ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sat Apr 09, 2016 1:43 amருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.

சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.

தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.

சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.

மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.

ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.

நன்றி : வெப் துனியாபுன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian on Sat Apr 09, 2016 12:54 pm

சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.

தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.

நான் படித்த வரையில் , இந்த செய்தி , ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே .
சர்வ காலம் அணிந்து இருப்பது நல்லது என்றே அறிகிறேன் .

வேறு யாருக்காவது இது பற்றி தெரியுமா ? அறிய ஆவலாக உள்ளேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 2:27 pm

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
-
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும்
இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச
மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.
-
மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும்
உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச
மாலையை அணியலாம்.
-
பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து
கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில்
பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
-
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத்
துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர்
பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய
கட்டாயம் இல்லை.
-
இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து
வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும்
ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில்,
பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும்
அணிவது சிறப்பு
.
-
அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்.
காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை
மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும்.
இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
-
-----------------
நன்றி- இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by ராஜா on Sat Apr 09, 2016 6:39 pm

@T.N.Balasubramanian wrote:
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.

தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.

நான் படித்த வரையில் , இந்த செய்தி , ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே .
சர்வ காலம் அணிந்து இருப்பது நல்லது என்றே அறிகிறேன் .

வேறு யாருக்காவது இது பற்றி தெரியுமா ? அறிய ஆவலாக உள்ளேன் .

ரமணியன்

ருத்ராக்ஷம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அணியலாம் , இதற்க்கு எந்த கட்டுபாடுகளும் கிடையாது. இணையத்திலும் சரி பொதுவாழ்விலும் மக்களை குழப்பி விட என்றே ஒரு கூட்டம் இருக்கிறது ஐயா

ஒன்றிக்கு மேல் ருத்ராக்ஷ மணிகளை கோர்த்து மாலையாக அணிவதற்கு தான் பலவித கட்டுபாடுகள் உள்ளன , இவற்றை யாரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிய முடியாது , தகுந்த குரு அல்லது பெரியவர்கள் மூலம் தீட்சை அல்லது ஆசீர்வாதங்களுடன் அணியவேண்டும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian on Sat Apr 09, 2016 9:15 pm

நன்றி ராஜா

மேலும் ஈகரை யில் வந்த http://www.eegarai.net/t110265-topic பதிவையும் பார்க்கலாம்

ப்ராணாயாம வகுப்பில் , ருத்ராக்ஷம் பற்றியும் பேசுகின்ற போது , யோகா குரு ,
எப்போதும் ,எக்காலத்திலும் அணியலாம் .கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறியுள்ளார் .

பிறப்பு, இறப்பு, வீட்டு விலக்கு,உடலுறவு இயற்கையானதே

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 1:42 am

@T.N.Balasubramanian wrote:
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.

தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.

நான் படித்த வரையில் , இந்த செய்தி , ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே .
சர்வ காலம் அணிந்து இருப்பது நல்லது என்றே அறிகிறேன் .

வேறு யாருக்காவது இது பற்றி தெரியுமா ? அறிய ஆவலாக உள்ளேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201719

எனக்குத் தெரிந்ததை  சொல்கிறேன் ஐயா, 'கண்ட ருத்திராக்ஷம்' எனப்படும் ஒரே ஒரு ருத்திராக்ஷக்     கொட்டையை கண்டத்தில்  அணிந்து இருப்பவர்கள் அதைக் கழட்டவேண்டிய  அவசியம் இல்லை. ஆனால், வெள்ளி அல்லது  பவுன் காப்பு போட்டு ஒன்றுக்கு மேலோ அல்லது, சரமாகவோ அணிபவர்கள் கண்டிப்பாக மேலே சொன்ன நேரங்களில் அணியக் கூடாது.

நாங்கள் வைஷ்ணவர்கள் ஆனாலும்  எங்களுக்கும் சங்கர மடத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு, எங்கள் வீட்டில் ஸ்படிக லிங்கம் வைத்து பூஜித்தவர்  என் அப்பா :வணக்கம்::வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அவர் துளசி மணி மாலையும் அணிவார், ருத்திரக்ஷமும் அணிவார். அதே போல என் இரட்டை தம்பியர்கள் இன்னமும் 3 ருத்திராக்ஷம் அணிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை  இன்னின்ன சமையங்களில் இதை அணியக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

எங்க அப்பா அம்மா காரியங்களின் போது அவர்கள் அதை கழட்டி விட்டுத்தான் செய்தார்கள், அப்புறம் சுபஸ்வீகாரம் ஆனதும் தான் அணிந்து கொண்டார்கள், மற்ற தீட்டுகளுக்கும் இதேதான். விருத்தி திட்டுக்கும் இதே கட்டுப்பாடு உண்டு  ஐயா புன்னகை

இதே போலத்தான் நவரத்தின மோதிரமும், இரவில் கண்டிப்பாக அணியக் கூடாது. புன்னகை........அதேபோல பெண்கள் அதை அணிய முடியாது !

Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 1:48 am; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 1:46 am

@ayyasamy ram wrote:ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
-
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும்
இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச
மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.
-
மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும்
உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச
மாலையை அணியலாம்.
-
பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து
கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில்
பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
-
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத்
துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர்
பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய
கட்டாயம் இல்லை.
-
இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து
வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும்
ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில்,
பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும்
அணிவது சிறப்பு
.
-
அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்.
காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை
மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும்.
இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
-
-----------------
நன்றி- இணையம்
மேற்கோள் செய்த பதிவு: 1201728

அததுக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கு, அதை நாம் கண்டிப்பாக காக்க வேண்டும் என்றே எனக்கும் தோன்றுகிறது, நாங்கள் இதுவரை அப்படித்தான் பின்பற்றி வருகிறோம். .பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian on Sun Apr 10, 2016 12:18 pm

ருத்ராக்ஷம் --இதை அணிவதால்  , BP குறைகிறது , கொலஸ்ட்ரால் குறைகிறது ,
ருத்ராக்ஷம் சில சூக்ஷ்ம புள்ளிகளை உயிர்ப்பிக்கிறது ,மன நிம்மதி கிடைக்கிறது போன்ற செய்திகள் படிக்கிறோம் . ஆன்மீக கோணத்தைத் தவிர , குணப்படுத்தக் கூடிய  குணங்கள் (therapeutical value ) இருக்கின்றன . இதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது .
வீட்டில் நடக்கும் விசேஷங்களில் /காரியங்களில்  நல்லதோ /கெட்டதோ எதுவாக இருந்தாலும் ,நாம் எடுத்துக் கொள்ளும் BP மருந்தையோ / மனதை relax பண்ணும் மருந்தையோ , அந்த விஷேங்களின் பொருட்டு தவிர்ப்பது இல்லை . வேளாவேளைக்கு அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு நம் உடம்பை கவனித்துக் கொள்கிறோம் .
அப்பிடி என்றால் அதே அந்தஸ்தை ருத்ராக்ஷதிர்க்கு தருவதில் தப்பில்லை .

ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by balakarthik on Sun Apr 10, 2016 12:22 pm

நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 12:30 pm

@balakarthik wrote:நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
மேற்கோள் செய்த பதிவு: 1201867

பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by balakarthik on Sun Apr 10, 2016 12:39 pm

@krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம் புன்னகை

எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 1:10 pm

@balakarthik wrote:
@krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம் புன்னகை

எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1201879

ம்ம்..  இருக்கலாம் பாலா , ஆனால் என் தம்பிகள் 3 ருத்திராக்ஷம் அணிந்து கொண்டு இருக்காங்க , பவுனில் பூண் போட்டுத்தான் போட்டுக்கொண்டு இருக்காங்க, கிருஷ்ணா  அப்பாவின் நண்பர் ஒருவர், 'கண்ட ருத்ரக்ஷத்தை' பவுனில் பூண்  போட்டும் மைனர் செயினில் தான் கோர்த்திருக்கிறார்....

நான் துளசிமணி மாலையை எங்க அப்பாவுக்கு வெள்ளி பூண் ணி ல் கட்டித்தந்திருக்கேன்  , சந்தனமாலை அப்பாவே வெள்ளிப் பூண் போட்டு வைத்திருந்தார்கள்...இதெல்லாம் வசதி யாக உபயோகிப்பதற்காக, அலம்புவது  எளிது ...சீக்கிரம் அறுந்து போகாது.........இப்படிப் பல புன்னகை

Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 1:18 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by balakarthik on Sun Apr 10, 2016 1:13 pm

நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 1:17 pm

@balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201891

இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம். புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by ராஜா on Sun Apr 10, 2016 1:46 pm

@T.N.Balasubramanian wrote:ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .
ரமணியன்
எனக்கும் தான் ஐயா , நானும் பல வருடங்கள் பல வித குழப்பத்திலும் சந்தேகத்திலும் அணியலாமா வேண்டாமா என்று குழம்பி கொண்டிருந்தேன்.

ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
@balakarthik wrote:நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
உங்களுக்கு எப்படி அணியனும்னு தோணுதோ அப்படி அணியுங்கள் கார்த்திக், கிருஷ்ணம்மா சொல்வது போல சிவப்பு கயிறு அணியுங்கள். எனக்கும் கருப்பு கயிறு ஆகாது புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 1:54 pm

[quote="ராஜா"]
@T.N.Balasubramanian wrote:

ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
மேற்கோள் செய்த பதிவு: 1201908

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............

ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜாபுன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by ராஜா on Sun Apr 10, 2016 2:17 pm

@krishnaamma wrote:
@ராஜா wrote:

நல்ல சிந்தனை தான் , ருத்தராக்ஷத்தின் மகிமையே இதிலிருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வைப்ரேஷன் தான் , இதற்கு முன் எந்த வைப்ரேஷன் நிற்கமுடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201913
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian on Sun Apr 10, 2016 2:49 pm

@krishnaamma wrote:
@balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201891

இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201894

அது எப்பிடி ?
கொடியில்  /மரத்தில் இருந்து பறிக்கின்ற  வெற்றிலை பழம் கூட ,பெருமாள் மேடையில் வைக்கும் முன் , நீரால் சுத்தி  செய்தே வைக்கிறோம் .அப்பிடி இருக்கும் போது ,நீரிலும் பாலிலும் சுத்திகரிக்கபடாமல் ருத்த்ராக்ஷத்தை  மேடையில் வைக்கலாமா ?
குறைந்த பட்ஷம் நீரில் சுத்தம் செய்து வைக்கலாம் என்பது எந்தன் கருத்து .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian on Sun Apr 10, 2016 3:25 pm

ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by ராஜா on Sun Apr 10, 2016 3:49 pm

@T.N.Balasubramanian wrote:ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik

ரமணியன்
பாதரசத்தை சில சித்தமருத்துவ முறையின் படி கெட்டியான உருண்டையாக மாற்றுவார்கள் அது தான் ரசமணி ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by T.N.Balasubramanian on Sun Apr 10, 2016 3:58 pm

அப்பிடியா , ஈஷாவில் , பாதரச லிங்கம் அமைத்து , நீரில் வைத்துள்ளார்களே அது போலா ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by balakarthik on Sun Apr 10, 2016 4:23 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik

ரமணியன்
பாதரசத்தை சில தல
சித்தமருத்துவ முறையின் படி கெட்டியான உருண்டையாக மாற்றுவார்கள் அது தான் ரசமணி ஐயா

சரியான பதில் பாதரசத்தை மணி யாக கட்டுவதே ரசமணி ஆகும்
இதை நமால் செய்ய முடியாது சிதர்கலாலேயே 100% உண்மையான ரசமணியை செய்யமுடியும் இன்று கடைகளில் விர்க்கபடுவது 100% உண்மையானது அல்ல

நம்முடைய சித்தர்கள் தாமிர சத்தும் மற்றும் உப்பு சத்தும் கொண்ட மூலிகை சாறுகள் கொண்டு ரசத்தை மணியாக கட்டினார்கள்.இந்த ரசமணியை       ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தினால் 100% உண்மைத்தன்மை கிடைக்கும்.இப்படி கிடைத்த மணியை உடம்பில் படும்படி அணிதால் எண்ணில் அடங்காத நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

ஏறக்குறைய நம்முடை சித்தர்கள் அனைவருமே பாதரசத்தின் சிறப்பையும்,இதன் பல்வேறு பெயர்களையும் ,ரசத்தை தூய்மை படுத்தும் முறைகளையும் (தோஷம் & சட்டை போன்றவற்றை நீக்குவது) அதை மணியாக எப்படி செய்வது,செய்த மணிக்கு எவ்வாறு குறிப்பிட்ட சக்திகளை அளிப்பது,இதை கொண்டு எவ்வாறு தாழ்ந்த உலோகங்களை(இரும்பு ,செம்பு,ஈயம்,வெள்ளி போன்றவற்றை ) தங்கமக்குவது ,இதனை கொண்டு உடம்பை எவ்வாறு காய கல்பமாக மாற்றுவது,மேலும் தீராத நோய்களை தீர்ப்பது என்பதை சில சித்தர்கள் வெளிப்படியாகவும் ,சில சித்தர்கள் உவமையோடும் பல்வேறு பாடல்களில் பாடிவைத்து உள்ளனர்,

பாதரசத்தின் சிறப்பு பெயர்கள்:                            காரம்,சூதம்,புண்ணியம்,கற்பம்,,சாமம்,சத்து,சூரியபகை,சாதி,சூத்திரன்,துள்ளி,ஈசன், வீரியம்,சூழ்ச்சி,நீர்,விண்நீர்,விண்மருந்து,இரசம்,சுக்கிலம்,போகம்,ஞானம்,சுயம்பு,வண்டு,நாகம்,இக்கியம்,விஜயம்,வேத மூல செந்தூரம்,பக்கிரம்,பதினெண்பந்தி ,பாரதம்,கணல்,பூதம்,இன்னும் பலவாறு அழைக்கப்படுகிறது.

பாதரசத்தின் வகைகள்:                      
     ஆறியே சூதமஃ தை ந்துவித் மாகும்                               அதன் விவர மேதென்னிலறையக்கேளு                  
     ஊறியரசமென்றும்இரசேநதிரமென்றும்                                          உற்றபா ரதமென்றுஞ் சூதமென்றும்                                        மீறியே மிசர கமென் றைந் மாச்சு  
                                       -போகர் 7000

1.இரசம் :சுத்தமானது,குற்றம்மில்லாதது ,லேசான சிகப்புநிறமுடையது.
2.இரசேந்திரன்: சுத்தமானது,குற்றம்மில்லாதது,கருநிறமுடையது.
3.பாரதம்:வெள்ளி நிறமுடையது ,குற்றமுடையது.சுத்தி செய்ய வேண்டும்
4.சூதம் : குற்றமுடையது,தோஷம்முடையது சுத்தி செய்ய வேண்டும்  ,லேசான வெளிர்மஞ்சள் நிறமுடையது.
5.மிரசம்:பாதரசத்தில் கடைசி தரம்,ஏழு வித சட்டையையும் ,தோஷத்தையிம் நீக்கி சுத்தி செய்ய வேண்டும்.

ரசத்தை மணியாக கட்டும் முறை:
விந்துவென்ற சூதத்தில் மந்திரமோ சித்தி                            மேகத்திலோடுகின்ற குளிகை சித்தி                                                   அந்து மென்ற யோகமுதல் ஞான சித்தி                                          அப்பனே காயசித்தி லோகசித்தி                                             சாஸ்திரத்தில் சொல்லாத கருவோசித்தி                                                 விந்து கொண்ட வாதத்திலட்டாங்க சித்தி                                           பாரப்பா சூதத்தைக் கட்டினோர்க்கே
                                           - சட்டமுனி வாத காவியம் 1000

விளக்கம்:என்று சொல்லும் சூதத்தினால் மந்திரம், குளிகை, ஞானம், யோகம், காயம், அட்டாங்க சித்திகள் எல்லாம் இந்த சூதமாகிய விந்தினைக் கட்டினவர்க்கு என்று கூறுகிறார்.

பாதரசத்தை மணியாக  ஏறகுறைய எல்லா சித்தர்களுமே விராலி என்ற மூலிகையின் இலையை கூறி உள்ளனர் ,இந்த இலை சாறு வராத வகையை சார்ந்தது ஆகும் ,மேலும் இதில் இருந்து சாறு எடுக்க துருசு சுண்ணத்தை ,இந்த மூலிகை இலை மீது போட்டு பிழியும் போது நிறைய சாறு வரும்.இதனை கொண்டு ரசத்தை கட்டலாம் .
இதுபோல

கருவஊமத்தை,ஊமத்தை,கல்தாமரை,குப்பைமேனி,பிரண்டை,கொரக்கர்மமூலி,நத்தைசூரி,அழுகண்ணி,தொழுகண்ணி,நாயுருவி இன்னும் சில மூலிகைகள் உள்ளன மேலும்,மலைகளில் உள்ள ரோமவிருச்சம் ,கணை எருமை விருச்சம்,ஜோதிவிருச்சம் போன்ற பல மூலிகைகள் ரசத்தை கட்டலாம்,

இதே போன்று உயிர்அற்ற மூலிகையின் சாறுகளை கொண்டு கட்டப்படும் ரசமணி மற்றும் ரசமணிக்கு சக்திகள் ஏற்றுவதால் எந்த ஒருபயனும் இல்லை.மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்து அதன் உயிரும்,தெய்விக சக்தியும் கொண்டே செய்யும் ரசமணியே 100% பலன் தரும் என்பதுதான் உண்மை.    

இவ்வாறு கட்டிய மணியை புடம் போட்டு எடுத்து ,நூலில் கோர்த்து உடம்பில் படும்படி அணிந்து கொள்ளலாம்.

இப்படி அணியும் மணியானது,

1.நம் உடம்பில் உள்ள வாத,பித்த,கபத்தை ஒழுங்குபடுத்தி,உடலை சீராக வைக்க உதவும்

2.உடல் எப்பொழுதும் களைப்பு இன்றி சுறுசுறுப்பாக இருக்கும் .

3.இரத்தைத்தை சுத்திகரித்து ,இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலம் இரத்த அழுத்தம் என்ற பேச்சிக்கெ இடம் இல்லை.

4.ஞாபக சக்தியை தூண்டி,சிந்தனையை ஒருநிலைபடுத்துகிறது,

5.விந்துவை கட்டிபடுதும் ,இதன்னால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடலாம்.

6.சப்த தாதூக்களையும் சரிவர இயங்க செய்யும்,இதன் மூலம் மனிதனுக்கு நோய் அணுக்காது ,உடலில் நோய் இருந்தாலும் இதை ரசமணி உண்டுவிடும்.

7.உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்தும்,தோற்ற பொழிவை கொடுக்கும் ,வயதனாலும் இளமைதன்மையை அப்படியே வைத்து இருக்கும்.

8.எளிமையாக சொல்வது என்றால் எந்த நோயையும் வரவிடாது,இருக்கும் நோயையும் தங்கவிடாது.

இது முதல்படிதான்,மேலும் இவ்வாறு தயாரிக்கப்பட ரசமணிக்கு (சக்தி தருவது) சாரணை என்று சொல்லப்படும் மூலிகை சறுக்களை ஊட்டுவதன் மூலம் எண்ணில் அடங்கா சக்திகளை பெறலாம்,

அதாவது சித்தர்கள் வானில் பறந்தார்கள் ,நீரில் நடந்தார்கள் ,கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள்,நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் சென்று வந்தார்கள்,தாழ்ந்த உலோகத்தை தங்கமாக்கினார்கள் ,தீராத நோய்களை தீர்த்தார்கள் மேலும் அஷ்டமா சித்துக்களை பெற்றார்கள்,யோகத்தில் முழுமையடைந்தர்கள் என்றால் இதற்கு இரசமணியின் பங்கும் மகத்தானது என்பதில் மாற்று கருத்து இல்லை (ஆதாரம் போகர் 700) ,இதற்க்கு இவர்கள் ரசத்தை கட்டியவிதம் புடம் போட்ட முறை கண்டிப்பாக வேறுபாடும்.

கல்லான காயசித்தி கற்பமொடுரசவாதம்                                       அஞ்சான குளிகை கல்லான கெளனமாங்குளிகையோடு                             கனமான சர்வநோய் எல்லாம் மைந்தா                                          சொல்லான சூதத்தை விட்டால் வேறு                                      சொல்லுக்கும் வல்லவரார் சொல்லக்கேளு                                 சொல்லவே சித்தர்கள் தான் பதிநென்பேரும்                                 சிவவிந்தை கட்டியல்லோ திறமானாரே
                                                              - போகர் 700

விளக்கம்:காயசித்திக்கான கற்பம், தங்க்ம்செய்வதர்க்கான இரசவாத முறைக்கும் கெளனமார்க்கத்தில் செல்வதற்கான மணி உடலில் தோன்றும் நோய்கள் எல்லாம் தீர வென்றால் சூதத்தை விட்டால் வேறு இல்லை இதற்கு மாற்றுக் கூற வல்லார்கள் யார் உள்ளார் என்று கூறி அடுத்துக் கூறுகிறார் 18- சித்தர்களும் சிவவிந்தைக் கட்டியல்லோ சித்தி பெற்றனர் என்று கூறுகிறார். மேற்கண்ட சூதத்திற்கு சிவம் என்ற பெயரும் உள்ளதால் சிவன் விந்து என்றும் அதைக் கட்டி திறம் பெற்றனர் என்றும் பொருள் படுகிறது.

மேலும் சித்தர்கள் சாதாரண மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ரசமணி மற்றும் அதற்க்கு சக்தி ஏற்றும் முறைகளை கூறி உள்ளனர்
       
இவ்வகை மணியின் மூலம் அடையும் பயன்கள்
கண்டு கொள்ளு நினைத்த தெல்லாம் கைகொடுக்கும்                        கதியாகும் விதியாகும் சித்தியாகும்              
                     பண்டுமுன்னே இருந்த தெல்லாம் பாகமாகும்                          
    தொண்டுபடும் சகலமும்தான் பாரிலோர்க்கு                                தொல்லுலகில் விந்திறுகும் தொன்மைபாரு                    
            உண்மேல் ஸ்திரிகளுந்தான் வசியமாகும்                                  உற்றுனர்ந்து பார்த்தாக்கால் சித்தியாமே
                                              - யாகோப்பு சுண்ணம் - 300

விளக்கம்: நினைத்த தெல்லாம் சித்தியாகும் இதுவே விதியாகும் முன்பு தெரியாதது எல்லாம் தெரியும் சகலமும் சித்தியாகும் இதனால் சுக்கிலாமானது இறுகும் இதனால் பெண்கள் வசியப்படுவர் என்று கூறியவர் உற்று சிந்தையில் உணர்ந்து பார்த்தல் எல்லாம் சித்தியாமே என்று சொல்லுகிறார்

மேலும் கீழ்கண்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் ரசமணியை கொண்டே சரிசெய்யலாம்:

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும்.  செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.                      
8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

          இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.

மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது ,மேலும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்கள்,தற்போது ரசமணி உபயோகப்படுத்தும் நண்பர்கள் ,ரசமணி செய்வதில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் கூறிய தகவல்களில் இருந்து அரை சதவிதம் அதிலும் குறைந்த அளவு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது.காரணம் தக்க குரு மூலம் சரியான வழியில் செய்யவும்,நல்ல எண்ணங்களும் வேண்டும் குறிப்பாக குரு அருளும் திரு அருளும் இல்லாமல் ரசமணியை செய்யவோ உபயோகிக்கவோ முடியாது.
.உங்களுக்கு உண்மையாக என்னென்ன தேவையோ அதை தெரிவித்து சரியான உண்மையான ரசமணியை வாங்கி பயன் அடையுங்கள்.

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:

1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் போல அடிக்கும்(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )        

                “விதியாளி காண்வான் பாரு”
       என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

விளக்கம் உதவி சதுரகிரி ப்ளாக்ஸ்பாட்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by ராஜா on Sun Apr 10, 2016 4:37 pm

@T.N.Balasubramanian wrote:அப்பிடியா , ஈஷாவில் , பாதரச லிங்கம் அமைத்து , நீரில் வைத்துள்ளார்களே அது போலா ?

ரமணியன்
அதே போல தான் ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 10:31 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201891

இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201894

அது எப்பிடி ?
கொடியில்  /மரத்தில் இருந்து பறிக்கின்ற  வெற்றிலை பழம் கூட ,பெருமாள் மேடையில் வைக்கும் முன் , நீரால் சுத்தி  செய்தே வைக்கிறோம் .அப்பிடி இருக்கும் போது ,நீரிலும் பாலிலும் சுத்திகரிக்கபடாமல் ருத்த்ராக்ஷத்தை  மேடையில் வைக்கலாமா ?
குறைந்த பட்ஷம் நீரில் சுத்தம் செய்து வைக்கலாம் என்பது எந்தன் கருத்து .

ரமணியன்

அவர் கேட்டது தண்ணிரில் போட்டு வைக்கணுமா அல்லது பாலில் போட்டு வைக்கணுமா என்று தானே ஐயா?..............அதுக்குத் தான் நான் பதில் சொன்னேன்,..அலம்பித்தான் வைக்கணும், ........... நீங்கள் சொல்வது போல , நாம் எதை அங்கு வைத்தாலும் சுத்தி செய்து/ அலம்பி துடைத்துத் தானே வைப்போம், அதனால் அதைத் தனியாக குறிப்பிடணும் என்று எனக்கு தோன்றவில்லை..........புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by krishnaamma on Sun Apr 10, 2016 10:33 pm

அருமையான பகிர்வு பாலா, இன்று தான் இது பற்றி தெரிந்து கொண்டேன்.........படமும் பார்த்தேன்.......மிக்க நன்றி ! ....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum