புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
89 Posts - 50%
heezulia
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
29 Posts - 54%
heezulia
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_m10பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!


   
   
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Sep 17, 2015 6:11 pm

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன.

தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.

இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன. இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்கள் விவரம்:

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: மூலபத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.

23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதுமானது அல்ல: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்.

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.
தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார்.

அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

'அ' பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision) ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர் நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

நன்றி http:// patta-chitta.blogspot.in/ 2013_07_01_archive. html

பட்டாவில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி?

பட்டாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்
வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்க

சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல்

சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போதே பட்டா மாறுதல் பட்டா உட்பிரிவு செய்தல் ஆகியவற்றிற்கும் கட்டணம் மனு ஆகியவை பெறப்படும் அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்கள்

அதன் அடிபடையில் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் பட்டா மாறுதல் மட்டும் செய்யப்படுவதில்லை.

நன்றி - மோகன்தாஸ் சாமுவேல்



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 6:40 pm

அருமையான பதிவு !.......நிறைய பேருக்கு அவசியமானதும் கூட.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி சாரதி புன்னகை
.
.
.

தலைப்பை தமிழில் அடித்து பின் மேலே 'பேஸ்ட்  '  செய்யுங்கள்.

இவ்வாறு 'பத்தி பத்தி' யாக பிரித்து போடுங்கள் ; படிக்க எளிது புன்னகை

மேலும், நாம் போடும் முதல் பதிவு எல்லா பக்கங்களிலும் 'load ' ஆவதால், அதை கூடிய அளவுக்கு சிறிதாய் கொடுங்கள்......இப்போ நீங்கள் 2 பதிவுகளை ஒரு சேர கொடுத்திருக்கிறீர்கள் , எனவே, இத பதிவின் நீளம்   அதிகமாய் இருக்கு, நெட் ஸ்லோவாக இருப்பவர்களுக்கு, எல்லா பக்கங்களும் load  ஆக நேரம் எடுக்கும் அது தான் சொல்கிறேன்...இனி , எதிர்  வரும் காலத்தில் இதை நினைவில் வைத்துக்கொண்டு பதிவு போடுங்கள்...சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Fri Sep 18, 2015 3:48 pm

மிக்க நன்றி !!! பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! 1571444738



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 6:41 pm

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்தால்
ஆண்டுக் கணக்கில் பதில் வராது...
-
ஆண்டுக்கு ஒரு முறை மே மாதத்தில்
தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடக்கும்.
அப்போது அனைத்து கிராம மக்களும் வருவாய்த்
துறை சம்பந்தமான கணக்குகளில், தங்களுக்குள்ள
குறைகளை மனுவாக கொடுத்தால், அந்த மனுவுக்கு
பதிவு எண் கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள்...
-
தினசரி சுமார் பத்து கிராமங்களுக்கு மேல் குறைகள்
கேட்பார்கள்....தேதி, அந்த தேதியில் குறை கேட்கும்
கிராமங்கள் விபரம் முன்னதாக அறிவிக்கப்படும்..
-
அந்த தேதியில் ஆஜரானால், துணை ஆட்சியர்
மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ளவர்கள்
நமது குறைகளை கேட்பாரகள்...
-
நமது மனு ஏற்றுக் கொண்டதற்கு தரப்படும்
ஒப்பதுல் கடிதத்தை வைத்துக் கொண்டு
அவ்வப்போது ரிமைண்டர் அனுப்பலாம்...
-

குறைகளை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:14 pm

ayyasamy ram wrote:பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்தால்
ஆண்டுக் கணக்கில் பதில் வராது...
-
ஆண்டுக்கு ஒரு முறை மே மாதத்தில்
தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடக்கும்.
அப்போது அனைத்து கிராம மக்களும் வருவாய்த்
துறை சம்பந்தமான கணக்குகளில், தங்களுக்குள்ள
குறைகளை மனுவாக கொடுத்தால், அந்த மனுவுக்கு
பதிவு எண் கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள்...
-
தினசரி சுமார் பத்து கிராமங்களுக்கு மேல் குறைகள்
கேட்பார்கள்....தேதி, அந்த தேதியில் குறை கேட்கும்
கிராமங்கள் விபரம் முன்னதாக அறிவிக்கப்படும்..
-
அந்த தேதியில் ஆஜரானால், துணை ஆட்சியர்
மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ளவர்கள்
நமது குறைகளை கேட்பாரகள்...
-
நமது மனு ஏற்றுக் கொண்டதற்கு தரப்படும்
ஒப்பதுல் கடிதத்தை வைத்துக் கொண்டு
அவ்வப்போது ரிமைண்டர் அனுப்பலாம்...
-

குறைகளை
மேற்கோள் செய்த பதிவு: 1163266

ஒ...இதுவேறையா? ......நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Waajid M A
Waajid M A
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

PostWaajid M A Fri Sep 18, 2015 8:21 pm

இந்த பிரிவில் ஒரு சிறிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பர்கள் யாராவது உதவி செய்ய நினைத்தால், அவர்களால் முடியுமானால் செய்யலாம்.

1966ல் வாங்கப்பட்ட சாலமங்கலம் கிராமத்து நிலத்திற்கான பட்டா UDR வாங்கப்பட்டு கிராம கணக்கிலும் வந்து விட்டது. ஆனால் 2001ல் ஒரு சிலர் செய்த தில்லுமுல்லின் காரணமாக தன்னிச்சையாக cancel செய்யப்பட்டு கூட்டுப்பட்டாவில் போடப்பட்டு விட்டது. இப்போது கேட்டால் நிலம் இல்லை என்கிறது வருவாய் துறை. சம்பந்தப்பட்ட நிலம் வேறு ஒரு பெயரில் layout போடப்பட்டு விட்டது. இதனை எப்படி handle செய்வது என்று புரியவில்லை கோர்ட்டுக்கு போகலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். கூட்டு பட்டா இருக்கிறது அதில் 35 பெயர்களுடன் ஒரு சில ஏக்கர் நிலமும் இருக்கிறது. பிரித்துக்கொடுக்கச்சொன்னால் கையை விரிக்கிறது வருவாய் துறை. சரியான கையில் இது சிக்கினால் ஒரு சில நாட்களில் வேலை முடிந்து விடும். யாராவது தயாரா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:40 pm

Waajid M A wrote:இந்த பிரிவில் ஒரு சிறிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பர்கள் யாராவது உதவி செய்ய நினைத்தால், அவர்களால் முடியுமானால் செய்யலாம்.

1966ல் வாங்கப்பட்ட சாலமங்கலம் கிராமத்து நிலத்திற்கான பட்டா UDR வாங்கப்பட்டு கிராம கணக்கிலும் வந்து விட்டது. ஆனால் 2001ல் ஒரு சிலர் செய்த தில்லுமுல்லின் காரணமாக தன்னிச்சையாக cancel செய்யப்பட்டு கூட்டுப்பட்டாவில் போடப்பட்டு விட்டது. இப்போது கேட்டால் நிலம் இல்லை என்கிறது வருவாய் துறை. சம்பந்தப்பட்ட நிலம் வேறு ஒரு பெயரில் layout போடப்பட்டு விட்டது. இதனை எப்படி handle செய்வது என்று புரியவில்லை கோர்ட்டுக்கு போகலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். கூட்டு பட்டா இருக்கிறது அதில் 35 பெயர்களுடன் ஒரு சில ஏக்கர் நிலமும் இருக்கிறது. பிரித்துக்கொடுக்கச்சொன்னால் கையை விரிக்கிறது வருவாய் துறை. சரியான கையில் இது சிக்கினால் ஒரு சில நாட்களில் வேலை முடிந்து விடும். யாராவது தயாரா?
மேற்கோள் செய்த பதிவு: 1163315

நம் தளத்திலேயே ஒரு வக்கீல் இருந்தார், அவர் உதவுவர் என்று நினைக்கிறேன்................ஆனால் அவர் பேர் மறந்து விட்டது...............அவரின் அவதாரில் இருக்கும் அவர் போட்டோ நினைவில் இருக்கு....ஆனால் பேர் நினைவில் இல்லை சோகம்................நினைவுக்கு வந்ததும் இங்கு எழுதுகிறேன்.................யாருக்காவது நினைவுக்கு வந்தாலும் போடுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2015 11:01 pm

ayyasamy ram wrote:பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்தால்
ஆண்டுக் கணக்கில் பதில் வராது...
-
இப்ப அப்படி கிடையாதுன்னு நினைக்கிறேன் , நாங்கள் விண்ணப்பிக்கும் போது அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கபட்டு வருகிறது அதனால் இப்ப முடியாது ஓரிரு வாரங்களுக்கு பிறகு வாருங்கள் என்று சொன்னார்கள். போனபோது இன்னும் முடியவில்லை இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு வாருங்கள் என்று சொன்னார்கள்.

அதன்பிறகு வேலை முடிந்துவிட்டது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக