ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உறியடி - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

உறியடி - திரை விமர்சனம்

Post by ayyasamy ram on Sun May 29, 2016 1:58 pm


-
சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும்
கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும்
சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும்
படம் ‘உறியடி’.

இறந்துபோன சாதித் தலைவர் ஒருவருக்குச் சிலை
வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க
மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

உடனே அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிடுகிறார்கள்
சாதிச் சங்கத்தினர். சங்கத்தில் முக்கியப் பொறுப்பில்
உள்ள மைம் கோபி, ஒரு பொறி யியல் கல்லூரிக்கு
எதிரே தாபா (உணவுக் கடை) நடத்திவருகிறார்.
அதில் மதுபானங்களும் விற்கப் படுகின்றன.

இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு
மாணவர்களைத் தன் அபாயகரமான அரசியல்
சதுரங்கத்தில் பகடைக் காயாக்க முனைகிறார். உள்ளூர்
லாட்ஜ் முதலாளியின் மகனுடன் மாணவர்கள்
மோதலில் ஈடுபட, அதையும் தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் கோபி.

இந்த நுட்பமான சாதி அரசியல் விளையாட்டில் சிக்கி
மாணவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.

வலுவான கதையைக் கையில் எடுத்திருக்கிறார்
இயக்குநர் விஜய குமார். 1999-ல் நடக்கும் கதையில்
அந்தக் காலத்துக்குரிய அடையாளங்களைத் துல்லியமாகக்
கொண்டுவந்திருக்கிறார். தாபாவின் உட்புறத் தோற்றம்,
பொறியியல் கல்லூரியின் சூழல், சாதித் தலைவர்களின்
சிலைகளை வைத்து நடந்த கலவரங்கள், சாதிக்
கணக்குகளால் உருவாகும் சீர்கேடுகள், மாணவர்களின்
போக்கு, பெற்றோரின் நிலை, கல்லூரி விடுதியின் சூழல்
எனப் பல அம்சங்கள் நம்பகத்தன்மையுடன்
சித்தரிக்கப்பட்டுள்ளன.

விடுதியின் அறைச் சுவர்களை அலங்கரிக்கும் 90-களின்
நாயகிகளின் படங்களும் படத்தின் நம்பகத்தன்மைக்கு
வலு சேர்க்கின்றன.

சாதி வெறி கொண்ட ஆட்களை மாணவர்கள் ஓர் இரவில்
எதிர்கொள்ளும் காட்சியை திகிலூட் டும் வகையில்
படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சாதியைப் பேசும் படமாக
இருந்தாலும, எந்த சாதி என்று அனுமானிக்க முடியாத
அளவுக்கு நுட்பமாகப் படமாக்கியிருக்கிறார். சண்டைக்
காட்சிகள் அபாரமாகப் படமாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை அடிக்க ஒரு கும்பல் தாபாவுக்கு வர,
அவர்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் காட்சி நன்கு
வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வன்முறையைக்
கொண்டாடும் அளவுக்குச் சில காட்சிகள் அதீதமாக
இருப்பதையும் சொல்லியாக வேண்டும்.

ஒரு மாணவன் கொல்லப்படும் விதமும் பழிவாங்கும்
இடமும் பார்வையாளர்களை உறைய வைக்கின்றன.

மாணவர்கள் எப்போதும் குடி யும் கும்மாளமுமாகவே
இருக்கிறார்கள். சிறிய பிரச்சினை என்றாலும் முறுக்கிக்
கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். ரத்த
வெறியுடன் அலைகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு
அடிதடியில் ஈடுபட்டாலும் கல்லூரியில் ஜாலியாகவே
இருக்கிறார்கள். படத்தில் போலீஸே இல்லை.

அழுத்தமான காட்சிகளுடன் கதையை யதார்த்தமாக
முன்னெடுத் துச் செல்லும் இயக்குநர், காட்சிகளைப்
படமாக ஒருங்கிணைப்பதில் சறுக்கி யிருக்கிறார். சாதி
அரசியல் கதையையும் மாணவர்களின் கதையையும்
ஒன்றாக இணைப்பதில் போதிய நம்பகத்தன்மை
உருவாகவில்லை.

பாரதியாரின் ‘அக்கினிக் குஞ் சொன்று கண்டேன்’
என்னும் குறுங்கவிதை உணர்வெழுச்சி மிகுந்த பாடலாகப்
பயன்படுத் தப்பட்டிருக்கிறது. ஆனால், பொது நல
நோக்கமோ தார்மிக பலமோ இல்லாத இளைஞர்களின்
பழி வாங்கும் வெறியாட்டத்துக்குப் பின்புலமாக இந்தப்
பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது கடுமை யாக உறுத்துகிறது.

மாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு,
ஜெயகாந்த், சிவபெருமாள் ஆகியோர் நன்றாக
நடித்திருக்கிறார்கள். மைம் கோபி தேர்ந்த நடிப்பைத்
தந்திருக்கிறார். லாட்ஜ் முதலாளியின் பையனாக வரும்
சுருளி, வஞ்சமே உரு வான பாத்திரத்தை நன்கு
உள்வாங்கியிருக்கிறார்.

பொது இடத்தில் அவமானப்படுபவன் பழி வாங்கப்
புழுங்குவதைக் கண் முன் நிறுத்துகிறார். ஓரிரு காட்சிகளில்
எட்டிப் பார்க்கும் ஹெல்லா பென்னாவை நாயகி என்று
நாமே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பின்னணி இசையையும் கையாண் டிருக்கும் விஜயகுமார்,
காட்சிகளுக்கு வலு சேர்க்கும் இசையைத் தர்ந்திருக்கிறார்.
பாடல்களுக்கு இசை மசாலா கஃபே இசைக் குழு.
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலின் மெட்டும்
பாடப்பட்ட விதமும் பிரமாதம்.

பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்துக்கு
வலு சேர்க்கிறது.

உறியடி, வலுவான அடிதான்; ஆனால் முறையான
இலக்கில்லாத அடி.
-
--------------------------------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உறியடி - திரை விமர்சனம்

Post by சிவனாசான் on Sun May 29, 2016 2:49 pm

எல்லா வற்றிறகும் விமர்சனமும் விளம்பரமும் தானே நிலவுகிறது>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3015
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum