியைத்தான் எனலாம். நாம் அனைவரும் நம் வாழ்நாள் முழுமைக்கும் அதிக அளவில் கற்றுக் கொண்டே இருப்பதும் இந்த அனுபவக் கல்வியைத்தான் என்பதும் உண்மையே.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 13, 2016 2:55 pm

எண் என்றால் கணிதத்தைக் குறிக்கும் ; எழுத்து என்றால் இலக்கியங்களைக் குறிக்கும் .

தாங்கள் குறிப்பிட்டதுபோல எண் என்பது அனுபவத்தையும் , எழுத்து என்பது நல்லொழுக்கத்தையும் குறிக்காது.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 8:01 pm

ஐயா!

எண் என்றால் கணிதம் என்றும் ஒரு பொருள் இருப்பது உண்மைதான். அதுபோலவே அனுபவம் என்பதும் நம் அமுதத் தமிழ்தரும் இன்னுபொரு பொருள். இது   நானாகக் கொடுக்கும் பொருள் அல்ல.

அதுபோலவே    எழுத்து என்றால் இலக்கியம் என்றும் பொருள்- நல்லொழுக்கம் என்பதும் பொருள்.  

சொற்பொருட்களிலோ புரிந்து கொண்டதிலோ பிழை இல்லை.

இக்குறளுக்கான இதுகாறும் இல்லாத பொருள் விளக்கம் நவில்தோரும் வரும் நூல் நயம்.

இது தமிழ் அகராதியில் காணப்படுவதைத் தவிறவும், பேச்சுவாக்கில் பெரியோர்கள் ஒருவனைப்பற்றிப் பேசுகையில், 'அவன் என்ன செய்வான் எல்லம் பிரம்மன் போட்ட கணக்கு' என்பதைக் கேள்விப்படிருப்பீர்கள். இங்கு கணக்கு என்றால் ஒருவனுடைய் வாழ்க்கை அனுபவம்.

அதுபோலவே பிரம்மன் எழுதியதை மாற்றமுடியாது என்பதில் எழுத்து என்னும் பதம் ஒழுக்கத்தைக் குறிப்பதே.

மேலும் இக் குறள் முதல் குறட்பாவோடு தொடர்புடையது.

ஆகையால்தான் 'தெரிந்துகொள்வோம் தேன் தமிழை' என்னும் துணைத் தலைப்பில் குறளில் நிறை காணப்படுகிறது.

பொருள்விளக்கம் தர ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நம் நன்றிகள்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 14, 2016 7:31 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )


குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (40-03)

தெளிவுரை:
கல்விகற்ற சான்றோர் எனப்படுவர்கள் ( தாம் குருமூலமாகக் கற்கும் பயிற்சியோடு கூடிய கல்வியும் அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தலால் கிடைக்கும் அனுபவமும், அவற்றோடு கூடவே அவ்வனுபவத்தால் அறநெறியில் மாற்றியமைக்கப் படும் ஒழுக்கமும் ஆகியவற்றைக் கொண்ட) அறிவை உடையவர்கள். அவ்வாறு இல்லாத மற்றவர்கள் கல்லாதவர் எனப்படுபவர்கள் ஆவார்கள். அக்கல்லதவர்கள், தாம் உணவு உண்ணுதலால் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள தசைப் பிண்டங்களே ஆவர்.

பதப்பொருள்:
கண் –அறிவு.
கற்றோர் – கல்வி கற்ற சான்றோர்.
முகத்தல் -உண்ணுதல்.
திரளுதல் -சேர்த்துவைத்தல்
புண் -தசை.

பதவுரை:
கண்ணுடையர் என்பவர் கற்றோர்
- கல்விகற்ற சான்றோர் எனப்படுவர்கள் ( தாம் குருமூலமாகக் கற்கும் பயிற்சியோடு கூடிய கல்வியும் அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தலால் கிடைக்கும் அனுபவமும், அவற்றோடு கூடவே அவ்வனுபவத்தால் அறநெறியில் மாற்றியமைக்கப் படும் ஒழுக்கமும் ஆகியவற்றைக் கொண்ட) அறிவை உடையவர்கள்.
முகத்துத் திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
- அவ்வாறு அல்லாத மற்றவர்கள் கல்லாதவர் எனப்படும், தாம் உணவு உண்ணுதலால் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள தசைப் பிண்டங்களே ஆவர்.

விளக்கவுரை:
பயிற்சியோடு கூடிய நூற்கல்வி மட்டும் இருந்து, மற்றும் அக்கல்வியை வாழ்வில் கடைப்பிடித்தலால் கிடைக்கும் அனுபவத்தோடு கூடிய ஒழுகலாறுகளை அற்றவர்கள் வெறும் உணவினால் ஆன தசைப்பிண்டங்கள் என்பது கருத்து




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 15, 2016 9:00 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (40-04)

தெளிவுரை:
உலகமக்களுக்கு உண்மையாகப் பயனளிக்கும் உயர்ந்தனவும் , சிறந்தனவும் ஆகியனவற்றை விருப்பத்தோடு ஆலோசித்து, அதற்கேற்றவாறு சிந்தித்து செயல்படுதல் கல்வி கற்றவர்களின் தொழிலாக இருக்கவேண்டும்.

பதப்பொருள்:
உவப்பு - விருப்பம்
தலை – உயர்ந்தது, சிறந்தது
கூடுதல் – அனுகூலம்; உபயோகம்; பயனாதல்.
உள்ள – உண்மையான.
பிரிதல் –நினைத்தல்.
அனைத்து –அத்தன்மையது.
புலவர் – கற்றறிந்த அறிஞர்
தொழில் -செயல்

பதவுரை:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
- உலகமக்களுக்கு உண்மையாகப் பயனளிக்கும் உயர்ந்தனவும் , சிறந்தனவும் ஆகியனவற்றை விருப்பத்தோடு ஆலோசித்து;
அனைத்தே புலவர் தொழில்
அதற்கேற்றவாறு சிந்தித்து செயல்படுதல் கல்வி கற்றவர்களின் தொழிலாக இருக்கவேண்டும்.

விளக்கவுரை:
இவ்வதிகாரத்தின் முதற்குறளில் கல்வி கற்கவேண்டிய முறை, அவ்வாறு கற்ற கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டியதின் அவசியம் ஆகியன சொல்லப்படுகின்றன.
இரண்டாவது குறளில், அவ்வாறு கற்ற கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதால் கிடைக்கும் அனுபவமும், அவ்வனுபவம் வாழ்வில் நல்லொழுக்கமாக மாற்றப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மூன்றாவது குறளில், இரண்டாவது குறளில் சொல்லப்பட்ட அறிவை அடைந்தவர்களே கற்றவர்கள்; ஏனையோர் கல்லாதவர் என்பது மட்டும் அல்லாது அத்தகையோர் உணவை உண்பதால் உண்டாகும் வெறும் தசைப்பிண்டங்களே என்பது தெளிவிக்கப்படுகிறது.

இந்த நான்காவது குறளில் , கற்றறிந்தவர் என்பவர் தாம் கற்ற கல்வி, அக்கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்தித் தாம் அடைந்த அனுபவம், அவ்வனுபவத்தின் பயனாய்த் தம் வாழ்வில் தாம் அறநெறியில் அமைத்துக் கொண்ட ஒழுகலாறுகள் ஆகியனவற்றை உலகில் வாழும் பிற மக்களுக்கும் அவை பயன்படும் விதத்தில் அமைய வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு, உலக மக்கள் யாவரும் சிறந்ததும் உயர்ந்ததும் ஆகிய நன்மைகளைப் பெறவேண்டி, அதற்கேற்ப செயல்படுவதே கல்வி கற்றறிந்த ஞானியர் செயல் என்பது கருத்தாக அறிவுறுத்தப்படுகிறது.
உலகம் உய்ய வழி வகுக்கும் பொய்யாமொழியின் அழியா அறிவுரைகள் வெகு அற்புதம் !




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 9:10 am

அற்புதம் . நன்றாக உள்ளது விளக்கம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 15, 2016 10:31 am

ஐயா!

குறளுக்குப் புதிய விளக்கம் தருவதற்கு முயற்சி செய்கிறீர்கள் . பாராட்டுகிறேன். ஆனாலும் சில கருத்துக்களை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பள்ளியில் படிக்கும்போது , ஆசிரியர்கள் எவ்வாறு நமக்கு கற்பித்தார்களோ , அதன்வழி நிற்றலே சால்புடைத்து. பெரும்பாலான குறட்பாக்களுக்கு உரையே தேவையில்லை . உள்ளங்கை நெல்லிக்கனி போல பொருள் எளிதில்  காணமுடியும் . ஆனால் தாங்களோ

கண் என்றால் அறிவு என்றும்
முகத்திரண்டு என்ற சொல்லை முகத்தல் + திரளுதல் என்றும் பிரிக்கிறீகள் .
இது எவ்வகையில் ஏற்புடைத்தாகும் ?

கண்ணும் , செவியும் இன்றி கற்றல் நிகழா . கண் இல்லாத வழி செவிவழிக் கற்க என்பது ஐயனின் கட்டளை . " கற்றிலன் ஆயினும் கேட்க " என்பது ஐயனின் வேண்டுகோள் . ஒரு குறளுக்குப் பொருள் காணும் முன்பாக பிற உரையாசிரியர்கள் , குறிப்பாக பரிமேலழகர் உரையையும் மனதில் கொள்ளவேண்டும்  என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 15, 2016 1:19 pm

பணிவான பதிலுரை:

ஐயா!
அற்புதமான தங்கள் அறிவுரையை தலை தாழ்த்தி ஏற்கிறேன்- ஒரு சிறிய திருத்தமுடன்.

அடியேன், “குறளுக்குப் புதிய விளக்கம் தருவதற்கு முயற்சி” செய்யவில்லை. குறளை முழுமையாகப் புரிந்து கொள்ளுதலின் விழைவே, இந்த “குறளில் காணும் நிறை” என்பதே,  சான்றோராகிய தங்களுக்கு அடியேனின் பணிவான சமர்ப்பணம்.

தாங்கள் அறியாததாக இருக்க முடியாத உண்மை  -  எது  சுருங்கச் சொல்லப்படுகிறதோ அது விரிந்த விளக்கமும் ஆழ்ந்த பொருள் வளமும் கொண்டதாகவே எப்போதும் எக்காலத்திலும் விளங்கும்.  ஏழுசீர்களில்  இரண்டு அடிகளில் ஒன்று குறளடி என்னும்படிக்கு இரண்டு அடிகளில் அமைந்த  ஒரு தெய்வமாக்கவியின் படைப்பு  பலராலும் ஒப்புக்கொள்ளப்படும் மேலோட்டமான பொருளோடு அதிசயிக்க வைக்கும் ஆழமான பொருள் வளமும் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயம் இருக்கமுடியாது.

தமிழ் வேதம் வள்ளுவத்திற்கு ,
 
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர்

ஆகிய நம் முன்னோர்கள்  எல்லையுரை செய்து இருப்பினும் அவை ஒன்றையொன்று ஒத்திருக்கவில்லையே- ஏனெனில் தமிழின் உயர்வும் சிறப்புமே அதன் பொருள் வளம் தானே.
 

நம் காலத்திய மு.வ, கலைஞர், தமிழ்மேதை சாலமன் பாப்பையா போன்றவர்களதும்  இன்னும் பலருடைய உரைகளும் கூட ஒன்றுக் கொன்று கருத்தில் ஒக்கவில்லையே. மேலும் எல்லாமும் ஒருவகையில் மேலோட்டமானதாகி குறள் பதங்களின் பொதுப் பொருளுக்கே விளக்கம் கண்டுள்ளதை நாம் காணமுடிகிறது என்பது அடியனின் தாழ்மையானதும் பணிவானதும் ஆகிய எண்ணம்.

எப்பொழுது முன்னூல்களைத் துணைக்குக் கொள்கிறோமோ அப்போதே நம் சுய சிந்தனை அறிவு நம்மை விட்டு விலகிவிடுகிறது என்பதும் உண்மைதானே. ஆகையால் அடியேன் முந்தைய உரை நூல்களைத் துணையாக்கிக் கொள்ளவில்லை எனபதைப் பணிவோடு சமர்ப்பிகின்றேன்.

நமது அமுதத் தமிழின் உன்னத உயர்ந்த  சொற்பொருள் வளத்தை சம்ஸ்க்ருதம் தவிர்த்து வேறு மொழிகளில் காண முடியுமோ என அடியன் அறியேன். கூட்டுச்சொற்களை இலக்கண விதிமுறை மாறாமல் பிரித்து பொருளுரைப்பின் அப்பொருள் நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்புடையதாயின்  அதில் குற்றமல்லவே.

‘தத்த்வமஸி- தத் த்வம் அஸி ’ என்னும் இந்த சாம வேத ஸமாஸ பத மகாவாக்கியம்  (கூட்டுச்சொற்தொடர்) ,
-  ஸ்ரீ ஆதிசங்கரின் ஞானத்தில் அத்வைதம்,
-  ஸ்ரீமத்வரின் ஞானத்தில் த்வைதம்,
-  ஸ்ரீராமானுஜரின் ஞானத்தில் விசிஷ்டாத்வைதமாகி,
மும்மதத் தோற்றத்திற்கும்   மூலகாரணமாகியது.

1. தத்த்வமஸி  > தத் +த்வம்+ அஸி  -  அது நீயாக இருக்கிறாய் – முதல் வேற்றுமை எனக்கொண்டால் ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைதமாகிறது.

2. தத்த்வமஸி  > தஸ்மாத் +த்வம்+ அஸி  -அதிலிருந்து வந்து நீ இருக்கிறாய் – ஐந்தாம் வேற்றுமை கொண்டு பிரிப்பதால் அது ஸ்ரீமத்வரின் த்வதைமாகிறது.

3. தத்த்வமஸி  > தஸ்ய +த்வம்+ அஸி  - அதனுடையதாக நீ இருக்கிறாய் – ஆறாம் வேற்றுமை கொண்டு பிரிப்பதால்  அதுவே விசிஷ்ட்டாத் வைதமாகிறது.

இவை மூன்றும் அவரவர் அறிவின்பாதையில் பார்த்தால் குறையே இருக்க வாய்ப்பில்லை.

நமது அமுதத் தமிழில்  ஒரேயொரு எடுத்துக்காட்டு:
அரசவைக்கு வருகைதந்த நம் தமிழ்ப்பாட்டி ஔவைக்கு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"  

என்று வரவேற்புரை வழங்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு,

“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

என்று  ஔவை சமர்ப்பித்த  நன்றியுரைக்கு மேலோட்டமாகும் பொருள் உரித்தாகாதே .    இவற்றைச் சிலேடைப் பாடாலாகக் கொண்டாலும் நாம் கூற வருவது கூட்டுச் சொல்லில் பதம் பிரித்தல் பற்றியே என அன்புடன் கொள்ள வேண்டுகிறேன்.

அதுபோலவே,

“முகத்திரண்டு” என்னும் கூட்டுச் சொற்பதம் ‘முகத்தில்+ இரண்டு’ என்றும் ‘முகத்து+இரண்டு’ என்றும் கொள்ளத் தக்கதே.

முன்னதைவிட பின்னதே மேலும்  எளிதானது –எடுத்த எடுப்பிலேயே சரியானது.

இன்னும் சொல்லப்போனால் “முகத்திரண்டு” என்னும் கூட்டுச் சொற்பதத்தை முகத்தில்+ இரண்டு என்று பிரித்தால் சொற்குற்றமும் நேரலாம். ஏனெனில், முகத்தில்+ இரண்டு  என்பதற்கு ‘முகத்திலிரண்டு’ என்ற  எளிய இயல்பான வேறொரு கூட்டுச் சொல்லும் உள்ளதே.

ஆகவே ‘முகத்திரண்டு’ என்னும் கூட்டுப்பதத்தை இலக்கணப்பிழை இல்லையெனில்  முகத்து+ இரண்டு என்று பிரித்துப் பொருள் கொண்ட அடியனை ஏற்குமாறு விழைகிறேன். அவ்வாறு பதம் பிரித்ததில் இலக்கணப்பிழை இருப்பின் அடியனுக்கு விவரமாக மின்னஞ்சலில் அறிவுறுத்துமாறும் வேண்டுகின்றேன்.

கல்வி கற்பிப்பதில் , கற்பவருடைய வயதுமுதிர்ச்சி, கற்பிப்பதை அவர் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை முக்கிய பங்காற்றுவது உண்மை. பள்ளிப் பருவத்தில் மேலோட்டமான கற்பித்தல்தான் தேவை. ஆகவே திருக்குறளுக்கு அப்போது கற்பிக்கப்பட்ட பொருள் சரியே.இது திருக்கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வழிபடுதல் போலவே - தவறில்லை.

ஆனால் வயதும் ஞானமும் கூடும்போது உண்மையான ஆழமான பொருளைச் சிந்திப்பதில் பிழையில்லை - அதில் சொற்குற்றமும் பொருட்குற்றமும் இல்லை என்றால்.  இது கோவிலுக்குச் செல்லாமல் சுய ஆத்மனை வழிபடும் , தானே தற்பரன் என்னும் சித்தர்களின் முடிவுபோல.

பள்ளியில்  நேர்கோட்டில் செல்வதாகக் கற்பிக்கப்படும் ஒளி, முதிர் கலாசாலைகளில் வளைவு கோட்டிலும் செல்வதாக இயற்பியல் பாடம் கற்பிக்கப்படுகிறதே. அதுபோலவே, 'குறளில் காணும் நிறை' யையும் கொள்ள வேண்டுகின்றேன்-  சொற்பிழையோ, பொருட்பிழையொ இல்லை எனில்.

கண்ணும், செவியும் அறிவுக்கான ஒருவகை சாதனங்கள்தானே தவிற அவையே அறிவாகாது. அவை இன்மையால் அறிவதற்கு இயலாது என்பதும் சரியாகாது. பாடம் படிக்காத - கேட்காத மேதைகளும் பாரினில் உண்டுதானே.

நம் கல்விக் கடவுள் - கர்மவீரர் காராஜர் - படித்ததற்கும் அவர்தம் அறிவிற்கும் ஏதாகிலும் தொடர்பு  இருக்கமுடியவில்லையே.

கணக்கில்லா முனைவர் பட்டம் பெற்றுள்ள  நம் கலைஞர் பள்ளியில் படித்தது எம்மாத்திரம்!  

அருட்பிரகாச வள்ளலார் ஆசிரியரிடம் கற்றது எப்போது !

மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவிற்கும் படிப்பிற்கும் இடைவெளி எவ்வளவு !    

மகாபாரத ‘ஏகலைவன்’ ஆச்சாரியரிடம் பாடம் கேட்கவும் இல்லை – படிக்கவும் இல்லை. இருந்தாலும் தனுர் வித்தையில் அர்ச்சுனனை விஞ்சின்னானல்லவா!

இராமக்ருஷ்ண பரமஹம்சரின் ஞானத்திற்கும் படிப்பிற்கும் ஏது சம்பந்தம்!

அந்தகர்களும் செவிடர்களும் அறிஞர்களாக இருந்த வரலறும் உண்டு தானே !

கண் என்பதற்கு அறிவு என்பதும் பொருள்;
முகத்தல் என்றால் திரளுதல் என்பதும்பொருள்

இவை அடியேனின் கண்டுபிடிப்பாகும் பொருள்கள் அல்ல.  அவை நம் தமிழ் அகராதிகளில் அழகாக உள்ளன.

ஆகையால்தான் “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-திருக்குறள்”என்னும் உபதலைப்பின் கீழ் பொருள் காண்கின்றேன். பதங்களுக்கான பொருள் நம்மில் பெரும்பாலோருக்குப் புதியது - ஆனாலும் உண்மையாகிய பழையதே.

மேலும் குறட்பாக்களை ஆழப் பொருள் கண்டால், ஒவ்வொரு குறளும் முந்தையதுடன் தொடர்புடையதாகவே  இருக்கும். “கூறியது கூறல்” என்னும் கவிப்பிழையை நம் தமிழ்வேதம் தந்த தெய்வமாக் கவி - ஐயன் வள்ளுவரிடம் கற்பிக்க முயலலாமா!

நீண்ட நெடிய விளக்கத்தைப் பொருத்தருள வேண்டுகின்றேன்



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 15, 2016 2:10 pm

உங்கள் இருவரின் கருத்து உரையாடல்கள்
மிக மிக ரொம்பவே நன்றாக இருக்கிறது . குறளில் காணும் நிறை 3838410834 குறளில் காணும் நிறை 103459460 சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக