புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 19, 2015 3:15 pm

தாங்கள் கூறும் உணர்வு அனைவருக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உளவியலில் ESP என்று ஒரு சொல்லாடல் உண்டு,, தாங்கள் கூறுவதும் இவ்வகையே..அறிவியலாளர்களிடம் இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் உண்டு, இதில் பல பிரிவுகளும் உண்டு. ஆதார புர்வமாக இது போன்ற உணர்வுகளை நிரூபணம் செய்ய இயலாததால் நவீன அறிவியல் உலகம் இதை ஏற்க மறுக்கிறது,,ஆயினும் உளவியலாளர்கள் இதைப் பற்றி தொடர்ந்து ஆராய்கிறார்கள்...இணையத்தில் ESP என்று தேடிப்பாருங்கள், பல தகவல்கள் கிடைக்கும்.

முறையாக மனப் பயிற்சி எடுத்தால் நம் மனதின் (மூளையின்) திறன்களை வளர்க்க முடியும். ஜோதிடத்தில் உபாசனை என்ற ஒன்று உண்டு,,,தொடர்ந்து ஒரு தெய்வத்தை உபாசனை செய்வதன் மூலம், நம் மனதின் திறன் வளர்ந்து, எதிரில் உள்ளவரின் மனதைப் படிக்கவும், சில விசயங்களை ஊகிக்கவும், எதிர் காலத்தை கணிக்கவும் இயலும். இவை அறிவியல் பூர்வமாக சிந்தித்தால் சரியென படாது ,,ஆனால் அனுபவித்தால் இதன் அருமை புரியும்.. தொடர்ந்து பயிற்சி எடுப்பதன் மூலமாக ஒருவர் ஒரு விளையாட்டில் சிறப்பாக செயல் பட முடியம், அது போல் தான் இதுவும்..




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 6:33 pm

மிகவும் மகிழ்ச்சி. இணையத்தில் தேடியபோது திரு. என்.கணேசன் அவர்களின் வலைத்தளத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆல்பா அலைகளில் நம் மனம் சஞ்சரிக்கும்போது இதை உணரமுடியும் என்பதாக கூறுகிறார்.

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 6:35 pm

சரவணன் wrote:இந்தியாவில் பல சித்தர்களும், பிரான்ச் நாட்டில் நோஸ்ராடாமஸ் என்பரும் பின் நடப்பவற்றை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள்.

எனினும் நீங்கள் சொல்வது போல சாதார மனிதருக்கு இது போன்று தோன்றும், அல்லது நமக்கு வேண்டிய ஆத்மாக்கள் நம்மிடம் வந்து கூறுவார்கள். - இது போன்ற உண்மையான நிகழ்வு ஒன்றினை என் நண்பர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் மகிழ்ச்சி. தங்கள் நண்பர் கூறியதை பகிர்ந்து கொள்ள முடிந்தால் கூறுங்களேன்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:24 pm

Achudhan wrote:மிகவும் மகிழ்ச்சி. இணையத்தில் தேடியபோது திரு. என்.கணேசன் அவர்களின் வலைத்தளத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆல்பா அலைகளில் நம் மனம் சஞ்சரிக்கும்போது இதை உணரமுடியும் என்பதாக கூறுகிறார்.
[You must be registered and logged in to see this link.]
அப்டினா அதற்கு ஒரே வழி நீங்கள் தியானம் செய்ய வேண்டும். அப்போது ஆல்பா நிலையை அடையலாம். மகரிஷி தியானத்தில் இதை கற்று கொடுக்கிறார்கள்...சென்று பாருங்களேன்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 21, 2015 7:18 pm

Raja wrote:அப்படி ஒரு அம்மா பைத்தியம்.

அம்மா துணை இருந்தால் , வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றம்தான் .

நீங்களே உணர்வீர்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 25, 2015 6:05 pm

சரவணன் wrote:
Achudhan wrote:மிகவும் மகிழ்ச்சி. இணையத்தில் தேடியபோது திரு. என்.கணேசன் அவர்களின் வலைத்தளத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆல்பா அலைகளில் நம் மனம் சஞ்சரிக்கும்போது இதை உணரமுடியும் என்பதாக கூறுகிறார்.
[You must be registered and logged in to see this link.]
அப்டினா அதற்கு ஒரே வழி நீங்கள் தியானம் செய்ய வேண்டும். அப்போது ஆல்பா நிலையை அடையலாம். மகரிஷி தியானத்தில் இதை கற்று கொடுக்கிறார்கள்...சென்று பாருங்களேன்..
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்றி. தியானம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்... நான் வேலை காரணமாக டெல்லியில் இருக்கிறேன். இங்கே மொழி தெரியாததால் விசாரித்துச் சேர முடியவில்லை. சீக்கிரம் தொடங்க வேண்டும்.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 7:23 pm

எனது அனுபவத்தினை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!
இரண்டு வருடங்களுக்கு முன் சரியாக சொல்ல போனால்,2013.11.16 அன்று காலை 4.00 க்கு எனது மைத்துனன் இறப்பது போன்று கனவு வந்தது. கெட்ட கனவு என்பதால் பசுவின் காதில் கூறிவிட்டு அன்றாட வேலைகளை கவனிக்கலானேன். ஆனால், அன்று மாலை 4.00 அளவில் என் மைத்துனன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. நானும், மைத்துனனும் நகமும் சதையும் போல. அவ்வளவு ஒற்றுமை. இரண்டு வருடங்கள் கழிந்தாலும் என்னால அந்த நிகழ்ச்சியை மறக்க முடியல. என் கனவாலதான் அவன இழந்துடேனு ஒரு குற்ற உணர்ச்சி என் மரணம் வரைக்கும் மனதில் இருந்து கொண்டே தானிருக்கும்.
என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அச்சுதனுக்கு மிக்க நன்றி!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 25, 2015 9:35 pm

ஏற்கனவே ஒருமுறை வேறொரு திரியில்  பதிந்துள்ளேன் .
புதிதாக சேர்ந்தவர்களுக்கும் .அத்திரி படிக்காதவர்களுக்காக !
வாசகங்கள் வேறாக இருக்கலாம் .
டெல்லி :  லோடி காலனி   : 1965--67 காலகட்டம் :
டிசம்பர் மாதம் --மதியம் 12 மணி அளவு --ஒரு ஞாயிறு தினம் .
பல்வேறுப்பட்ட மத்ய அரசாங்க உத்தியோகத்தில் பணி புரியும்
இளநிலை   உத்தியோகஸ்தர்கள் வாழும் காலனி .
காலை உணவருந்தி விட்டு , அங்கிருக்கும் படர்ந்திருக்கும்
புல்வெளியில் சிறு சிறு கூட்டமாக பெண்கள் ஸ்வெட்டர் பின்னிக்கொண்டும்
ஆண்கள் அரசியல் பேசிக்கொண்டும் , மேலும் சிலர் கார்ட்ஸ் (cards ) விளையாடிக்கொண்டும்
இளம் வெய்யிலை அனுபவித்துக் கொண்டு , உடலை சுடேற்றிகொண்டு இருந்தனர் .

கார்ட்ஸ் விளையாடும் பிரிவில் , ஐவர் குழு காசு வைத்து மும்முரமாக விளையாடி கொண்டு
இருந்தனர்  .
அப்போது , சிறிதே கந்தல் உடை உடுத்தி , மீசை தாடி உடன் ஒரு வயதானவர் , வந்து ,
டி /நாஸ்தா சாப்பிட 8 அணா( 50 பைசா) யாசித்துக் கொண்டு இருந்தார் . யாரும் அவரை லட்சியம் செய்யவில்லை ,  நகர ஆரம்பித்தார் . என்ன நினைத்தாரோ அங்கிருந்த ஒருவர். அவரை கூப்பிட்டு 1 ரூபாய் கொடுத்தார் . அவரையே வெறித்து பார்த்த அவர் , அந்த ரூபாயை வாங்காது  
வேறு பக்கம் சென்று யாசிக்க ஆரம்பித்து விட்டார் .
எனது உறவினருக்கு இது வித்தியாசமாக பட , அவர் வெளியேறும் சமயம் அவரை பின்
தொடர்ந்து , அவரை அணுகி , 8 அணா கேட்ட நீங்க , ஒரு ரூபாய் கொடுக்கையில் வேண்டாம்
என வரக் காரணம் என்ன எனக் கேட்டார் .
அதற்கு , அவர் , போப்போ , உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை என்று வேகமாக நடைக் கட்டினார் . உறவினரோ , விடாப்பிடியாக அவருடன் சென்று , நைச்சியமாக பேசி  , உங்கள்
மகனாக நினைத்துக் கொள்ளுங்கள் . நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டாம் . ஆனால் வெறும் காலி வயிற்ருடன் போவது எனக்கு சரியாகப் படவில்லை . உங்களுக்கு உணவிடாமல் நான் போகப் போவதில்லை எனக் கூறி ,ரோட்டோர கடையில் அவரை அழைத்துச் சென்று உணவு
ஏற்பாடு பண்ணினார் .
என்ன நினைத்துக் கொண்டாரோ அவர் , உறவினரிடம் ,நான் காசு வாங்காததன் காரணம்
அறிய வேண்டுமா என்றார் . உறவினர், உங்களுக்கு கஷ்டமில்லை கூறலாம் என்றார் .
அதற்கு அவர் , "சரி , சொல்லுகிறேன் . உன்னால் தடுக்க முடியாது . என்னைப்
பொறுத்தவரையில், அந்த ஒரு ரூபாய் கொடுத்தவர் , இறந்ததற்கு சமம் . இறந்தவரிடம்
நான் பணம் பெறுவதில்லை  "என்றார்  மேலும் இன்னும் 10 தினத்திற்குள் அவர் மரணத்தை
சந்திக்க போகிறார் . அவர் மரணம் ஒரு மிருகத்தால் ஏற்படும் என்று கூறி அவர் வழியே சென்று விட்டார்.
உறவினருக்கோ ஒரே குழப்பம் . ஒரு ரூபா நண்பர் , அந்த சமயத்தில் மனைவியை  ஊருக்கு
அனுப்பி இருந்தார் . வெள்ளிக் கிழமை கிளம்பி சென்னை வருவதாக திட்டம் .  உறவினர் மற்ற நண்பர்களுடன் , யாசகர் கூறியதை கூற , சிலர் நம்பினார்  சிலர் நம்ப வில்லை . கடைசியாக
ஒரு  ரூபா நண்பரை ரயில் ஏறும்வரை பாதுகாப்பதாக முடிவு  செய்தனர் .
அப்பிடியே வெள்ளிக்கிழமை வரை நண்பருக்கே தெரியாத வகையில் அவர் கூடவே சேர்ந்து
,இருந்து, மாலையில் அவரை வழி அனுப்ப ஸ்டேஷன் வந்தனர் . வண்டி இன்னும் பிளாட்பார்முக்கு வரவில்லை . நண்பரின் பெட்டி படுக்கை எல்லாம் பிளாட்பாரத்தில் .
திடிரென்று நண்பர் என்ன நினைத்துக்கொண்டாரோ , டேய் நான் போய் ஒரு சுறாய் வாங்கி
வருகிறேன்  என்று கிளம்பினார் .
{அந்தக் காலங்களில் , டில்லியிலிருந்து GT எக்ஸ்ப்ரஸ்   கிளம்பும் . அப்போது
ஒவ்வொரு  குடும்பமும் டில்லி ஸ்பெஷல் என மோடா ( கயிற்றால் பின்னிய இருக்கை), சுறாய்
(அழகிய வேலைப்பாடுடன் கூடிய நீர் குடிக்கும் மண்பானை   )  வாங்கி செல்வர் . ஸ்டேஷனுக்கு வெளியே அதிக அளவில் கிடைக்கும் }
பேச்சு சுவாரஸ்யத்தில்  நண்பர்கள் , அவரை தனியாய் விடக்கூடாது என்பதை மறந்து
விட்டனரோ என்னவோ . ட்ரைன் பிளாட்பாரம் வந்து ,எல்லோரும் அவரவர் இருக்கையில்
அமர்ந்து விட்டனர் . வண்டி கிளம்ப 10 நிமிடமே இருந்தது .  என்னோவோ மண்டையில் பொறித் தட்ட , இருவர் இவரைத் தேடிக் கொண்டு வெளியே வந்தனர் .
வெளியே , ஒரு இடத்தில் ஒரே கூட்டம் . அந்த காலங்களில் டில்லியில் குதிரை பூட்டிய
ஜட்காக்கள்  தான் அதிகம் . இப்போது போல் டாக்ஸி ஆட்டோ எல்லாம் இல்லை

அந்த கூட்டத்தை அணுகிய போது , நண்பர்கள் கண்டது , அவரது நண்பர் கிழே விழுந்து
இறந்து கிடந்தார் .
காரணம் :  சுறாய் வாங்கி வரும்போது , குதிரைக்கு வெறிப் பிடித்து , பின்னேறி ,பின்னால்
வந்து  கொண்டு இருந்த அவர் மேல் மோதி , அவர் கிழே வண்டியால் தள்ளப்பட்டு , அவர்
மீது படக்கூடாத இடத்திலும் மார்பிலும் குதிரையின் குளம்புகள் மிதிக்கப்பட்டு இருந்தன .

இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் , உறவுகளே !

(குதிரை )பின்னால் வருவதை முன்னால் சொன்னது இவர் விஷயத்தில் 100% உண்மை  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 25, 2015 11:37 pm

T.N.Balasubramanian wrote:அந்த கூட்டத்தை அணுகிய போது , நண்பர்கள் கண்டது , அவரது நண்பர் கிழே விழுந்து
இறந்து கிடந்தார் .
காரணம் :  சுறாய் வாங்கி வரும்போது , குதிரைக்கு வெறிப் பிடித்து , பின்னேறி ,பின்னால்
வந்து  கொண்டு இருந்த அவர் மேல் மோதி , அவர் கிழே வண்டியால் தள்ளப்பட்டு , அவர்
மீது படக்கூடாத இடத்திலும் மார்பிலும் குதிரையின் குளம்புகள் மிதிக்கப்பட்டு இருந்தன .

இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் , உறவுகளே !

(குதிரை )பின்னால் வருவதை முன்னால் சொன்னது இவர் விஷயத்தில் 100% உண்மை  

ரமணியன்
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 2 3838410834 சூப்பருங்க ஆச்சரியமாக இருக்கிறது ஐயா ,


பொறியியல் பட்டைய படிப்பு முடித்த அண்ணன் , ராணிபேட்டை / சென்னை தொழிற்பேட்டைகள் என வேலைபார்த்துவிட்டு ஒன்றும் சரிபட்டு வராமல் , மயிலாடுதுறையில் இருந்த ஒரு தனியார் ITI பயற்சிகூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் மாலை வகுப்புகள் முடிந்து கிளம்பும் முன் ஒரு வயதானவர் அந்த பக்கம் வந்திருக்கிறார் "கைரேகை" பார்ப்பேன் காசுகொடுங்க என்று அங்கிருந்தவர்களிடம் யாசகம் கேட்டுள்ளார். அண்ணன் "கைரேகை" எல்லாம் பார்க்கவேண்டாம் சாப்பிட காசு கொடுக்கிறேன் வாங்கிக்குங்க பெரியவரே என்று சொல்ல. காசை வாங்கியவர் "இன்னும் இரண்டு மாசத்தில் அரசு சம்பளம் வாங்குவ" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

அண்ணன் , சிரித்துக்கொண்டே இரண்டு மாசத்தில் அரசு வேலை என்றால் வானத்தில் இருந்து பொத்துக்கொண்டு விழவா போகிறது , பெருசு கதைவிடுது என்று சொல்லிவிட்டு அதை மறந்தே போயிட்டார்.


எப்போதோ 5 / 6 மாதங்களுக்கு முன் எழுதிய Junior Engineer பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அழுக்கு புன்னகை அரசாங்க கடிதம் சில நாட்களில் வந்ததும் அதன் பிறகு வேலையும் கிடைத்து , அதன் பிறகு பொறியியல் பட்டமும் பெற்று இன்று திருச்சி ரயில்வேயில் ஒரு பெரிய பணியில் உள்ளார். இதுவும் நாங்கள் நினைத்து நினைத்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 8:38 am

1999 ம்  ஆண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்  மட்டும் பயன்படுத்தும்  ஒரு சிறப்பு நூலகத்தில் நான் பபணியாற்றிக்  கொண்டு இருந்தேன்அப்போது எனக்கு நாற்பத்து ஐந்து வயது. அமெரிக்காவில் இருந்து வந்த  வரலாற்று  ஆராய்ச்சியாளர் ஒருவர் அவ்வப்பொழுது மதிய உணவு இடைவெளியில்  வந்து என்னிடம் தமிழில் உரையாடுவார். அவர் நன்றாக தமிழில்  பேசுவார். எங்கள் பேச்சு ஒருநாள்  அமெரிக்காவைப்பற்றி துவங்கியது. அந்த சமயம்  கொசாவா  என்ற நாட்டின் மீது  அமெரிக்காவும் அதன் நேட்டோ  படைகளும்  விமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த  காலம்.
பி.பி.சி தொலைக்காட்சியில்  அமரிக்காவின்  போர் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டுவந்தன.பள்ளிக் கூடம், மருத்துவ மனை. பாலங்கள் மீது  அமெரிக்க விமானங்கள்  தாக்குதல் நடத்தியது பற்றி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நினைத்தேன். மாறாக அவர் அதை நியாயப் படுத்தி பேசினார். அபொழுது நான்  உங்கள் நாட்டின் மீது  யாராவது  தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு  அவர் அகில உலகிலும் வல்லமை வாய்ந்த  அமெரிக்காவின் மீது  யாரும் போர் தொடுக்க  முடியாது என்று  மிகவும்  ஆணவத்தோடு பேசினார். அவர் பேசியதைக்கேட்டதும் எனக்கு திடீர் என்று எங்கிருந்தோ  கோபம் வந்து கொப்பளித்தது. என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத நிலை . ஆனால் உரத்தகுரலில்  பேசத்துவங்கினேன் என்னை அறியாமல். அவை:
உங்கள் நாட்டின் மேலும் தாக்குதல் நடத்தும் காலம் வரும். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள நூற்றுப் பத்து மாடி கட்டிடங்கள்  இரண்டும் சுக்கு நூறாக  நொறுங்கி தூள் தூளாக மாறும். உங்கள் ராணுவ தலைமை  அலுவலகம் மீது  தாக்குதல்  நடத்துவார்கள்.  அமெரிக்கா என்ற ஒரு நாடு இருந்த இடம் தெரியாமல்  கடலில் மூழ்கும்  என்று கத்தினேன். அதன் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சியாளர் கொஞ்ச நேரம்  அமைதியாக இருந்தார். நானும் சம நிலைக்கு திரும்பினேன்

பின்னர் அவர் என்னிடம் நீங்கள் குறிபிட்ட முதல்  இரண்டு  சம்பவங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்றாவதாக சொன்ன விஷயம் இயற்கை  சம்மந்தப் பட்டது. அது நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது  என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். ஆத்திரத்தில் எதோ பேசிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்

இரண்டு ஆண்டுகள் கழிந்தன 2001 ம் ஆண்டு  அலுவலகம்  முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் பி.பி.சி. தொலைக்காட்சியில்  நியூயார்க் இரட்டை  கோபுரம் ஒன்றில்  தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது  இரண்டாவது கோபுரமும் தாக்கப் படுவதும் காட்டப் பட்டது. சிறிது நேரத்தில் பென்டகனும்  தாக்கப்பட்டது  ஒளிபரப்பானது. என்னத்த சொல்ல?



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக