புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_m10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_m10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_m10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_m10ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதை இரண்டு முடிவுகள் :) ..by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 11:46 pm

ஒரு கதை இரண்டு முடிவுகள்  புன்னகை

ஒரு கல்யாண மண்டபத்தில் மாலையில் இரண்டு சம்பந்திகளும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.விஷயம் என்ன, ரொம்ப சரி நீங்க நினைத்தது போல வரதக்ஷணை தான். பெண்ணை பெற்றவர் பாவம் தழைந்த குரலில் சமாதனம் செய்து கொண்டு இருக்கிறார். பிள்ளை யை பெற்றவர் ஓங்கி பேசுகிறார்.............

கல்யாணப் பெண்ணும் பையனும் ஒன்றும் பேசத்தோன்றாமல் திகைத்து  நிக்கிறார்கள்.இனி அவர்களின் சம்பாஷனை :

சம்பந்தி , என்று பெண்ணின் அப்பா .... சேகரன் துவங்குவதற்குள் , " யோவ் என்னய்யா சம்பந்தி, தாலி   இன்னும் கட்டலை.... நாளை காலை தான் நான் உங்களுக்கு சம்பந்தி, பேசின படி பணத்தை வையுங்கள் அப்போ தான் என் பையன் தாலி கட்டுவான்" ..என்று சத்தமாய் சொன்னார் தங்கப்பன்.

அப்பா, என்று  ஆரம்பித்த மகனை " நீ ஒன்றும் பேசவேண்டாம், எல்லாம் எனக்குத்தெரியும்" என்றும், என்னங்க என்று ஆரம்பித்த மனைவியை ஒரே பார்வைலும் அடக்கிவிட்டார் அவர்.

சேகரன் கைகளை பிசைந்தவாறே, "நீங்க சொன்னிங்க  என்று தானே நான் காதும் காதும் வைத்தது போல, என் மகனை  பணம் ஏற்பாடு செய்ய அனுப்பினேன் , இப்போ கொண்டு வரும்போது அது தவறி விட்டது .......அதற்காக இப்போ எல்லோருக்கும் தெரிவது போல கோபப்படுகிறீர்களே ..............கண்டிப்பா இன்னும் 1 வாரத்தில் ஏற்பாடு செய்து விடுகிறேன் இப்போ  நிச்சயதார்த்தம் நடக்கட்டுமே" என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.

அதற்கு இவர், " நான் உங்கள் நலனுக்காகவே உங்களிடம்  மட்டும் கேட்டேன், யாருக்கும் தெரியாது என்பதால் தானே  நீங்கள் இப்படி பணம் தொலைந்ததாக நாடகம் ஆடுகிறீர்கள் ?.......இப்போ எல்லோருக்கும் தெரியட்டும் உங்களின் லட்சணம் என்று தான் இப்படி கேட்கிறேன் " என்று கோபமாக கேட்டார்.

அந்த வார்த்தைகளை கேட்ட சேகரன் ரொம்பவும் கூனி குறுகி, " நீங்கள் முன்பே சொல்லி இருந்தா" .......என்று ஆரம்பித்தவர் தங்கப்பனின் கோபப்பார்வையை தாங்க முடியாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டார்.

இருபக்கமும் இருந்த பெரியவர்கள் சமாதானம் செய்ய வந்தனர்.....அதற்குள், வாசலில் அரவம் கேட்டது, ஒரு டாக்ஸி டிரைவர் ஓடிவந்தார்..............அவர் கை இல் ஒரு கைப்பை............அதை பார்த்ததும் மணமகள் சீதாவின் அண்ணன் ரகு , ஓடிப்போய் ............"இது தான் அந்த பை பா" என்றான்.........................

அந்த டிரைவரும், " ஆமாம் சார், நீங்க என் டாக்சி இல் விட்டுவிட்டு வந்து விட்டீகள், பார்த்தால் நிறைய பணம் இருக்கு, நீங்க வேற நேரமாச்சு சீக்கிரம் கல்யாண மண்டபத்துக்கு  போ என்று சொல்ல்லிக்கொண்டே வந்தீர்களா, ....அதனால் தான் நான், இதை எடுத்துக்கொண்டு போலீஸ்  ஸ்டேஷன் போனால் நேரம் ஆகிவிடுமே என்று நேரா இங்கேயே வந்து விட்டேன் , பணம் சரியா இருக்கா என்று பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்.

"ரகு மேலாக பார்த்துவிட்டு சரியாகத்தான் இருக்கு " என்று சொல்வதற்குள், தங்கப்பன் தன வாய் எல்லாம் பல்லாக ......அவன் அருகில் வந்து " ரொம்ப நல்ல வேலை செய்தாய் அப்பா நீ, இல்லாவிட்டால் இந்த கல்யாணமே நின்று போய் இருக்கும்.இந்தா என்று சொல்லி ஒரு ஆயிரம்  ருபாய் நோட்டை எடுத்து நீட்டினார்"..............

இது வரை திகைத்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கொஞ்சம் நிம்மதி ஆனார்கள் . எங்கே இந்த கலாட்டவால் தன மகனை சூழ்நிலை கைதியாக்கி கல்யாணம் செய்து வைத்து விடுவார்களோ என்று கல்யாண வயதில் பிள்ளைகளை வைத்திருந்தவர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டனர்.

கல்யாணப் பையன்  ராகவ்வும் அப்பாடி என்று முகம் மலர்ந்தான். ஆனாலும் அப்பா ஏன் இப்படி திடீரென்று பணம் கேட்டார், எப்ப கேட்டார் என்று யோசித்தான். மலைத்து நின்றுக்கொண்டிருந்த சேகரன், இது கனவில்லை நிஜம் என்று உணர சில வினாடிகள் ஆனது. அவரும் அந்த டிரைவருக்கு நன்றி தெரிவித்தார்.

" ரொம்ப நன்றி தம்பி, இருந்து சாப்பிட்டுவிட்டு போங்கள்" என்றார். ஆனால் அந்த டிரைவர் தங்கப்பனிடம், " நான் என் கடமையைத்தான் செய்தேன், அடுத்தவங்க பணம் எனக்கு வேண்டாம் சார்............அதை திரும்ப கொடுத்ததற்கு நீங்கள் சொல்லும் நன்றியே போதும்" என்றும்,  "எனக்கு வேறு ஒரு சவாரி  இருக்கு, அவங்க காத்திருப்பாங்க நான் போகணும். உங்கள் அன்புக்கு நன்றி என்று சேகரனிடமும் சொன்னார். " வாசலை நோக்கி திரும்பி நடந்தார்.

உடனே, தங்கப்பன், " ரொம்ப நல்ல பையன் அப்பா நீ என்று அந்த டிரைவரை புகழ்ந்து விட்டு, எதுக்கு எல்லோரும் மச மச வென்று நிற்கறீங்க ...நிச்சய தார்த்தத்துக்கு நேரமாகலையா?.ஆகட்டும் ஆகட்டும்........வாங்க சம்பந்தி.ஹி.ஹி..."என்றார் சேகரனை பார்த்து....அவரும் ...." ஆமாம் வாங்க வாங்க" என்று நகரத்தொடங்கினார்.

இவ்வளவையும்  பார்த்துக்கொண்டிருந்த சீதா, தன் குரலை உணர்த்தி, " அப்பா, அந்த டிரைவரை கொஞ்சம் நிற்க சொல்லுங்கள் என்றாள்"........

இதைக்கேட்ட டிரைவர் உட்பட, அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர். " என்னம்மா, என்னா அச்சு?" என்றார் சேகரன்.

" அவருக்கு கல்யாணம் ஆய்டுச்சா என்று கேளுங்கள் அப்பா"......என்று ஒரு குண்டை எடுத்து வீசினாள் அவள். அனைவரும் இந்த கேள்வி இல் ஆடிப்போய் விட்டனர்.

" என்னமா என்ன சொல்லற "? என்று சேகரன் பதறினார், " என்ன பேசறா சீதா?" என்று கோபமானார் தங்கப்பன். 'என்ன இது புதுக்குழப்பம்?'என்று ராகவ் குழம்பினான்.

ஆனால் அவள் தெளிவாக , " இவங்க நினைத்து நினைத்து ஏதாவது கேட்பார்கள் , நாம் செய்ய வேண்டுமா அப்பா?..........கல்யாணம் ஆனா பின்பும் இது தொடராது என்று என்ன நிச்சயம்?..அத்த்தவங்க பணத்துக்கு ஆசைப்படும் இவங்களை விட, அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படாத அந்த டிரைவரை கட்டிக்கவே நான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டாள்.

திகைத்துப்போனார் சேகரன்.............அவமானத்தில் முகம் சிவந்தது தங்கப்பனுக்கு. தலை குனிந்து நின்றான் ராகவ்.

டிரைவர் தண்டபாணி இன்   மனதில், ' அம்மாடி , என்ன பேச்சு பேசுது இந்த பெண், இவங்க அப்பா எண்டாவென்றால் ஆழம்தேரியாமல் காலை விட்டுவிட்டு முழிக்கிறார், அண்ணன் பொறுப்பே இல்லாமல் இவ்வளவு பணத்தை தொலைக்கிறான், இவள் எப்படியோ.........இவளுக்கு என்னை பற்றி என்ன தெரியும்?..........நான் தங்கைக்கு  கல்யாணம் பண்ணனும் , அப்பாக்கு கண் ஆபரேஷன் பண்ணனும் என்று  ராப்பகலாய் உழைக்கிறேன்............இவங்க நம்மை கல்யாணத்தில் சிக்க வைக்கப்பாக்கராங்களே !  ஏதோ நம் கடமை என்று நினைத்து பணத்தை கொண்டு வந்து கொடுத்ததே  தப்பாய் போச்சோ........பேசாமல் போலீசில் ஒப்படைத்து இருக்கலாம்'............என்றெல்லாம் நினைத்தான்.

சேகரன், டிரைவரை நெருங்கி வந்ததும் இவனே முந்திக்கொண்டு, " சார், நான் என் கடமையை செய்ததற்காக கொடுத்த பணத்தையே வேண்டாம் என்றேன், நீங்க பொருளை........சாரி , பெண்ணை தரேன் என்று சொல்லறீங்க.......என்னை விட்டுடுங்க சார் , அது உங்க குடும்ப விஷயம் கல்யாணம் நடத்துங்க நடத்தம போங்க......எனக்கு டாக்சி இல் சவாரி காத்திருக்கு நான் போகணும்" என்று சொல்லி விட்டு வேகமாய் நடையை கட்டினான்.

இது ஒரு முடிவு............அடுத்தது...................... கண்ணடி


இவ்வளவையும்  பார்த்துக்கொண்டிருந்த சீதா, தன் குரலை உணர்த்தி, " அப்பா, அந்த டிரைவரை கொஞ்சம் நிற்க சொல்லுங்கள் என்றாள்"........

இதைக்கேட்ட டிரைவர் உட்பட, அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர். " என்னம்மா, ஏன்னா அச்சு?" என்றார் சேகரன்.

" அவருக்கு கல்யாணம் ஆய்டுச்சா என்று கேளுங்கள் அப்பா"......என்று ஒரு குண்டை எடுத்து வீசினால் அவள். அனைவரும் இந்த கேள்வி இல் ஆடிப்போய் விட்டனர்.

" என்னமா என்ன சொல்லற "? என்று சேகரன் பதறினார், " என்ன பேசறா சீதா?" என்று கோபமானார் தங்கப்பன். 'என்ன இது புதுக்குழப்பம்?'என்று ராகவ் குழம்பினான்.

ஆனால் அவள் தெளிவாக , " இவங்க நினைத்து நினைத்து ஏதாவது கேட்பார்கள் , நாம் செய்ய வேண்டுமா அப்பா?..........கல்யாணம் ஆனா பின்பும் இது தொடராது என்று என்ன நிச்சயம்?..அத்த்தவங்க பணத்துக்கு ஆசைப்படும் இவங்களை விட, அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படாத அந்த டிரைவரை கட்டிக்கவே நான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டாள்.

திகைத்துப்போனார் சேகரன்.............அவமானத்தில் முகம் சிவந்தது தங்கப்பனுக்கு. தலை குனிந்து நின்றான் ராகவ்.

டிரைவர் தண்டபாணியும் ரகுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ரகு ஓடிவந்து தண்டபாணி இன் கைகளை பற்றிக்கொண்டான் , " என் தங்கை கேட்டு நான் எதையுமே இல்லை என்று சொன்னதில்லை , உங்களுக்கு ஆட்சேபனை  இல்லை என்றால், நீங்கள்  என் தங்கையை   கல்யாணம் செய்துக்கறீங்களா?......உங்க அப்பா அம்மா எங்கே இருக்காங்க என்று சொல்லுங்கள், நாங்க வந்து இப்போவே பேசறோம்" என்றான்.

டிரைவர் திகைத்தார்போல நின்றார். மாப்பிளை வீட்டார் என்ன இது புதுக் குழப்பம் என்று பார்த்துக்கொண்டிருந்தர்கள். "இவ்வளவு ஆனதுக்கு அப்புறம்  நாம் ஏன் இங்கே நிற்க வேண்டும் ? உடனே  எல்லோரும்  கிளம்புங்கள்" என்று துண்டை  உதறி  தோளில்  போட்டுக்கொண்டு  கிளம்பி  விட்டார்  தங்கப்பன் .

சேகரன் என்ன செய்வது என்று குழம்புவதற்குள் தண்டபாணி கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டு விட்டான், இவர்கள் கட கட வென கிளம்பி விட்டனர்.  ரகு அவர்களின் வீட்டு  விவரங்களை கேட்டுகொண்டிருந்தான். மணமகன் ராகவ் ஸ்த்தம்பித்து போனான். அவனை இழுத்துக்கொண்டு கிளம்பினார் தங்கப்பன்.

காரில் கொஞ்ச தூரம்  போனதும் " அப்பா காரை நிறுத்துங்கள், என்ன நடந்தது? நீங்க பணம் கேட்தால் நிக்கவில்லை, நீங்க கேட்கவும் மாடீங்க எனக்கு தெரியும், இது வேற எதுவோ, உண்மையை சொல்லுங்கள்" என்றான்.

கனிவாக பிள்ளையை பார்த்தார் தங்கப்பன். பெருமூச்சுடன் " எல்லாம் உன் நன்மைக்க்காகத்தான் கண்ணா" என்றார்.

" அது தான் என்ன என்று கேட்கிறேன் .பா , சொல்லுங்கோ"  என்றான்.

அவரும் சொல்ல ஆரம்பித்தார். "இன்று காலை வந்ததும் உங்க அத்தை, ஏதோ கேட்க பெண் வீட்டுப்பக்கம் போய்  இருக்கா, அங்கு பெண்ணும் அவள் அண்ணனும் அவளை அவள் காதலனுடன் சேர்த்துவைக்க திட்டம் போட்டதை கேட்டிருக்கா. வந்து என்னிடம் சொன்னாள்.  கத்தி கூப்பாடு  போட்டு பெண்ணின் அப்பாவை நிற்க வைத்து  கேள்வி கேட்டு, அவளை உனக்கு மணம் முடித்திருக்கலாம்..........அதனால் யாருக்கு என்ன லாபம்?............அப்புறமும் அவள் ஓடிப்போக மாட்டாள் என்று என்ன நிச்சயம்?.....உன் வாழ்வு பாழாவது தான் மிச்சம்..........நீ சந்தோஷமாக இருக்கத்தானே கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்டோம்.......அநாவசியமாய் எதுக்கு வீண் சண்டை சச்சரவு?...............

அப்படியே அவள் ஓடிப்போனாலும் அதை அந்த அவமானத்தை உன்னால்  தாங்க முடியாதே பா, மனம் ஒடிந்துவிடுமே உனக்கு,    நீ ஆபீஸ் போக வேண்டாமா, மறுபடி நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள வேணாமா? அதனால் என் பேர் கெட்டா பரவாஇல்லை என்று யோசித்து த்தான் இந்த முடிவுக்கு வந்தோம் அம்மாவும் நானும் அத்தையும்.

என்ன செய்யலாம்  என்று யோசித்தேன், சேகரன்,  ரொம்ப நல்லமாதிரி. பாவம், எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில்  ஆசையாய் பார்த்து பார்த்து செய்த ஏற்பாடுகளும்  வீணாகக்கூடாது, அவரும் மன மகிழ்வோடு மகள் கல்யாணத்தை முடிக்கணும் என்று யோசித்தேன்.

நானே ரகுவை கூப்பிட்டு அனுப்பினேன் , கேட்டேன், ஆடிப்போய்விட்டான். பிறகு ஒரு வழியாக  ஒப்புக்கொண்டான். பிறகு தான் நான் 3 லக்ஷம் தந்தால்  தான் கல்யாணம் என்று சம்பந்தியை தனியாய் சந்தித்து கேட்டேன். அவர் ஆடிப்போய்விட்டார். என்றாலும் கடைசி இல்  ஒப்புகொண்டார். மகனை அனுப்பி ஏற்பாடு செய்வதாய்  சொன்னது எங்களுக்கு வசதியாய் போச்சு.

பிறகென்ன, அவர்கள் ஆடிய டிரைவர் நாடகம் தான் எல்லோருக்கும் தெரியுமே" என்றார்.

கண்களில் கண்ணீர்   வழிய அப்பாவை கட்டிக்கொண்டான் ராகவ்.

அங்கு கல்யாண மண்டபத்தில் சீதா ரகு மற்றும் தண்டபாணி மூவரும் , எப்பவாவது இதை அப்பாவிடம் சொல்லி விடணும் என்றும், கல்யாணம் ஆனதும் தங்கப்பன் வீடு தேடி சென்று அவர் காலில் விழுந்து நன்றி சொல்லணும் என்றும் பேசிக்கொண்டார்கள்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 4:08 am

க்ரிஷ்ணாம்மா கதை சூப்பர் . எனக்கு இரண்டாவது முடிவு பிடித்துள்ளது . நல்லாயருக்கு . நீங்க இவளோ நல்ல எழ்துவீங்கன்னு எனக்கு தெரியாது . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:08 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை சூப்பர் . எனக்கு இரண்டாவது முடிவு பிடித்துள்ளது . நல்லாயருக்கு . நீங்க இவளோ நல்ல எழ்துவீங்கன்னு எனக்கு தெரியாது . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1142128

நீங்க வேற ஷோபனா, எனக்கே தெரியாது .......நிஜமாய் சொல்கிறேன், வரும் செய்திகளின் தாக்கத்தால் இப்போ கொஞ்ச நாளாய் எழுதுகிறேன் புன்னகை......உங்கள் பின்னுட்டத்துக்கு ரொம்ப நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 10:21 am

முதல் கதை ஏற்க்கனவே நிறைய பார்த்தாச்சு.....யூசுவல்

இடண்டாவது கதை அருமை....புதுமை.

நல்ல முயற்சி.......தொடருங்கள். மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:35 am

சரவணன் wrote:முதல் கதை ஏற்க்கனவே நிறைய பார்த்தாச்சு.....யூசுவல்

இடண்டாவது கதை அருமை....புதுமை.

நல்ல முயற்சி.......தொடருங்கள். மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1142160

நன்றி சரவணன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 05, 2015 12:51 pm

கதை நல்லா வந்திருக்கு ! தொடர்ந்து எழுதுங்கள் ! வாழ்த்துக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:56 pm

M.Jagadeesan wrote:கதை நல்லா வந்திருக்கு ! தொடர்ந்து எழுதுங்கள் ! வாழ்த்துக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1142224

மிக்க நன்றி ஜெகதீசன் ஐயாபுன்னகை.........இன்னும் ஒரு 10 -15 கதைகள் எழுதி இருக்கேன், இங்கு கதைகள் பகுதி இல் போட்டிருக்கேன், நேரம் கிடைத்தால் படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 1:38 pm

Kadhai அருமை கிருஷ்ணாம்மா. 2 வது முடிவு அருமை.



ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கதை இரண்டு முடிவுகள்  :) ..by Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 6:01 pm

விமந்தனி wrote:Kadhai அருமை கிருஷ்ணாம்மா. 2 வது முடிவு அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1142247

நன்றி விமந்தனிபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 1:07 pm

கதை நன்றாக இருந்தது அம்மா.....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக