புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_m10ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 4:35 am

First topic message reminder :

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 01
சித்தமருத்துவர் கு.சிவராமன்
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P28a
அஞ்சறைப்பெட்டி, அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்! உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள் தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில் மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர்.

கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி, கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும் பல மருத்துவ மற்றும் அறிவியலாளர்களால் பெரும் வியப்புடன் பார்க்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில், இப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரிய மருத்துவ அறிவு மெள்ள மெள்ள மறைந்து வருகிறது.

அப்படி மறந்து மறைந்துபோன மருத்துவ அறிவை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே, இந்தத் தொடர்.

பாரம்பரியத்தின் எச்சமான பாட்டியும், நவீனத்தின் உச்சமாக இருக்கும் பேத்தியும் நடத்தப்போகும் உரையாடலில் உங்களுக்கான மருத்துவத் தேடலும் கட்டாயம் கலந்திருக்கும்.

வாழையடி வாழையாய் வலம் வந்த, மறந்துபோன மருத்துவக் குறிப்புகள் இனி, உங்கள் வாரிசுகளுக்கும் வற்றாத ஆரோக்கியத்தைத் தரும்.

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P28

''அலாவுதீனோட அற்புத விளக்கா பாட்டி இது? இந்தப் பழைய பெட்டியை இவ்வளவு பத்திரமா வெச்சிருக்கே,' என பாட்டி வைத்திருந்த பெட்டியைப் பார்த்து, பேத்தி கேட்டதும் பாட்டிக்கு முகமெல்லாம் பூரிப்பு.

''இந்தப் பெட்டியைப் பத்திக் கேக்க மாட்டியானு காத்திட்டிருந்தேன் செல்லம். இது நம்ம மண்ணோட அற்புத வரம். தலைமுறை தலைமுறையா நாம பாதுகாத்து வந்த நல்வாழ்வுப் பெட்டி.'

'சாப்பாடு தாளிக்கிற சமாசாரம் எல்லாம் வைச்சிருக்கிற பெட்டிதானே இது?'

'ம்ம்... வெறும் தாளிச்ச பொருட்கள் மட்டுமில்லே... அவசரத்துக்கு உதவும் கைமருந்து; அந்தக் கால ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இது.'

''ஓஹோ... அப்போ போன மாசம் பிடிச்ச சளியும் அடுக்குத் தும்மல் மூக்கடைப்பும் இன்னும் என்னைவிட்டுப் போக மாட்டேங்கிறது. உன் அஞ்சறைப்பெட்டி, எனக்கு வைத்தியம் சொல்லுமா பாட்டி?'

''பனிக் காலத்துல அடுக்குத் தும்மல் வர்றது... மூக்கடைச்சுப்போய் நீர் வழியறது... தலைவலி... முகமெல்லாம் அதப்பாய் வீக்கமா இருப்பது... இப்படி ஒண்ணா வர்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் அந்தக் காலத்துல 'பீனிசம்’னு சொல்வாங்க. இப்போ யாரைப் பார்த்தாலும், 'சைனஸ், சைனஸ்’னு சொல்றாங்களே... கிட்டத்தட்ட அதுதான் பீனிசம்.'

''பாட்டி, அது சைனஸ் இல்லை. சைனஸைட்டிஸ்; முக எலும்பில் உள்ள இயல்பான பதிவுக்கு சைனஸ்னு பெயர். அதுல அழற்சி வந்து நீரேற்றம் ஏற்பட்டு, சளி சேர்ந்து வதைப்பதுதான் சைனஸைட்டிஸ்.'

'சரி... அந்த சைனஸைட்டிஸ் வந்துட்டா... கொஞ்ச காலம் இனிப்பை மறந்திடணும். பால் கூடவே கூடாது. நீர்க் காய்கறிகளையும் தவிர்த்திடணும்.'

'அது என்ன நீர்க் காய்கறிகள் பாட்டி?'

''எந்தக் காயையெல்லாம் கத்தியால வெட்டறப்ப நீர் அதிகம் வருதோ, அதெல்லாம் நீர்க் காய்கறிகள்தான். சுரைக்காய், பூசணிக்காய், தடியங்காய், தக்காளி, பீர்க்கங்காய் இதையெல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆசைப்பட்டு ஒரு வேளை சாப்பிட்டாலும், மிளகுத்தூள் தூவித்தான் சாப்பிடணும்.'

''அப்படின்னா, பால்லகூட மிளகு போட்டுச் சாப்பிடலாம்தானே பாட்டி?'

''ரொம்பவும் அவசியம்னு டாக்டர், பால் குடிக்கச் சொல்லியிருந்தா பரவாயில்லை. மத்தபடி தேவை இல்லைம்மா. அப்படி பால் சாப்பிடறபட்சத்துல அதில் மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடிக்கலாம். ஆனா, இன்னொரு விஷயம், அப்பக்கூட ராத்திரி, விடிகாலையில் சைனஸைட்டிஸ் தொந்தரவு இருக்கிறவங்க பால் சாப்பிடக் கூடாது.'

'சரி பாட்டி... உன் அஞ்சறைப் பெட்டியில இதுக்கு என்ன மருந்து வைச்சிருக்கே?'

''மிளகு இருக்கே...''

''சரி... நான் காலேஜ் போயிட்டு சாயங்காலம் வருவேனாம்... மிளகு பத்தி முழுத் தகவலும் சொல்லுவியாம்...'' என்று பாட்டிக்கு டாடா சொல்லிவிட்டுச் சென்றாள்.

- மருந்து மணக்கும்
-டாக்டர் விகடன்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 9:28 pm

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்- 10
பாரம்பரிய ஃபர்ஸ்ட் எய்ட்!
மருத்துவர்.கு.சிவராமன்


'என்ன ஷாலு குட்டி... காலங்கார்த்தால புது யூனிஃபார்மெல்லாம் போட்டுட்டு எங்க கிளம்பிட்ட? காலேஜுக்கும் யூனிபார்ம் வந்திடுச்சா?'

' 'ஃபர்ஸ்ட் எய்டு’ கிளாஸ் போறேன் பாட்டி. என் காலேஜ்ல அதுக்கு இப்ப ஸ்பெஷல் கோச்சிங் நடக்குது.'

'சூப்பர்... ரொம்ப அவசியமானதுதான். அதே சமயம், ஃபர்ஸ்ட் எய்டில் பல விஷயங்கள் நம்ம பாரம்பரியத்துலயே இருக்கு. அந்தக் காலத்துல என் மாமியார் எனக்கு நிறைய ஃபர்ஸ்ட் எய்டு விஷயம் சொல்லியிருக்காங்க.'

'ஓ... நீ, அந்தக் காலத்து ரெட் கிராஸா? கொஞ்சம் விரிவாத்தான் சொல்லேன்.'

'தாமதிக்காம மருத்துவர்கிட்ட ஓடவேண்டிய அவசர பிரச்னை எது? எதெல்லாம் நோயோட அறிகுறி? எது ரொம்ப அலட்டிக்க வேண்டாத சின்னப் பிரச்னை? என்ற அடிப்படை விஷயங்களை எல்லாருமே தெரிஞ்சுக்கணும். ஒரு டம்ளர் ஓம வாட்டரில் ஏப்பத்தோடு போக வேண்டிய மார்வலி, இருபதாயிரம் ரூபாய் ஆஞ்சியோகிராமில் நிஜமாவே வந்து நிக்குதே... இது கைவைத்திய முதலுதவியை மறந்ததால்தான்.'

'நூத்துக்கு நூறு உண்மை. நேத்துக்கெல்லாம் நம்ம வீட்டு விஸ்வாக்குட்டி இருமிக்கிட்டே இருக்கானே... அதுக்கு ஏதாவது சொல்லு.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P28
'சளி இருமலுக்குச் சிறந்த முதலுதவி மருந்து, ஆடாதொடை இலை. அதிகமா கசப்பா இருக்கிற இந்தச் செடியின் சாறோடு தேன் சேர்த்து ஒரு 'சிரப்’ மாதிரி செஞ்சுவெச்சுக்கலாம். கொடிய இருமலுக்கும் சளி வர மிகவும் கஷ்டப்படுற இரைப்போடு, நீடிச்ச இருமலுக்கும் அற்புத மருந்து. இலை உலர் பொடியை கஷாயமாக்கி 30 - 60 மி.லி எடுத்துக் கசப்புப் போகத் தேன் சேர்த்தும் கொடுக்கலாம்.

'சளி இல்லாமல் வர்ற, வறட்டு இருமலுக்கு?'

'இனிப்பு சுவையோடு இருக்கிற அதிமதுரம், வறட்டு இருமலோடு, வயித்து வலியையும் போக்கும். சிறு துண்டை நாக்குல அடக்கி, அதன் சாறை விழுங்கினாலே வறட்டு இருமல் நீங்கிடும். சிலருக்கு, வறட்டு இருமலின்போது, சிறுநீர் சிந்தும் பிரச்னைகூட வந்திடும். அதற்கான முதல் உதவியும் அதிமதுரம்தான்.'

'சளியோட, முகத்துல நீர்கோத்திருந்தா?'

'தண்ணியில நொச்சி இலை, மஞ்சள் போட்டு ஆவி பிடிக்கலாம். படுக்கிறப்ப, மஞ்சள் சுக்கு சேர்த்து அரைச்சு, நெற்றியில் பற்றுப் போடலாம். காலையில் தலைவலி காணாமல் போகும். முகமும் ஃப்ரெஷ்ஷாயிடும்.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P28a
'காய்ச்சல் வந்தால்..?'

'சாதாரண வைரஸ் காய்ச்சலில் இருந்து டெங்கு, சிக்குன்குனியா வரை எல்லாக் காய்ச்சலுக்கும் முதல் மருந்து நிலவேம்புக் கசாயம்தான். நிலவேம்போடு பற்படாகம், மிளகு, விலாமிச்ச வேர், வெட்டி வேர், பேய்ப்புடல்னு இன்னும் ஏழு மூலிகைங்க சேர்த்து செஞ்சப் பொடியை கண்ணாடி புட்டியில் போட்டு, எப்பவும், அடுப்பங்கரையில் வைச்சிருக்கறது நல்லது. காய்ச்சல் எடுத்தா, 60 மி.லி இரண்டு வேளையா 3 நாளைக்குச் சாப்பிட்டு வந்தா, 3-5 நாள்ல காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் குறையலைன்னா, கழுத்திருக்கம், பல் ஈறில் ரத்தம் கசிவது, நீர் வற்றி உலர்ந்துபோவது, வலிப்பு, மாதிரி குறிகுணம் இருந்ததுனா, தாமதிக்காம மருத்துவர்கிட்ட போயிடனும்.'

'சில சமயம், வயிறு உப்பிப் புஸ்னு ஆயிடுதே... அதுக்கு?'

'ஏற்கனவே வீட்டுல செஞ்சுவெச்சிருந்த அன்னப்பொடி இல்லேன்னா, அஷ்ட சூரணத்தை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து வெந்நீரில் போட்டு சாப்பிடணும். வயிறு செரிக்காமல், உப்புசமா, வயிற்றுப்போக்கு இருந்தால் ஓமத்தை வறுத்து கசாயமாக்கி 30-60 மி.லி சாப்பிடலாம். ஓமவாட்டரை இருந்தால், 10 மி.லி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அரை டம்ளர் குடிக்கலாம். மோரில் பெருங்காயம் கலந்து குடிக்கலாம். முதுகில் வாயுப்பிடிப்பும் சேர்ந்து இருந்தா, வாய்விடங்கம், சுக்கு, மிளகு, சாரணை வேர் சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிடலாம்.'

'அஜீரணத்தாலே வர்ற கிறுகிறுப்புக்கு..?'

'பித்தம், வர்ற வெர்ட்டிகோ என்கிற உட்காது பிரச்னைக்கும் சரி... முதலுதவியே கரும்புச்சாறுல சீரகத்தூளைப் போட்டுச் சாப்பிடுறதுதான்.'

'காலில் சிராய்ப்பு ஏற்பட்டா?'

'மஞ்சள் தூளை நீரில் கலந்து, லேசா வெதுவெதுப்பான சூட்டுல பற்று போட்டா, புண்ணும் ஆறும். நோய்க்கிருமியும் தாக்காது.'

'அதுவே கொஞ்சம் வீங்கிடுச்சுன்னா?'

'நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கிற மூசாம்பரம் வாங்கி, வெந்நீரில் அரைச்சுப் போடலாம். சரி... திருவிளையாடல் 'தருணி’ மாதிரி... கேள்விகளை அடுக்கிட்டே இருக்கியே... கிளாஸுக்கு நேரமாகலையா?'

'அத்தனை விஷயமும் உன்கிட்டயே கத்துக்கிட்டேனே... போகணுமானு யோசிக்கறேன் பாட்டி...'

''உதைபடுவே... ஓடு நவீன முதலுதவி பத்தி படிச்சிட்டு வந்து எனக்குச் சொல்லிக்கொடு.''

- மருந்து மணக்கும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 8:39 pm

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 11
அரிசியைக் கைவிடேல்!

மருத்துவர்.கு.சிவராமன்

'லஞ்சுக்கு என்ன பாட்டி வெச்சிருக்கே!'

'சாதம், சாம்பார், பொரியல்...'

'என்னது அரிசிச் சோறா? எனக்கு வேணாம்பா... நானே இப்பதான் கஷ்டப்பட்டு 'ஜிம்’முக்குப் போய் உடம்பைக் குறைச்சுட்டு வர்றேன். அரிசிச் சோறு சாப்பிட்டா வெயிட் போடும்னு உனக்குத் தெரியாதா பாட்டி?'

'காலங்காலமா அரிசிதான்டி நம்ம பாரம்பரிய உணவு. 60, 70 வருசத்துக்கு முன்னால, நாங்க மூணு வேளையும் அரிசி உணவைத் தவிர வேற எதுவும் சாப்பிட்டதில்லையே. அப்படிப் பார்த்தா, மொத்த தமிழ் மக்களும் தொப்பையோடதானே திரிஞ்சிருக்கணும். நீங்க வேலை செய்யாம சோம்பேறியாத் திரிஞ்சிட்டு, சதா சர்வகாலமும் கண்ட ஸ்நாக்ஸை நொறுக்கிக்கிட்டு, அரிசி மேலே பழி போடுவீங்களா?'

'வெள்ளை அரிசி வேணாம்னு எல்லாரும் சொல்றாங்க.. ஏன், நீ கூட முன்னாடி சொல்லியிருக்கியே பாட்டி'

'இப்போ ஈசியாக் கிடைக்கிற வெள்ளை நெல் அரிசி மட்டும் இல்லைடி. தினை, ராகி, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணினு சிறுதானியங்கள் அத்தனையுமே அரிசிதான். அரிசி சமைக்கிற மாதிரியே.. ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கோ, இரண்டரை பங்கோ தண்ணீர் சேர்த்து வேகவெச்சு எடுத்தா, சாதம் ரெடி'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P54
'ஓஹோ... அப்ப சிறுதானியம்கூட சிறப்பான அரிசிச் சோறுதானா?'

'சிறப்பு மட்டும் இல்லை. ஆரோக்கியமும்கூட. தினையில் கண்ணுக்கு நல்லதைத் தர்ற பீட்டாகரோட்டின் இருக்கு. கம்பு, இரும்புச் சத்தை தருது. சோளம், புரதச் சத்தைக் கொடுக்குது. வரகும், சாமையும், நார்ச்சத்தைத் தந்து எடையைக் குறைக்கும். ராகியில் உள்ள கால்சியம் சத்து எலும்பை உறுதியாக்கும்.'

'வெள்ளை அரிசியில் 'சுகர்’தான் அதிகம்னு நான் படிச்சேன். மத்த அரிசியில் இவ்ளோ நல்லது இருக்கா?'

'நெல் அரிசியும் நல்லாத்தான் இருந்துச்சு. அதை, பாலிஷ் போட்டே கெடுத்துட்டாங்க. குழியடிச்சான், குள்ளக்கார், கவுனி அரிசினு பல ஊரோட பாரம்பரிய அரிசியை, இப்போ தமிழ்நாட்டில் மீட்டெடுத்திருக்காங்க.''

''ஓகே பாட்டி.. விஷயத்துக்கு வருவோம். அரிசி சாப்பிட்டா, எடை கூடுமா இல்லியா?'

'புழுங்கல் அரிசியில 'லோ கிளைசிமிக்’ தன்மை இருக்குறதால, எடையைக் கூட்டாது. அரிசியைச் சுத்தமா ஒதுக்கித் தள்ளிட்டா, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் தொந்தரவு அதிகரிச்சிடும். இல்லேன்னா மூலநோயை ஏற்படுத்திடும். சரியான பாரம்பரிய ரகப் புழுங்கல் அரிசி, இல்லேன்னா சிறுதானிய அரிசி வகையில் சோறு சமைச்சு அடிக்கடி கீரை, காய்கறிகளோட சாப்பிட்டு வந்தா, இப்ப அதிகரிச்சிட்டு இருக்கிற பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையைத் தவிர்க்க முடியும்.''

'வடக்கத்திக்காரங்க எப்பவும் கோதுமையே சாப்பிடுறாங்களே?'

'அது அவங்க ஊரோட உணவு. நாம வாழற இடத்தோட தட்பவெப்பம், பழக்கமான மரபைப் பொறுத்து சாப்பிடுற உணவும் வேறுபடும். கிரீன்லாந்தில் வசிக்கிற 'எக்சிமோ’க்களுக்கு இட்லி சரிவராது. வட நாட்டுக்காரங்களுக்கு கோதுமை எவ்வளவு நல்லதோ, அதேமாதிரி, நமக்கு அரிசியும் சிறுதானியமும்தான் ரொம்ப நல்லது.''

'அப்படின்னா அரிசி சாப்பிடலாம்னு சொல்றியா?'

'இன்னைக்கும் பிறந்த குழந்திக்கு, தாய்ப்பால் தவிர, திட உணவுக்கு அரிசி கஞ்சிதான் கொடுக்கிறோம். மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, வீட்டுப் பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், சிற்றுண்டியாக பொரி, ராத்திரியில் அரிசி கஞ்சினு ஒரே பருவத்துல விளைஞ்ச நெல்லைத் தேவைக்கு ஏற்றமாதிரி, தேவைப்படும் நபருக்கேற்றமாதிரி தயாரிச்சது தமிழ் பாரம்பரியம்.'

'சூப்பர் பாட்டி. ஆனா, கைக்குத்தல் புழுங்கல் அரிசி பிரவுன் கலர்ல இருக்கே!'

'புழுங்கல் அரிசியில் இருக்கிற தவிடு, உமியில் நிறைய சத்துக்கள் சேர்ந்து அரிசியைச் செறிவூட்டி மருத்துவ ஊட்டச்சத்து உணவாக்கிடுறாங்க. வைட்டமின் பி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடெண்ட்னு இந்த அரிசியில்தான் கிடைக்கும். வெள்ளை அரிசியில் அது எதுவும் கிடையாது!'

'ஓகே... ஓகே... அப்ப என்னதான் லஞ்ச்?'

'வரகரிசியும், வழுதுணங்காயும்... ஒளவையார் காலப் பாரம்பரிய ரெசிப்பி.'

'என்னது வழுதுணங்காயா..?'

'கத்தரிக்காயோட பாரம்பரியப் பெயர். வரகரிசியில் சுண்டைவத்தல் போட்ட புளிக்குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் வெச்சிருக்கேன்னு சொன்னேன். சாப்பிட்டுப் பார்த்திட்டு, நீயே 'ஜொள்ளு’வே... இப்போ கிளம்பு.'

- மருந்து மணக்கும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 8:42 pm

ஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 12
ஆழ்ந்தத் தூக்கத்துக்கு அமுக்கராங்கிழங்கு

மருத்துவர்.கு.சிவராமன்

'ஷாலூ குட்டி... இன்னும் என்ன தூக்கம்.. காலேஜுக்கு நேரமாச்சு... சீக்கிரம் எழுந்திரிம்மா!'



'நைட் தூங்க எவ்வளவு லேட்டாயிடுச்சு. உனக்கே தெரியாதா? எட்டு மணிக்குக் குறைஞ்சு என்னை எழுப்பாத பாட்டி ப்ளீஸ்...'

''உனக்கு, தூங்குற நேரம் ராத்திரி ஒரு மணியிலிருந்து... எட்டு மணியா? இப்படி நோயை நீயே வரவழைச்சுக்கிறியேம்மா?'

'என்ன பாட்டி? லேட்டா தூங்கி, லேட்டா எழுந்தாக்கூட வியாதியா..?''

'ஆமாம்டீமா... நிலவு இந்த உலகத்தை ஆளறப்ப தூங்கியும், சூரியன் ஆளும்போது விழிச்சிட்டும் இருக்கிறதுதான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளா சகல ஜீவராசிகளும் பழகியிருக்கு. அதை, கரன்ட்டும் பல்பும் கண்டுபிடிச்ச அன்னைக்கே நாம் மீற ஆரம்பிச்சுட்டோம்.'

'லைட்டு வெளிச்சம்தானே தரும். வியாதியையா தரப்போகுது. என்ன பாட்டி சொல்ற நீ..?'

''எல்லா அறிவியல் பயன்பாடுமே அறத்தோடு, அதன் அளவோடு பயன்படுத்தும் வரைதான் சரி... இயற்கையை ஜெயிச்சுட்டோம்கிற அகந்தை வரும்போது அது நம்மளை அழிக்க ஆரம்பிச்சிடும்.'

'சரி பாட்டி... ராத்திரியில் தூக்கம் சீக்கிரம் வர மாட்டேங்குது... என்ன செய்யட்டும்?'

'தினமும் சாயங்காலத்துல 45 நிமிஷம் நடைப்பயிற்சி செய்யணும். போயிட்டு வந்ததும் குளிக்கணும். இரவு தண்ணீர் அதிகம் கலந்த பாலில் ஜாதிக்காய்த்தூள் ஒரு சிட்டிகை போட்டுக் குடிச்சிட்டு, சின்னதா ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்'

'பால், பழமா.. அய்யோ வெயிட் போடுமே...'

'நீ சரியா தூங்கலைன்னாலும் வெயிட் போடத்தான் செய்யும்; அத்தோட பாலை மருந்தாகக் கொஞ்சம் சாப்பிடுறதுனால வெயிட் போடாது. சின்ன வாழைப்பழம், ஒரு இட்லியின் கலோரி அளவுதான். கூடவே, செரட்டோனின் சத்தையும் தருதுனு மருத்துவர்களே சொல்லி இருக்காங்க.'

'சரி... இதைச் சாப்பிட்டும் தூக்கம் வரலைன்னா, என்ன செய்யறது?'

'சித்தமருத்துவத்தில், அமுக்கராங் கிழங்குனு ஒரு வேர்க்கிழங்கு இருக்கு. அதைப் பாலில் போட்டு வேகவெச்சு எடுத்து, பொடிச்சுக்கணும். இதை அரை டீஸ்பூன் அளவு பாலில் சேர்த்து ராத்திரியில் குடிக்கலாம். நல்லாத் தூக்கமும் வரும். நரம்புகளுக்கும் நல்லது. வயசானவங்களுக்கு வரும் மூட்டு வலிக்கும் சேர்த்து, இது நல்ல பலனைத் தரும்.'

'பாட்டி, என் ஃப்ரண்டோட அம்மா, எப்பவும் கவலையும், ஏதோ சிந்தனையுமா மனசைப் போட்டுட்டு உழட்டிட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது உன் கை வைத்தியம் இருக்கா?'

'அவங்க மருத்துவரை பார்த்து வைத்தியம் செஞ்சுக்கிறதுதான் நல்லது. சித்த மருத்துவர்கிட்ட போனால், 'சடாமாஞ்சில்’னு ஒரு மூலிகையில் செஞ்ச மருந்து தருவாங்க; அது மன உளைச்சல் போக்கி, தூக்கத்தை வரவழைக்கும்.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P38
'மருந்தே இல்லாமல் தூங்கவைக்க முடியாதா பாட்டி'

''ஏன் முடியாது... யோகாவில் இப்ப, ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் (Relaxation Techniques-) நிறையவே வந்திடுச்சு. 'யோக நித்திரா பயிற்சியில் இருக்கிற அந்த உடனடி விரைவான ஆழ்ந்த ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் (Instant, Quick, Deep, Relaxation Techniques) மூலமா ஆழ்ந்த தூக்கத்தை வரவைக்க முடியும்’னு அறிவியல்பூர்வமா நிருபிச்சிருக்காங்க... இதெல்லாம்விட, தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சாலே, நல்ல தூக்கம் வரும்.'

'ஆமா பாட்டி. போன சனிக்கிழமை, எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சிட்டு, காலேஜுக்குப் போய் கெமிஸ்ட்ரி கிளாஸ்ல தூங்கி வழிஞ்சு திட்டு வாங்கினேன். அப்படியொரு சுகமான தூக்கம்... ராத்திரியில் வர மாட்டேங்குது.'

''நல்லெண்ணெயில் சீரகத்தைப் போட்டுக் காய்ச்சிவெச்சுக்கலாம். வாரம் இரண்டு நாள் இந்தத் தைலத்தைத் தடவிக் குளிச்சிட்டு வந்தா, தூக்கமின்மைக்குக் காரணமான பித்தத்தைப் போக்கிடும்.'

'தூக்கம் வரலைன்னா, ரத்த அழுத்தம் கூடிடும்னு சொல்றாங்களே பாட்டி...'

'ரத்த அழுத்தம் இருந்தா, தூக்கம் வராது; தூக்கமில்லைன்னா, ரத்த அழுத்தம் அதிகமாயிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறவங்க, காலையில் முருங்கைக் கீரை சூப் செஞ்சு சாப்பிடுறது, மோர் சாதத்தில் சின்ன வெங்காயம் சேர்ப்பது, சாப்பாட்டுக்குப் பிறகு சீரகத்தண்ணீர் குடிக்கிறதுன்னு பழக்கப்படுத்திக்கிட்டா, பீபியும் சீராகும். தூக்கமும் தன்னால வரும்.'

- மருந்து மணக்கும்...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 8:47 pm

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்-13
பிரியமான பிரியாணி!
மருத்துவர்.கு.சிவராமன்


வீடு முழுவதும் மணக்கும் பிரியாணியின் வாசனையைப் பிடித்துக் கொண்டே உள்ளே வந்தாள் ஷைலு.

'என்ன பாட்டி இது..! பிரியாணியில், நட்சத்திரம் நட்சத்திரமா என்னமோ அழகா இருக்குது..?''

'இதுக்குப் பெயர் அன்னாசிப்பூ... இன்னொரு பெயர் தக்கோலம்.'

'அன்னாசிப்பழத்துல இருக்கிற பூவா இது?'

'இல்லை... அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்துல விளையும் ஒருவித மணமூட்டி. அன்னாசிப்பூ வெறும் மசாலா மணத்துக்காக மட்டுமல்ல. உணவை அழகுபடுத்துறதுக்கும், மருந்தாவும் பயன்படுது. வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான 'ஷிகிமிக் அமிலம்’ (Shikimic acid) இதில் இருக்கு. சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி, பறவைக் காய்ச்சல் வரைக்கும் பல நோய்களைப் போக்கக்கூடிய தன்மை இந்த அன்னாசிப்பூவுக்கு இருக்கிறதா சமீபத்துல கண்டுபிடிச்சிருக்காங்க.'

'அடேங்கப்பா, மணம் வீசுற அன்னாசிப்பூவுக்குள்ள, ஆச்சர்யம் அன்லிமிட்டடா இருக்கே பாட்டி! '

'இதே பிரியாணியில் போடற, இன்னும் ரெண்டு வாசனைப் பொருள்

களும் கூட பிரமாதமான மருந்துகள்தான் தெரியுமோ? மசாலா மணம் வீடெங்கும் வீசுதே... அதுக்குக் காரணமான பட்டையைத் தேநீரில் போட்டு, மசாலா டீயாகக் குடிச்சிட்டு வந்தால் சர்க்கரையோட அளவுகூட கட்டுப்படும்.'

'இன்னொரு பொருள் என்ன பாட்டி?'

'பெருஞ்சீரகம்தான்...ஜீரணிக்கத் தாமதமாகும் எண்ணெய் கொழுப்பு சேர்ந்த பிரியாணி மாதிரியான உணவில் அவசியம் இது இருக்கணும். இது ஜீரணத்தைத் தூண்டவும், பித்தம் அதிகரிக்காமல் இருக்கவும் பயன்படுது. 'சரி... இப்ப தயாரிக்கிற பிரியாணி

யோட, பனீர் பட்டர் மசாலானு சேர்த்து சாப்பிடறாங்களே... அதெல்லாம் சாப்பிட்டால் வர்ற அஜீரணத்துக்கு என்ன செய்ய முடியும்?'

'நாக்கை யாராலடி கட்டுப்படுத்தமுடியும்? சாப்பிட்டு முடிச்சதும் கடைசியா, மோரில் கொஞ்சம் பெருங்

காயத்தூள் போட்டுக் குடிச்சாப் போதும்.'

'பெருங்காயமா? வாயே வாசம் வீசுமே பாட்டி?'

'ஆமாம்... அமெரிக்கர்கள் முதல்ல இந்த வாசனையை முகர்ந்திட்டு, பிசாசு மலம்னு கூட நக்கலா பெயர் வைச்்சதா ஒரு வரலாற்றுச் செய்தியே உண்டு. அதே அமெரிக்காவில், ஸ்பானிஷ் ஃப்ளூ வந்து லட்சக்கணக்கான மக்கள் இறந்தப்ப, பெருங்காயம்தான் அந்தக் காய்ச்சலில் இருந்து பெருவாரியான மக்களைக் காப்பாத்திச்சாம். ஒவ்வொரு அமெரிக்கனும், பெருங்காயத்தைத் சின்னத் துண்டில் முடிஞ்சு, கழுத்துல சங்கிலி மாதிரி கட்டிட்டே திரிஞ்சாங்களாம். அப்போ, பெருங்காயத்துக்கு அவங்க வைச்ச பெயர் கடவுளின் மணம்.'

'அடடா! 'பெருங்காயத்துக்குப் பின்னாடி.. இத்தனை பெருங்கதையா?'

'மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம்னு எட்டு வாசனைப் பொருட்களும் தினமும் உணவில் சேர்க்கப்பட வேண்டிய பொருள்கள்னு நம்ம ஊர் சித்த மருத்துவம் சொல்லுது. திரிதோஷ சமப்பொருள் என்கிற இந்த எட்டும் உணவில் இருந்தால் எந்த நோயும் எட்டிக்கூட பார்க்காது.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P14
'பிரியாணியில நிறைய புதினா இலை போடுறோமே... அதுல என்ன ஸ்பெஷல்?'

'வயிற்றுப்புண், வாயுக் கோளாறு தீரவும் புதினா இலையோட எண்ணெய் ரொம்ப நல்லது. புதினாவை ரொம்ப சூட்டில் வதக்கக் கூடாது. மருத்துவ எண்ணெய் ஆவியாப் போயிடும். உணவு தயாரானதும், கிளறி இறக்குறப்போ புதினாவை சேர்த்தால் போதும். புதினாவை அரைச்சு சட்னி, மோரில் இரண்டு புதினா இலை போட்டு சாப்பிட்டாலும், அஜீரணக் கோளாறு இருக்காது. குடல்புண்ணும் ஆறிடும்.'

'சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, மாரடைப்பு, புற்றுநோய்னு நாள்பட்ட வாழ்வியல் நோய் எல்லாத்துக்கும், நம்ம ஊர் நறுமணமூட்டிகள்தான் மருத்துவ உணவாக இருக்கு. சமீபத்திய ஆய்வுகள் இந்திய நறுமணமூட்டிகளை, தலையில் வெச்சுக் கொண்டாடு்து. ஆடி, ஆவணி மாதத்தில் மட்டும் கிடைக்கிற, ஆதொண்டை வற்றலை, மோர் சாதத்துக்குத் தொட்டுக்கலாம். அதே மாதிரி மணத்தக்காளி வற்றல், பிரண்டை வற்றல்... இப்படி, எல்லாமே பசியாற்றுவதைத் தவிர்த்து, ஜீீரணத்தைச் சரியாக்கவும், எதிர்ப்பாற்றலைக் கூட்டவும், சுண்ணாம்புச் சத்துக்களைக் கொடுக்்கவும் உணவுகளா இருக்கு.'

'உணவுல... இவ்வளவு விஷயம் இருக்கே... இனிமே, ஹோட்டலுக்கு அதிகமாப் போக மாட்டேன் பாட்டி... ஆரோக்கியம் என்றாலும்... அது நம் ஊரைப் போல வருமா?''

''கமகம பிரியாணி ரெடி பண்ணிடறேன் கண்ணு!'

மருந்து மணக்கும்..

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 8:51 pm

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 14
ஒல்லிப் பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி
டாக்டர் கு.சிவராமன்,ஓவியம்: ஹரன்


'ஏன் பாட்டி... ஒல்லியா இருக்கிறது அழகா, ஆபத்தா? இப்பல்லாம் என் கிளாஸ் பொண்ணுங்க இப்ப மணிபர்ஸ் அளவுக்குத்தான் சாப்பாடு எடுத்துட்டு வர்றாங்க.'

'குறுக்கு சிறுத்திருப்பது பொண்ணுக்கு அழகுதான். அதுக்காக அநியாயத்துக்கு மெலிஞ்சுபோனா, அது சீக்குல கொண்டு

விட்டு்டும்.''

'என்ன சாப்பிட்டாலும் குமார் மாதிரி சிலருக்கு, எடையே ஏற மாட்டேங்தே... அவங்க என்ன செய்யலாம் பாட்டி?''

'எடை அதிகரிக்கிறதுக்கு ஏராளமான விஷயம் இருக்கு. முதல்ல பித்தமும், அதைச் சுரக்கும் கல்லீரலும் சரியா இருக்கணும். தினமும் சீரகத் தண்ணீர் குடிக்கணும். காலையில் இட்லிக்குப் புதினா, கொத்தமல்லி சட்னி சாப்பிடணும். கரிசலாங்கீரைய நல்லாக் காயவெச்சு, பொடிச்சு, வஸ்திரகாயம் செஞ்சு, தினமும் காலையில சாப்பிடறதுக்கு முன்னால அரை டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.'

'பாட்டி... கல்லீரல்னாலே, காமாலைக்குத் தர்ற கீழாநெல்லி

தான் ஞாபகத்துக்கு வருது.''

''உண்மைதாண்டியம்மா. பித்தக்காரர்களுக்கு கீழாநெல்லி தான் பெஸ்ட். பசிக்கான சுரப்புகள் சரியாக சுரக்காமப் போனா, கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி, மோரில் சேர்த்து அரைச்சு காலையில் உணவுக்கு முன்னால சுண்டைக்காய் அளவுக்கு சாப்பிடலாம்.

அதேமாதிரி மோர் சாதத்

துக்கு மாவடு சேர்க்கும்போது, பித்தத்துல சீரற்ற சீரணத்தை சரியாக்கி, பசியையும் தூண்டும்.'

'அவ்வளவுதானா வேற ஏதும் இருக்கா பாட்டீ?'

'ஒல்லிப் பெண்ணுக்கு உளுத்தங்கஞ்சி, நோய் வாய்ப்பட்டு மீண்டவருக்கு துவரை அரிசிக் கஞ்சி, அடிக்கடி பேதியாகிறவங்களுக்கு ஆரோரூட் கஞ்சி, வத்தலா உடம்பு இருக்கிறவங்களுக்கு பஞ்சமூட்டக்கஞ்சினு உடலை பருமனாக்க நிறைய கஞ்சி வகை இருக்கும்மா.'

''கஞ்சியா? ஜெயில் எஃபெக்ட் வருமே?''
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P30
'கஞ்சினாலே காய்ச்சி அருந்தறதுன்னு அர்த்தம். கைக்குழந்தை எடைகூடறதுக்கு, ராகி கஞ்சி கொடுக்கலாம். உடைச்ச புழுங்கல் அரிசியில் கால் பங்கு பாசிப்பயறு எடுத்து, வறுத்து திரிச்சுவெச்சுக்கணும். இதுல நீர்விட்டுக் காய்ச்சி சூடான பால், சர்க்கரை, கொஞ்சம் பசுநெய், இல்லைனா தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் ரெண்டு, மூணு தடவை கொடுக்கலாம். குழந்தை போஷாக்கா வளரும். ஸ்கூல் போற குழந்தைங்கன்னா, எல்லா நவதானியமும் சேர்த்த கஞ்சியும், பயறுகள் போட்ட சத்துமாவுக் கஞ்சியும் கொடுக்கணும்.''

''சத்துமாவுக் கஞ்சிக்கும், நவதானியக் கஞ்சிக்கும் என்ன வித்தியாசம் பாட்டி..?''

''அரிசி, கோதுமை, தினை, ராகி, கம்பு, வரகு, குதிரைவாலி, சாமை, காடைக் கண்ணி்னு ஒன்பது தானியங்களை மட்டும் சேர்த்து தயாரிக்கிறது, சத்து மாவுக் கஞ்சி. சில தானியங்களோட சோளம், கொண்டைக் கடலை, நிலக்கடலை, பாதாம் பருப்பு, முளைகட்டிய பாசிப் பயறு, சுக்கு சேர்த்து திரிச்சு கஞ்சி செய்றது நவதானியக் கஞ்சி. எடையை அதிகரிக்க, நவதானியக் கஞ்சியோட கொஞ்சம் தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்துக்கலாம். சத்து மாவுக் கஞ்சி உடல் எடையைக் கொஞ்சமா அதிகரிக்கிறதோட நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்; புரதச் சத்தையும் கொடுக்கும்.

இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, எள்ளுருண்டைனு எள்ளை அடிக்கடி சேர்த்துக்கலாம். பெண் குழந்தைகளுக்கு உளுந்து

சோறோடு, எள்ளுத்துவையல் சேர்த்துக்கறது ரொம்பவே நல்லது. நேந்திரம்பழத் துண்டுகளோட, தேன் சேர்த்து இரண்டு வேளை குழந்தை

களுக்குக் கொடுத்துவந்தா, எடை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பாற்றலும் கூடும்.'

''சூப்பர் பாட்டி... நீயே உன் பேரன்கிட்ட, கஞ்சியைக் கொடுத்து சாப்பிடச்சொல்லு. என்னைய மாதிரி குண்டாயிடுவான் பாரேன்!''

மருந்து மணக்கும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 8:55 pm

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 15
கீரைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் அற்புதம்
டாக்டர் கு.சிவராமன், ஓவியம்: ஹரன்


'என்ன பாட்டி... இன்னைக்கும் கீரையா? இந்தக் கீரையை விடவே மாட்டியா நீ?'

'கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தர்ற டானிக். ஆரோக்கியத்துக்கு ரொம்ப அவசியமான உணவு.'

'அதுசரி, இந்தக் கீரை என்ன முள்ளுமுள்ளா இருக்கு?'

'வீசிங் இருக்கிறவங்களுக்கான தூதுவளைக் கீரை இது. இதை பருப்புக் கடைசலாக, ரசமாக, துவையலாக எப்படி வேணாலும் சாப்பிடலாம். முள்ளை நீக்கிட்டு எல்லாக் கீரையும் மாதிரி சமைக்க வேண்டியதுதான். நெஞ்சுல சளி ரொம்ப அதிகமா இருந்து, 'கள் கள்’ சத்தத்தோட இருமலும் சேர்ந்து வந்தா, கரிசலாங்கண்ணிக் கீரையை சாறு எடுத்து, சம பங்கா நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, நீர் வத்திப்போறவரைக்கும் விட்டு எடுத்துக்கணும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு ரெண்டு வேளை, இந்தக் கீரைத்தைலத்தை ஒரு ஸ்பூன் கொடுத்தாலே, சளி போயிடும்.'

'இந்த கீரை தானே முடி வளர உதவும்னு சொன்னே?'

'நல்லா ஞாபகம் வெச்சிருக்கியே! முடி கறுப்பா வளர உதவுறதும், கல்லீரலைப் பாதுகாக்கிறதும் கரிசாலைதான். காமாலைக்கும், கல்லீரல் சுருக்க நோயான சிரோசிஸுக்கும் இந்த கரிசாலைதான் மருந்து.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P42(1)
''படிச்சது அடிக்கடி மறந்து போயிடுது. ஞாபகசக்திக்கு ஏதாவது கீரை இருக்கா?'

'உன்னை மாதிரி மக்கு

பிளாஸ்திரிக்கெல்லாம், புத்தியைத் தீட்ட, வல்லாரைக் கீரை இருக்கே. வாரத்துக்கு ரெண்டு முறை துவையல் அரைச்சு சாப்பிடலாம்.'

'அன்னைக்கு வளைஞ்சு நெளிஞ்ச முருங்கைக்காய் மாதிரி ஒரு கீரையை சமைச்சியே... அது என்ன பாட்டி..?'

'பிரண்டை! பிரண்டைக் கீரையை உப்பு, புளி, வர மிளகாய் சேர்த்துத் துவையலா அரைச்சு சாப்பிட்டா, எலும்பு நல்ல உறுதியா இருக்கும். வயித்துல வர்ற குடற்புண்ணை ஆத்திடும். பிள்ளைகளுக்கு வயிறு மந்தமா இருந்தா, இந்த கீரை சமைச்சுக் குடுக்கலாம். நல்லா பசியைத் தூண்ட வைக்கும்.'

'கர்ப்பிணிகளுக்கு எந்த கீரை நல்லது?'

'புள்ளத்தாச்சிக்குன்னே இருக்கு பசலைக் கீரை. லேசா கால் வீக்கம் இருந்தா, பருப்பு சேர்த்து சமைச்சுக் குடுக்கலாம். வீக்கம் போயிடும். பசலை மாதிரியே, சிறுநீரகக் கல்லைப் போக்க, காசினிக் கீரை இருக்கு. இந்தக் கீரையை சமைச்சு சாப்பிட்டா, சிறுநீரகக் கல்லும் படிப்படியா கரைஞ்சிடும்.

அகத்திக் கீரையை மாசத்துக்கு ரெண்டு முறை சாப்பிடுறது அக உறுப்புகளுக்கு நல்லது. அகச் சூட்டை குறைக்கிறதாலதான், இதுக்கு ’அகத்தி’னு பேர் வந்ததாம். ஆனா, சித்த மருந்து எடுக்கறப்ப, இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது.'

''இப்ப, மார்க்கெட்ல சிகப்பு கலர்ல கூட கீரை இருக்கு பாட்டி?'

'அது சிகப்பு பொன்னாங்கண்ணி. இந்தக் கீரையை சாப்பிடறவங்க உடம்பு தகதகனு பொன் மாதிரி மின்னும். 'போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்கண்ணியால’னு ஒரு வழக்கு மொழியும் இருக்கு. வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி கீரை, ஆரோக்கியமில்லாத, மந்தமான பிள்ளைக்கு முருங்கைக் கீரை, உடல்சூடுக்கு தண்டுக்கீரை, அஜீரணத்துக்கு கொத்துமல்லி/புதினா கீரை, மூட்டுவலிக்கு முடக்கறுத்தான், சர்க்கரை நோய்க்கு வெந்தயக் கீரைனு எல்லாக் கீரையுமே உணவுக்கு பக்கபலமாவும், நோய் வராமல் தடுக்கிற மருந்தாவும் இருக்கு.'

'இந்த கீரையை எல்லாம் குட்டிப் பாப்பாவுக்கு கொடுக்கலாமா?'

''ரெண்டு வயசு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு நார் உள்ள கீரைகளைக் கொடுக்க கூடாது. செரிமானத்துக்கு நல்லது இல்லை. சிறு கீரை, அரைக்கீரையை நல்லா கடைஞ்சு சாதத்துல பிசைஞ்சு குடுக்கலாம். கீரைகளை பொரியைல் செய்றதை விட, கடைசல், பாசிப்பருப்பு போட்ட கூட்டு செஞ்சு சாப்பிடறது நல்லது. அகத்திக் கீரையை நல்லா வேக வைக்கணும். ஆனா, முருங்கைக் கீரையை குழைவா வேக வைக்கக் கூடாது.'

''கீரையை நோய் வந்தவங்களும் சாப்பிடலாமா பாட்டி?'

''சிறுநீரகச் செயலிழப்பு இருக்கிறவங்க மட்டும், கீரையை நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைச்சு, வடிச்சு அந்த தண்ணீரைக் கொட்டிட்டு, அதுக்கப்புறம் அந்தக் கீரையை சமைச்சு சாப்பிடலாம். அதுல இருக்கிற உப்புக்கள் போயிடும். கீரையோட தயிர் சேர்த்தோ, மீன் சேர்த்தோ சாப்பிடக் கூடாது. ராத்திரியில் கட்டாயம் கீரை சாப்பிடக் கூடாதுனு உணவு விதியே இருக்கு. இனிமே, கீரையை கிள்ளுக் கீரையா நினைக்க மாட்டியே...'

''இவ்ளோ சொன்ன பிறகும் கீரை வேணாம்னு சொல்ல நான் என்ன கிறுக்கா!'

மருந்து மணக்கும்...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 10:44 pm

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 103459460 ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 1571444738



ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 11:10 pm

இதுவும் ரொம்ப அற்ப்புதமான திரி நேசன் புன்னகை ............ படித்துக்கொண்டிருக்கேன், முழுவதும் படித்து விட்டு பிறகு பின்னூடம் போடுகிறேன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 8:29 am

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 16
பித்தத் தலைவலிக்கு சுக்கு கஷாயம்!
டாக்டர் கு.சிவராமன், ஓவியம்: ஹரன்


பாட்டி இன்னைக்கு நான் காலேஜுக்கு லீவு. தலை தெறிக்கிற மாதிரி வலி. ஒரே குமட்டலா வேற வருது.''

''ஓ... இது பித்தத் தலைவலி. எதுக்கு லீவு போடணும்? உடனே வலி குறையுற மாதிரி கஷாயம் செஞ்சு தாரேன். ஒரு டம்ளர் குடி. தலைவலி ஓடிடும். நீயும் காலேஜுக்கு ஓடிடலாம்.'
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Page 2 P48
''அப்படி என்ன கஷாயம் பாட்டி?'

''மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம்தான் சட்டுனு கேட்கும். இஞ்சியும், சுக்கும் தலைவலியை நீக்குற மருந்து. சுக்கு அல்லது இஞ்சி, தனியா இரண்டையும் சம பங்கு எடுத்து, தண்ணீரை விட்டு, கால் பங்கா குறுக்கிக் காய்ச்சி, கூடவே பனைவெல்லம் சேர்த்து 100 மி.லி குடிச்சாப் போதும். தலைவலி, உடனே சரியாயிடும்.'

''பாட்டி பித்தத் தலைவலி ஏன் வருது?'

''பாதித் தலைவலி நம்ம தப்பான பழக்கவழக்கத் தாலேதான் வருது. நடு ராத்திரி வரைக்கும் தூங்காம, உன்னை மாதிரி செல்போனை அழுத்திக்கிட்டே இருக்கிறது, தலைக்குக் குளிக்காம 'தண்ணி’ காட்டறது, எதற்கெடுத்தாலும் டென்ஷன், இதெல்லாம்தான் பித்தத் தலை வலிக்கு முக்கியக் காரணங்கள் ஏற்கனவே, உனக்கு் சைனசைடிஸ் தலைவலி பற்றிச் சொல்லியிருக் கேன். அது மூக்கு ஒழுகி, தும்மலோடு வர்ற தலைவலி. இப்ப நீ அவதிப்படுறது அது இல்லை.. மைக்ரேன்னு சொல்ற பித்தத் தலைவலி. அதனால், முதல்ல நான் சொன்ன விஷயத்தைக் கடைப்பிடி... எல்லாம் சரியாயிரும்'

''சரி... இதெல்லாம் செய்ய டைம் ஆகுமே, அப்புறம் நான் எப்படிக் காலேஜ் போறது?''

'அதெல்லாம் டைம் ஆகாது. இஞ்சியைப், பொடிசா நறுக்கி தண்ணீர் சேர்த்து பொன் நிறமா நீர் வத்தற வரைக்கும் வறுத்துக்கணும். இதே அளவுக்குச் சீரகத்தையும் வறுத்து எடுத்துக்

கணும். இரண்டையும் சேர்த்த அளவுக்கு வெல்லத்தை எடுத்து உதிர்த்துக்கணும். எல்லாத்

தையும் ஒண்ணா சேர்த்து கலந்து தினமும் காலை சாப்பாட்டுக்கு பின்னால, அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தா, தலைவலி போறதோட திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்காது.'

''போன மாசம் எனக்குத் தலைவலி வந்தப்ப, பால்ல ஏதேதோ போட்டுக் காய்ச்சிக் குடுத்தியே பாட்டி. அது என்ன?'

''அதுவா... அது ஒரு டம்ளர் பசும்பாலில் 5 கிராம் அதிமதுரம், 5 கிராம் பெருஞ்சீரகம், 10 கிராம் பனங்கல்கண்டு... இல்லேன்னா, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடா தின மும் குடிச்சிட்டு வந்தா, தலைவலி மறைஞ்சு போகும். கூடவே சளி, இருமல்கூடச் சரியாகும்.'

''சிலர் தலைவலிக்குத் தைலம் தேய்ச்சுக் குளிக்கிறாங்களே... அது அவசியமா?'

''தலைவலிக்குன்னே சுக்குத் தைலம், கொம்பரக்குத் தைலம், குறட்டப்பழத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம்னு சித்த வைத்தியத்துல நிறையத் தைலங்கள் இருக்கு. இதுல ஏதாவது ஒண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு வந்தா தலைவலி பறந்திடும். எல்லாருக்கும் தைலக்குளியல் சரியா வரும்னு சொல்ல முடியாது. நாடி பிடிச்சு சொல்ற மருத்துவரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும். இப்பல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூடத் தலைவலி வருது. பார்வைத்திறன் குறைவுகூடக் காரணமாயிருக்கலாம். கண் மருத்துவரைத் தான் போய்ப் பார்க்கணும்.'

''குழந்தை இருக்கட்டும்... நம்ம தாத்தாவுக்கும் அடிக்கடி தலைவலி வருதாம். அது உன்னாலதானே?'

''ம்ம்... அவருக்குப் பி.பி இருக்கே. பி.பி கட்டுக்குள் இல்லைன்னா, தலைவலிதான் முதல் அறிகுறி. அதுவும் குறிப்பா காலையில் எழுந்ததும் தலை வலிச்சா, முதல்ல ரத்த அழுத்

தத்தை 'செக்’ பண்ணிக்கணும். அதுவும் உட்கார்ந்து, படுத்து, நின்னு ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சாதான், பிரச்னையை சரியா கண்டுபிடிக்கலாம். அந்தக்கால டாக்ட

ரெல்லாம் அப்படித்தான் பார்ப்பாங்க.'

'சரி பி.பி, தலைவலி ரெண்டுக்கும் சேர்த்து என்ன வைத்தியம் பாட்டி?''

'சரியான மருந்தை மருத்துவர் பரிந்துரை யோட சாப்பிடுவது முக்கியம். அதோடு, முருங்கைக் கீரை சூப், வெள்ளைத்தாமரை பூ இதழ் உலர்த்திய பொடி அரை ஸ்பூன் தினசரி எடுத்துக்கலாம். கூடவே, 1 லிட்டர் நல்லெண் ணெயில் 3 ஸ்பூன் சீரகம் போட்டுக் காய்ச்சிய எண்ணெயைத் தேய்ச்சு வாரம் இருமுறை குளிக்கணும். ராத்திரி எந்தத் தடையுமில்லாம, 6 மணி நேரம் தூங்கணும். தினசரி பிரா

ணாயாமப் பயிற்சி. அதிலும் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவங்க, சீதளி பிராணாயாமம் செய்தா, தலைவலி காணாமலேயே போகும். கஷாயம் கொண்டுவர்றேன்... குடிச்சிட்டு காலேஜுக்குக் கிளம்பு'

''பாட்டி... இன்னிக்கு காலேஜுக்கு கட். இப்ப, சினிமாக்கு ஜூட்!'

மருந்து மணக்கும்...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 8:23 pm

//மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம்தான் சட்டுனு கேட்கும். இஞ்சியும், சுக்கும் தலைவலியை நீக்குற மருந்து. சுக்கு அல்லது இஞ்சி, தனியா இரண்டையும் சம பங்கு எடுத்து, தண்ணீரை விட்டு, கால் பங்கா குறுக்கிக் காய்ச்சி, கூடவே பனைவெல்லம் சேர்த்து 100 மி.லி குடிச்சாப் போதும். தலைவலி, உடனே சரியாயிடும்.'//

நல்ல மருந்தா இருக்கே இது புன்னகை சூப்பருங்க என் ஓர்ப்படி எப்பவும் ரொம்ப கஷ்டப்படுவா ...........இந்த வைத்தியத்தை சொல்லி பார்க்கிறேன்....நன்றி நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக