புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
27 Posts - 53%
heezulia
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
9 Posts - 1%
jairam
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_m10சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்லேட் பிறந்த கதை32000மாவது பதிவு-by Krishnaamma :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:32 pm

மனித வாழ்க்கை முறையையும் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிப்பதில், அவர்கள் வாழும் பகுதியின் வெப்ப தட்ப நிலை பெரும் பங்கு வகிக்கிறது. மாயர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி ஏராளமான சுண்ணாம்புக் கல் கிடைத்தது. இதனால், அந்த இடம் வெப்பம் அதிகமானதாக இருந்தது. எப்போதாவதுதான் மழை பெய்யும். தண்ணீர்த் தட்டுப்பாடுதான்.

மேற்குப் பகுதி வெப்ப நிலையில் நேர் மாறானதாக இருந்தது. இங்கே ஏராளமான மலைகள், பள்ளத்தாக்குகள். இந்தப் பிரதேசம் மழைக்காடு (rainforest) எனப்படும். அகண்ட இலைகளையுடைய உயரமான மரங்கள் ஈரச் செறிவுள்ள இந்தப் பகுதிகளில் வளரும். இந்த மரங்கள் பசுமை மாறாமலே இருக்கும், அல்லது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இலைகளை உதிர்க்கும் மர வகைகள்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) 4ZGsVtSMCTSND1mdCJlw+8b787adf7c568b3a1d87417d132402e1

இங்கே பலத்த மழை பெய்யும். தரை ஈரப் பதம் கொண்டதாக இருக்கும். ஆனால், பூமி வளமானது அல்ல. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற சுமார் எழுபது ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. மாடுகள், குதிரைகள் போன்ற விவசாயத்துக்கு உதவும் மிருகங்களும் இல்லாததால், மனிதர்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே, தங்கள் நிலங்களில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

தொடரும்...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:35 pm

மாயர்கள் சோளத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் இதிகாசம் சொல்வதைப் பார்த்தோமே? மாயர்களின் முக்கிய விவசாயம் சோளம்தான். அவர்கள் சோளத்தால் ரொட்டி செய்தார்கள். சோள ரொட்டிதான் அவர்களுடைய முக்கிய உணவு.

மாயர்களின் முக்கியப் பானம் கோகோ. ஆமாம், சாக்லெட்டின் முக்கிய மூலப் பொருளான கோகோதான். இதனால்தான், மாய நாகரிகம் சாக்லெட்டின் தாயகமாகக் கருதப்படுகிறது.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) 4dhv2dhOQcWSc4R3uJlL+ancient-theobroma-cacao

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, அதாவது சுமார் கி. மு. 2000 ல் கோகோ மரங்கள் வளர்க்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கோகோ மரத்தை கேட்ஸால்கோயாட்டெல் கடவுள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்தார் என்று மாயர்கள் நம்புகிறார்கள். கோகோ கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் சாக்லெட்டுக்கே எக் சுவாக் என்று ஒரு கடவுளை அவர்கள் உருவாக்கினார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:37 pm

மாயர்கள் கோகோ கொட்டைகளை சுடுதண்ணீரில் போட்டு அந்தக் கஷாயத்தைக் குடித்தார்கள். இந்த பானத்துக்கு அவர்கள் ஸோக்கால்டல் (Xocaltl) என்று பெயர் வைத்திருந்தார்கள். ஸோக்கால்டல் என்றால் கசப்பான பானம் என்று அவர்கள் மொழியில் பொருள். இந்த வார்த்தையிலிருந்துதான் சாக்லெட் என்ற பெயரே வந்தது. தங்கக் கோப்பைகளில் மட்டுமே கோகோ குடிப்பார்கள்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) H10QUrr8QwymqqwIE5Bg+images(3)

ஒரு முறை குடித்தவுடன் இந்தக் கோப்பைகளை வீசி எறிந்துவிடுவார்கள். ஆமாம், தங்கக் கோப்பைகளைத்தான். இப்படி, வசதி கொண்டவர்கள் மட்டுமே குடிக்கும் ஆடம்பர பானமாக ஸோக்கால்டல் இருந்தது.

பானங்களில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கோகோ ராஜா. மாயர்களின் வியாபாரம் பண்டமாற்றுமுறையில் நடந்தது. இதற்கு கோகோ கொட்டை ஒரு பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பட்டது. நான்கு கொட்டைகளுக்கு ஒரு முயல் அல்லது ஒரு வான்கோழி வாங்கலாம். நூறு கொட்டைகள் கொடுத்தால் வாழ்நாள் முழுக்க வேலைக்காரனாக உழைக்கும் அடிமை கிடைப்பான்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:39 pm

மாயர்கள் உலகைத் தாண்டி கோகோவின் மகிமையை வெளி உலகத்துக்குத் தெரிய வைத்தவர் கிரிஸ்டோஃபர் கொலம்பஸ். ஒரு பயணத்தின்போது, 1502ம் ஆண்டு அவர் ஒரு படகைப் பார்த்தார். படகு நிறைய கோகோ கொட்டைகள். ஸ்பெயின் நாட்டில் கோகோ கொட்டைகளே கிடையாது. கொலம்பஸும் அவருடைய சகா மாலுமிகளும் முதன் முறையாக இவற்றைப் பார்த்தார்கள்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) KGSKRWkFQ9GoqtsNmqGA+download(3)

வித்தியாசமான இக்கொட்டைகளைத் தங்கள் மன்னரிடம் கொடுக்க ஒரு பிடி எடுத்துக் கொண்டார்கள். மொழி தெரியாததால், மாய நாட்டுக்காரர்களிடம் பேசி கொக்கோ கொட்டைகளின் மகிமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கொலம்பஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு வந்தார். தன் மன்னருக்கு அவற்றைப் பரிசாகக் கொடுத்தார்.

மன்னருக்கு கோகோ சுவை பிடித்தது. ஆனால் கொலம்பஸ் புதிய கண்டமான அமெரிக்கா கண்டுபிடித்தது தலைப்புச் செய்தியாகிவிட்டபடியால் கோகோ மன்னரின் நினைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கொலம்பஸ் கோகோவை ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், கோகோ வரலாற்றில் சிறப்பு இடம் பெறுபவர் ஹெர்னாண்டோ கோர்ட்டெஸ் (Hernando Cortez) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரர். புதிய நாடுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆசையில் பயணங்கள் மேற்கொள்ளும் துணிச்சல்காரர். கோர்ட்டெஸ் பயணம் செய்த கப்பல் மாயர் பகுதியில் கரை தட்டியது. கோகோவின் சுவை கண்ட கோர்ட்டெஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்கு எடுத்துப் போனார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:40 pm

மன்னர், பிரபுக்கள், பணக்காரர்கள் அதன் சுவையை விரும்பினார்கள். ஆனால், இப்போதும் கோகோ ஒரு பானமாகத்தான் இருந்தது. ஸ்பெயின் நாட்டு மக்கள் கோகோ பயிரிடத் தொடங்கினார்கள்.

கொட்டைகளைத் தூளாக்கி அந்தத் தூளால் பானம் தயாரித்தால் கூடுதல் சுவை வரும் என்று அறிந்தார்கள். இந்தத் தூளை, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். ஏற்றுமதி பெருகியது. ஆனால், தூள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பரம ரகசியமாக வைத்துக்கொண்டார்கள். அந்த நாடுகளும் கோகோ பயிரிட ஆரம்பித்துவிட்டால் ஸ்பெயினின் ஏற்றுமதி வியாபாரம் படுத்துவிடுமே?

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) B7of4sx3Ri9VPAgO7Iwi+images(2)

ஆனால் இந்த விஷயங்களை எத்தனை நாள்கள் ரகசியமாகக் காப்பாற்ற முடியும்? பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகோ ரகசியம் ஐரோப்பிய நாடுகளுக்குக் கசிந்தது. குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர்கள் கோகோவைப் பிடித்துக்கொண்டார்கள். கசப்பைப் போக்க, அவர்கள் இந்தப் பானத்தில் சர்க்கரை சேர்த்தார்கள். இங்கிலாந்தில் கோகோ கிளப்புகள் தொடங்கப்பட்டன. இங்கே இனிப்பு கோகோ பானம் மட்டுமே கிடைக்கும். இவை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றன. கோகோவின் சுவை மக்களுக்குப் பிடித்தது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:43 pm

1674 ல் சாக்லெட் தூளை கேக்களில் சேர்க்கும் வழக்கம் வந்தது. குடிப்பதற்குப் பதில் சாப்பிட முதன் முதலாகக் கோகோ பயன்பட்டது இப்போதுதான்.  1828 ல் கொன்ராட் வான் ஹூட்டன் (Conrad Von Houten) கோகோவில் எண்ணெய் எடுக்க ஒரு இயந்திரம் உருவாக்கினார்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) FlFoABtLQJ6MhBzOjZFe+cocoa-butter

கோகோவின் எண்ணெய்  வெண்ணெய் என்று அழைக்கப்பட்டது.    இதற்குப் பிறகு 19 ஆண்டுகள் ஓடின. ஜோஸஃப் ஃப்ரை (Joseph Fry) என்ற ஆங்கிலேயர் சாக்லெட்டின் முதல் வடிவை உருவாக்கினார். கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணைய் ஆகிய மூன்றையும் சேர்த்தார். பசைத் தன்மை கொண்ட மாவு கிடைத்தது. இவற்றைப் பல வடிவங்கள் கொண்ட சாப்பிடும் சாக்லேட்டுகளாக மாற்றினார்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) 8LE8cLyLQC9PY3NLX07J+Experts-Sequence-and-Assemble-Cocoa-Tree-Genome-2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:45 pm

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Rs8a5LxdRlAx8yyItUNp+download(2)

1861- இல் ரிச்சர்ட் காட்பரி (Richard Cadbury) சாக்லெட் கடை தொடங்கினார். இவருடைய உற்பத்தி பெரிய அளவில் இருந்தது. சாப்பிடும் சாக்லெட் அதிக அளவு மக்களைச் சென்றடையத் தொடங்கியது. மில்க் சாக்லெட், ஃபை ஸ்டார், ஜெம்ஸ், எக்லயர்ஸ் போன்ற உங்களுக்குப் பிடித்த சாக்லெட் ரகங்கள் தயாரிக்கும், உலக நாடுகள் பலவற்றிலும் தன் கிளைகளைப் பரப்பியிருக்கும் காட்பரி கம்பெனி பிறந்த கதை இதுதான்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) Xn2heX0rQk6aM9AJRWYd+images(4)

இன்னும் பதினைந்து வருடங்களுக்கு சாக்லெட் என்பது கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணெய் ஆகிய மூன்றின் கலவைதான். மாற்றம்தானே முன்னேற்றம்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:46 pm

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) XsCjJu9xQjyVltZpwgoK+download

1879 – இல் டானியல் பீட்டர் (Daniel Peter) என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர் இந்த மூன்று பொருள்களோடு பால் கலந்தார். சுவை அமிர்தம்! அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த இனிப்பாக இருக்கிறது சாக்லெட்.

சாக்லேட் பிறந்த  கதை32000மாவது பதிவு-by Krishnaamma :) AvWfovvSSRS6wu8KvaQd+download(1)

படங்கள் மற்றும் கட்டுரை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக