உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:23 am

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... 02VpznHIT3aUSvfW9ZgO+53569_thumb

விடைபெற்றார் ஆச்சி : நடிகை மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது!

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல் மயிலாப்பூரில் கைலாசபுரம் மயானத்தில்
தகனம் செய்யப்பட்டது.

பழம்பெரும் நடிகை மனோரமா நேற்றிரவு காலமானார். தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசான், சரத்குமார் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... BYNt5BysTWGObMUADXau+man

மாலை 4.30 மணிக்கு தி.நகரில் இருந்து மனோரமாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், பொதுமக்கள் பங்கேற்றனர் .ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்களை வீசி மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மயிலாப்பூர் கைலாசபுரம் மயானத்துக்கு அவர் உடல் கொண்டு வரப்பட்ட போது, அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அவர்களை மிகுந்த சிரமத்துக்கிடையே போலீசார் கட்டுப்படுத்தினர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கு பிறகு இறுதியாக இரவு 7 .05 மணியளவில் நடிகை மனோரமாவின் மகன் பூபதி அவரது சிதைக்கு தீ முட்டினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty Re: 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:24 am

'பெண் நடிகர் திலகம் நடிகை மனோரமா'- நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா புகழாரம் !

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... HYUSTo01SEm6bPBKQ6sG+jaya_vc1

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பழம்பெரும் நடிகையான மனோரமா நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் மனோரமா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுதாவூரில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தி.நகர் சென்றார். அங்கு மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, "மனோரமா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. திரையுலகில் எனது மூத்த சகோதரியாக விளங்கியவர் மனோரமா. நடிப்பில் மேதையான மனோரமாவை பெண் நடிகர் திலகம் என்றே சொல்லலாம். எம்ஜிஆர், சிவாஜியின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் மனோரமா. தமிழ் திரையுலகில் மனோரமாவை போன்ற சாதனையாளர் இருந்ததில்லை" என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty Re: 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:27 am

நடிகை மனோரமாவுக்கு கருணாநிதி நேரில் அஞ்சலி- இரங்கல் !

மறைந்த நடிகை மனோரமாவுக்கு திமுக தலைவர் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... RGwihr6TiuesYCUDBX4a+karu_vbc1


திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தியில், "ஆச்சி" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா நேற்றிரவு மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர். அண்ணா அவர்கள் எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”, நான் எழுதிய “உதய சூரியன்”, “மணிமகுடம்”, தம்பி சொர்ணம் எழுதிய “விடை கொடு தாயே” போன்ற நாடகங்களில் “அல்லி” போன்ற சிறப்பான பாத்திரங்களை ஏற்று கழக மாநாடுகளில் எல்லாம் நடித்ததன் மூலம், திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் மனோரமா.

1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது இவருக்குள்ள தனிப் பெருமை ஆகும். ஆச்சி மனோரமா நகைச்சுவை நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக திரையுலகில் கடந்த ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்தவர். “பத்மஸ்ரீ” விருது, “புதிய பாதை” திரைப்படத்தின் மூலம் “சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி விருது” என பல விருதுகளை மனோரமா பெற்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தது.

அதற்குள் இன்று வந்த அவரது மறைவு திரைப்பட உலகிற்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புத் தாயை இழந்து வாடும் தம்பி பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty Re: 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:30 am

மனோரமா மறைவு: கமல்ஹாசன் இரங்கல் !

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... TVoEo6OeR6WfC3a8QCvO+kamalmanorama_2580414f
நடிகை மனோரமா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒரு வாரம் முன்பு அவரைச் சந்தித்தேன். நாங்கள் மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கவுரவிப்பு விழா நடத்திக் கொண்டிருந்தோம்.

அப்போது அனைவரும் ஆச்சரியத்தக்க வகையில் மனோரமா விழா மேடைக்கு வருகை தந்தார், பிறகு பார்வையாளர்கள் அனுமதியுடன் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி அவர்கள் எழுதிய 3 பக்க வசனத்தை தனது நினைவிலிருந்து பேசினார்.

இதனை அவர் எதற்கு செய்து காட்டினார் என்றால் இன்னமும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் அவர் நடித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் நடிக்க முடியாமல் போனது அவரை பாதித்தது.

அன்றைய தினம் அந்த 3 பக்க வசனத்தை அவர் பேசி முடித்தவுடன் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது. எனது அனுமதிக்காக அவர் என்னைப் பார்த்த போது எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

3 வயது குழந்தை நடிகர் என்ற நிலையிலிருந்து அவர் என்னை அறிந்தவர். நேசிக்கக் கூடிய பெண்மணி, மிகப்பெரிய திறமைக்காரர். தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக்கு மனோரமா, நாகேஷ் ஆகியோர் தாயும், தந்தையும் போன்றவர்கள் என்றே நான் கூறுவேன்.

எனது நடிப்பை அவர்கள் பார்த்து, பாராட்டி, கருத்துக் கூறியது எனக்குக் கிடைத்த ஆகப்பெரிய மரியாதையாகப் பார்க்கிறேன். இவ்வாறு என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்கள்.

முதுகுக்குப் பின்னால் என்னை விமர்சிப்பவர்களிடத்தில் எனக்காக அவர்கள் வாதாடியுள்ளனர். குறிப்பாக மனோரமா அவர்கள். லட்சக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவனாக நானும் அவரை இழந்துள்ளேன். மனோரமா அவர்களுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் 1000 படங்களைக் கடந்தார்.

அவருடைய வாழ்க்கை முழுமையானது, ஆனாலும் அவரது ரசிகர்களான எங்களுக்கு இன்னமும் ஏதோ பூர்த்தியடையாதது போலவே உள்ளது.

அவரது இறுதிச் சடங்கிலும் கூட சிலர் மனோரமா அவர்கள் அளித்த மறக்க முடியாத திரைக் கணங்கள் நினைவுக்கு வர கவனக்குறைவாகவேனும் சிரித்து விடலாம். உங்களது கூர்மையான நகைச்சுவையால் எங்கள் முகங்களில் சிரிப்பை வரவழைத்த உங்களுக்கு நன்றி அம்மா.

எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட மகிழ்வான, மற்றும் துயரமான தருணங்களுக்கு நன்றி. தற்போதைய தற்காலிக துயரத்தின் மீது உங்களது நகைச்சுவை பிரதிமை தாமே விரைவில் படிந்து விடும் என்பது உண்மை. அன்பும், வேடிக்கையுமான என் அம்மாவுக்கு எனது பிரியாவிடை." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty Re: 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:31 am

மனோரமாவுக்கு 'ஆச்சி' என்று பெயர் வந்தது எப்படி?

நகைச்சுவை அரசி மனோரமா 'ஆச்சி' என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவர். அவருக்கு ஆச்சி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இது...

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... SK5iAQlaTl87tdE4r4hR+achi(2)

'' நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். 1962ஆம் ஆண்டு க.கி.சுப்பிரமணியத்தின் ' காப்பு கட்டி சத்திரம் ' என்ற நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகம் ரேடியோவில் 66 வாரங்கள் ஒளிபரப்பாகியது. அதில் நானும் நாகேசும் சேர்ந்து நடித்தோம்.

அந்த நாடகத்தில் 'பன்னர் பாக்கியம்' என்ற கேரக்டரில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன். செட்டிநாட்டு பாஷை பேசி அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்அப் மேன் 'ஆச்சி ' என்று அழைத்தார். பின்னர் அனைவரும் ஆச்சி என்று அழைக்க அந்த பெயரே நிலைத்து விட்டது''

இவ்வாறு மனோராமா கூறியுள்ளார்.

நன்றி விகடன் மற்றும் தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty Re: 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by ayyasamy ram on Mon Oct 12, 2015 5:59 am

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... XcjYhiovRq6LVFxTXuTj+MANORAMA2_2579789p
-
போலீஸ்காரன் மகள் படத்தில் ஒரு காட்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Empty Re: 'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை