ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறளில் காணும் நிறை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Tue Sep 13, 2016 12:41 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும்  பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது.  அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)

தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.


பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.

பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.

கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்

விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு  அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர்  மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Tue Sep 13, 2016 12:44 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – ( 7. திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (40-02)

தெளிவுரை:
(தாம் கசடறக் கற்கும் கல்வியை வாழ்வில் நடைமுறைப் படுத்தும்போது) கிடைக்கப்பெறும் அனுபவங்களும் அவற்றாலாகும் நல்லொழுக்கலாறுகளும் ஆகிய இந்த இரண்டு பண்புகளுமே, இவ்வுலகில் பிறவி எடுத்து வாழ்கின்ற அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் அறிவு எனப்படுவதாகும்.

பதப்பொருள்:
எண் - அனுபவம்.
ஏனை –தவிற, மேலும்.
எழுத்து - ஒழுக்கம்.
கண் – அறிவு.
வாழ்தல் – செழிப்பு, வளம்.
உயிர் – ஜீவாத்மா.

பதவுரை:
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
- வாழ்வில் கிடைக்கப்பெறும் அனுபவங்களும் அதனாலாகும் நல்லொழுக்கலாறுகளும் ஆகிய இந்த இரண்டு பண்புகளுமே;
கண்என்ப வாழும் உயிர்க்கு
- இவ்வுலகில் பிறவி எடுத்து வாழ்கின்ற அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் அறிவு எனப்படுவதாகும்.

விளக்கவுரை:
இவ்வதிகாரதின் முதல் குறளில் வாழ்க்கைக்கான கல்வியைப் பிழையறவும் குறையறவும் கற்கவேண்டும் எனப்பட்டது. அவ்வாறு கற்பதனாலேயே கற்பவனுக்கு முழுமையான அறிவு ஏற்பட்டுவிடாது. அக்கல்வியாலாகும் அறிமுகத்தை வாழ்வில் நடைமுறைப்படுத்துபோது உண்டாகும் அனுபவங்களும் அவ்வனுபவங்களால் அறநெறியில் தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஒழுக்கமுமே முழுமையான அறிவு என இக்குறளில் உபதேசிக்கப்படும் மாண்பு வெகு அற்புதம்.

“உற்ற கலை மடந்தை இன்னமும் ஓதுகிறாள்” என்னும் வழக்கு இந்த அனுபவக் கல்வியைத்தான் எனலாம். நாம் அனைவரும் நம் வாழ்நாள் முழுமைக்கும் அதிக அளவில் கற்றுக் கொண்டே இருப்பதும் இந்த அனுபவக் கல்வியைத்தான் என்பதும் உண்மையே.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by M.Jagadeesan on Tue Sep 13, 2016 2:55 pm

எண் என்றால் கணிதத்தைக் குறிக்கும் ; எழுத்து என்றால் இலக்கியங்களைக் குறிக்கும் .

தாங்கள் குறிப்பிட்டதுபோல எண் என்பது அனுபவத்தையும் , எழுத்து என்பது நல்லொழுக்கத்தையும் குறிக்காது.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Tue Sep 13, 2016 8:01 pm

ஐயா!

எண் என்றால் கணிதம் என்றும் ஒரு பொருள் இருப்பது உண்மைதான். அதுபோலவே அனுபவம் என்பதும் நம் அமுதத் தமிழ்தரும் இன்னுபொரு பொருள். இது   நானாகக் கொடுக்கும் பொருள் அல்ல.

அதுபோலவே    எழுத்து என்றால் இலக்கியம் என்றும் பொருள்- நல்லொழுக்கம் என்பதும் பொருள்.  

சொற்பொருட்களிலோ புரிந்து கொண்டதிலோ பிழை இல்லை.

இக்குறளுக்கான இதுகாறும் இல்லாத பொருள் விளக்கம் நவில்தோரும் வரும் நூல் நயம்.

இது தமிழ் அகராதியில் காணப்படுவதைத் தவிறவும், பேச்சுவாக்கில் பெரியோர்கள் ஒருவனைப்பற்றிப் பேசுகையில், 'அவன் என்ன செய்வான் எல்லம் பிரம்மன் போட்ட கணக்கு' என்பதைக் கேள்விப்படிருப்பீர்கள். இங்கு கணக்கு என்றால் ஒருவனுடைய் வாழ்க்கை அனுபவம்.

அதுபோலவே பிரம்மன் எழுதியதை மாற்றமுடியாது என்பதில் எழுத்து என்னும் பதம் ஒழுக்கத்தைக் குறிப்பதே.

மேலும் இக் குறள் முதல் குறட்பாவோடு தொடர்புடையது.

ஆகையால்தான் 'தெரிந்துகொள்வோம் தேன் தமிழை' என்னும் துணைத் தலைப்பில் குறளில் நிறை காணப்படுகிறது.

பொருள்விளக்கம் தர ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நம் நன்றிகள்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Wed Sep 14, 2016 7:31 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )


குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (40-03)

தெளிவுரை:
கல்விகற்ற சான்றோர் எனப்படுவர்கள் ( தாம் குருமூலமாகக் கற்கும் பயிற்சியோடு கூடிய கல்வியும் அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தலால் கிடைக்கும் அனுபவமும், அவற்றோடு கூடவே அவ்வனுபவத்தால் அறநெறியில் மாற்றியமைக்கப் படும் ஒழுக்கமும் ஆகியவற்றைக் கொண்ட) அறிவை உடையவர்கள். அவ்வாறு இல்லாத மற்றவர்கள் கல்லாதவர் எனப்படுபவர்கள் ஆவார்கள். அக்கல்லதவர்கள், தாம் உணவு உண்ணுதலால் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள தசைப் பிண்டங்களே ஆவர்.

பதப்பொருள்:
கண் –அறிவு.
கற்றோர் – கல்வி கற்ற சான்றோர்.
முகத்தல் -உண்ணுதல்.
திரளுதல் -சேர்த்துவைத்தல்
புண் -தசை.

பதவுரை:
கண்ணுடையர் என்பவர் கற்றோர்
- கல்விகற்ற சான்றோர் எனப்படுவர்கள் ( தாம் குருமூலமாகக் கற்கும் பயிற்சியோடு கூடிய கல்வியும் அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தலால் கிடைக்கும் அனுபவமும், அவற்றோடு கூடவே அவ்வனுபவத்தால் அறநெறியில் மாற்றியமைக்கப் படும் ஒழுக்கமும் ஆகியவற்றைக் கொண்ட) அறிவை உடையவர்கள்.
முகத்துத் திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
- அவ்வாறு அல்லாத மற்றவர்கள் கல்லாதவர் எனப்படும், தாம் உணவு உண்ணுதலால் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள தசைப் பிண்டங்களே ஆவர்.

விளக்கவுரை:
பயிற்சியோடு கூடிய நூற்கல்வி மட்டும் இருந்து, மற்றும் அக்கல்வியை வாழ்வில் கடைப்பிடித்தலால் கிடைக்கும் அனுபவத்தோடு கூடிய ஒழுகலாறுகளை அற்றவர்கள் வெறும் உணவினால் ஆன தசைப்பிண்டங்கள் என்பது கருத்து
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Thu Sep 15, 2016 9:00 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (40-04)

தெளிவுரை:
உலகமக்களுக்கு உண்மையாகப் பயனளிக்கும் உயர்ந்தனவும் , சிறந்தனவும் ஆகியனவற்றை விருப்பத்தோடு ஆலோசித்து, அதற்கேற்றவாறு சிந்தித்து செயல்படுதல் கல்வி கற்றவர்களின் தொழிலாக இருக்கவேண்டும்.

பதப்பொருள்:
உவப்பு - விருப்பம்
தலை – உயர்ந்தது, சிறந்தது
கூடுதல் – அனுகூலம்; உபயோகம்; பயனாதல்.
உள்ள – உண்மையான.
பிரிதல் –நினைத்தல்.
அனைத்து –அத்தன்மையது.
புலவர் – கற்றறிந்த அறிஞர்
தொழில் -செயல்

பதவுரை:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
- உலகமக்களுக்கு உண்மையாகப் பயனளிக்கும் உயர்ந்தனவும் , சிறந்தனவும் ஆகியனவற்றை விருப்பத்தோடு ஆலோசித்து;
அனைத்தே புலவர் தொழில்
அதற்கேற்றவாறு சிந்தித்து செயல்படுதல் கல்வி கற்றவர்களின் தொழிலாக இருக்கவேண்டும்.

விளக்கவுரை:
இவ்வதிகாரத்தின் முதற்குறளில் கல்வி கற்கவேண்டிய முறை, அவ்வாறு கற்ற கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டியதின் அவசியம் ஆகியன சொல்லப்படுகின்றன.
இரண்டாவது குறளில், அவ்வாறு கற்ற கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதால் கிடைக்கும் அனுபவமும், அவ்வனுபவம் வாழ்வில் நல்லொழுக்கமாக மாற்றப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மூன்றாவது குறளில், இரண்டாவது குறளில் சொல்லப்பட்ட அறிவை அடைந்தவர்களே கற்றவர்கள்; ஏனையோர் கல்லாதவர் என்பது மட்டும் அல்லாது அத்தகையோர் உணவை உண்பதால் உண்டாகும் வெறும் தசைப்பிண்டங்களே என்பது தெளிவிக்கப்படுகிறது.

இந்த நான்காவது குறளில் , கற்றறிந்தவர் என்பவர் தாம் கற்ற கல்வி, அக்கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்தித் தாம் அடைந்த அனுபவம், அவ்வனுபவத்தின் பயனாய்த் தம் வாழ்வில் தாம் அறநெறியில் அமைத்துக் கொண்ட ஒழுகலாறுகள் ஆகியனவற்றை உலகில் வாழும் பிற மக்களுக்கும் அவை பயன்படும் விதத்தில் அமைய வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு, உலக மக்கள் யாவரும் சிறந்ததும் உயர்ந்ததும் ஆகிய நன்மைகளைப் பெறவேண்டி, அதற்கேற்ப செயல்படுவதே கல்வி கற்றறிந்த ஞானியர் செயல் என்பது கருத்தாக அறிவுறுத்தப்படுகிறது.
உலகம் உய்ய வழி வகுக்கும் பொய்யாமொழியின் அழியா அறிவுரைகள் வெகு அற்புதம் !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 9:10 am

அற்புதம் . நன்றாக உள்ளது விளக்கம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by M.Jagadeesan on Thu Sep 15, 2016 10:31 am

ஐயா!

குறளுக்குப் புதிய விளக்கம் தருவதற்கு முயற்சி செய்கிறீர்கள் . பாராட்டுகிறேன். ஆனாலும் சில கருத்துக்களை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பள்ளியில் படிக்கும்போது , ஆசிரியர்கள் எவ்வாறு நமக்கு கற்பித்தார்களோ , அதன்வழி நிற்றலே சால்புடைத்து. பெரும்பாலான குறட்பாக்களுக்கு உரையே தேவையில்லை . உள்ளங்கை நெல்லிக்கனி போல பொருள் எளிதில்  காணமுடியும் . ஆனால் தாங்களோ

கண் என்றால் அறிவு என்றும்
முகத்திரண்டு என்ற சொல்லை முகத்தல் + திரளுதல் என்றும் பிரிக்கிறீகள் .
இது எவ்வகையில் ஏற்புடைத்தாகும் ?

கண்ணும் , செவியும் இன்றி கற்றல் நிகழா . கண் இல்லாத வழி செவிவழிக் கற்க என்பது ஐயனின் கட்டளை . " கற்றிலன் ஆயினும் கேட்க " என்பது ஐயனின் வேண்டுகோள் . ஒரு குறளுக்குப் பொருள் காணும் முன்பாக பிற உரையாசிரியர்கள் , குறிப்பாக பரிமேலழகர் உரையையும் மனதில் கொள்ளவேண்டும்  என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Thu Sep 15, 2016 1:19 pm

பணிவான பதிலுரை:

ஐயா!
அற்புதமான தங்கள் அறிவுரையை தலை தாழ்த்தி ஏற்கிறேன்- ஒரு சிறிய திருத்தமுடன்.

அடியேன், “குறளுக்குப் புதிய விளக்கம் தருவதற்கு முயற்சி” செய்யவில்லை. குறளை முழுமையாகப் புரிந்து கொள்ளுதலின் விழைவே, இந்த “குறளில் காணும் நிறை” என்பதே,  சான்றோராகிய தங்களுக்கு அடியேனின் பணிவான சமர்ப்பணம்.

தாங்கள் அறியாததாக இருக்க முடியாத உண்மை  -  எது  சுருங்கச் சொல்லப்படுகிறதோ அது விரிந்த விளக்கமும் ஆழ்ந்த பொருள் வளமும் கொண்டதாகவே எப்போதும் எக்காலத்திலும் விளங்கும்.  ஏழுசீர்களில்  இரண்டு அடிகளில் ஒன்று குறளடி என்னும்படிக்கு இரண்டு அடிகளில் அமைந்த  ஒரு தெய்வமாக்கவியின் படைப்பு  பலராலும் ஒப்புக்கொள்ளப்படும் மேலோட்டமான பொருளோடு அதிசயிக்க வைக்கும் ஆழமான பொருள் வளமும் கொண்டதாகவே இருக்கும் என்பதில் ஐயம் இருக்கமுடியாது.

தமிழ் வேதம் வள்ளுவத்திற்கு ,
 
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர்

ஆகிய நம் முன்னோர்கள்  எல்லையுரை செய்து இருப்பினும் அவை ஒன்றையொன்று ஒத்திருக்கவில்லையே- ஏனெனில் தமிழின் உயர்வும் சிறப்புமே அதன் பொருள் வளம் தானே.
 

நம் காலத்திய மு.வ, கலைஞர், தமிழ்மேதை சாலமன் பாப்பையா போன்றவர்களதும்  இன்னும் பலருடைய உரைகளும் கூட ஒன்றுக் கொன்று கருத்தில் ஒக்கவில்லையே. மேலும் எல்லாமும் ஒருவகையில் மேலோட்டமானதாகி குறள் பதங்களின் பொதுப் பொருளுக்கே விளக்கம் கண்டுள்ளதை நாம் காணமுடிகிறது என்பது அடியனின் தாழ்மையானதும் பணிவானதும் ஆகிய எண்ணம்.

எப்பொழுது முன்னூல்களைத் துணைக்குக் கொள்கிறோமோ அப்போதே நம் சுய சிந்தனை அறிவு நம்மை விட்டு விலகிவிடுகிறது என்பதும் உண்மைதானே. ஆகையால் அடியேன் முந்தைய உரை நூல்களைத் துணையாக்கிக் கொள்ளவில்லை எனபதைப் பணிவோடு சமர்ப்பிகின்றேன்.

நமது அமுதத் தமிழின் உன்னத உயர்ந்த  சொற்பொருள் வளத்தை சம்ஸ்க்ருதம் தவிர்த்து வேறு மொழிகளில் காண முடியுமோ என அடியன் அறியேன். கூட்டுச்சொற்களை இலக்கண விதிமுறை மாறாமல் பிரித்து பொருளுரைப்பின் அப்பொருள் நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்புடையதாயின்  அதில் குற்றமல்லவே.

‘தத்த்வமஸி- தத் த்வம் அஸி ’ என்னும் இந்த சாம வேத ஸமாஸ பத மகாவாக்கியம்  (கூட்டுச்சொற்தொடர்) ,
-  ஸ்ரீ ஆதிசங்கரின் ஞானத்தில் அத்வைதம்,
-  ஸ்ரீமத்வரின் ஞானத்தில் த்வைதம்,
-  ஸ்ரீராமானுஜரின் ஞானத்தில் விசிஷ்டாத்வைதமாகி,
மும்மதத் தோற்றத்திற்கும்   மூலகாரணமாகியது.

1. தத்த்வமஸி  > தத் +த்வம்+ அஸி  -  அது நீயாக இருக்கிறாய் – முதல் வேற்றுமை எனக்கொண்டால் ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைதமாகிறது.

2. தத்த்வமஸி  > தஸ்மாத் +த்வம்+ அஸி  -அதிலிருந்து வந்து நீ இருக்கிறாய் – ஐந்தாம் வேற்றுமை கொண்டு பிரிப்பதால் அது ஸ்ரீமத்வரின் த்வதைமாகிறது.

3. தத்த்வமஸி  > தஸ்ய +த்வம்+ அஸி  - அதனுடையதாக நீ இருக்கிறாய் – ஆறாம் வேற்றுமை கொண்டு பிரிப்பதால்  அதுவே விசிஷ்ட்டாத் வைதமாகிறது.

இவை மூன்றும் அவரவர் அறிவின்பாதையில் பார்த்தால் குறையே இருக்க வாய்ப்பில்லை.

நமது அமுதத் தமிழில்  ஒரேயொரு எடுத்துக்காட்டு:
அரசவைக்கு வருகைதந்த நம் தமிழ்ப்பாட்டி ஔவைக்கு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"  

என்று வரவேற்புரை வழங்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு,

“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

என்று  ஔவை சமர்ப்பித்த  நன்றியுரைக்கு மேலோட்டமாகும் பொருள் உரித்தாகாதே .    இவற்றைச் சிலேடைப் பாடாலாகக் கொண்டாலும் நாம் கூற வருவது கூட்டுச் சொல்லில் பதம் பிரித்தல் பற்றியே என அன்புடன் கொள்ள வேண்டுகிறேன்.

அதுபோலவே,

“முகத்திரண்டு” என்னும் கூட்டுச் சொற்பதம் ‘முகத்தில்+ இரண்டு’ என்றும் ‘முகத்து+இரண்டு’ என்றும் கொள்ளத் தக்கதே.

முன்னதைவிட பின்னதே மேலும்  எளிதானது –எடுத்த எடுப்பிலேயே சரியானது.

இன்னும் சொல்லப்போனால் “முகத்திரண்டு” என்னும் கூட்டுச் சொற்பதத்தை முகத்தில்+ இரண்டு என்று பிரித்தால் சொற்குற்றமும் நேரலாம். ஏனெனில், முகத்தில்+ இரண்டு  என்பதற்கு ‘முகத்திலிரண்டு’ என்ற  எளிய இயல்பான வேறொரு கூட்டுச் சொல்லும் உள்ளதே.

ஆகவே ‘முகத்திரண்டு’ என்னும் கூட்டுப்பதத்தை இலக்கணப்பிழை இல்லையெனில்  முகத்து+ இரண்டு என்று பிரித்துப் பொருள் கொண்ட அடியனை ஏற்குமாறு விழைகிறேன். அவ்வாறு பதம் பிரித்ததில் இலக்கணப்பிழை இருப்பின் அடியனுக்கு விவரமாக மின்னஞ்சலில் அறிவுறுத்துமாறும் வேண்டுகின்றேன்.

கல்வி கற்பிப்பதில் , கற்பவருடைய வயதுமுதிர்ச்சி, கற்பிப்பதை அவர் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை முக்கிய பங்காற்றுவது உண்மை. பள்ளிப் பருவத்தில் மேலோட்டமான கற்பித்தல்தான் தேவை. ஆகவே திருக்குறளுக்கு அப்போது கற்பிக்கப்பட்ட பொருள் சரியே.இது திருக்கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வழிபடுதல் போலவே - தவறில்லை.

ஆனால் வயதும் ஞானமும் கூடும்போது உண்மையான ஆழமான பொருளைச் சிந்திப்பதில் பிழையில்லை - அதில் சொற்குற்றமும் பொருட்குற்றமும் இல்லை என்றால்.  இது கோவிலுக்குச் செல்லாமல் சுய ஆத்மனை வழிபடும் , தானே தற்பரன் என்னும் சித்தர்களின் முடிவுபோல.

பள்ளியில்  நேர்கோட்டில் செல்வதாகக் கற்பிக்கப்படும் ஒளி, முதிர் கலாசாலைகளில் வளைவு கோட்டிலும் செல்வதாக இயற்பியல் பாடம் கற்பிக்கப்படுகிறதே. அதுபோலவே, 'குறளில் காணும் நிறை' யையும் கொள்ள வேண்டுகின்றேன்-  சொற்பிழையோ, பொருட்பிழையொ இல்லை எனில்.

கண்ணும், செவியும் அறிவுக்கான ஒருவகை சாதனங்கள்தானே தவிற அவையே அறிவாகாது. அவை இன்மையால் அறிவதற்கு இயலாது என்பதும் சரியாகாது. பாடம் படிக்காத - கேட்காத மேதைகளும் பாரினில் உண்டுதானே.

நம் கல்விக் கடவுள் - கர்மவீரர் காராஜர் - படித்ததற்கும் அவர்தம் அறிவிற்கும் ஏதாகிலும் தொடர்பு  இருக்கமுடியவில்லையே.

கணக்கில்லா முனைவர் பட்டம் பெற்றுள்ள  நம் கலைஞர் பள்ளியில் படித்தது எம்மாத்திரம்!  

அருட்பிரகாச வள்ளலார் ஆசிரியரிடம் கற்றது எப்போது !

மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவிற்கும் படிப்பிற்கும் இடைவெளி எவ்வளவு !    

மகாபாரத ‘ஏகலைவன்’ ஆச்சாரியரிடம் பாடம் கேட்கவும் இல்லை – படிக்கவும் இல்லை. இருந்தாலும் தனுர் வித்தையில் அர்ச்சுனனை விஞ்சின்னானல்லவா!

இராமக்ருஷ்ண பரமஹம்சரின் ஞானத்திற்கும் படிப்பிற்கும் ஏது சம்பந்தம்!

அந்தகர்களும் செவிடர்களும் அறிஞர்களாக இருந்த வரலறும் உண்டு தானே !

கண் என்பதற்கு அறிவு என்பதும் பொருள்;
முகத்தல் என்றால் திரளுதல் என்பதும்பொருள்

இவை அடியேனின் கண்டுபிடிப்பாகும் பொருள்கள் அல்ல.  அவை நம் தமிழ் அகராதிகளில் அழகாக உள்ளன.

ஆகையால்தான் “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-திருக்குறள்”என்னும் உபதலைப்பின் கீழ் பொருள் காண்கின்றேன். பதங்களுக்கான பொருள் நம்மில் பெரும்பாலோருக்குப் புதியது - ஆனாலும் உண்மையாகிய பழையதே.

மேலும் குறட்பாக்களை ஆழப் பொருள் கண்டால், ஒவ்வொரு குறளும் முந்தையதுடன் தொடர்புடையதாகவே  இருக்கும். “கூறியது கூறல்” என்னும் கவிப்பிழையை நம் தமிழ்வேதம் தந்த தெய்வமாக் கவி - ஐயன் வள்ளுவரிடம் கற்பிக்க முயலலாமா!

நீண்ட நெடிய விளக்கத்தைப் பொருத்தருள வேண்டுகின்றேன்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 2:10 pm

உங்கள் இருவரின் கருத்து உரையாடல்கள்
மிக மிக ரொம்பவே நன்றாக இருக்கிறது . சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Fri Sep 16, 2016 3:05 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (40-05)

தெளிவுரை:
உலகில் உள்ள அனைத்தையும் ஒருவர் கற்று அறிந்த, மேலான் ஞான வல்லுனராக இருப்பினும் , அவர் புதியதாகக் கற்க விரும்பும் கல்வியைக் கற்பிப்பவரிடம் இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகவே காத்திருந்து தாம் ஏதும் கற்றறியாதவர் போல் பணிவோடும் அடக்கதோடும் அக்கல்வியைக் கற்க இயலாதவர் எனின், அவர் எவ்வளவுதான் பிற அனைத்துக் கலைகளையும் கற்றவராக இருப்பவராயினும் மற்ற அனைவரிலும் இழிவானவராகவே கருதப்படுவார்.


பதப்பொருள்:
உடையார் – யாதொன்றைக் கற்க வேண்டுமோ அதனை நிரம்பப் பெற்றுள்ளவர்கள்.
முன் – இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகக் காத்திருத்தல்.
இல்லார்- கற்க வேண்டியதைக் கற்க விழைபவர்.
ஏ – பெருக்கம்; மிகுதி.
ஏக்கற்றல் – அதிகமாக அனைத்தையும் கற்றதாதல்.
கடையர் – தாழ்ந்தவர்; இழிவானவர்.

பதவுரை:
ஏக்கற்றுங் கற்றார்
- உலகில் உள்ள அனைத்தையும் ஒருவர் கற்று அறிந்த, மேலான் ஞான வல்லுனராக இருப்பினும்;

உடையார்முன் இல்லார்போல் கல்லா தவர்
- அவர் புதியதாக கற்க விரும்பும் கல்வியைக் கற்பிப்பவரிடம் இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகவே காத்திருந்து தாம் ஏதும் கற்றறியாதவர் போல் பணிவோடும் அடக்கதோடும் அக்கல்வியைக் கற்க இயலாதவர் எனின்,

கடையரே
- அவர் எவ்வளவுதான் பிற அனைத்துக் கலைகளையும் கற்றவராக இருப்பவராயினும் மற்ற அனைவரிலும் இழிந்தவராகவே கருதப்படுவார்.

விளக்கவுரை:
எவ்வாறு கற்க விழையும் கல்வியை எவரும் கற்க முயற்சிக்கவேண்டும் என்பது இக்குறளின் உட்கருத்து.
தாம் கற்க விரும்பும் கல்வியைக் கற்பிக்கும் ஆசானின் முன்பாகப் பணிவோடும், காத்திருந்தும் அக்கல்வியைக் தாழ்மையோடும் பணிவோடும் கற்க முற்படவில்லையாயின், அக்கல்வியைக் கற்க விழைபவர் , பிற அனைத்துக் கலை ஞானங்களிலும் எவ்வளவுதான் பாண்டித்யம் பெற்று சான்றோராக இருப்பினும் மற்ற அனைவரையும் விடவும் தாழ்ந்தவரே ஆவார் என்பது கருத்து.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Sat Sep 17, 2016 11:12 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.. (40-06)

தெளிவுரை:

மண் எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் தோண்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக அளவிலான நீரைச் சுரக்கும் தன்மையது. அதுபொலவே மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிவுசால் விடயங்களைப் பல்லாற்றானும் பரவலாகவும் ஊன்றியும் கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு படிப்பறிவும், போதனைகளாகக் கற்றனவற்றை எவ்வளவுக்கெவ்வளவு பழகிப்பார்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அனுபவ அறிவும் அதிகமாக வாய்க்கப்பெறுவர்.

பதப்பொருள்:
தொடுதல் – தோண்டுதல்; அகழ்தல்; குடைதல்.
அனைத்து- அத்தனை; அவ்வளவு.
ஊறுதல்-இடைவிடாது சுரத்தல்; நீர் பெருகுதல்.
கற்றல் – நூல்களையும் அனுபவங்களையும் பயிலுதல்.
மணல்- மண்.
கேணி - கிணறு.
அறிவு – ஞானம், அறியவேண்டியவை.


பதவுரை:

தொட்டனைத் தூறும் மணற்கேணி
- மண் எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் தோண்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக அளவிலான நீரைச் சுரக்கும் தன்மையது

மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
- மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிவுசால் விடயங்களைப் பல்லாற்றானும் பரவலாகவும் ஊன்றியும் கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு படிப்பறிவும், போதனைகளாகக் கற்றனவற்றை எவ்வளவுக்கெவ்வளவு பழகிப்பார்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அனுபவ அறிவும் அதிகமாக வாய்க்கப்பெறுவர்.

விளக்கவுரை:
எடுத்துக் காட்டு உவமை அணியில் அமைந்த குறள். பரந்ததும் ஊன்றிக் கற்பதுமானக் கல்வி, மணற்கேணியின் அகலத்திற்கும் ஆழத்திற்கும் உவமை காட்டப்படுகிறது. அறிவு நீருக்கு உவமையாகியது.
இக்குறளில் கல்வியை பரவலாகவும் ஒவ்வொன்றையும் ஊன்றி ஆழமாகவும் கற்க வேண்டும் என்பது உபதேசம்.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Sun Sep 18, 2016 4:57 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
 397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (40-07)

தெளிவுரை:
யாதாகிலும் கல்வியைக் கற்ற ஒருவன்,  உலகின் எந்த இடத்திலும்  இருந்துகொண்டு , அங்கு வசிப்பவர்களுடன் தன்னூர் மக்கள் போலவே  உறவும் நட்புமாக  அவனால் உயிர்வாழ முடியும் என்னும் நிலைமை இருக்கும் போது, தனக்கு உகந்த யாதாகிலும்  கல்வியைக் கற்றுப் பயனடையாமல், தாம்  உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுக் கெட்டுப்போகும் வரையிலும் , அவன் காலத்தை வீணாக்குவது ஏனோ!


பதப்பொருள்:
யாதானும் – எல்லாமும் .
நாடு – இடம்.
ஊர் – ஊரில் உள்ளவர்கள்.
ஆமால் – ஆகக்கூடும் என்பதால்.
என் – ஏனோ.
சா – சோர்வு; கெட்டுப்போதல்.
துணை – அளவு.


பதவுரை:
ஒருவன் யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்
- யாதாகிலும் கல்வியைக் கற்ற ஒருவன்,  உலகின் எந்த இடத்திலும்  இருந்துகொண்டு , அங்கு வசிப்பவர்களுடன் தன்னூர் மக்கள் போலவே  உறவும் நட்புமாக  அவனால் உயிர்வாழ முடியும் என்னும் நிலைமை இருக்கும் போது;
சாம் துணையும் கல்லாத ஆறு என்
- தனக்கு உகந்த யாதாகிலும்  கல்வியைக் கற்றுப் பயனடையாமல், தாம்  உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுக் கெட்டுப்போகும் வரையிலும் ,அவன் காலத்தை வீணாக்குவது ஏனோ!

விளக்கவுரை:
கற்ற கல்வி தன்வசம் இருக்க, உலகில் எங்கும் சுகமாக வாழலாம் என்னும் நிலைமை உறுதியாக இருக்கும்போது, ஒருவன் தனக்கேற்ற கல்வியைக் கற்று இன்பமாக வாழாமல் காலத்தை வீணடித்து உடலாலும், மனத்தாலும் சோர்வடைந்து கெட்டுப்போகத் தேவை இல்லை என்பது கருத்து.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Mon Sep 19, 2016 11:39 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 40

கல்வி.

398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (40-08)

தெளிவுரை:

கற்கப்படும் எத்தகையக் கல்வியையும் மனம் ஒருமித்த ஈடுபாட்டுடன் எவராலும் கற்கப்படுமாகில்,
அவ்வாறு அக்கல்வியைக் கற்பவருக்கு அக்கல்வியே அவருக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பாக இருந்து வாழ்வில் உயர்வைக் கொடுக்கவல்லது.


பதப்பொருள்:

ஒருமை – மனம் ஒருமித்த ஈடுபாடு.
கண் – உடன்.
எழுமை – உயர்ச்சி.
ஏமாப்பு – பதுகாப்பு; அரணாதல்
உடைத்து – உடையதாவது.

பதவுரை:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
- கற்கப்படும் எத்தகையக் கல்வியையும் மனம் ஒருமித்த ஈடுபாடுடன் எவராலும் கற்கப்படுமாகில்;

ஒருவற்கு
- அவ்வாறு அக்கல்வியைக் கற்பவருக்கு ;

எழுமையும் ஏமாப் புடைத்து
- அக்கல்வியே அவருக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பாக இருந்து வாழ்வில் உயர்வைக் கொடுக்கவல்லது.

விளக்கவுரை:
கவனமுடன் கல்வி கற்கப்பட்டால், அக்கல்வியே அதனைக் கற்பவருக்கு அவரது வாழ்வில் உயர்வைத்தரக் கூடியதாக அமையும்.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Wed Sep 21, 2016 8:46 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 40

கல்வி.

399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (40-09)

தெளிவுரை:

கற்றறிந்த சன்றோர்கள், தாம் கற்றுத்தெளிந்த கல்வி, தனக்கு மகிழ்சியை அளிப்பதை அனுபவத்தில் கண்டு கொண்டு, அது போலவே உலக மக்கள் யாவரும் அக்கல்வியைக் கற்று, அவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்கும் தாம் கற்ற கல்வியைக் கற்பிப்பர்.

பதப்பொருள்:
இன்புறுதல் – இன்பம் அடைதல்.
காமுறுதல் –விரும்புதல்.


பதவுரை:

கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு
- கற்றறிந்த சன்றோர்கள் தாம் கற்றுத்தெளிந்த கல்வி தனக்கு மகிழ்சியை அளிப்பதை அனுபவத்தில் கண்டு;
உலகு இன்புறக் காமுறுவர்
- அது போலவே உலக மக்கள் யாவரும் அக்கல்வியைக் கற்று, அவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்கும் தாம் கற்ற கல்வியைக் கற்பிப்பர்.

விளக்கவுரை:

கல்வி என்பது ஒருவகைச் செல்வம். தான் கற்றுத் தெளிந்த கல்வியால் தனக்குப் பயன் கிட்டி அதனால் தனக்கு மகிழ்ச்சியுண்டாகும் என்றால் அக்கல்வியைப் பிறருக்கும் மறைக்காமல் கற்பிக்க வேண்டும் என்பது இக்குறளின் கருத்து.
தான் கற்ற கல்வியைப் பிறருக்கு விருப்பத்தோடு கற்பிக்காமையும் ஒருவகைத் திருட்டு. ஆகையால்தான் கற்றறிந்த சான்றோர்கள் தாம் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து யாவரும் அக்கல்வியால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்பது பொருள்.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Fri Sep 23, 2016 9:53 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 40

கல்வி.


400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. (40 -10)

தெளிவுரை:
தன் வாழ்நாள் காலம் முழுவதிலும் ஒருவருக்கு அழியாத மேன்மையையும் நன்மையையும் கொடுக்கவல்ல சொத்தாக அமைவது அவர் கற்றுக் கொண்ட கல்வி அறிவே ஆகும். கல்வியறிவைத் தவிர்த்து மற்ற பிற எந்த விதமான செல்வங்களும் அவர் எப்போதும் எங்கு சென்றாலும் அவருடனேயே வருவதில்லை.

பதப்பொருள்:
கேடு –அழிவு
இல் - இல்லாத
விழுப்பம் – நன்மை; மேன்மை
செல்வம் – நன்மை அளிக்கும் சொத்து
கல்வி – ஒருவர் வாழ்வின் நிமித்தமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி அறிவு.
மாடு – கூடவே வரும் செல்வம்.

பதவுரை:
ஒருவற்கு கேடு இல் விழுச்செல்வம் கல்வி
- தன் வாழ்நாள் காலம் முழுவதிலும் ஒருவருக்கு அழியாத மேன்மையையும் நன்மையையும் கொடுக்கவல்ல சொத்தாக அமைவது அவர் கற்றுக் கொண்ட கல்வி அறிவே ஆகும் .
மாடு அல்ல மற்றை யவை
- கல்வியறிவைத் தவிர்த்து மற்ற பிற எந்த விதமான செல்வங்களும் அவர் எப்போதும் எங்கு சென்றாலும் அவருடனேயே வருவதில்லை.

விளக்கவுரை:

கல்வியறிவு ஒருவருடைய மூளையின் இயக்கமாகிய அறிவால் அடையப்பெறுவது. அந்த அறிவாகிய செல்வம், எவரும் தன் உடம்பை விட்டு அப்புறப்படுத்தி வைக்க இயலாதது. ஆகையால் அவர் எங்கு எப்போது சென்றாலும் சீதனம் போன்று அவர் உடனேயே சென்று அவருக்கு மேன்மையாகிய நன்மையை அளிக்க வல்லது. ஏனைய பிற செல்வங்கள் உடம்பிற்கு அப்பால் இடம் கொள்வதால் அவைகள் அவரை எப்போதும் எங்கும் முழுமையாகத் தொடரமுடியாது என்பது கருத்து.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Sat Sep 24, 2016 11:52 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 41

கல்லாமை.


பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் மூன்றாவதாகவும் நூலின் 41 வது அதிகரமகவும் வருவது கல்லாமை என்பதாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வியாகிய கொள்கை அறிவு(Theory) மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பது கடந்த 40 வது அதிகாரத்தில் உபதேசிக்கப்பெற்றது. இந்த அதிகாரத்தில் அவ்வாறு கல்வியைக் கற்காமையால் ஒருவரது வாழ்வில் உண்டாகும் விளைவுகளையும் இன்ன பிறவற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுவது இந்த கல்லாமை என்னும் அதிகாரத்தின் நோக்கம் .

401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (41-01)

தெளிவுரை :

முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் பேசக்கூடியனவற்றை வேடிக்கைப் பேச்சாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் அது தகுந்த அரங்கம் என்னும் ஆடுகளம் இல்லாமல் நடனமாடுதல் போன்றதே.

பதப்பொருள்:

அரங்கு – நடன அரங்கம்.
வட்டு -முடிவுசெய்தல்.
ஆடு – கூத்து; நடனம்.
நிரம்புதல் –முதிர்தல்.
நூல் - கல்வியறிவு; ஆலோசனை.
கோட்டி –துன்பம் ; பரிகாசம்; வேடிக்கைப் பேச்சு.
கொள்ளுதல் – கருதுதல்.

பதவுரை:

அரங்கு இன்றி வட்டு ஆடியது அற்றே
- தகுந்த அரங்கம் என்னும் ஆடுகளம் இல்லாமல் நடனமாடுதல் போன்றதே.
நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல்
- முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் பேசக்கூடியனவற்றை வேடிக்கைப் பேச்சாகக் கொள்ளவேண்டும்.

விளக்கவுரை:

தகுந்த ஆடுகளம் என்னும் நடன அரங்கம் இல்லாமல் நடனமாடுதல் என்பது அஞ்ஞானம். அதுபோலவே முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் தன் கருத்தைக் கூறுவதும் அஞ்ஞானம். அப்பேச்சை வேடிக்கையாகக் கொள்ளவேண்டுமே தவிற அதற்கு முக்கியத்தும் கொடுப்பதும் அஞ்ஞானம் என்பது கருத்து.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Fri Sep 30, 2016 8:55 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 41

கல்லாமை.

409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (41-09)

தெளிவுரை :

வயதில் மூத்தவராய் இருந்தும் கல்லாதவர்கள் , அவர்களை விடவும் வயதில் குறைந்தவர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பாராகில், கல்வி கற்காத அத்தகைய வயதில் மூத்தவர்கள் உலகோரின் அனைத்து புகழாரமும் இல்லாதவர்களாவார்கள்.

பதப்பொருள்:
மேல் பிறந்தார் - முன் பிறந்தார் – வயதில் மூத்தவர்கள்
கீழ் - தாழ்வு.
கீழ்ப்பிறந்தார் - வயதில் குறைந்தவர்கள் ; நாட்கள் கடந்து பிறந்த வயதில்குறைந்தவர்
அனைத்து –அத்தனை; அவ்வளவு; எல்லாம்.
பாடு – வாழுத்துதல்

பதவுரை:

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்
- வயதில் மூத்தவராய் இருந்தும் கல்லாதவர்களானால்;

கீழ்ப்பிறந்தும் கற்றார்
- அவரை விட வயதில் குறைந்தவர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பாராகில்.

அனைத்து பாடு
- உலகோரின் அனைத்து புகழாரமும்

இலர் - இல்லாதவர்களாவார்கள்.

விளக்கவுரை:

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் -
( பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூறு 5-7)
ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by சிவனாசான் on Sat Oct 01, 2016 9:11 am

திருக்குறள் ஓர்அமுத சுரபி. அதை காணும் கற்கும் அன்பர்கள் உள்ளம் >> பலநிலைகளில் பொருள் கொள்ளும் அளவிற்கு கருத்து கடல் நிரம்ப உள்ளது. @@@@ நல்ல பொருள் விளக்கம். அருமை...
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2891
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 6:14 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 41

கல்லாமை.

குறளில் காணும் நிறை
பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 41

கல்லாமை.


410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். (41-10)

தெளிவுரை :

நல்ல சாத்திர நூல்களைக் கற்று அறிவால் புகழ்பெற்று ஒளிர்பவர்களைத் தவிர்த்த மற்றவர்கள், வாழ்வில் துயரத்தோடு வாழும் மானுட இனத்தவர்கள் ஆவார்கள்.


பதப்பொருள்:

விலங்கு- கதறுதல்; துயரப்படுதல்.
மக்கள் – மானுட இனம்.
அனையர் - அத்தகையவர்.
இலங்கு- ஒளிசெய்; பிரகாசித்தல்.
நூல் – சாத்திரம்; எண்ணம்; அறிவு.
ஏனை –மற்றை; தவிற.

பதவுரை:

விலங்கொடு மக்கள் அனையர்
- துயரதோடு வாழும் மானுட இனத்தவர்களை ஒத்திருப்பவர்கள்.

இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்
- நல்ல சாத்திர நூல்களைக் கற்று அறிவால் புகழ்பெற்று ஒளிர்பவர்களைத் தவிர்த்த மற்றவர்கள்.

விளக்கவுரை:

கற்றோர்கள் தம் கல்வியறிவால் புகழ்பெற்று விளங்குவதால் உலகில் ஆனந்தித்து வாழ்பவர்கள் ஆகிறார்கள். கல்லாதவரோ வாழ்வில் துயரப்பட்டுக் கொண்டு கதறுபவர்களாகும் மானுட இனத்தவர் என்றே ஆவர்.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Mon Oct 03, 2016 7:14 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 42

கேள்வி
411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை (42-01)

தெளிவுரை :

தாமே அனுபவப் பூர்வமாகக் கற்று அறிதல் உட்பட அறியப்படும் எல்லாவகையான கல்வி அறிவோடு , பிறர் அவர்தம் அனுபவமாகக் கூறக் கேட்டு அறிதலும் கல்வியறிவே . அவ்வாறாகிய கேள்வி அறிவு, பிற அனைத்துவகையான கல்வி அறிவால் பெறப்படும் அறிவு அனைத்திலும் உயர்ந்ததாகும்


பதப்பொருள் :

செல்வம் – கல்வி; செழிப்பு.
செவிச்செல்வம் - பிறர் கூறும் அனுபவக் கல்வி அறிவு.
தலை – உயர்ந்தது; சிறந்தது.

பதவுரை :

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்
- ஒருவரால் தாமே அனுபவப் பூர்வமாகக் கற்று அறிதல் உட்பட அறியப்படும் எல்லாவகையான கல்வி அறிவோடு, பிறர் தம் அனுபவமாகக் கூறக் கேட்டு அறிதலும் கல்வியறிவே.

அச்செல்வம்
- அவ்வாறாகிய கேள்வி அறிவு;

செல்வத்துள் எல்லாந் தலை
- பிற அனைத்துவகையான கல்வியால் பெறப்படும் அறிவிலும் உயர்ந்ததாகும்.


விளக்கவுரை :

குருவிடம் கற்கும் கல்வியோ அல்லது தாமே நேரிடையாகக் குருவின் துணை இல்லாமல் கற்கும் கல்வியோ - இரண்டுமே ஏட்டறிவே(Theory). அந்த ஏட்டறிவு பட்டறிவால் ( அனுபவ அறிவால்- Pactical) மட்டுமே நிறைவடைவது.

ஆக, யாதொன்றைப்பற்றியும் முழுமையான அறிவைப் பெற ஒருவர் முதலில் ஏட்டறிவை முயன்று படிக்க வேண்டும்; பின்பு அதனை அனுபவத்தில் ஆராயவேண்டும். இந்த செயல்பாடுகளில், கல்வி கற்பவர் பெரும் உழைப்பிற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, நேரம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியனவற்றையும் செலவிடவேண்டி உள்ளன. பின்புதான் அதனைப்பற்றிய முழுமையான அறிவு ஒருவருக்குக் கிடைக்கிறது.

ஆனால் கேள்வியறிவில், அந்தவகையான அனைத்து உழைப்பு, நேரம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியனவற்றை முழுவதுமாக, சொல்பவரே செய்து முடித்து, பலனாகிய அறிவை மட்டும் கொடுப்பதால், கேள்வி ஞானம் அனைத்திலும் உயர்ந்ததாக ஐயன் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by T.N.Balasubramanian on Mon Oct 03, 2016 12:10 pm

உங்கள் விளக்கங்கள் ஏட்டறிவுடன் கூடிய பட்டறிவு போல் தோன்றுகின்றது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Tue Oct 04, 2016 12:10 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அதிகாரம் 42

கேள்வி

அரசியல்

412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (42-02)

தெளிவுரை :

வாழ்வின் நித்தமாக அறிவுரைகளைக் கேட்டு இடர்நீங்குதல் என்னும் நல்வேளை தடைப்படும் பொழுது, கிடைக்கும் அந்த இடைப்பட்ட கொஞ்ச நேரத்தில் கேள்வி ஞானம் துய்த்தல் என்னும் நியமத்தில் இருந்து விலகி, உடற்பசிக்கும் உணவு உண்ணலாம்

பதப்பொருள் :

செவி - அறிவுரை
உணவு - இளைப்பாறுகை; இடர்நீங்குதல்
போழ்து -நல்வேளை
சிறிது – அலுக்குதல்; சிறிது அசைத்தல்
வயிறு - பசி
ஈதல் – கொடுத்தல்

பதவுரை :

செவிக்கு உணவு இல்லாத போழ்து
- அறிவுரைகளைக் கேட்டு இடர்நீங்குதல் என்னும் நல்வேளை தடைப்படும் பொழுது

சிறிது
- அறிவுரைகளைப் பருகுதல் என்னும் நியமத்தில் இருந்து கொஞ்சம் விலகி

வயிற்றுக்கும் ஈயப் படும்
- உடற்பசிக்கும் உணவு உண்ணலாம்.விளக்கவுரை :

வாழ்நாள் முழுமைக்கும் கேள்வி ஞானம் கிடைக்குமாகின், அந்த ஞானாமிர்தம் தடைப்படும் கால அவகாசத்தில் கேள்வி ஞானம் துய்த்தல் என்னும் நியமத்தில் இருந்து விலகி வயிற்றுப் பசிக்கும் உணவு உண்ணலாம் என்பது கருத்து.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by T.N.Balasubramanian on Tue Oct 04, 2016 4:56 pm

விளக்க உரைக்கு நன்றி .
சில இடங்களில் double spacing ஐ தவிர்க்கலாமே .

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K on Tue Oct 04, 2016 5:55 pm

தவிர்க்கிறேன் ஐயா இனிமேல்.
நன்றி ஐயா.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: குறளில் காணும் நிறை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum