உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:54 pm

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:45 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:42 pm

» என்ன மனிதனையா நீ?
by T.N.Balasubramanian Yesterday at 8:27 pm

» கண்கவர் பூக்கள்
by சக்தி18 Yesterday at 7:46 pm

» 'ஏர்டெல்'லை பின்னுக்கு தள்ளிய 'ரிலையன்ஸ் ஜியோ'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:46 pm

» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு
by T.N.Balasubramanian Yesterday at 1:30 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோவினை எம்பி3 பார்மெட்டுக்கு மாற்றிட -Youtube to mp3 Converter
by velang Yesterday at 7:37 am

» ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:03 am

» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை
by ayyasamy ram Yesterday at 6:49 am

» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:42 am

» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்
by ayyasamy ram Yesterday at 6:28 am

» சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு
by ayyasamy ram Yesterday at 6:24 am

» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை
by ayyasamy ram Fri Jul 19, 2019 10:42 pm

» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 9:08 pm

» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்
by ayyasamy ram Fri Jul 19, 2019 8:59 pm

» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
by ayyasamy ram Fri Jul 19, 2019 8:56 pm

» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை
by சக்தி18 Fri Jul 19, 2019 7:15 pm

» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:57 pm

» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே!
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:21 pm

» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 4:35 pm

» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2019 12:40 pm

» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்! வெள்ளை யானை சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Fri Jul 19, 2019 12:25 pm

» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 11:35 am

» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:30 am

» விண்டோஸ் டிப்ஸ் சில…………..
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:26 am

» ஈகரையில் நெரிசல்
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:16 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Fri Jul 19, 2019 10:19 am

» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....
by ayyasamy ram Fri Jul 19, 2019 9:01 am

» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...!!
by anikuttan Fri Jul 19, 2019 7:10 am

» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்
by ayyasamy ram Fri Jul 19, 2019 5:11 am

» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
by ayyasamy ram Fri Jul 19, 2019 5:05 am

» நல்லதோர் செய்தி.
by ayyasamy ram Fri Jul 19, 2019 4:58 am

» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
by ayyasamy ram Fri Jul 19, 2019 4:44 am

» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
by ayyasamy ram Fri Jul 19, 2019 4:40 am

» அன்புடன் சீனாவிலிருந்து
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 8:02 pm

» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
by ayyasamy ram Thu Jul 18, 2019 7:41 pm

» அத்திவரதர் !
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:13 pm

» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:12 pm

» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:44 pm

» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:40 pm

» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:39 pm

» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:37 pm

Admins Online

குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by வித்யாசாகர் on Mon Nov 16, 2009 4:32 pm

என் சாதாரண எழுத்துகளை.. வர்ண ஜாலங்களிட்டு உலகம் விழித்துப் பார்க்க செய்து கவிதைகலாக்கித் தந்த இதழ்களை இங்கே இனி பதிக்கிறேன்..

அநேகம் நீங்கள் படித்த கவிதைகளே இங்கும் இடம் பெறலாம்.. எனவே மறுமொழி உங்களின் மனம் பொறுத்ததே.

இப்பதிவு உங்களின் தெரிவிப்பிற்கும்.. இங்கும் தமிழ் இத்கள் வருகின்றன என அறிவதற்கும்.. வாசிப்பிற்கும் மட்டுமே. உள்ளம் நிறையுமாயின் நன்றிகளை அந்தந்த ஆசிரியர்களுக்கு சொல்லுங்கள்.. தோழர்களே..

இது 'பிழைக்க வந்த இடத்தில் தன் வேலைகளை எல்லாம் தாண்டி தமிழுக்கும் தமிழர்க்கும் சமூகநலம் பேணவும் செய்யும் அவர்களின் பெரிய உழைப்பு!

குவைத் தமிழ் டாட் கம் - ஆசிரியர் அப்துல் கனி

http://3.bp.blogspot.com/_niegj3p8PQ0/SwD_Mn6utmI/AAAAAAAAAEw/nnyngb1U8w0/s1600/Binder1_Page_12.jpg


Last edited by வித்யாசாகர் on Sun Dec 06, 2009 8:12 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by வித்யாசாகர் on Mon Nov 16, 2009 4:39 pm

குவைத் நீதியின் குரல் - ஆசிரியர் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி

http://neethienkural.googlepages.com/
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by வித்யாசாகர் on Sun Dec 06, 2009 8:15 pm

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Invitation


Last edited by வித்யாசாகர் on Wed Dec 09, 2009 8:11 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by nandhtiha on Mon Dec 07, 2009 10:53 am

வணக்கம்
தகவலுக்கு நன்றி. விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி -உடன்பிறவா
மாமலையில் தோன்றும் மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு

இது என் வாழ்க்கையில் நான் கற்ற பாடம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by ராஜா on Mon Dec 07, 2009 11:09 am

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் வித்யாசாகர் ,


வித்யாசாகர் மற்றும் அனைத்து குவைத் தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by ramesh.vait on Mon Dec 07, 2009 3:08 pm

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Icon_smile
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by பாலாஜி on Mon Dec 07, 2009 3:16 pm

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் வித்யாசாகர் .
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19828
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by ரூபன் on Mon Dec 07, 2009 3:26 pm

"வெண்மனச்செம்மல்" வித்தியா அண்ணனுக்கு பொருத்தமான பட்டம் இந்த பட்டம்
கொடுத்தவருக்கு எனது நன்றிகள். அண்ணா கலக்குங்கள். நல்லதீர்ப்பா கொடுங்கள்
அதுசரி பட்டிமன்றத்தின் தீர்ப்பு அங்கு வாதாடும் நபர்களின் கருத்தை
மட்டும் எடுத்து சொல்லுவதா இல்லை அத்துடன் சொந்த வாழ்க்கையின் சில
கருத்துக்களையும் சேர்த்து சொல்லுவதா எனக்கு இதில் சிறிது குழப்பம்
இருக்கிறது.


Last edited by ரூபன் on Mon Dec 07, 2009 9:07 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by sudhakaran on Mon Dec 07, 2009 7:28 pm

வாழ்த்துகள்....
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by வித்யாசாகர் on Wed Dec 09, 2009 8:10 pm

அனைவருக்கும் மிக்க நன்றிகளென் அன்பு மிகு அக்கா, சகோ, ரமேஷ், பாலாஜ், ரூபன், சுகிர்தன் உங்கள் அன்பினால் நிச்சயம் வெல்வோம். எல்லாம் வல்ல இறைவன் நல்ல தீர்ப்பே வழங்குவார் உள்ளிருந்து.

தர்மத்தின் பால் நின்று பட்டிமன்றங்களில் வாதாடும் நபர்களின் கருத்தை நினைவில் கொண்டு நியதி பிறழாது கேட்போரில் அதிக பட்சம் பேர் ஆம் இது தான் சரியான தீர்பென்றோ; அல்லது இந்த தீர்ப்பும் சரியென்றோ சொல்லுமளவிற்காவது இருப்பது சிறப்பு.

அவசிய படுமெனில் தீர்ப்பிற்கு வலுவூட்டுமெனில் சுய நிஜ சம்பவங்களை எடுத்து வைக்கலாமென்றே நம்புகிறேன். பொதுவாக தொலைகாட்சி திரைப்படம் பட்டி மன்றமென பார்ப்பதே வெகு குறைவு. இருந்தும் அன்பிற்காய் கட்டுண்டு; வருவதை அவன் செயலென ஏற்பதே நடுவர்க்கான காரணம். வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி!

தவிர அன்பு தம்பி என் மேல் கொண்டிருக்கும் பாசத்தில் அந்த விருது தந்தவருக்கு நன்றி அறிவித்தீர்கள், மகிழ்ந்தேன்; ஆயினும், என் பெயர் வெங்கடாசலம் என்பதால்.. வித்யாசாகரென்ற பெயரே ஈடு செய்யவோனா விருதென கருதுகிறேன்! அது நிலைப்பின்; பிறப்பின் பேரு கொள்வேன்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by செந்தில்குமார் on Wed Dec 09, 2009 8:17 pm

வாழ்த்துக்கள் அண்ணா .
தாங்கள் வழங்கும் தீர்ப்பை நாளை எமக்கு தெரிவியுங்கள் அண்ணா
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by வித்யாசாகர் on Wed Dec 09, 2009 8:31 pm

நிச்சயம் செந்தில், தீர்ப்பென்ன சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் கானொளியே பதித்துத் தர முயல்கிறேன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by nandhtiha on Thu Dec 10, 2009 12:45 am

ஆன்புள்ள திரு வித்யாசாகர்
வணக்கம்
தாங்கள் தலைமை வகிக்கும் பட்டி மன்றத்துக்கு ஒரு அழகிய தமிழில் வாழ்த்து எழுதத் தான் நினைத்தேன். என் உயிருக்கு நிகராக நினைத்திருந்த இரு ஒப்பற்ற ஆத்மாக்கள் என்னைத் தனியாக விட்டு விட்டுச் இறைவன் திருவடி நீழலை அடைந்து விட்டனர். அவர்களில் ஒருவர் உங்களுக்குத் தெரிந்தவர். மற்றொருவர் எனக்கு ஆசானாக் இருந்து நல்வழிப் படுத்தியவர், .
என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் நற்பெயர் மேலோங்கட்டும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty பட்டிமன்ற தீர்ப்பு (10-12-09)

Post by வித்யாசாகர் on Sun Dec 13, 2009 1:31 am

பட்டிமன்ற தீர்ப்பு (10-12-09)

ந்த பார்ட்டிக்கெல்லாம் போனிங்கனா பார்க்கலாம்; பார்ட்டிக்கு வந்த பத்து பேரும் என்னவோ பத்து நாளா சாப்பிடே சாப்பிடாத மாதிரி புல் கட்டு கட்டுவான், ஆனா இந்த பில்லு கட்ட போறான் பாருங்க அவனுக்கு மட்டும் வயித்துல நெருப்பா எறியும். கவனமெல்லாம் எப்படா.. பில்லு வரும் பத்து கே.டி.யா இருபது கே.டி.யான்னு எட்டி எட்டி பார்த்துக்குன்னு இருப்பான் அது மாதிரி; என் வயித்துல இப்போ நெருப்பு எரியுது.

பேசின நாலு பேருமே மிக திறமையாக நகைச்சுவையாக புது புது அர்த்தங்களோடு தன் நல்ல கருத்துக்களை சொல்லி அழுத்தமாக தன் வாதங்களை வெச்சிட்டு போயிருக்காங்க. அது வேற தீர்ப்ப மாத்தி சொன்னா அனித்தா ஜான்சன் அவர்கள் குவைத்தையே எரிச்சிடுவாங்க போல, இருந்தாலும் பட்டிமன்ற தீர்ப்பு சொல்றதுக்கும் ஒரு வாழ்வின் நியதியும் ஒத்துப் போகணுமில்லையா?
-------------------------------------------------------------------

ஒருமுறை நான் நம்மூர்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடிரென மழை ஜோரா வருது, நாங்கள்லாம் ரிபைனரிக்குள்ள ஒரு பேப்ரிகேசன் யார்ட்ல இருந்து வீட்டுக்கு வர வந்துன்ருக்கோம், மழை ஜோரா வரவே எல்லாம் ஓட ஆரம்பிக்கிறோம் அப்போ என் கூட வந்தா நண்பன் (செல்வம்) சொல்றான் டே டேய் இன்னிக்கு தான் புது சட்டையா போட்டுவந்தேன், சேரடிச்சிட போது பொறுமையாவே போலாம்றான், அதும் போட்ருக்குறது வேற வெள்ளை சட்டை.

ஆனா அந்த நேரம் பார்த்து மழை இன்னும் ஜோரா வர எல்லோரும் ஓடி பக்கத்துல இருக்க ஒரு கட்டிடம் பக்கமா நிக்க போறாங்க, ஒரு காவா குறுக்கால இருக்கு எல்லாம் சுத்திக்குனு போறாங்க, எனக்கு சுழி சும்மா இல்லாம;

அது ஏன் சுத்திக்குனு போகணும்; நம்ம தாண்டியே போயிடலாமேன்னு வேகமா போயி தான்றன், குறுக்கால கூரா ஒரு கம்பி நீட்டிக்குனு நிக்கரதி கவனிக்கல.

வந்த வேகத்துக்கு கம்பி கால் பாதத்துல குத்தி கிழிச்சி காலெல்லாம் ரத்தம் கொட்டுது. எல்லாம் ஓடி வந்து இத எடு அதை எடுன்னு பதர்றாங்க, கால்லையா ரத்தம் கொட்டுது, ஆளுக்காளு மூளையா ஓடி துணி தேடுறாங்க

அப்போ அந்த என் நண்பன், உயிர் தோழன்; தன் புது வெள்ளை சட்டையை கழற்றி என் காலில் கட்டிட்டு பனியனோட வீட்டுக்கு வந்தான். அது தாங்க நட்புன்றது.

ஆனா இந்த நட்புக்கு ஒரு எல்லை வந்துவிடுகிறது, ஒரு கே.டி. வேணும்னா உடனே கொடுப்பீங்க பத்து கேடி வேணும்னா கொஞ்சம் யோசிப்போம், நூறு கேடி சும்மா கொடுன்னா கொடுப்போமா.. ?

அதே வீட்டில் கொடுத்த ஆயிரமாயிரம் கேடிகளை எத்தனை பேரிங்கே திருப்பிக் கேட்டிருப்பீங்க? யாருமே கேட்டிருக்க மாட்டோம் ஏன்னா உறவுக்கு செய்தது தனக்கு செய்ததாகி விடுகிறது.
----------------------------------------------------------------

நீங்க கூட தான் இங்க இவ்வளோ பேரு இருக்கீங்க நாளைக்கு சம்பளம் வாங்கி ஊருக்கு அனுப்பிடறீங்க, மருநாளொரு தோழி ஊரிலுருந்து தொலைபேசியில் அழைத்து "ஒரு அஞ்சாயிரம் அவசரமா வேணும் நான் ஒரு பெரிய இன்னல்ல மாட்டின்ருக்கேன் உதவுடான்னு கேட்டா" என்ன பண்ணுவிங்க?

அடடா நேற்று கேட்டிருக்கலாமே நேத்து தானே வீட்டுக்கு அனுப்பினேன்னுவோம்,

அதுலயும் சிலர் இருக்கான் "தோ இப்ப தான்பா அனுப்பிட்டு நேரா பேங்க்ல இருந்து வரேன்னுவான். அதே ஒரு பொண்டாட்டி ஊர்லருந்து "எனக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது பையனுக்கு பீஸ் ஏத்திட்டாங்க, இன்னைக்கே பத்தாயிரம் அனுப்பினா தான் நாளைக்கு பையனுக்கு ஸ்கூலுன்னு சொல்லட்டும் வட்டிக்கு வாங்கியாவது;
அடைக்கும் கதவை நிறுத்த சொல்லியாவது அனுப்புவோமா மாட்டோமா?
------------------------------------------------------

துபாய்ல நம்மள மாதிரி வேலைக்கு வந்த ஒரு நண்பரோட மனைவிக்கு ஊர்ல பூமுடிப்பு விழா நடக்குது. விழாவிற்காக துபாய்ல இருந்து நண்பர் மூணு நாள் லீவ்ல போறாரு. விழா நல்லா முடியுது, இங்க ஒரு நாலு அங்க மாமியார் வீட்ல ஒரு நாலுன்னு பேசி முடிவு பண்ணிக்குனு நைட்டு பதினொரு மணிக்கு தான் மாமியார் வீட்டுக்கே போறாரு,

விடிய காலைல நாலு மணிக்கெல்லாம் தங்கச்சி போன் பண்ணி ஓன்னு கத்தி அழுது, என்னன்னு கேட்டா அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சிண்ணா அம்மாவுக்கு கேட்டதும் பிரேசர் எறி போச்சி மயங்கி விழுந்துட்டாங்க உடனே வாண்ணான்னு கதறி அழுவுது. நண்பர் இருக்கறதோ செங்கல்பட்டுல, ஆக்சிடென்ட் நடந்தது சென்னையில, எப்படியோ அடிச்சிபுடிச்சி ஓடி வராரு,

ஆனா இங்க ஒரு விசித்திரம் பாருங்க.. அண்ணன் ஆக்சிடென்ட் ஆயி வலியில துடிக்கிராறு ட்ராபிக் போலிஸ் வந்து எங்க தகவல் கொடுக்கணும்னு கேக்குறாங்க.

அவருக்கு நாலஞ்சி அன்னந்தம்பிங்க;
வீட்ட சுத்துன பெரிய சொந்தம் பந்தம்னு எல்லாம் இருந்தும்

அந்த அண்ணன்

வீட்டுக்கு தகவல் தந்தா எல்லாரும் தவிச்சி போயிடுமேன்னு ஒரு நண்பனோட தொடர்பு எண்ணை தருகிறார்.

நண்பர்கள் கூடுகிறார்கள் அக்கம் பக்கத்து ஏதோ ஒரு மருத்துவ மனையில் சேர்த்தும் விடுகிறார்கள். உறவுகளெல்லாம் பின்னர் அறிந்து ஓடி வருகிறது.. அந்த தம்பியும் வருகிறான். அண்ணனை போய் பார்க்கிறான் அண்ணன் வலியில துடிச்சின்ருக்காறு
கால் எலும்பு துண்டா ஒடிஞ்சி போச்சாம், எதுவானாலும் டாக்டர் வந்து தான் இனி மீதி பார்ப்பாங்களாம்னு சொல்றாங்க

டாக்டர் எப்போ வருவாங்கன்னு கேட்டா ஒன்பது மணிக்கு வருவாராம்!
அதுவரை காத்திருக்கனுமாம், உள்ளே போனா அண்ணன் வலியில துடிக்கிராறு, அப்போ மணி ஏழு.

தம்பிக்கு வருத்த,ம் தாங்கல, ஏன் இது மாதிரி ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்க வேற எங்கனா நல்ல ஆஸ்பிட்டல்ல செர்கறது தானேனா
'நண்பர்கள் சொன்னார்கள் அங்கே லட்சம் லட்சமாக ஆகலாம், அதனால் தான் அவசரத்திற்கு இங்கே சேர்த்தோம் என்கிறார்கள்,

தம்பி கையிலும் அத்தனை பணமில்லை தான்
ஆனாலும் எத்தனை கோடி ஆனாலும் பரவாயில்லை உடனே அங்கே கொண்டு போவோம்னு சொல்லி சென்னை போர்ன் அண்ட் ஜாய்ன்ல சேர்த்து; வேலைய விட்டுட்டு;
ரெண்டு லட்சம் கட்டி,
அடுத்த மூன்றாவது வாரம் அந்த அண்ணன் எழுந்து நிற்கிறார்.

அந்த முடிவை ஏன் எத்தனை லட்ச்சமானாலும் பரவாயில் என்று நண்பர்களால் முடிவு செய்ய முடிய வில்லை? அங்கு நாமிருந்தாலும் அதை தான் செய்திருப்போம், காரணம் ஒரு முடிவு எடுத்து முன் வர நட்பிற்கு மனம் போதுமென்றாலும்; உறவிற்கே உரிமை தரப் பட்டிருக்கிறது.

நண்பர்கள் உதவி செய்வார்கள்; உறவால் மட்டுமே உயிர் தர முடியும் தோழர்களே. பொதுவா நமக்கெல்லாம் உறவுகள்னு பார்த்தா மாமா மச்சான் அத்த சித்தி அண்ணன் தம்பி தான் (நினைவின்) லிஸ்ட்ல இருக்கு, ஆனா ஒரு அப்பாம்மாவை விட
கணவன் மனைவியை விட
நம் பிள்ளைகளை விட,
எல்லோரும் கூட வேண்டாம் ஒரு பெற்ற தாயை விடவா பிறர் நமக்காக துடிப்பார்கள்?

கடைசியா
ஒன்னே ஒன்னு சொல்லி முடித்துக் கொள்கிறேன்; ஊர்ல நம்ம மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து விட்டோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் முகூர்த்தம் இருக்கிறது, நண்பன் அழைத்து நானொரு பெரிய இன்னலில் சிக்கிக் கொண்டேன், அதனால் தான் திருமணத்திற்கு வர இயலவில்லை நீயும் கூட இங்கே உடனே வா என்றால் நம்மால் போக முடியுமா, இன்னும் ஒரு மணி நேரத்தில் மகளுக்கு திருமணம்.

சிலர் இருக்கான் போன ஆப் பண்ணி பொட்டுட்டு, அது ஏதோ ராங் கால்மா நீ போயி வேலையா பாருன்னுவான்.
கொஞ்சம் நல்ல குணமா இருந்தா அண்ணனோ தம்பியோ வேறு நண்பர்களையோ அழைத்து 'ஏம்பா அவனுக்கு இப்படி பிரட்ச்சனையாம் நீ போயி பாரு நான் முகுர்த்தம் முடிந்ததும் வரேன்னுவோம். வேற சிலரும் இருக்கான் மொபைல தங்கச்சி கிட்ட குடுத்துட்டு அவன் திரும்ப பொன் பண்ணினா அண்ணன் எங்கையோ வெளிய போயிருக்குன்னு சொல்லிடுன்னுவான்..

அதே நாமொரு
நண்பனின் திருமணத்திற்கு போகிறோம்; தாலி கட்ட இன்னும் ஐந்தோ பத்தோ நிமிடம் ஊள்ளது, மனைவிக்கு ஆக்சிடென்ட் மகளுக்கு ஆக்சிடென்ட் அப்பம்மாவுக்கு ஆக்சிடென்ட்னு ஒரு போன் வருது அப்போ 'இல்லல்ல இன்னும் பத்து நிமிஷம் தானே நண்பா இருக்கு நீ தாலி கட்றதை பார்த்துட்டு போறேன்னு யாராவது நிற்போமா?

நிச்சயமாக துடித்துக் கொண்டு பதட்டத்தில் ஓடுவோமே தவிர
வேறொன்றுமே தோணாது தோழர்களே காரணம், நட்பு உதவிக்கு உடனே வரும் ஆனால் உறவுகளை தாண்டி வராது.

உறவு அனைத்தையும் தாண்டி வரும்; அவசியமெனில் உயிரையும் தரும்.

ஆக இன்னலில் -
முழுமையாக -
உயிர் தரும் வரை -
முதலில் வருவது உறவே உறவே உறவே எனக் கூறி,
வாய்ப்பளித்தமைக்கு உதவும் கைகள் அமைப்பிற்கு பெரு நன்றி பாராட்டி
பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!
----------------------------------------------------------------------------------------------------------------------
இறைவன் அருளால்
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by வித்யாசாகர் on Sun Dec 13, 2009 1:38 am

@nandhtiha wrote:அன்புள்ள திரு வித்யாசாகர்
வணக்கம்
தாங்கள் தலைமை வகிக்கும் பட்டி மன்றத்துக்கு ஒரு அழகிய தமிழில் வாழ்த்து எழுதத் தான் நினைத்தேன். என் உயிருக்கு நிகராக நினைத்திருந்த இரு ஒப்பற்ற ஆத்மாக்கள் என்னைத் தனியாக விட்டு விட்டுச் இறைவன் திருவடி நீழலை அடைந்து விட்டனர். அவர்களில் ஒருவர் உங்களுக்குத் தெரிந்தவர். மற்றொருவர் எனக்கு ஆசானாக் இருந்து நல்வழிப் படுத்தியவர்.

என் இதய பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் நற்பெயர் மேலோங்கட்டும்
அன்புடன்
நந்திதா
உங்கள் வாழ்த்தே என் பலமென்று உணர்ந்தேன் அக்கா.. உங்களை முழுமையாய் உணர்ந்தேன். நாமெல்லாம் ஒரே இலக்கை நோக்கி வெவ்வேறு பாதையில் செல்கிறோம். பாதைகள் வேறு; பயணத்தின் நோக்கம் ஒன்றே என நம் வெற்றி சொல்லட்டும்.

மிக்க நன்றி என் அன்பு சகோதரியே. உங்கள் வாழ்த்தென்ன அன்பு ஒன்றே போதுமானது. அன்புள்ள வித்யாசாகருக்கென்று எழுதினீர்களே. அங்கேயே உங்கள் மனம் எனக்காக துடித்த; அத்தனையையும் பெற்று விட்ட பெரு மகிழ்வு கொண்டேன்!

கடவுள் உங்களுக்கு முழு துணை இருப்பார்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

குவைத்தில் தமிழரின் பயணங்கள்.. Empty Re: குவைத்தில் தமிழரின் பயணங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை