ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

View previous topic View next topic Go down

ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by muthupandian82 on Sat Nov 14, 2015 9:32 pm


இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முன்னாள்..இந்த உலகத்தில் பாரத தேசம் மட்டும் இருந்தது..அங்கே இப்பொழுது டெல்லி என்றழைக்கப்படும்,இடத்தில் யமுனை நதிக்கரை ஓரத்தில் சூர்யவம்சத்து இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர்..தனது சத்யுக ராஜ்யத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் வளர்ந்து கொண்டிருந்தார்..தனது இளம் பிராயத்தில் தன்னுடைய ராஜ்யத்திற்கு அருகில் இருந்த மற்றொரு ராஜ்யத்தில் இருந்த ராதை என்ற ஒரு அழகிய இளவரசியை கண்டு மனதை பறிகொடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணன்.. பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரின் மனமும் ஒருமனமாகி திருமணமானது.. திருமணம் புரிந்த ஸ்ரீ கிருஷ்ணர் தேசத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்..அன்றிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் என்ற பெயர் மாறி ஸ்ரீ நாராயணன் என்றும்..ஸ்ரீ ராதை என்ற பெயர் மாறி ஸ்ரீ லக்ஷ்மி என்றும் அழைக்கப்பட்டது..இவர்கள்தான் உலகத்தின் முதல் மகாராஜா, மகாராணி..இவர்கள் ஆட்சி புரிந்த இடமே வைகுண்டம் என்ற சுவர்க்கம்..இந்த சுவர்க்கத்தில் வருவதற்குத்தான் எல்லா தர்மங்களும் போட்டா..போட்டி..போடுகின்றன..இங்கே ஸ்ரீ நாராயணருக்கு தான் ஒரு மதத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் தெரியாது..ஏனென்றால் பிற மதங்கள் அங்கே இல்லை..இப்படி ஆரம்பித்த ஸ்ரீ நாராயணரின் ஆட்சியில்..அவரது மகன் இரண்டாம் நாராயணன் என்றும்.. இரண்டாவது நாராயனரின் மகன் 3ம் நாராயணன் என்றும், வம்சமாக வரிசையாக 8 நாராயணர்கள் வருகின்றனர்..இந்த சூர்யவம்சத்துக்கு பிறகு வருவது ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சி..இதே போல வம்சவழியாக 12 ராம்-சீதைகள் திரேதா யுகத்தில் வருகின்றனர்..ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்..கிருஷ்ணரின் ஆட்சியில் கம்சனோ.. ராமரின் ஆட்சியில் ராவணனோ கிடையாது.. ஒருவேளை.. இவர்கள் இருந்தால் அதை சுவர்க்கம் என்று அழைக்கமுடியுமா..?!அங்கே ராமர் வனவாசமும் செல்லவில்லை..கிருஷ்ணர் வெண்ணை திருடி உண்ணவுமில்லை.. ஏனென்றால் சுவர்க்கத்தில் யாருக்கும் தீய குணங்களே இல்லை..இந்த 5000ம் வருடங்களில் 1250 வருடங்கள் சத்யுகம்..1250 வருடங்கள் திரேதாயுகம்..2500 வருடங்கள் முடிய அங்கே தேவதைகளாக வாழ்ந்த 33 கோடி பேர் தன்னுடைய சக்திகளை இழக்க ஆரம்பிகின்றனர்..அப்பொழுது உலகில் பூகம்பங்களும்..கடல் பொங்கியதால் ஏற்பட்ட சீற்றங்களினாலும் அவர்களுடைய நினைவு சின்னங்கள் அழிந்தது.. அதை லெமூரியா கண்டம் என்று சரித்திரம் இன்றும் அழைக்கின்றது.. மற்ற தர்மத்தை சேர்ந்தவர்கள் மெல்ல..மெல்ல.. வர.. துவாபரயுகம் ஆரம்பம் ஆனது.. தெய்வீகத்தன்மையை இழந்த 33 கோடி பேர்களில் சிலர் பிற தர்மங்களுக்கு சென்று தன்னை மாற்றிக்கொண்டார்கள்..இவர்களே பிற்ப்பாடு அந்த தர்மங்களை சேர்ந்தவர்களாக தன்னை அறிவித்துகொண்டார்கள்.. ஆனால்.,ஒரே ஒருவருக்கு மட்டும் ஜோதிவடிவமாக இறைவன் சிவனின் காட்சி கிடைக்க அவர் சோம்நாத் என்ற தங்க கோவிலை முதன் முதலில் கட்டி அங்கே வைரலிங்கத்தை ஸ்தாபித்தார்.. அவர்தான் விக்ரமாதித்ய மகாராஜா..இவர் மூலமாக பக்தி ஆரம்பித்தது என்றால்.., இவர்தான் ஹிந்து தர்மத்தை ஆரம்பித்து வைத்தவர் என்றும் கூறலாம்..இவரை பின்பற்றி மற்ற அரசர்களும் கோவில்களை உருவாக்க.. அங்கிருந்த மக்களும் அதையே வழிபட ஆரம்பித்தார்கள்..ஒன்றன் பின் ஒன்றாக பிற தெய்வங்களும் வழிபட ஆரம்பித்த மக்கள் 33 கோடி தெய்வங்களையும் மெல்ல மெல்ல வழிபட ஆரம்பித்தனர்.. இவர்களை வழிபட்ட மக்கள் தன்னுடைய தெய்வீக தன்மையை இழந்துவிட்ட காரணத்தால் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் என்று அழைத்துக்கொள்வதற்கு பதிலாக தன்னைஹிந்து தர்மம் என்று தன்னை அழைத்துக்கொண்டனர்.. பிறகு..5000ம் வருடங்களில் 3750 வருடங்கள் கழித்து கலியுகம் ஆரம்பமானது.. துவாபர யுகத்தில் ஆரம்பமான தீய குணங்கள்.. கலியுகத்தில் இன்னும் அதிகமாக பெருகியது..இதைதான் கலிமுத்தி விட்டது என்றும் இந்த நேரத்தில் கடவுள் அவதரித்து தர்மத்தை படைப்பார் என்றும் எல்லா தர்மங்களும் கூறிக்கொண்டு வந்தன..ஆம்,யார் ஜோதிவடிவமாக காட்சி கொடுத்தாரோ அந்த சிவபெருமான் அவரே உலகின் ஒரே தெய்வம் இவரையே மற்ற தர்மங்கள் யேகோவா என்றும் அல்லா என்றும் பரமபிதா என்றும் அழைக்க ஹிந்துக்கள் பரசிவம்..பரமேஸ்வரன் என்றும் அழைகின்றனர்.. இவர் உடலற்ற ஜோதியாவார்..உலகிற்கு ஒரே இறைவன் ஆவார்..இவர் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியை கொண்டுவந்து ஆதி சனாதன தர்மத்தை பூமியில் படைக்கின்றார்.. இதுவே "யதா யதாகி தர்மஸ்ய"என்று அழைக்கப்படுகின்றது.. இப்பொழுது "ராஜஸ்வ அஸ்வமேத அவினாஷி ருத்ர ஞானயாகத்தை" இறைவன் சிவன் இந்த பூமியில் படைத்துள்ளார்..எந்த தீய குணங்களால் சுவர்க்க ராஜ்யத்தை நாம் இழந்தோமோ அதை இந்த யாகத்தில் அர்ப்பணித்து மீண்டும் தர்மம் நிறைந்த ஒரே ராஜ்யத்திற்கு பயணம் செய்வோம்..
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by ராஜா on Sun Nov 15, 2015 11:09 am

சிரி இதையெல்லாம் உங்களுக்கு யார் சொன்ன கதை ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by Namasivayam Mu on Sun Nov 15, 2015 1:36 pm

பிரம்ம  குமாரிகள் தான் சொல்லுகிறார்கள்.
இந்தக் கதையை சொல்வதற்கு  ஏழு நாட்களுக்கு  வரச்சொல்லுவார்கள்.
எங்கள் உறவுக்கார பெண்மணி தனது மகன்  அகால மரணமடைந்து விட்டதினால்  மனம் நொந்து பிரம்மா குமாரிகளை சந்தித்தார். நன்கு படித்து அரசுப் பணியில் இருந்த அவர் கணவனை  விட்டுப் பிரிந்து  தன்னையும் தனது உடமைகளையும் பிரம்மா குமாரிகள் சங்கத்திற்கு  அர்ப்பணித்து விட்டு ஐக்கியமாகி விட்டார். சாதாரண மக்கள்  ஆத்மாக்கள்  என்று  அழைக்கப்  படுகிறார்கள் . பிரம்ம குமாரிகளோடு   சரணாகதி அடைந்தவர்கள்  புனித ஆத்மாவாகி சத் உலகம் செல்வதற்கு  டிக்கெட் வழங்கப் படுகிறது.
வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by கார்த்திக் செயராம் on Sun Nov 15, 2015 3:00 pm

கதை மிகவும் அருமை ...கதைதானே ????
ஐந்தாயிரம் வருடத்திற்கு முன்னாள் உலகத்தில் பாரத தேசம் மட்டும் இருந்துச்சுன்ன ...எங்க தமிழினம் அப்ப இல்லவே இல்லையா ..???..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by Namasivayam Mu on Sun Nov 15, 2015 3:14 pm

தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.

இலமுரியா கண்டம்
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.
பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.
குமரிமாந்தரின் மொழியற்ற நிலை“சைகை மொழி” – Sign Language.
குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.
இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரைவிளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படிகருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
5. வாய்ச் செய்கையொலிகள்வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
7. சுட்டொலிகள் (Decitive Sounds)சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களைஎழுப்பும் ஒலிகள் எனப்படும்.


தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா4. தொலை கிழக்கில் – சீன நாடு5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்


1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.
தொல்காப்பியம்
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்2. இடைக்காலத்தமிழ்3. தற்காலத்தமிழ்


1. பழந்தமிழ் (Ancient Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil
2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval தமிழ்

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil
ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil
முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்Early ancient Tamil (or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.
தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.
இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.


தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு


உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.
வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.


தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.
சார்லஸ் டார்வின்

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.
நன்றி : இணையம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by கார்த்திக் செயராம் on Sun Nov 15, 2015 3:37 pm

எங்க அய்யா ஆதாரத்தோட படம் போட்டு காட்டிடாங்க ...இனிமே கதை சொல்வதை விடுங்கள் ..

நன்றி -
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by ராஜா on Sun Nov 15, 2015 3:51 pm

@Namasivayam Mu wrote:சாதாரண மக்கள்  ஆத்மாக்கள்  என்று  அழைக்கப்  படுகிறார்கள் . பிரம்ம குமாரிகளோடு   சரணாகதி அடைந்தவர்கள்  புனித ஆத்மாவாகி சத் உலகம் செல்வதற்கு டிக்கெட் வழங்கப் படுகிறது.வாழ்க வளமுடன்
அடடே ... நல்ல விஷயமா இருக்குதே .. அட்வான்ஸ் புக்கிங் உண்டா ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by Namasivayam Mu on Sun Nov 15, 2015 4:04 pm

@ராஜா wrote:
@Namasivayam Mu wrote:சாதாரண மக்கள்  ஆத்மாக்கள்  என்று  அழைக்கப்  படுகிறார்கள் . பிரம்ம குமாரிகளோடு   சரணாகதி அடைந்தவர்கள்  புனித ஆத்மாவாகி சத் உலகம் செல்வதற்கு டிக்கெட் வழங்கப் படுகிறது.வாழ்க வளமுடன்
அடடே ... நல்ல விஷயமா இருக்குதே .. அட்வான்ஸ் புக்கிங் உண்டா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1174903

அதற்கு மவுண்ட் அபு செல்லவேண்டும்பிரம்ம குமாரிகள்

"பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்' என்னும் ராஜயோக தியான நிலையத்தின் சிறு விதை 1936-ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தி லுள்ள ஹைதராபாத் தில் (கராச்சி) விதைக் கப்பட்டு, இன்று மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து, சுமார் 8,500 கிளை நிலையங்க ளைக் கொண்டிருக் கிறது.

பிரம்மா குமாரிகள் அமைப்பானது ஓர் ஆன்மிக, சமூக, கல்வி மற்றும் கலாச்சாரப் பணிபுரிந்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்கால இயந்திரமயமான உலகத்தில், புதிய ஆன்மிக விழிப்புணர்விற்கான பணியைச் செய்து வருகிறது இந்த இயக்கம்.

ஆரம்ப கட்டத்தில் சுமார் 350 பேர் கொண்ட ஓர் சிறிய ஆன்மிக விழிப்புணர்வு பெற்ற குடும்பமாகச் செயல்பட்டு வந்த இந்த இயக்கம், இன்று பத்து லட்சம் உறுப்பினர் களுடன் விளங்குகிறது. சாதி, சமயம், இனம், மொழி, கலாச்சாரத்தைக் கடந்து, பண்புகள் நிறைந்த வாழ்க்கையின் வாயிலாக உலகத்தில் தூய்மை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பரப்பும் ஆன்மிகப் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வியக்கம் தாதா லேக்ராஜ் என்பவ ரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் பிரபல வைர வியாபாரியாக விளங்கினார். சிவ பெருமானின் அருளால் கிடைத்த பல்வேறு தெய்வீகக் காட்சிகளும், ஆன்மிக அனுபவங் களும் அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஓர் ஆன்மிகத் தலைவராக உருவெடுத்தார். இவரை மக்கள் "பிரஜா பிதா பிரம்மா' என்று அழைத்தனர். அவர் தனது 60-ஆவது வயதில், 1936-ஆம் ஆண்டு "ஓம் மண்டலி' என்ற ஆன்மிக அமைப்பை நிறுவினார். அதன் பின்னர் "பிரம்மா பாபா' என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். 1950-ஆம் ஆண்டு, 350 பேர் கொண்ட இவரின் ஆன்மி கக் குழு கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து, ராஜஸ்தானில் ஆர

வல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள "மவுண்ட் அபு' என்னும் இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. (இங்குதான் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் இருக்கிறது. இப்போது ஹைதராபாத்திலும் உள்ளது.)

பிரஜா பிதா பிரம்மா தீர்க்கமான நம்பிக்கையும், தொலைநோக்குச் சிந்தனை யும் கொண்டவராக இருந்ததால், 1975-ல் ஆரம்பிக்கப்பட்ட அகில உலக சேவையா னது, இன்று ஐந்து கண்டங்களிலுள்ள 130 நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிகம் மற்றும் சமுதாய முன்னேற்றத் தில், தமது தனித்தன்மை வாய்ந்த பண்பு களால் மறுமலர்ச்சி ஏற்படுத்த வல்லவர்கள் பெண்களும் தாய்மார்களுமே என்பதை உணர்ந்து, அவர்களை முன்னிலைப்படுத்தி னார். அதன்படி "மாதேஸ்வரி ஜெகதாம்பா சரஸ்வதி' பிரம்மா குமாரிகளின் முதல் நிர்வாகியானார். அந்த சமயத்தில் இளம் வயதுடையவராக இருந்த போதிலும் ஆன்மிகத் தாயாக விளங்கினார். பாரதத்தின் பல பாகங்களிலும் தனது பணியை மேற்கொண்ட மாதேஸ்வரி, 1964-ஆம் ஆண்டு தனது பூத உடலை நீத்தார். அதன் பின்பு பிரஜா பிதா பிரம்மா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 18-ல் பரிபூரண நிலையைப் பெற்றவராக பூதவுடலை நீத்தார். இவர் களைத் தொடர்ந்து ஆன்மிக சேவையானது மூத்த சகோதரிகளால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தது. அன்பு சொரூபமும், தலைசிறந்த நிர்வாகியுமான "தாதி பிரகாஷ்மணி' தலைமை நிர்வாகியாக 1969-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இவருடைய ஆர்வம், உற்சாகம், இறைசக்தி, பண்புகளால் ஆன்மிகக் குடும்பத்தைச் செம்மையாக வழிநடத்தினார். அதன் பயனாக 1981 மற்றும் 1986-ல் ஐ.நா. சார்பாக அமைதிப் பதக்கங்கள் வழங்கப்பட் டன. 1987-ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலர், "அமைதித் தூதுவர்' என்ற விருது வழங்கி கௌரவித் தார். இத்துடன் ஐந்து தேசிய "அமைதித் தூதுவர்' விருதுகளை இவ்வித்யாலயத்தின் கிளை நிலையங்க ளான ஆஸ்திரேலியா மற்றும் கென்யா நாட்டு மையங்கள் பெற்றிருக்கின்றன.

ராஜஸ்தான், உதயப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக் கழகம், டாக்டர் ஆஃப் லிட்ரேச் சர் (கௌரவ முனைவர்) பட்டத்தை தாதி பிரகாஷ் மணி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தாதி பிரகாஷ்மணி 2007-ஆம் ஆண்டு பூதவுடலைத் துறந்தார். அதன் பின்னர் தாதி ஜானகி அவர்கள் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ளார். 92 வயது நிரம்பியவராக இருப்பினும், காலத்தையும் உடல் நிலையையும் கடந்து, களைப்பில்லாத சேவையை லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வருகிறார். இவருடைய ஆழ்ந்த தியானப் பயிற்சியின் பலனாக, "உலகிலேயே எப்போதும் சமமான மனநிலை கொண்ட பெண்மணி' என்று அறிவியல் ஆராய்ச்சி யின் மூலம் கண்டறியப்பட்டுள்ளார்.

பிரம்மா குமாரிகள் வித்யாலயம் பலவிதத்தில் ஒரு ஈடுஇணையற்ற விஷ்வ வித்யாலயமாக உள்ளது. ஆன்மிகப் பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற சிறந்த ஆன்மிகக் கல்வி நிறுவனமாக இது விளங்குகிறது. இதற்குப் பன்னாடுகளின் வரவேற்பும் அங்கீகார மும் உண்டு. ஐ.நா.சபையின் பொதுச் செய்தி இலாகாவில் அரசு சார்பற்ற நிறுவனமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் பொருளாதார- சமூகக் கூட்டமைப்பின் (ஊஸ்ரீர்ள்ர்ஸ்ரீ) ஆலோசனைக் குழுவில் ஆலோசகர் அந்தஸ்தில் இடம் பெற்றுள்ளது. கோஸ்டாரிக்காவில் உள்ள ஐ.நா.வின் அமைதிப் பல்கலைக் கழகத்திற்கு, அமைதி பற்றிய கல்வி நுணுக்கத்தின் ஒத்துழைப்பை நல்குவதற் கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதிக் கழகத்தில் (மய்ண்ஸ்ரீங்ச்) ஆலோசகர் அந்தஸ்து பெற்றுள்ளது.

மொரீஷியஸ் அரசு, இவ்வித்யாலயத்தை ஒரு பல்கலைக் கழகமாக, பாராளுமன்றச் சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளது. இந்த ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் ஆலோசனை யின் பேரில், கயானா அரசு மூன்று நிமிட ராஜயோக தியானம் செய்து பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள இவ்வித்யாலயம் சமூகத்தின் 18 பிரிவுகளின் அடிப்படையில் தனது பணிகளை அதிகரித்து வருகிறது. அவற்றுள் மருத்துவப் பிரிவு, கல்விப்பிரிவு, மகளிர் பிரிவு, நிர்வாகப் பிரிவு, இளைஞர் பிரிவு, அரசியல் பிரிவு முக்கிய மானவை. தனி மனிதனின் ஆக்கப்பூர்வமான மாற்றம்தான் அமைதி, மகிழ்ச்சியின் அடித்தளம் எனவும்; அதுவே உலக மாற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிறது என்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், தனிமனித அமைதிக்காக ராஜயோக தியானப் பயிற்சியைக் கற்பித்து வருகிறது. இதைப் பற்றி அறிய வேண்டும் என்று விழைகின்ற ஆண், பெண், குழந்தைகள் யாவரும், ஜாதி, மத, மொழி பேதமின்றி இவ்வமைப்பை அணுகலாம்; அறிந்து பயனடையலாம். இதற் காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப் படுவதில்லை.

பிரம்மா குமாரிகளின் இராஜயோக தியான மையங்களில் பல்வேறு பாடமுறைகள், உரையாடல், கருத்தரங்கம் மூலமாக, தனிமனித ஒழுக்க மேம்பாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆக்கப்பூர்வமான சிந்தனை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் பட்ண்ய்ந்ண்ய்ஞ்) மூலமாக மனதை எவ்வாறு சீராகப் பராமரித்து ஒருமுகப்படுத்துவது, மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வது (நற்ழ்ங்ள்ள் எழ்ங்ங் கண்ஸ்ண்ய்ஞ்), சுய நிர்வாகத் தலைமை (நங்ப்ச் ஙஹய்ஹஞ்ண்ய்ஞ் கங்ஹக்ங்ழ்ள்ட்ண்ல்), முழு ஆரோக்கியத்திற்கான ஆக்கப்பூர்வ அணுகுமுறை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் ஆல்ல்ழ்ர்ஹஸ்ரீட் ற்ர் பர்ற்ஹப் ஐங்ஹப்ற்ட்), நற்பண்புகள் கல்வித் திட்டம் (கண்ஸ்ண்ய்ஞ் யஹப்ன்ங்ள் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்) போன்றவை அவற்றுள் சில.

இங்கு கற்றுத் தரப்படும் ராஜயோக தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.

கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெற உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, வெற்றி அடைவதற்கான மனோசக்தியும் தன்னம்பிக்கை யும் கிடைக்கிறது. கூடவே தன்னைத்தானே உணரவும் முடிகிறது. எப்பொழுது தன்னைப் புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதுதான் மற்றவர்களை- பிரச்சினைகளை- சூழ்நிலை களைச் சரியாகக் கையாள முடியும்.

இந்த ஆன்மிகப் பயணத்தில் உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஈடுபடுத்தும் வண்ணம், அநேக நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

தமிழகத்திலும் பிரம்மா குமாரிகள் அமைப் பின் கிளைகள் உள்ளன. அங்கே தினமும் காலை, மாலை இருவேளையும் ராஜயோகப் பயிற்சியும் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

நன்றி: இணையம்


Last edited by Namasivayam Mu on Sun Nov 15, 2015 4:20 pm; edited 1 time in total
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by Namasivayam Mu on Sun Nov 15, 2015 4:05 pm

@கார்த்திக் செயராம் wrote:எங்க அய்யா ஆதாரத்தோட படம் போட்டு காட்டிடாங்க ...இனிமே கதை சொல்வதை விடுங்கள் ..

நன்றி -
மேற்கோள் செய்த பதிவு: 1174900

:வணக்கம்:
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by Hari Prasath on Sun Nov 15, 2015 4:06 pm

@ராஜா wrote:
@Namasivayam Mu wrote:சாதாரண மக்கள்  ஆத்மாக்கள்  என்று  அழைக்கப்  படுகிறார்கள் . பிரம்ம குமாரிகளோடு   சரணாகதி அடைந்தவர்கள்  புனித ஆத்மாவாகி சத் உலகம் செல்வதற்கு டிக்கெட் வழங்கப் படுகிறது.வாழ்க வளமுடன்
அடடே ... நல்ல விஷயமா இருக்குதே .. அட்வான்ஸ் புக்கிங் உண்டா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1174903

இருந்தாலும் இருக்கும்...
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ஹிந்து தர்மம் எப்படி உருவானது?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum