ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சனி தோஷம் நீக்கும் சங்கரன்

View previous topic View next topic Go down

சனி தோஷம் நீக்கும் சங்கரன்

Post by ayyasamy ram on Wed Aug 03, 2016 7:29 am


-
இயற்கையால் வகுக்கப்பட்ட நியதிகள் உயிரினங்கள்
அனைத்திற்கும் பொதுவானவை என்பதை உலகோர்க்கு
உணர்த்த ஈசன் நிகழ்த்திய சம்பவங்கள் எத்தனையோ!

அவற்றுள் ஒன்று, சனைச்சரனுக்கும் அவருக்கும் நடந்த
ஒரு போராட்டம். அதன் இறுதியில் சனிபகவானுக்கு ஈசன்
ஒரு வாக்குறுதி அளித்தார். அந்த சம்பவம் நிகழ்ந்த இடம்
சேங்காலிபுரம். அங்கேதான் அமைந்துள்ள விஸ்வநாதர்
ஆலயம்.

தன் சுழற்சி நியதியின்படி சனீஸ்வரன் வலம் வரும்போது,
சிவபெருமானை அவர் பீடிக்க வேண்டிய ஒரு தருணம்
வந்தது. சிவபிரானைப் பீடிப்பதா? அஞ்சினார். சனீஸ்வரன்.
ஆனாலும் கடமை தவறினால், தனது ஆற்றல் குன்றிவிடுமே
என்று சஞ்சலப்பட்டார்.

பின்னர், பிரானை அணுகி, பணிந்து வணங்கி, ‘பரம்
பொருளாகிய பரமனே! நான் மேற்கொண்டுள்ள கடமை
அடிப்படையில் தங்களை ஏழரை வருடம் பீடிக்க வேண்டிய
– ஏழரை நாட்டு சனிக்காலம் வந்துள்ளது தாங்களோ என்னையும்
சேர்த்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் மகேசன்.

எனவே, தங்களிடம் முன்னறிவிப்பு செய்கிறேன். உங்களைப்
பிடித்துக் கொள்ள எனக்கு அனுமதி அருளவேண்டும்’ என்று
வேண்டினார்.

‘அனைத்தையும் படைத்து, காத்து, அழித்தும், மீண்டும் படைத்து
உலகையே இயக்கியும் வரும் என்னை நீ பீடிப்பதா? என்ன
துணிச்சல்’ என்று கேட்டு புருவத்தை நெறித்தார்.

இறைவன் நிபந்தனை விதிப்பவர், தானும் அதற்குக் கட்டுப்பட
வேண்டும் என்பதை அறியமாட்டாரா என்ன? இருந்தாலும் நிமலன்
அதனை அறியாதவர்போல் நாடகம் ஆடினார்.

நடுங்கிப் போனார், சனிபகவான்.

‘தாங்கள் உலகத்தை இயக்கும் கருவிகளுள் நானும் ஒருவன் நான்
இயங்காமல் போனால் தங்கள் இயக்கமும், தடைப்படும்தானே!
என் கடமையை நான் செய்யத் தவறினால், பின்னர், நவகிரகங்களில்
நானும் ஒருவனாக விளங்கும் ஸ்தானம் வில்லங்கத்துக்கு உள்ளாகி
விடும். என் விஷயத்தில் யாரொருவரும் வாய்தா கோர வழியில்லை.
எனவே, தங்களை ஏழரை வருடங்கள் பிடிக்க அனமதிக்கா
விட்டாலும் ஏழரை மாதங்கள் மட்டும் பிடித்துக் கொள்கிறேன்’
என்றார் சனீஸ்வரன்.

ஈசன் அதற்கும் இணங்கவில்லை.
‘உன் பிடிக்குள் நான் அகப்பட்டால் என் பெருமை குன்றிவிடும்’
என்றார்.
‘சரி, ஏழரை நாட்கள் மட்டும் பிடித்துக் கொள்கிறேன்’ என்றார்,
சனீஸ்வரன்.

‘உன்னால் ஏழரை நாட்கள் பீடிக்கப்பட்டால், என் தொழிலில்
குழப்பமும் குளறுபடியும் உண்டாகி, உலக இயக்கம் தாறுமாறாகி
விடும். நில்லாதே போ!’ என்று கோபத்துடன் கூத்தபிரான் கூற
தர்மசங்கடத்துக்கு ஆளானார், சனி பகவான்.

‘தங்களைப் பிடிக்காவிட்டால் என் ஆற்றல் போய்விடுமே! பிறகு
உலகோர் முன் நான் எந்தத் தகுதியில் சென்று நிற்பேன்’ என்றார்
சனிபகவான்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37368
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சனி தோஷம் நீக்கும் சங்கரன்

Post by ayyasamy ram on Wed Aug 03, 2016 7:30 am

சரி. ஒன்று செய். ஏழரை வினாடிகள் மட்டும் நீ என்னைப் பீடிக்க
நான் அனுமதிக்கிறேன். முடிந்தால் பிடித்துக் கொள்!’ என்று கூறி
சட்டென்று மறைந்து பாதாளத்திற்கு சென்று ஒளிந்துகொண்டார்.

ஏழரை வினாடிகள் கடந்ததும் சிவபிரான் சனீஸ்வரர் முன் தோன்றி
புன்சிரிப்புடன், ‘உன்னால் என்னைப் பிடிக்க முடிந்ததா?’ என்று
கேட்டார்.

சனீஸ்வரரோ மீண்டும் பிரானை வணங்கி, ‘ஈசனே! ஏழரை
வினாடிகள் நான் உங்களைப் பிடித்ததால்தான் தாங்கள்
பாதாளத்தில் போய் மறைந்திருக்கும்படி நேர்ந்தது’ என்று கூற,
தாமே ஆடிய திருவிளையாடலே அது என்பதை சனைச்சரனுக்கு
உணர்த்தினார், சங்கரன்.

அவரைப் பணிந்து வணங்கிய சனிபகவான், ‘அய்யனே தாங்கள்
எழுந்தருளிய இத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஏழரை
வருடங்களோ அல்லது அஷ்டமத்து சனியாக இரண்டரை
வருடங்களோ நான் பிடிக்கும் காலத்தில் இன்னல்களைக் கொடுக்க
மாட்டேன்’ என்று சனிபகவான் பரமனிடம் வாக்குறுதி அளித்தார்.
ஈசனும் அது கேட்டு மகிழ்ந்தார்.

ஈசனேயானாலும் கிரகங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து
முழுமையாகத் தப்பிக்க இயலாது என்பதையும், அதிகத் துன்பமின்றி
எளிதாகத் தீர்க்கக்கூடிய கஷ்டங்களாக அதை இறையருளால்
மாற்றச் செய்யலாம் என்பதையும் உணர்த்துவதே இத்தலத்தில்
வரலாறு.

மற்ற சிவாலயங்களைப் போல் இல்லாமல் இக்கோயிலின்
கருவறை தரைமட்டத்திலிருந்து மிக பாதாளத்தில் உள்ளது.
மேற்படி நிகழ்ச்சியை நினைவுறுத்தும் விதமாக!

கருவறையில் கோயில் கொண்டுள்ள ஈசனின் பெயர் விசுவநாதர்.
மொத்த கோயிலே பூமியின் தரைமட்டத்திற்குக் கீழேதான்
உள்ளது. ஒரே பிராகாரம் கொண்ட பழங்காலக் கோயில்.
அம்பிகை விசாலாட்சி எனும் பெயரோடு தெற்கு பார்த்த தனிச்
சன்னதியில் உள்ளார்.

ஜாதகத்தில் சனிபகவான் சஞ்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
இத்தலத்தில் ஈசனை வணங்கி வழிபட்டு துன்பப் பிடியிலிருந்து
விலகலாம். சனி பாதிப்பால் தீய பழக்கங்கள், தீய ஒழுக்கம்
ஆகியவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிப்போர்.
இங்கு வந்து இறைவனை பூஜித்தால் நற்பலன் கிட்டுகிறது.
வாழ்வில் புத்தொளியும் புதுப்பாதையும் புலப்படுகிறதாம்.

எங்கே இருக்கு:
திருவாரூர் மாவட்டம், குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில்
சேங்காலிபுரம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 9-11.30; மாலை 5-8

————————————–

ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37368
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum