ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

View previous topic View next topic Go down

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:43 pm

ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? -12 காரணங்களை அடுக்கும் இளங்கோவன்

ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி மிகப்பெரிய தவறு இழைத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் அளித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு 29.9.2014 அன்று மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் 5 ஆம் தேதி நீதிபதி கே.ஆர். குமாரசாமி முன்னிலையில் தொடங்கிய விசாரணை, மார்ச் 11-ந் தேதி முடிந்தது. மொத்தம் 41 நாட்கள் தான் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் விசித்திரமானது என்னவென்றுச் சொன்னால், அரசு வழக்கறிஞராக யார் இருக்க வேண்டும் என்பதை குற்றவாளி ஜெயலலிதா முடிவு செய்ய முயன்றதுதான். இதை தடுத்து நிறுத்த நீதிபதி குமாரசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தலையிட்டு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பணிநீக்கம் செய்தது. இதற்குப் பிறகு பி.வி. ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அவருக்கு நீதிமன்றத்தில் நேரில் எடுத்துரைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தான் கே.ஆர். குமாரசாமியின் தீர்ப்பு வெளிவந்துள்ளது.


1. நீதிபதி குன்ஹா வழங்கிய 1136 பக்க தீர்ப்பில் 1.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்று கூறியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் ரூ.2 கோடியே 82 லட்சம் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளார். இதை எந்த அடிப்படையில் செய்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை.

2. அதேபோல நிறுவனங்கள், சொத்துகள், கட்டுமான மதிப்பு ஆகியவற்றை சேர்த்து ஏறத்தாழ ரூ.27 கோடி என்றும், இதில் சுதாகரனின் திருமண செலவு ரூ.6 கோடியே 45 லட்சம் என்றும் நீதிபதி குன்ஹா குறிப்பிட்டார். ஆனால் சுதாகரனின் திருமணச் செலவை ரூ.28 லட்சம் தான் என்று நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டுள்ளார். சுதாகரனின் திருமணம் எந்தளவுக்கு ஆடம்பரமாக நடைபெற்றது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஆனால் ஆவணங்களின் அடிப்படையில் இதை புரிந்து கொள்ள வேண்டிய குமாரசாமி ஏன் இத்தகைய மதிப்பீட்டை செய்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

3. நமது எம்.ஜி.ஆர். நாளேட்டிற்கு சந்தா சேர்த்த வகையில் ரூ.13 கோடியே 83 லட்சம் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியானது என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இது சட்டப்பூர்வமான வருமானம் தான் என்று நீதிபதி குமாரசாமி கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் 852-வது பக்கத்தில் ஜெயலலிதா வங்கிகளில் வாங்கிய கடனாக ரூ.23 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ள பல்வேறு தலைப்புகளில் உள்ள தொகையை கூட்டினால் ரூ.10 கோடி தான் வருகிறது. இதில் மட்டும் ரூ.13 கோடி கூடுதலா சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் கணக்கிட்டதனால் தான் அது 8.3 சதவீதமாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தவறுதலாக சேர்த்ததை கழித்தால் நீதிபதி குமாரசாமியின் கணக்கின்படி 76.75 சதவீதமாக உயர்ந்து விடுகிறது. இந்த கணக்கை சரி செய்தாலே ஜெயலலிதா 20 சதவீதத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக கருதப்பட்டு, தண்டனை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் 10 சதவீதம் வரை அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமை உடையவர்கள் என்கிற அணுகுமுறையை கேட்டு எல்லோரும் வியக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை வருவதற்கு நீதிபதி குமாரசாமி கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

5. தமிழக ஊழல் தடுப்பு பிரிவினர் ஜெயலலிதா வீட்டில் 28 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி, 750 ஜோடி காலனிகள், 10,500 புடவைகள், 91 கைகடிகாரங்கள் என 1996 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகைய பறிமுதலான பொருட்களின் சொத்து மதிப்பை மதிப்பிடுவதில் நீதிபதி குமாரசாமி முற்றிலும் தவறிவிட்டார்.

6. ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள நீதிபதி கே.ஆர். குமாரசாமி, அதில் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறுகிற குமாரசாமி ஜெயலலிதா வழக்கில் அடிப்படை ஆதாரங்களுடன் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் மாறாக தீர்ப்பு வழங்கியிருப்பதற்காக அவர் கூறுகிற காரணங்கள் மேல்முறையீட்டில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அவரால் கூறப்படுகிற காரணங்கள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை.

7. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் எனக்கு ஒருநாள் காலஅவகாசம் வழங்கி, எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்;டது. இது எவ்வகையிலும் நியாயமாக கருத முடியாது. எனக்கு வாதம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியிருப்பதில் உள்ள நியாயத்தை புறக்கணிக்க முடியாது.

8. உச்சநீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டை விசாரிக்க 3 மாதங்கள் காலஅவகாசம் அளித்தார். இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் இத்தகைய காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதைவிட, இயற்கையான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் சிறந்ததாக இருக்க முடியும்.

9. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 10 நாட்கள் வரை வாதிட்டுள்ளனர். அதை அப்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்த போது எழுத்துபூர்வமாக மட்டுமே வாதிட வேண்டும் என்று கூறி, அதையும் ஒருநாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது எந்த வகையிலும் நியாயமில்லை. இது ஒருதலைப்பட்சமானது.

10. பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கை 3 மாதங்களில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல வழக்கு முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசரத்தின் காரணமாக நீதி மறுக்கப்பட்டதோ என்கிற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த வழக்கை கூடுதலாக 6 மாதங்கள் நடத்தியிருந்தால் அதனால் என்ன நடந்துவிடப் போகிறது ? ஏன் இந்த அவசரம் ? இந்த அவசரத்திற்கு என்ன காரணம் ?

11. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை ஊழல் தடுப்பு பிரிவினர் மதிப்பிட்டது ஏறத்தாழ ரூ.66 கோடி. ஆனால் உயர்நீதிமன்றம் மதிப்பிட்டது. ரூ.37 கோடி. இதில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது.

12. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இதுகுறித்து கர்நாடக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாக மட்டுமே ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா என்பது நாட்டு மக்கள் அறிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் ஊழல் தடுப்பு சட்டத்தின் செயல்பாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

எனவே, கர்நாடக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:44 pm

ஜெ. விடுதலைத் தீர்ப்பில் ஓட்டைகள்: உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:

’’வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்தது குறித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஆளுங்கட்சியினரும், அவர்களின் துதிபாடிகளும் கொண்டாடி வருகின்றனர். நீதி வென்று விட்டதாகவும், புடம் போட்ட தங்கமாக திரும்பியிருப்பதாகவும் ஆலாபனைகள் பாடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் ஜெயலலிதாவை விடுதலை செய்து வழங்கப் பட்ட தீர்ப்பின் அடித்தளத்தையே நொறுக்கும் வகையில் ஓட்டைகள் இருப்பது அம்பலமாகி வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக நேற்று நான் வெளியிட்ட அறிக்கையில்,பெங்களூர் உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் இம்முடிவுக்கு வந்தது என்பது சட்ட வல்லுனர்களுக்குக்கூட விடை தெரியாத வினாவாகவே உள்ளது என்று கூறியிருந்தேன்.

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்காக கூறப்பட்டுள்ள காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை வினா எதுவும் எழுப்பாமல் நீதிபதி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி, ஜெயலலிதா வாங்கிய கடன்களை அவரது வருவாயாக நீதிபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதை சரியான நடவடிக்கையாகவே வைத்துக் கொண்டாலும் கடன் தொகையை கணக்கிடுவதில் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சாதகமாக குளறுபடிகள் செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆணையின் 852- ஆவது பக்கத்தில் இது குறித்த விவரங்களை தெளிவாக அறிய முடிகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும், அவர்களின் நிறுவனங்களும் இந்தியன் வங்கியிருந்து 10 கடன்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடன்களின் மதிப்பு முறையே ரூ.1.50 கோடி, ரூ.3.75 கோடி, ரூ. 90 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12.46 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.1.57 கோடி, ரூ.1.65 கோடி, ரூ.17 லட்சத்து 85,274 ஆகும். இக்கடன் தொகைகளைக் கூட்டினால் மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 மட்டுமே வருகிறது. ஆனால், இந்தக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்றும் இதை ஜெயலலிதாவின் வருவாயாக கருத வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் வருவாய் மதிப்பில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் மொத்த வருவாய் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தவறுதலாக அல்லது தவறாக சேர்க்கப்பட்ட ரூ.13.50 கோடியை கழித்தால் ஜெயலலிதா தரப்பின் வருவாய் ரூ.21 கோடியே 26 லட்சத்து 65,654 ஆகவே இருக்கும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்களே ஏற்றுக்கொண்டவாறு ஜெயலலிதா தரப்பின் சொத்துக்கள் ரூ. 37 கோடியே 59 லட்சத்து 02,466 ஆகும். ஜெயலலிதா தரப்பின் உண்மையான வருவாய்க்கும், சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். ஆனால், நீதிபதி குமாரசாமி இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் ரூ. 2.82 கோடி தான் என்றும், இது வருவாயை விட 8.12% மட்டுமே அதிகம் என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் அதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், 20% வரையிலான வருவாய்க்கு மீறிய சொத்துக்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற ஆந்திர அரசின் சுற்றறிக்கையும் வைத்துப் பார்த்தால் ஜெயலலிதா வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கண்டுகொள்ளாமல் விடலாம் என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தரப்பின் சரியான வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயலலிதா தரப்பு வருவாயை விட 76.75% அதிகமாகும். உண்மை இவ்வாறு இருக்கும் போது நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்லது ஆந்திர அரசின் சுற்றறிக்கைப்படி பார்த்தால் கூட ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளிகளிகளையும் விடுதலை செய்ய முடியாது.

இதற்கெல்லாம் மேலாக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கடன் தொகையை தப்பும் தவறுமாக கூட்டுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது; இது அறியாமல் நடந்த தவறாகவும் இருக்க முடியாது. ஒருவேளை அறியாமல் நடந்த தவறாக இருந்தால், இதையே சரியாக செய்ய முடியாதவர் ஒட்டுமொத்த வழக்கின் வாதங்களையும் எப்படி சரியாக ஆய்வு செய்து தீர்ப்பளித்திருக்க முடியும் என்ற வினா எழுகிறது? எனவே, இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டின் மீதான விசாரணை முடிவடையும் வரை குறைபாடுள்ள இந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்; உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’ இவ்வாறு கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:45 pm

கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக ஆதரவு அளிக்கும்: கலைஞர் பேட்டி

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக ஆதரவு அளிக்கும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் 12.05.2015 செவ்வாய்க்கிழமை சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

செய்தியாளர் :- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினைத் தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அது பற்றி தங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இது பற்றி என்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறேன். அதைப் படித்துப் பாருங்கள்.

செய்தியாளர் :- கர்நாடக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமானால், தி.மு.கழகம் அதற்கு ஆதரவு அளிக்குமா?

கலைஞர் :- ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:45 pm

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பால் நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது: விஜயகாந்த்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்தியாவே எதிர்பார்த்திருந்த ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில், உலகமே எதிர்பாராத ஒரு தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.

பொது வாழ்வில் லஞ்சம், ஊழல் மூலம் காலணா காசு கூட சம்பாதிக்காமல் பொதுமக்களுக்காக சேவை செய்யவேண்டும் அதுதான் பொது வாழ்க்கை என்ற பாடத்தை கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பின் மூலம் உருவாக்கினார்.

ஆனால் அதே வழக்கில் தற்பொழுது வந்துள்ள தீர்ப்பு நேரெதிர் சிந்தனையை மக்கள் மனதில் உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒரு ஊழல் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ஒரு ரூபாயும் ஒன்று தான், ஒரு கோடியும் ஒன்று தான், இரண்டுமே ஒரே தண்டனைக்குரிய குற்றம் தான் ஆனால் இதற்கு முன்னால் ஒரு வழக்கில் தனி நபர் ஒருவர் பத்து முதல் இருபது சதவிகிதம் வரை தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டதாக மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுபோன்ற வேறுபல வழக்குகளில் இதே குற்றச்சாட்டிற்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாதது மக்கள் மனதில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனி மனிதர் மீதான வழக்கை, பொது வாழ்க்கையில் முதலைமைச்சர் என்ற பெரிய பதவி வகிக்கும் ஒருவருக்கு பொருத்திப் பார்ப்பது நியாயம் தானா? என்ற கேள்வி அரசியலில் தூய்மையை விரும்பும் எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து நீக்கவேண்டும் என்ற மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு அளித்த சிறப்புமிக்க தீர்ப்பில், இந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவேண்டும் எனவே அதை மனதில் கொண்டு, ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட கருத்துக்கு மாறாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

சாதாரண சாமான்ய மக்களுக்கு ஒரு நீதி, பண பலமும், அதிகாரபலமும் மிக்கவர்களுக்கு ஒரு நீதியா? என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

பொதுவாகவே நீதிக்கு தலை வணங்க வேண்டும், ஆனால் நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது இந்தத் தீர்ப்பால். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:47 pm

எனது 58 ஆண்டுகால வக்கீல் தொழிலில் இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை: ஆச்சார்யா

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக இருந்து பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆச்சார்யா, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, மீண்டும் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலுக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒரு நாள் அவகாசம் வழங்கி இருந்தது. அதன்படி ஆச்சார்யா, 18 பக்கங்கள் கொண்ட எழுத்துபூர்வ வாதத்தை கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து ஆச்சார்யா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை உள்ளது. இந்த தீர்ப்பின் நகல் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்காமல் இது குறித்து நான் விரிவான கருத்தை கூற முடியாது.

தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்ததும் அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவேன். அதன்பிறகு அரசுடன் ஆலோசனை நடத்தி, அரசு அனுமதி வழங்கினால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு போதிய கால அவகாசம் உள்ளது.

எனது 58 ஆண்டு கால வக்கீல் தொழிலில் இப்படியொரு தீர்ப்பை பார்த்தது இல்லை. இது ஒருதலைபட்சமான தீர்ப்பு.

கடந்த மாதம் 27–ந் தேதி அரசு சிறப்பு வக்கீலாக மாநில அரசு என்னை நியமித்தது. ஒரே நாளில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அரசு தரப்பில் நேரடியாக வாதாட அனுமதி கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

நான் இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3 ஆண்டுகளாக விலகி இருந்தேன். சமீபத்தில் நான் மங்களூருவில் இருந்தேன். அப்போது சட்ட மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘உங்களால் தான் இந்த வழக்கை எடுத்து நடத்த முடியும். வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை. வழக்கை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் நீங்கள்தான். ஒரே நாளில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உங்களால் தான் முடியும். எனவே நீங்கள் தான் வழக்கை எடுத்து நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

அரசு சொல்லும்போது என்னால் மறுத்து பேச முடியவில்லை. உடனடியாக பெங்களூருவுக்கு வந்து என்னால் முடிந்த அளவுக்கு எழுத்துப்பூர்வ வாதத்தை தயார் செய்து ஒரே நாளில் கோர்ட்டில் தாக்கல் செய்தேன்.

தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு நேரடி வாதத்துக்கு அனுமதி அளிக்காமல் எழுத்துப்பூர்வ வாதத்தை மட்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருப்பது எனக்கு தெரிந்த வரை இதற்கு முன்பு நடந்தது இல்லை. மேலும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பு, சாட்சியங்களை பரிசீலித்து ஒரே நாளில் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது இயற்கை விதிகளுக்கு முரணானது. நேரில் வாதாடுவதற்கும், எழுத்துபூர்வமாக வாதத்தை தாக்கல் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அரசு தரப்புக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

அரசு சிறப்பு வக்கீலாக இருந்த பவானி சிங்கின் வாதம் இருக்கட்டும், புதிதாக வாதம் செய்ய தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறி உள்ளது. எனது வாதத்தை ஒரே நாளில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தான் நான் நடந்து கொண்டு உள்ளேன்’’என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:48 pm

ஜெயலலிதா பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழையா? கலைஞர் குற்றச்சாட்டு!

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் 11-5-2015 அன்று கர்நாடக உயர் நீதி மன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில் நீதிபதி முக்கியமாக ஜெயலலிதா மீது குற்றஞ்சாட்டியவாறு 66 கோடி ரூபாய் சொத்து சேர்க்கவில்லை, அந்தக் கணக்குத் தவறு என்பதைத் தான் குறிப்பாக எடுத்துக் காட்டி, நீதிபதி குன்ஹா அவர்கள் அளித்த தீர்ப்புக்கு மாறான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, இந்தியன் வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பட்டியலை நீதிபதி குறிப்பிட்டவாறு சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால்,

ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் 1,50,00,000
குணபூசனியிடமிருந்து மாற்றப்பட்ட கடன் 3,75,00,000
ஜெயலலிதா பெற்றக் கடன் 90,00,000
ஜெ ரியல் எஸ்டேட் பெற்றக் கடன் 25,00,000
ஜெ.எஸ். ஹவுசிங் பெற்றக் கடன் 12,46,000
ஜெ. பார்ம் ஹவுஸ் பெற்றக் கடன் 50,00,000
சசிகலா பெற்றக் கடன் 25,00,000
வி.என். சுதாகரன் பெற்றக் கடன் 1,57,00,000
ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெற்றக் கடன் 1,65,00,000
மகாலட்சுமி திருமண மண்டபத்திற்காக கடன் 17,85,274
ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய்

என்று நீதிபதி குமாரசாமி அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் மேலே கண்ட பட்டியலில் உள்ள பத்து கடன்தொகையையும் கூட்டல் கணக்குத் தெரிந்த யார் ஒருவரை விட்டுக் கூட்டச் சொன்னால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும். ஆனால் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படை யில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் வியாக்ஞானம் செய்து, அவரை விடுதலை செய்திருக்கிறார்.

இதைப் போலவே தான் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட மாளிகையின் மதிப்பையும் சுதாகரன் திருமணச் செலவையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக்கிறார். அப்படிக் காட்டியதற்காக அடிப்படை எதையும் தீர்ப்பிலே அவர் விவாதிக்கவில்லை. தன்னிச்சையாகவே ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளையெல்லாம் குறைத்துக் காட்டியிருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது. பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் அளித்த தீர்ப்பில் பேராசிரியர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரின் எழுத்து மூலமான வாதங்களைப் பரிசீலித்து அதற்கு விளக்கமான தீர்ப்பினை அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தும், அவருடைய அறிவுரையினை நீதிபதி குமாரசாமி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தாகவே தெரியவில்லை.

குறிப்பாக இந்தத் தீர்ப்பு கூட்டுத் தொகையைக் கூட மிக மோசமான அளவுக்கு தவறாகக் குறிப்பிட்டு, அந்தத் தவறான தொகையின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தீர்ப்பு முதலிலே ஒன்று எழுதப்பட்டு, பின்னர் அவசர அவசரமாக மாற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலே தான் அமைந்துள்ளது. இதற்கெல்லாம் உச்ச நீதிமன்றத்திலே தான் உண்மையான விளக்கம் கிடைத்திட வேண்டும். கர்நாடக அரசின் அரசு வழக்கறிஞர் இந்தத் தீர்ப்பு பற்றி மிக விளக்கமாகக் கூறி, உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். எனவே அதன்படி கர்நாடக அரசு இந்த வழக்கில் உரிய முறையில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:51 pm

மேல்முறையீடு : கர்நாடக அரசின் நிலை என்ன?

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு குறித்து சட்ட செயலருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கும், வழக்கைத் தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கும் உரிமை உள்ளது.

தீர்ப்பு வெளியான உடன், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறுகையில், ''ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சேட்ட செயலருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

அதேபோல், சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடனும் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

முன்னதாக, இது குறித்து விளக்கம் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

தீர்ப்பு விவரம் முழுமையாக படிக்கப்பட்டு, சட்ட நிபுணர்களின் கலந்தாலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.


Last edited by சிவா on Wed May 13, 2015 12:31 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Tue May 12, 2015 11:53 pm

ஹைகோர்ட் தீர்ப்பு 'கணித தவறுகளின் சோகம்'.. ஜெ. மீண்டும் முதல்வர் பதவியை இழப்பார்: சு.சுவாமி

ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து சு.சுவாமி கூறுகையில், ஹைகோர்ட் தீர்ப்பை முழுமையாக படித்து பாரத்த பிறகு, எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை பரிசீலித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த வழக்கை அப்படியே போகட்டும் என்று விட முடியாது என்றார்.

இதனிடையே, இன்று தனது டிவிட் ஒன்றில் சு.சுவாமி கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளேன். ஹைகோர்ட் தீர்ப்பு, 'கணித தவறுகளின் சோகம்'. எனவே, ஜெயலலிதா முதல்வரானால், மீண்டும் தனது பதவியை அவர் இழக்க வேண்டிவரும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்தபோது, கன்னடர்கள் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக கூறினார். ஹைகோர்ட் விடுதலை செய்தால் அது நியாயம். சுப்ரீம்கோர்ட் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்தால் அப்போது என்ன சொல்வார் என்று சு.சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வருமானம் மற்றும் செலவு போன்றவற்றை கணக்கு போட்டு பார்த்து சுமார் 8.12 சதவீத சொத்துக்கள்தான், கணக்கில் வராதவை என்று கூறிய ஹைகோர்ட், அதிகபட்சம் 10 சதவீதம் வரை கணக்கு காட்ட முடியாத சொத்துக்கள் இருக்க அனுமதியுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Wed May 13, 2015 12:03 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Wed May 13, 2015 12:04 am

ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு 8.12 சதவீதம் அல்ல, 76 சதவீதம்: ஜி.ராமகிருஷ்ணன்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் மீதான தண்டனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (11.5.2015) ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு “இது இறுதி தீர்ப்பல்ல; கர்நாடக அரசு இதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது.

தீர்ப்பின் நகல் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பின் அடிப்படை தவறான கணக்குகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் ஜெயலலிதாவும், அவரோடு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வங்கிகளிலிருந்து வாங்கிய கடன்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வருமானமாக கணக்கில் கொள்ளவில்லை என்றும், அவற்றையும் கணக்கில் கொண்டால் சட்டப்படியான அவரது வருமானம் அதிகமாக இருக்கும் என்று நிர்ணயிக்கிறார்.

இதனடிப்படையில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து 8.12 சதவிகிதம் மட்டுமே என்றும், இது அனுமதிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தண்டனை பெற்றோர் வாங்கிய கடன்களை நீதிபதி கூட்டுகிற போது, 13.50 கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கியதாக தவறாக காட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு தவறை மட்டும் நேர்செய்தாலே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76 சதவிகிதத்திற்கும் மேல் வரும். இது சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரியாகவே சீர்தூக்கி பார்த்து தீர்ப்பளித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒரு அம்சமே இந்த தீர்ப்பில் ஊனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இது தவிர பிறழ் சாட்சிகள் குறித்த நீதிபதியின் கருத்தும் தவறானதாகும். தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது சாட்சிகள் மிரட்டப்பட்டார்கள், அதன் காரணமாக பிறழ் சாட்சிகளாக மாறுகிறார்கள் என்கிற காரணத்தினால் தான் கர்நாடகா மாநிலத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு கொடுத்த சாட்சியங்களை ஏற்க முடியாது என்று கூறியிருப்பது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எந்த நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு மாற்றியதோ அதனடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாகும்.

1995ம் ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டத் தொகையை கணக்கிடும் போது ஒரு சதுர அடிக்கு 280 ரூபாய் என்று கணக்கில் கொண்டிருக்கிறார் நீதிபதி. இது அப்போது பொதுப்பணித்துறை நிர்ணயித்திருந்த ரூ. 315/-ஐ விட குறைவாகும். சாதாரணமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான தொகையை விட போயஸ் கார்டனிலும், அதுபோன்ற இடங்களிலும் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான செலவை பொதுப்பணித்துறை நிர்ணயித்துள்ள தொகையை விடவும் குறைத்து நிர்ணயித்திருப்பதும் நிச்சயமாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதே போன்று வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ஜெயலலிதா அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 28,68,000/- என்று சொல்லப்பட்டிருக்கிறது. 1995ஆம் ஆண்டில் ஓட்டிஸ் லிப்ட் விலை ரூ. 15,000/- தான் என்று குறிப்பிட்டிருப்பது சரியான முறையில் செலவுகள் கணக்கிடப்படவில்லை என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று நமது எம்ஜிஆர் பத்திரிக்கை சந்தா சேர்ப்பு சம்பந்தமாக எந்த அறிவிப்பும் தனது பத்திரிகையில் வெளியிடவே இல்லாமல் ரூ. 14 கோடிக்கும் அதிகமான தொகை பெற்றதாக சொல்லியிருப்பதை ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை எவ்வித கேள்வியுமின்றி நீதிபதி குமாரசாமி அப்படியே ஏற்றிருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

மேலும் தனக்கு வாதிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை, எழுத்து மூலம் வாதங்களை முன்வைக்கவும் ஒரு நாள் அவகாசமே வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட 2 மாத காலமும் அதை கவனித்து பதிலளிக்க அரசு தரப்பு ஆஜராகவில்லை என்பது உட்பட பல அம்சங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா சுட்டிக்காட்டியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்றங்கள் உரிய பங்காற்றும் என்று மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இத்தீர்ப்பின் மீது உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்'' என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by சிவா on Wed May 13, 2015 12:17 am

பெங்களூரு ஐகோர்ட் தீர்ப்பு விசித்திரமானது: ஆச்சார்யா பேட்டி கவனிக்கத்தக்கது: கி.வீரமணி அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களின் உயர்நீதிமன்ற மேல் முறையீட்டினை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதா அவர் களையும், அவருடன் இணைந்து தண்டிக்கப் பட்ட மூவரையும் தண்டனையிலிருந்து விடுதலை செய்தும், அபராதத் தொகை ரூ.100 கோடியை ரத்து செய்தும், சொத்துக் களுக்கான தடையை ரத்து செய்தும் அதிர டித் தீர்ப்பு நேற்று (11.5.2015) வழங்கியுள்ளார்.

அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா பேட்டி

“இத்தீர்ப்பு ஒரு விசித்திரத் தீர்ப்பு! எனது 58 ஆண்டு கால வழக்குரைஞர் தொழில் வரலாற்றில் இப்படி ஒரு தீர்ப்பினை இதுவரை கேட்டதே இல்லை!

அப்பீல்தாரர்களின் வழக்குரைஞர் களுக்கு பல நாள் வாதம் செய்ய வாய்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அரசு வழக்குரைஞரான எனக்கு ஒரு நாள் அவகாசம்தான் தந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதுதான் இறுதித் தீர்ப்பாக அமையும்” என்று கருநாடக அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகி விட்டால், தமிழகத்தில் நிலவிய செயலற்ற நிலை மாறி, ஆட்சியின் செயல்களுக்கு அவரும் அவரது ஆட்சியும் நேரடிப் பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தீர்ப்பு என்பது உடனடிப் பயன்.

சட்டப்படி சரியா? தவறா?

கர்நாடக நீதித்துறை தந்துள்ள இந்த இரண்டு முரண்பட்ட தீர்ப்புகளுக்கு விடை உச்சநீதிமன்றத்தில்தான் காணமுடியும். அதுவரை இப்பொழுது தரப்பட்ட இத்தீர்ப்பு, நியாயப்படி சரியா, தவறா என்று விவாதிப்பதைவிட, மவுனம் காப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

துவக்கத்திலிருந்தே இவ்வழக்கின் வரலாற்றில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே இல்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்; காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum